Thursday, December 31, 2020

நாயகனாய் நின்ற - திருப்பாவை பாடல் | thiruppavai 16 song | ஆண்டாள் திருப்...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பதினாறாவது பாடலான நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Tuesday, December 29, 2020

சூப்பர் ஸ்டார் 45 - வாலுவின் புத்தக விமர்சனம் | super star 45 book revie...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தைப் பற்றி இந்து தமிழ் திசை குழுமம் வெளியிட்டுள்ள ‘சூப்பர் ஸ்டார் 45’ புத்தகத்தை வாலுவின் புத்தக விமர்சனம் பகுதியில் இடம்பெறுகிறது. பக்கத்துக்குப் பக்கம் ரஜினிகாந்த் குறித்த அரிய தகவல்களையும், அரிய நிற்படங்களையும், அழகிய ஓவியங்களையும் அடங்கிய பொக்கிஷம் இது என்றே சொல்ல வேண்டும். ரஜினி ரசிகர்களுக்கு இப்புத்தகம் விருந்து.

இப்புத்தகம் குறித்த விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். 

இப்புத்தகத்தைப் போன்று உங்களது புத்தகங்களும் வாலு டிவியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்றால்... இந்த வீடியோவில் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #book_rivew #superstar45_book

நன்றி

இந்து தமிழ் திசை குழுமம்

உங்கள் புழைக்கடை - திருப்பாவை பாடல் | thiruppavai 14 song | ஆண்டாள் திரு...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பதிநான்காவது பாடலான உங்கள் புழைக்கடைத் தோட்டத்து... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #திருப்பாவை​ #thiruppavai

Monday, December 28, 2020

புள்ளின்வாய் கீண்டானை- திருப்பாவை பாடல்| thiruppavai 13 song| ஆண்டாள் தி...

திருப்பாவையில் பதிமூன்றாவது பாடலான புள்ளின்வாய் கீண்டானை... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Sunday, December 27, 2020

கனைத்திளங் கற்றெருமை - திருப்பாவை பாடல்| thiruppavai 12 song| ஆண்டாள் தி...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பனிரண்டாவது பாடலான கனைத்திளங் கற்றெருமை... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி, சென்னை - 45

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Saturday, December 26, 2020

கற்றுக் கறவை - திருப்பாவை பாடல் | thiruppavai 11 song | ஆண்டாள் திருப்பா...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பத்தாவது பாடலான கற்றுக் கறவைக் கணங்கள்... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Friday, December 25, 2020

நேற்று சுவர்க்கம் - திருப்பாவை பாடல் | thiruppavai 10 song| ஆண்டாள் திரு...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகிறது.

திருப்பாவையில் பத்தாவது பாடலான நேற்று சுவர்க்கம் புகுகின்ற...... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

இப்பாடலுக்கு பொருளுரை தருகிறார்,  சீதா தேவி கரோடியா பள்ளி மாணவர் க.ஆதித்தன். அவருக்கும் வாலு டிவியின் சார்பில் அன்பு வாழ்த்துகள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Thursday, December 24, 2020

எம்ஜிஆர் இறந்த அன்று தமிழ்நாட்டில் என்ன நடந்தது தெரியுமா? | mgr funeral ...

மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் எம்ஜிஆரின் 33-வது நினைவு தினத்தில், அன்று என்ன நடந்தது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச்சொல்லும் முன்னெடுப்பாக வாலு டிவி இதை கருதுகிறது.

எம்ஜிஆர் எனும் சாம்ராஜ்யம் சரிந்தபோது தமிழ்நாட்டில் என்னென்ன விளைவுகள் ஏற்பட்டன என்பதை, எனது பார்வையில் சொல்லி இருக்கிறேன்.

நன்றி 

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

MGR அவர்களுக்கு வாலு டிவியின் இதய அஞ்சலி...

#வாலு_டிவி #vaalu_tv #MGR

தூமணி மாடத்து - திருப்பாவை பாடல் | thiruppavai 9 song | ஆண்டாள் திருப்பா...

தூமணி மாடத்து எனும் திருப்பாவை பாடலைக் கேட்கலாம் வாங்க

பள்ளி மாணவி பாடும் திருப்பாவை எட்டாம் நாள் பாடலும்... அதற்கு பொருளுரை தரும் மாணவனும்... இந்த 3 நிமிட வீடியோவில்....

இப்பாடலில் பொருளுரை தருபவர் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Wednesday, December 23, 2020

உலகின் புதுமையான சைக்கிள் | கன்வெர் சைக்கிள்| world best cycle in tamil ...

உலகின் புதுமையான சைக்கிள் சர்வதேச அளவிலும் இருக்கிறது. இந்திய அளவிலும் இருக்கிறது. அது குறித்து வாலு இந்த வீடியோவில் பதில் தந்திருக்கிறார். கன்வெர் சைக்கிள் என பெயரிடப்பட்ட அந்த சைக்கிளின் விலை ரூ. 2.87 லட்சம். அம்மாடியோவ்... என்கிறீர்களா... உள்ளே சென்று பாருங்கள்... இன்னும் பல ஆச்சர்யங்கள் காத்திருக்கிறன்றன...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #hero_lectro #convercycle

கீழ்வானம் வெள்ளென்று - திருப்பாவை பாடல் | thiruppavai 8 | ஆண்டாள் திருப்...

