எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
தென் கைலாயம் என்று சிவ பக்தர்களால் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலை சிவன் தரிசனத்தை நேரடியாக காணுங்கள். ஏழு மலை ஏறித்தான் இந்த சிவனை நீங்கள் தரிசிக்க முடியும்.
கொஞ்சம் கிட்னிய யூஸ் பண்ணுங்க நிகழ்ச்சியில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் ரா.லக்சயா என்ற மாணவியின் கலைத்திறனை பார்க்கிறீர்கள்.
கோழி முட்டையைக் கொண்டு அழகான, குட்டியான பெங்குவின்களை எப்படி செய்கிறார் என்று பாருங்கள். உங்கள் வீட்டு செல்லங்களுக்கும் இப்படி ஒரு திறமை இருந்தால், அதை வெளிக்கொணர வாலு டிவி தயாராக இருக்கிறது.
உங்களின் திறமையை அழகான வீடியோவாக, லேண்ட்ஸ்கேப்பில் எடுத்து வாலு டிவிக்கு அனுப்பி வைங்க...
நேற்று நடைபெற்ற ஐபிஎல் - 2022, 15வது சீஸனின் முதல் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்த்து விளையாடிய கொல்கத்தா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணியின் தோல்விக்கான காரணங்கள் என்னென்ன? இந்த போட்டியில் நிகழ்த்தப்பட்ட சாதனைகள் என்னென்ன என்பதை வாலு தனது பார்வையில் வைக்கிறார்.
மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள், மாயாவியின் திமிர் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் மூன்றாம் பாகம் இந்த வீடியோவில்...
இதில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், திரைப்பட இயக்குநருமான ஞான ராஜசேகரன் அவர்களின் உரையை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். சிறார்களுக்கான கதைப்புத்தகமான மாயாவியின் திமிர் புத்தகம் குறித்து அவரது உரையை நீங்கள் காணலாம்.
மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள், மாயாவியின் திமிர் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் முதல் பாகம் இந்த வீடியோவில்...
இதில் சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் தங்க.ஜெய்சக்திவேலின் வரவேற்புரையும், புத்தகங்களை வெளியிட்டு தலைமையுரையாற்றிய தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கோ.பார்த்தசாரதியின் உரையையும் இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள், மாயாவியின் திமிர் ஆகிய புத்தகங்களின் வெளியீட்டு விழாவின் இரண்டாம் பாகம் இந்த வீடியோவில்...
இதில் இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியில் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத்தலைவருமான திரு. மயில்சாமி அண்ணாதுரை அவர்களின் உரையை இந்த வீடியோவில் நீங்கள் காணலாம்.
இதன் முதல் பாகம் காண: https://youtu.be/LrStxJU03wQ
புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்கள் என்னென்ன? அதை எழுதியவர் யார்? அதன் விலை என்ன? அந்த புத்தகத்தை வெளியிட்ட பதிப்பகம் எது? அப்புத்தகத்தின் முக்கியத்துவம் என்ன என்பதை சொல்லி இருக்கிறேன் இந்த வீடியோவில்...
உங்களுக்கு வேண்டிய புத்தகங்களை ஆர்டர் செய்ய: https://forms.gle/UXP9DuwuYawqqHmK8
வீடியோவைப் பாருங்க... நீங்கள் வாங்கிய புத்தகங்களை கமெண்ட்ஸில் எனக்கு சொல்லுங்கள். பதில் தருகிறேன்...
தமிழக காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர் பணித்தேர்வில் வெற்றிபெற என்ன செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும்? எதையெல்லாம் செய்தால் வெற்றி கிடைக்கும் என்ற எனது அனுபவப் பகிர்வே இந்த காணொலி
சிறுவர்களுக்கான புதிய கதைப்புத்தகமாக நான் எழுதி வெளிவந்திருக்கும் மாயாவியின் திமிர் புத்தகம் குறித்து, எனது கல்லாரி காலத் தமிழாசிரியரும், மாபெரும் எழுத்தாளருமான பெருமாள் முருகன் ஐயாவின் அறிமுகம் இங்கே...
வாலு @ மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள் புத்தகம் குறித்து முன்னாள் சென்னை மண்டல வானிலை இயக்குநரும், வானிலை ஆய்வாளருமான ரமணன் அவர்களின் பேட்டி.
இந்த புத்தகத்தில் நான் நேர்காணல் செய்திருக்கிற 20 ஆளுமைகளில் இவரும் ஒருவர்...
சென்னை புத்தகக்காட்சியில் எனது புத்தகங்களை வாங்க...
வாசல் எண் 2, அரங்கு எண் - F4 , பாரதி புத்தகாலயம்
வாசல் எண் 4, அரங்கு எண் - F18 , புக் ஃபார் சில்ட்ரன்
வாலு @ மோ.கணேசன் எழுதிய இப்படித்தான் ஜெயித்தார்கள் புத்தகம் குறித்து முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும், முன்னாள் மைலாப்பூர் எம்.எல்.ஏ.வான ரா.நடராஜ் அவர்களின் பேட்டி.
இந்த புத்தகத்தில் நான் நேர்காணல் செய்திருக்கிற 20 ஆளுமைகளில் இவரும் ஒருவர்...
சென்னை புத்தகக்காட்சியில் எனது புத்தகங்களை வாங்க...
வாசல் எண் 2, அரங்கு எண் - F4 , பாரதி புத்தகாலயம்
வாசல் எண் 4, அரங்கு எண் - F18 , புக் ஃபார் சில்ட்ரன்