Friday, January 22, 2010

பிறப்பு சான்றிதழ் கேட்ட தேதியில் இறப்பு சான்றிதழ்..! - எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலத்தில் இப்படி ஒரு கூத்து..!

திருவனந்தபுரம், ஜன .22: திருவனந்தபுரம் மாநாகராட்சியில், கடந்த ஜனவரி 18-ம் தேதி, முகம்முது (13 வயது) என்ற சிறுவனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அவனது தந்தையார் விண்ணப்பித்திருந்தார்.



இரு நாட்களுக்கு முன்பு, அச்சிறுவன் பிறந்த தேதியான டிசம்பர் 1, 1997 தேதியிட்டு,  ஒரு சான்றிதழ் வந்தது. அதை வாங்கிப் பார்த்த, அச்சிறுவனின் தந்தை அதிர்ச்சியில் உறைந்து விட்டார். காரணம், அவன் பிறந்த அதே தேதியில் அச்சிறுவன் இறந்து போனதாகவும், அவன் பிறந்த மருத்துவமனையிலேயே அவன் இறந்து போனதாகவும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப் பட்டிருந்தது.

பள்ளியில் சேர்ப்பதற்காக சான்றிதழ் கேட்டால், அவன் பாடையில் போய்விட்டான் என்று அரசியந்திரம் அதிகார பூர்வமாக சான்று வழங்கியிருக்கிறது..! அட என்ட கேரளமே..! உனக்கேன் இந்த கேவலமே..!

தற்போது இது குறித்து மாநாகராட்சியிடம் புகார் கூறியிருக்கிறார் அச்சிறுவனின் தந்தை. இது குறித்து மாநாகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு கிளர்க் பதவியுலுள்ளோர் செய்த தவறு என்றபடி நழுவி விட்டனர்.

பின்னே முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கே சம்மன் அனிப்பிய நாடல்லவா இது... இந்தியாவின் முதல் குடிமகனுக்கே அப்படி நடந்தபோது... கடைக்கோடி குடிமகனுக்கு நடவாமலா போய்விடும்..!

அதுவும் இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமான கேரளத்தில், அதுவும் அதன் தலைநகரத்திலே இக்கூத்து என்றால்... கிராமங்களெல்லாம் எம்மாத்திரம்..!

வாழ்க பாரதம்... வளர்க அரசு ஊழியர்கள்..! ஒழிக பாவப்பட்ட இந்திய மக்கள்..!

Thursday, January 07, 2010

எனது அன்பு நண்பன் பிரேம் சந்திரனுக்கு திருமண வாழ்த்துக் கவிதை

என அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு இன்று (ஜனவரி 07, 2010) திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு இன்று திருமணம்...

அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த வாழ்த்துக் கவி இதோ...

'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்



என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் பிரேம் சந்திரன்...


என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!





(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)