கீழ்வானம் வெள்ளென்று... - திருப்பாவை எட்டாவது பாடல் வீடியோ வடிவில்

பள்ளி மாணவி பாடும் திருப்பாவை எட்டாம் நாள் பாடலும்... அதற்கு பொருளுரை தரும் மாணவனும்... இந்த 3 நிமிட வீடியோவில்....

இப்பாடலில் பொருளுரை தருபவர் எங்கள் மூத்த மகனான க.ஆதித்தன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி..

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Monday, December 21, 2020

கிணற்றில் டைவ் அடிப்பது எப்படி? | பேக் டைவ் அடிப்பது எப்படி? | மோகனன் டி...

கிணற்றின் மேலே இருந்து டைவ் அடிப்பது எப்படி? பேக் டைவ் அடிப்பது எப்படி? 

நன்கு பயிற்சி பெற்றவர்கள் மட்டுமே இப்படி செய்ய வேண்டும். 

பார்த்து மகிழுங்கள். பயிற்சி செய்து மகிழுங்கள்

உங்கள்

மோகனன்

#மோகனன்_டிவி #moganan_tv #மோ.கணேசன்

புள்ளும் சிலம்பினகாண் - திருப்பாவை பாடல் | thirupppavai 6| ஆண்டாள் திருப...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் ஆறாவது பாடலான புள்ளும் சிலம்பின காண்... பாடலை உங்களுக்காகப் பாடும் பள்ளி மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

உங்கள்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Sunday, December 20, 2020

மாயனை மன்னு - திருப்பாவை ஐந்தாம் பாடல் | thirupppavai song 5| ஆண்டாள் தி...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் ஐந்தாவது பாடலான மாயனை மன்னு வடமதுரை மைந்தனை... பாடலை உங்களுக்காகப் பாடும் மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Saturday, December 19, 2020

ஆழிமழைக் கண்ணா - திருப்பாவை நான்காம் பாடல் | thirupppavai song 4| ஆண்டாள...

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் நான்காவது பாடலான ஆழி மழைக்கண்ணா பாடலை உங்களுக்காகப் பாடும் மாணவி சே.ந.யாழினியை வாழ்த்துங்கள்! யாழினிக்கு வாலு டிவியின் அன்பு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Friday, December 18, 2020

ஒரே மொபைலில் இரண்டு ஜிமெயில் பார்ப்பது எப்படி | one mobile two gmail acc...

ஒரே மொபைலில் இரண்டுக்கும் மேற்பட்ட ஜிமெயில் பார்ப்பது எப்படி? தேவையற்ற ஜிமெயிலில் இருந்து லாக் அவுட் செய்வது எப்படி? என்பதை இந்த வீடியோவில் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறோம்.

இது உங்கள் அபிமான வாலு டிவியின் தெரிந்து கொள்வோம் நிகழ்ச்சி...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #தெரிந்து_கொள்வோம்

ஓங்கி உலகளந்த - திருப்பாவை பாடல் | thirupppavai song 3| ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் மூன்றாவது பாடலான ஓங்கி உலகளந்த பாடலை உங்களுக்காகப் பாடும் மாணவி சே.ந.யாழினிக்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

வையத்து வாழ்வீர்காள் - திருப்பாவை பாடல் | thirupppavai song 2| ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவையில் இரண்டாவது பாடலான வையத்து வாழ்வீர்காள் பாடலை உங்களுக்காக பாடும் மாணவி சே.ந.யாழினிக்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

மார்கழித் திங்கள்... - திருப்பாவை முதல் பாடல் | thirupppavai song no 1| ஆண்டாளின் திருப்பாவை

ஆண்டாள் அருளிய திருப்பாவை தினந்தோறும் காலை 5 மணிக்கு உங்கள் அபிமான வாலு டிவியில் ஒளிபரப்பாகும்.

திருப்பாவை பாடலை உங்களுக்காக பாடும் மாணவி சே.ந.யாழினிக்கு வாழ்த்துகள்!

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #திருப்பாவை #thiruppavai

Wednesday, December 16, 2020

வாலுவின் புத்தக விமர்சனம் - நீர் நிலைகள் | book review of neer nilaigal ...

வீ.அரிஸ்டாட்டில் எழுதிய நீர் நிலைகள் புத்தகத்தைப் பற்றி விமர்சனம் செய்துள்ள வீடியோ இது... இப்புத்தகத்தின் பேசுபொருள் நீர் நிலை என்பதால் நீர் நிலைகள், அணைக்கட்டு, மழை உள்ளிட்ட பல்வேறு தகவல்களை எடுத்துக் கொடுத்திருக்கிறார் நூலாசிரியர்.

