Tuesday, June 15, 2010

ஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து நீக்க வேண்டுமா?

தமிழ்க் கூறும் நல்லுலகில் நமது கருத்துக்களை சொல்வதற்கு ஒரு அமுதசுரபியாக இருப்பது இணையதள வலைப்பூக்கள் ஆகும். அதில் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி தங்களின் அவாவினை சாந்தப்படுத்திக் கொள்கின்றனர்.

அந்த எழுத்துக்கள் யாரைக் கவருகிறதோ..அவர்கள் அதற்கு வாசகர்களாகி விடுகின்றனர். அதனை ஒன்றிணைக்கும் பணியை கூகிள் பிளாக்கர், "Followers' பகுதியில் செய்ய வைக்கிறது.

தேன்கூட்டில் தேனை சேகரிப்பது போல வலைக்குடிலில் வாசகர்களை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல..! அதிலும் சில அயோக்கியர்களால் ஆபாச வலைத்தளங்கள் புகுத்தப்படுகின்றன.

அதனை எப்படி தடுப்பது என புரியாமல் விழித்தவர்களில் நானும் ஒருவன். கண்டேன் சீதையை... அதை எப்படித் தடுப்பது என கண்டுகொண்டேன்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..!

முதலில் உங்களது டாஷ்போர்டுக்கு செல்லுங்கள். அதில் நீங்கள் பல வலைக்குடில்கள் வைத்திருக்கலாம். ஓன்றே ஒன்று கூட வைத்திருக்கலாம். அந்த வலைக்குடிலுக்கு இணையாக வலது புறத்தில் (கீழே உள்ள படத்தைப் பார்க்க) பாலோவர்ஸ் எத்தனை பேர் என்பதை குறிப்பிட்டபடி இருக்கும். அது ஒரு இணைப்புதான் அதனை கிளிக் செய்யவும்...


அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவர் யார்..? அவரை சேர்க்கவா..? தடுக்கவா என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block this user) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)



அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவரை நிச்சயமாக தடுக்கவா? என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)


அவ்வளவுதான்..இனி அந்த தளங்கள் உங்களது பாலோவர்ஸ் பகுதியில தெரியாது.

10 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

பயனுள்ள குறிப்பு நண்பா..

மோகனன் said...

நன்றி தோழரே..!

அடிக்கடி வலைக்குடிலுக்கு வாங்க..!

அமுதா கிருஷ்ணா said...

நல்ல தேவையான தகவல்...

- யெஸ்.பாலபாரதி said...

அவசியமான குறிப்பு. பகிர்தலுக்கு நன்றி!

சௌந்தர் said...

நல்ல தகவல் பாஸ்

Btc Guider said...

கெடுதல் விளைக்கும் Follower களிடமிருந்து பாதுகாக்கும் அருமையான பதிவு. மிக அருமையான பதிவு நண்பரே.

மோகனன் said...

அன்பான அமுதா கிருஷ்ணா அவர்களே

தங்களின் கருத்துப் பகிர்தலுக்கு மிக்க நன்றி..!

அடிக்கடி வலைக்குடிலுக்கு வாங்க..!

மோகனன் said...

அன்பான பாலபாரதிக்கு...

தங்களின் பின்னூட்டப் பகிர்தலுக்கு எனது நன்றிகள்..!

அடிக்கடி வலைக்குடிலுக்கு வாங்க..!

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி சௌந்தர்..!

அடிக்கடி வலைக்குடிலுக்கு வாங்க..!

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், கருத்துப் பகிர்தலுக்கும் மிக்க நன்றி ரஹ்மான்..!

அடிக்கடி வலைக்குடிலுக்கு வாங்க..!