இப்புத்தகம் குறித்த விரிவான விமர்சனத்திற்கு இந்த வீடியோவை பார்க்கவும். 

இப்புத்தகத்தைப் போன்று உங்களது புத்தகங்களும் வாலு டிவியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்றால்... இந்த வீடியோவில் அதற்கான வழிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எமது நன்றிகள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #book_rivew #neer_nilaigal

Saturday, December 12, 2020

ரஜினிக்காக வெளிநாட்டினர் பாடிய பாடல் | ரஜினிகாந்த் பிறந்தநாள் | பல்லேலக...

சிவாஜி ராவ் கெய்க்வாட் எனும் ரஜினிகாந்திற்காக சிவாஜி படத்தில் இடம் பெற்ற பல்லேலக்கா பாடலை வெளிநாட்டினர் குழுவாக இணைந்து பாடும் இந்த பாடலை, ரஜினியின் 70-வது பிறந்தநாளில் உங்கள் அபிமான வாலு டிவி ரஜினி ரசிகர்களுக்காக அளிக்கிறது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் ரஜினி காந்த்...

வாழ்த்துகள் கூறி மகிழ்வது

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #Rajini_birthday

Monday, December 07, 2020

ஒரே நாளில் நீச்சல் கற்றுக்கொள்வது எப்படி? | how to learn swimming in tam...

How to learn to swim in one day? 5 liter oil can, 20 feet rope is enough to learn to swim. How to learn to swim very easily

ஒரே நாளில் நீச்சல் கற்றுக் கொள்வது எப்படி? நீச்சல் கற்றுக்கொள்ள 5 லிட்டர் எண்ணெய் கேன் போதும். 20 அடி கயிறு போதும். கிணற்றிலோ, குளத்திலோ எளிதாக நீச்சல் பழகிக்கொள்ளலாம்...

இது உங்கள் அபிமான வாலு டிவியின் புத்தம் புது நிகழ்ச்சியான ‘தெரிந்து கொள்வோம்’ நிகழ்ச்சி...

வாங்க நீச்சல் கற்றுக்கொள்ளலாம். உங்களாலும் நீச்சல் கற்றுக் கொள்ள முடியும்...

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் இருப்பின் அதை கீழே உள்ள கமெண்ட்ஸ் பகுதியில் கொடுக்கவும்... வரும் நாட்களில் அந்த விஷயத்தை இந்த நிகழ்ச்சியில் விரிவாக உங்கள் வாலு டிவி எடுத்துத் தருவான்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #தெரிந்து_கொள்வோம்

Friday, December 04, 2020

புயல் எப்படி உருவாகிறது? | புயலுக்கு எப்படி பெயர் வைக்கிறார்கள் | how cy...

புயல் எப்படி உருவாகிறது?, ஏன் குறிப்பிட்ட கடல் பகுதிகளில் மட்டும் உருவாகிறது? வட, தென் துருவங்களில் ஏன் உருவாகவில்லை, புயலுக்கு பெயர் வைக்கும் பழக்கம் எப்போது வந்தது? எதன் அடிப்படையில் புயல் என்று அழைக்கிறார்கள் என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

வாலு டிவி 

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu
#புரேவி_புயல்  #burevi_cyclone

Thursday, December 03, 2020

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு 2020 வென்றார் ரஞ்சித்சிங் திசாலே | global t...

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு 2020 வென்றார் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த ஆசிரியரான ரஞ்சித்சிங் திசாலே  வென்றார்...

அடுத்த ஆண்டு தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் வெல்வார் என்ற நம்பிக்கை பிறக்கிறது...

மிக்க அன்புடன்

உங்கள்

மோ.கணேசன், 
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

our sincere Special Thanks

sunny varkey family,
varkey foundation,
Global Teacher Prize committee
https://www.globalteacherprize.org/

#vaalu_tv #வாலு_டிவி #GTP_2020 #நாட்டு_நடப்பு, #global_teacher_prize_2020 #Ranjithsingh_disale #GTP_2020_Ranjitsinh_Disale #GTP_2020_winner_Ranjitsinh_Disale

Tuesday, December 01, 2020

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு யாருக்கு | global teacher prize in tamil | ...

உலகின் சிறந்த ஆசிரியர் பரிசு இருப்பது உங்களுக்கு தெரியுமா? 2020-க்கான டாப்டென் பரிசுப் பட்டியலில் இந்திய ஆசிரியர் ஒருவரும் இடம் பிடித்திருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

மொத்த பரிசுத்தொகை ரூ. 7 கோடியே 39 லட்சம்... இந்த விருதை உருவாக்கியவர் ஓர் இந்தியர் என்பது உங்களுக்குத் தெரியுமா? 

இந்த விருது வழங்கும் விழாவில் நீங்களும் கலந்து கொள்ளலாம்...

இந்த வீடியோவைப் பாருங்க இந்த பரிசு குறித்த முழுத் தகவல்களும் எடுத்து கொடுத்திருக்கிறோம்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

our sincere Special Thanks

sunny varkey family,
varkey foundation,
Global Teacher Prize committee
https://www.globalteacherprize.org/

#vaalu_tv #வாலு_டிவி #GTP_2020 #நாட்டு_நடப்பு, #global_teacher_prize_2020 #Ranjithsingh_disale #Ranjitsinh_Disale

Sunday, November 29, 2020

வானவில் எப்படி தோன்றுகிறது? | வானவில் எப்படி உருவாகிறது | how rainbow is...

வானவில் எப்படி உருவாகிறது?, வானவில் ஏன் வளைந்து இருக்கிறது?, வானவில்லில் எப்படி ஏழு நிறங்கள் வருகிறது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Friday, November 27, 2020

உலக நாடுகளின் தலைநகரங்களைச் சொல்லும் சிறுவன்| world countries capitals |...

உலகத்தில் 195-க்கும் மேற்பட்ட நாடுகள் இருக்கின்றன. அந்த நாடுகளின் தலைநகரங்கள், இந்திய மாநிலங்களின் தலைநகரங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைநகரங்களைப் பார்க்காமல் சொல்லும் 4 வயது சிறுவனின் திறமையை உங்களின் அபிமான வாலு டிவி இன்று மேடையேற்றுகிறது.

இச்சிறுவனைப் போல உங்கள்  வீட்டு செல்லத்திற்கும் திறமை இருக்கிறதா? அந்தத் திறமையை வாலு டிவியில் மேடையேற்ற விரும்புவோர் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிமுறையை பின்பற்றி அனுப்பி வையுங்கள்...

திறமையை அங்கீகரிப்போம்... திறமையாளர்களை மேடையேற்றுவோம்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu #நாளைய_நட்சத்திரங்கள்

Thursday, November 26, 2020

புயல், மழைக் காலங்களில் நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக்கூடாது? | ...

புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நாம் என்னென்ன செய்ய வேண்டும். என்னென்ன செய்யக்கூடாது? என்பதை விளக்குகிறது இந்த 4 நிமிட வீடியோ... பயனுள்ள வீடியோவாக இருப்பின் பகிர்ந்திடுங்கள்... விழிப்புணர்வோடு இருங்கள். மற்றவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

பொதுநலன் கருதி வெளியிடுவது உங்கள் அபிமான வாலு டிவி!

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#vaalu_tv #வாலு_டிவி #நிவர்_புயல் #nivar_cyclone

Monday, November 23, 2020

தமிழ்த்தாய் வாழ்த்து மாநிலப் பாடலாக உருவான வரலாறு | தமிழ்த்தாய் வாழ்த்து...

தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலுக்கு இன்றோடு (2020, நவம்பர் 23) வயது 50 ஆகிறது. தனது ஐம்பதாவது பிறந்தநாளை அதிகாரபூர்வமாகக் கொண்டாடுகிறது தமிழ்த்தாய் வாழ்த்து... தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் குறித்த 129 ஆண்டு கால வரலாற்றை புரட்டிப்பார்க்கலாம் வாருங்கள்.

சாதரணமாக இப்பாடல் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. பலத்த எதிர்ப்புகள் இருந்திருக்கின்றன. பாடக்கூட யாரும் முன்வரவில்லை என்பது அதிர்ச்சி கலந்த உண்மை... இப்பாடல் எப்போது எழுதப்பட்டது? இதன் முழுப்பாடல் என்ன? யார் இதை முதலில் முன்னெடுத்தார்கள்? எப்போது தமிழக அரசின் பாடலாக உருவானது என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

சிறப்பு நன்றி: 

கரந்தை தமிழ்ச்சங்கம், தஞ்சாவூர், 
கரந்தை திரு. ஜெயக்குமார் ஐயா, 
கிஷ்டு கானம், மதுரை, 
இயக்குநர். திரு. விஜயராஜ்

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

மோ.கணேசன், 
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Sunday, November 22, 2020

இந்தியாவின் தேசிய விலங்காக புலி இருப்பது ஏன்? | indian national animal t...

நம் நாட்டில் எத்தனையோ விலங்குகள் இருக்கும்போது புலிகள் ஏன் தேசிய விலங்காக அறிவிக்கப்பட்டது? புலிகள் பாதுகாப்பு திட்டம் என்றால் என்ன? அது எப்போது ஆரம்பிக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு  கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி 

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Friday, November 20, 2020

பசிக்கும்போது வயிற்றிலிருந்து சத்தம் வருவது ஏன்? | Why the stomach make ...

பசியோடு இருக்கும்போது நமது வயிற்றிலிருந்து சத்தம் வருவது ஏன்? அந்த சத்தம் எப்படி உண்டாகிறது? நமது செரிமான மண்டலத்தின் பணி என்ன? அதன் நீளம் என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ.

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை எப்படி வீடியோவாக எடுக்க வேண்டும். எப்படி எங்களுக்கு அனுப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தகவல்கள் இந்த வீடியோவின் இறுதியில் கொடுத்திருக்கிறோம். பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அன்பு வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி 

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Wednesday, November 18, 2020

பொம்மி தீபாவளி மலர் - வாலுவின் புத்தக விமர்சனம் | bommi diwali book revi...

சிறார்களுக்காக வெளிவரும் பொம்மி மாத இதழின் தீபாவளி மலர் - 2020 பற்றிய வாலுவின் புத்தக விமர்சனம்... வீடியோவைப் பாருங்க... புத்தகத்தைப் பற்றிய முழு அறிமுகத்தை தெரிஞ்சிக்கோங்க...

குழந்தைகளுக்கான புத்தகப் புதையல் என்றே இதை சொல்லலாம்...

உங்களது புத்தகங்களும் இந்நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்று விரும்பினால், இந்த நிகழ்ச்சியில் அதற்கான வழிமுறைகளும் முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது...

தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #book_review #புத்தக_விமர்சனம் #வாலுடிவி #பொம்மி_தீபாவளி_சிறப்பிதழ்

Monday, November 16, 2020

கிரைம் கதை மாமன்னர் ராஜேஷ் குமாருடன் ஒரு நேர்காணல்

எனது மேல்நிலைப் பள்ளி வயதுகளில் ராஜேஷ் குமார் கதைகளென்றால் அவ்வளவு உயிர். எனக்கு பல்வேறுவிதமான அறிவியல் விஷயங்களை, மாடர்ன் சமூகங்களை எழுத்தின் வழியே அறிமுகப்படுத்தியவர் ராஜேஷ் குமார்.

2016-ல் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் எழுத்தாளர் - நான் பத்திரிகையாளர் என்ற அறிமுகம். இன்றும் அந்த அறிமுகம் குரு-சிஷ்யன் உறவாக மாறி இருக்கிறது. என் மேல் அன்புகொண்டவர்.
அவரை பேட்டி கண்டு கட்டுரையாக எழுதும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அந்த வாய்ப்பை எனக்கு தந்தவர் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி இதழ்களில் ஆசிரியராக இருந்தவரும், கல்கோனா எனும் மின்னிதழின் ஆசிரியராக இருக்கும் பெ. கருணாகரன் அவர்கள்.
இன்று வெளியாகி இருக்கும் கல்கோனா அட்டைப்படக் கட்டுரையாக ராஜேஷ் குமார் சாரின் பேட்டியை வெளியிட்டு, அதில் எனக்கு ஒரு இடத்தையும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் கருணாகரன் சார். அவருக்கு எனது நன்றிகள். இந்த பேட்டியில் எனது பங்கு மிகக்குறைவே... அனைத்தும் ஆசிரியர் கருணாகரன் சாருக்கே...
ராஜேஷ்குமார், கருணாகரன் போன்ற ஜாம்பவான்களுடன் இருப்பது மிகப்பெரிய பலமே... இப்பதிவில் அப்பேட்டியை இணைத்திருக்கிறேன்... விருப்பமுடையோர் படித்து இன்புறுக...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
வாலு டிவி,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்.

வெளிவந்துவிட்டது பொம்மி தீபாவளி மலர்

குழந்தைகளுக்காக வெளிவரும் மாத இதழ்களில் ஒன்றான பொம்மி மாத இதழ் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது...

சிறார்களுக்கான குட்டிக்குட்டிக் கதைகள், சிறார் பாடல்கள், குறுக்கெழுத்து புதிர் உள்பட பல்வேறு புதிர்கள், காமிக்ஸ் கதைகள், பொது அறிவு கட்டுரைகள் என குழந்தைகளைக் கவரும் அத்தனை அம்சங்களும் இந்த தீபாவளி மலரில் கொட்டிக்கிடக்கின்றன.
இந்த இதழில் என்னுடைய வாலுவிடம் கேளுங்கள் எனும் பொது அறிவு கேள்வி பதில் பகுதியும், குறுக்கெழுத்து புதிர், விளையாட்டு குறித்த கட்டுரைகள் என மூன்று படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.
அமுதசுரபிக்கு அடுத்து, எனது படைப்புகள் பொம்மியில் வெளிவந்திருக்கிறது.
மொத்தம் 162 பக்கங்கள். விளம்பரங்களே இல்லாமல் இருப்பது இதன் தனிச்சிறப்பு... ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸிய தகவல்கள் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை 250 ரூபாய்.

உங்களது குழந்தைகளின் பொது அறிவுப்பசிக்கு, பொழுதுபோக்கு பசிக்கு அட்சயப்பாத்திரமாய் மலர்ந்திருக்கிறது இந்த பொம்மி தீபாவளி மலர்...
இப்புத்தகத்தை பெற விரும்புவோர்...
பொம்மி
52/13. ANR காம்ப்ளக்ஸ், தெற்கு வீதி, திருவாரூர் - 610001 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
அலைபேசி எண்கள் - 9750697943, 9750697940, 9443973671
விரைவில் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் விரிவான முறையில் வாலு டிவியில் இடம்பெறும்... இணைந்திருங்கள் உங்கள் வாலு டிவியோடு...
மிக்க அன்புடன்
உங்கள்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

Saturday, November 14, 2020

குழந்தைகள் தினம் எப்படி உருவானது தெரியுமா? | history of children day | v...

எமது நேயர்களுக்கு முதலில் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள். சுட்டிகளுக்கு இனிய குழந்தைகள் தின நல்வாழ்த்துகள்..!

இன்று குழந்தைகள் தினம். இந்த நாளில், குழந்தைகள் தினம் , இந்தியாவில் ஒரு குழந்தைகள் தினம் இரண்டு வகையாக இருப்பது ஏன்? சர்வதேச அளவில் முதன் முதலாக குழந்தைகள் தினத்தைக் கொண்டாடிய நாடு எது? இந்தியாவில் எப்போதிலிருந்து கு.ழ்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது என்பன உள்ளிட்ட  பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

பார்த்து பகிர்ந்து மகிழுங்கள்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Thursday, November 12, 2020

அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ் - புத்தக விமர்சனம்| amuthasurabhi diwali bo...

உங்கள் அபிமான வாலு டிவியில் இதோ ஒரு புது நிகழ்ச்சி... புத்தகங்களை விரும்புவோருக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி இது. புத்தகங்களை வாசிக்காமல் இருப்பவர்களை வாசிக்க வைக்கும் நிகழ்ச்சி இது... வாலுவின் புத்தக விமர்சனம் நிகழ்ச்சி. இதன் முதல் புத்தகமாக அமுதசுரபி தீபாவளி சிறப்பிதழ் - 2020 புத்தகத்தை விமர்சனம் செய்திருக்கிறோம். இதில் வாலுவும் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறார்... வழக்கம்போல இந்த நிகழ்ச்சிக்கும் உங்களின் பேராதரவு கிடைக்கும் என்று நம்புகிறோம்... உங்களது புத்தகங்களும் இந்நிகழ்ச்சியில் விமர்சனம் செய்யப்படவேண்டும் என்று விரும்பினால், இந்த நிகழ்ச்சியில் அதற்கான வழிமுறைகளும் முகவரியும் கொடுக்கப்பட்டிருக்கிறது... தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... மிக்க அன்புடன் வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #book_review #புத்தக_விமர்சனம் #வாலுடிவி #அமுதசுரபி_தீபாவளி_சிறப்பிதழ்

Tuesday, November 10, 2020

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது | Bermuda triangle mystery solved...

பெர்முடா முக்கோணத்தை ஏன் சாத்தானின் முக்கோணம் என்று அழைக்கிறார்கள்?

பெர்முடா முக்கோணம் எங்கே இருக்கிறது? அங்கே ஏலியன்கள் அங்கே இருக்கிறார்களா? அங்கே என்னதான் நடக்கிறது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்...

உங்கள் கேள்விகளை வைட் ஆங்கிள் முறையில் வீடியோவாக எடுத்து 9600045295 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்க... மின்னஞ்சல் எனில் channelvaalu@gmail.com க்கு அனுப்பி வையுங்க... கேள்விகள் உங்களிடமிருந்து கிடைத்தால்... இதுபோல் பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்!

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்... இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

https://www.youtube.com/watch?v=LOmndul40sE

Friday, November 06, 2020

அப்துல் கலாமைப் பற்றி அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சு | கலாம் என் க...

அப்துல் கலாம் ஐயாவைப் பற்றி 10 வயது அரசுப்பள்ளி மாணவியின் அசத்தல் பேச்சை கேட்க வாங்க....

வீடியோவின்முடிவில் பரிசுப்போட்டி குறித்த அறிவிப்பும் இருக்கிறது... மறக்காம பாருங்க...

உங்கள் அபிமான வாலு டிவியின் நாளைய நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் இன்று அரசுப்பள்ளி மாணவியின் திறமையை உங்கள் வாலு டிவி மேடையேற்றுகிறது... 

யார் இந்த அரசுப்பள்ளி மாணவி? எந்த பள்ளியில் படிக்கிறார் உள்ளிட்ட தகவல்களை இந்த வீடியோ உங்களுக்கு சொல்லும்..

வாழ்த்துங்கள் இந்த குழந்தை வளரட்டும்... பகிருங்கள் இக்குழந்தையின் திறமை திக்கெட்டும் பரவட்டும்...

அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #நாளைய_நட்சத்திரங்கள் #vaalutv #வாலுடிவி

Wednesday, November 04, 2020

இருட்டிலும் கொசுக்கள் நம்மை எப்படி தேடி கண்டுபிடிக்கிறது தெரியுமா? - இது கொசுவின் கதை

கும்மிருட்டாக இருந்தாலும் நம்மை தேடி வந்து கொசுக்கள் எப்படி கடிக்கிறது தெரியுமா? கொசுவின் வாய்ப்பகுதியில் 2 கத்திகள், 4 ஊசிகள் இருப்பது உங்களுக்கு தெரியுமா? கொசுவை எப்படி ஒழிப்பது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலைத் தருகிறது இந்த வீடியோ...

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை வீடியோவாக எடுத்து 9600045295 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்க... மின்னஞ்சல் எனில் channelvaalu@gmail.com க்கு அனுப்பி வையுங்க... கேள்விகள் உங்களிடமிருந்து கிடைத்தால்,,, இதுபோல் பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்.... 

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்... இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 

வாலு டிவி 

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Sunday, November 01, 2020

41 தமிழ் இலக்கியங்கள் அடங்கிய புத்தகம் 270 ரூபாய் | தமிழ் இலக்கிய இலக்கண...

தொல்காப்பியம், பத்துப்பாட்டு நூல்கள், எட்டுத்தொகை நூல்கள், பதிணென் கீழ்கணக்கு நூல்கள், இரட்டை காப்பியங்கள் என 41 தமிழ் இலக்கியங்கள் 1564 பக்கங்கள் கொண்ட ஒரே புத்தகத்தில்… அதன் விலை ரூ.270 மட்டுமே…

41 இலக்கியங்கள் என்னென்ன? அதன் சிறப்புகள் என்னென்ன? இந்த புத்தகத்தை யார் வெளியிட்டது? அப்புத்தகத்தை எப்படி வாங்குவது? உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த வீடியோவை நிறைய பேருக்கு பகிர்வதன் மூலம், தமிழ் கூறும் நல்லுலகிற்கு உங்களால் ஆன சிறு தொண்டை ஆற்றமுடியும்…

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்... இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு... 

மிக்க அன்புடன் 
வாலு டிவி 

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Saturday, October 31, 2020

வாலு டிவிக்கு 3000 சப்ஸ்கிரைபர்கள் | vaalu tv reached 3k Subscribers | V...

வணக்கம் அன்பு நெஞ்சங்களே...

உங்கள் அபிமான வாலு டிவி அக்டோபர் 20, 2020 அன்று தொடங்கப்பட்டது. தொடங்கிய இரண்டரை மாதங்களில் 3000 சப்ஸ்கிரைபர்ஸ்களை தொட்டது வாலு டிவி... இது மென்மேலும் தொடரவேண்டும் உங்களின் பேராதரவோடு...

இத்தனைக்கும் காரணமான எங்களன்பு நேயர்களான உங்கள் அனைவருக்கும் எங்களின் பேரன்பும் பெரு நன்றியும்...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#vaalu_tv #வாலு_டிவி #vaalu_meame

Tuesday, October 27, 2020

தேசிய கல்விக்கொள்கை 2020 - ஓர் அலசல் | தேசிய கல்விக்கொள்கையின் நன்மை தீம...

தேசிய கல்விக்கொள்கை - 2020 நன்மைகள் என்ன? தீமைகள் என்ன? என்பது குறித்த ஓர் அலசல். இது குறித்த பருந்துப்பார்வை... தேசிய கல்வி கொள்கை குறித்து உங்கள் ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம்.. அது குறித்த விவரங்களும் கொடுத்திருக்கிறோம்...

இந்த தேசிய கல்விக்கொள்கையை தமிழில் மொழிபெயர்த்த தோழர் விழியன் மற்றும் அவர் குழுவினர், பாரதி புத்தகாலய தோழர் நாகரஜன் மற்றும் அவர் குழுவினருக்கு இத்தருணத்தில் எனது நன்றியை உரித்தாக்குகிறேன்...

மிக்க அன்புடன்
மோ.கணேசன்
வாலு டிவி

*************
தேசிய கல்விக் கொள்கை – ஆங்கிலத்தில் படிக்க விரும்பினால்
https://innovateindia.mygov.in/wp-con...

தேசிய கல்விக் கொள்கை - 2020 தமிழில் படிக்க விரும்பினால்...
https://bookday.co.in/nep_2020_tamil

தேசிய கல்விக் கொள்கை குறித்து உங்கள் கருத்துகளை தெரிவிக்க கடைசி தேதி - அக்டோபர் 31, 2020

கருத்துகளைத் தெரிவிக்க: https://innovateindia.mygov.in/nep202...

*****************
#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Sunday, October 25, 2020

காமராஜர் கிங்மேக்கர் ஆனது எப்படி| காமராஜர் திட்டம்| K plan in tamil| kam...

காமராஜர் திட்டம் என்றால் என்ன? காமராஜர் கிங் மேக்கர் ஆனது எப்படி? லால்பகதூர் சாஸ்திரி பிரதமர் ஆனது எப்படி? இந்திரா காந்தி பிரதமர் ஆனது எப்படி? 1965 இந்திய பாகிஸ்தான் போரில் காமராஜரின் பங்கு என்ன? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த வீடியோ... முழுமையாகப் பாருங்க.... 

காமராஜரின் ஒரு பக்க அரசியல் வரலாற்றை தேடிப்பிடித்து கொடுத்திருக்கிறோம். இந்தியாவின் வரலாறு என்றும் சொல்லலாம்.

உங்களுக்கும் பல துறைகளில் சந்தேகங்கள் இருக்கா..? அறிவியல், புவியியல், வானியல், தாவரவியல், விலங்கியல், கடலியல், பொது அறிவு, விளையாட்டு, நவீன தொழில்நுட்பம், சினிமா என எந்த துறைகளில் இருந்து வேண்டுமானாலும் உங்கள் கேள்விகள் இருக்கலாம்... 

உங்கள் கேள்விகளை வீடியோவாக எடுத்து 9600045295 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வையுங்க... மின்னஞ்சல் எனில் channelvaalu@gmail.com க்கு அனுப்பி வையுங்க... கேள்விகள் உங்களிடமிருந்து கிடைத்தால்,,, இதுபோல் பதில்கள் உங்களுக்கு கிடைக்கும்....

தொடரும் உங்களது ஆதரவிற்கு எங்களின் நெஞ்சார்ந்த நன்றிகள்...

இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

மிக்க அன்புடன்

வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ask_vaalu #vaalutv #வாலுடிவி #askvaalu

Friday, October 23, 2020

நமக்கு பேஸ்ட் வெளிநாட்டுக்காரனுக்கு வேப்பங்குச்சி | எதைக்கொண்டு பல் விளக்குவது நல்லது?

எதைக்கொண்டு பல் துலக்குவது நல்லது என்று ஒரு சுட்டி பொண்ணு கேட்ட கேள்விக்கு விடையைத் தேடியபோது... பல்வேறு திடுக் தகவல்கள் கிடைச்சது... 6 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகள் நாம்  பயன்படுத்துற பேஸ்ட்டையே பயன்படுத்தக்கூடாதுன்னு உங்களுக்குத் தெரியுமா?

நமக்கு பேஸ்ட்டை கொடுத்துட்டு வெள்ளக்காரங்க வேப்பங்குச்சியில விளக்குறானுங்க... இன்னும் பல திடுக் தகவல்கள் இந்த வீடியோவில் இருக்கு... முழுமையாக பாருங்க... உங்களுக்கே தெரியும்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு நன்றி

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி  #vaalu_tv  #ask_vaalu #askvaalu #வாலுடிவி #vaalutv

Wednesday, October 21, 2020

டும் டும் டும் தண்டோரா புத்தகத்துக்கு கிடைத்த விமர்சனம் - தமிழ் இந்து நாளிதழ்

கடந்த ஜனவரி 2020-ல் குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டேன்...

அதில் டும் டும் டும் தண்டோரா புத்தகம் சிறுவர்களுக்கான பாடல்களாகும். 60 சிறார் பாடல்கள். 40 நறுங்குறள்கள் எழுதியிருந்தேன்.
கொரோனா ஊரடங்கால் புத்தகங்கள் வாசகர்களின் கைகளுக்கு சென்றடையாமல் இருந்தது. தற்போது இந்நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது என நம்புகிறேன்.
இன்றைய தமிழ் இந்து நாளிதழின் மாயாபஜார் பகுதியை எதேச்சையாக புரட்டியபோது, நானெழுதிய டும் டும் டும் தண்டோரா புத்தகம் குறித்து, நாலடியார் போல நாலைந்தே வரிகளில் நறுக் விமர்சனம் தந்திருந்தார் ஆதி வள்ளியப்பன். நன்றி சார்...
அவர் தந்த விமர்சனம் அப்படியே எடுத்துத் தந்திருக்கிறேன்...
*//‘ஒரெழுத்து ஒரு மொழி’ பாடலில் தமிழின் ஒவ்வோர் எழுத்துக்கும் உள்ள அர்த்தத்தை விளக்கியுள்ளார். ‘ஒரு சொல்லில் இரு பொருள்கள்’ பாடலும் சுவாரசியம். பாடுவதற்குத் தோதான பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தாய், தந்தை, ஆசிரியர், நட்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து தலா 4 நறுங்குறள்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924//*
டும் டும் டும் தண்டோரா புத்தகத்திற்கு கிடைத்த முதல் (நாளிதழ்) விமர்சனம் இது...
இந்த விமர்சனப் பகுதியில் அழ.வள்ளியப்பா, தோழர் ஆயிஷா நடராஜனின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கிறது. ஜாம்பவான்களுடன் நமது படைப்பும் இடம்பெற்றிருப்பது... சிறு மகிழ்ச்சியைத் தருகிறது... அந்த மகிழ்ச்சியின் பகிர்வே இது...
டும் டும் டும் தண்டோரா புத்தகத்தின் விலை 110 ரூபாய். தற்போது தள்ளுபடி விலையில் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்க விரும்பினால்...
உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது நன்றிகள்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
இந்த விமர்சனத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர்...