ஆனால் கரூரில் உள்ள காவல் துறையினர் இந்தியாவின் மானமே பறிபோகும் அளவிற்கு மனித சமுதாயமே மன்னிக்கமுடியாத கீழ்த்தரமான செயலை செய்துள்ளனர். அந்த கொடூரச் சம்பவத்தின் பிளாஷ் பேக்...
கரூர் மாவட்டம், ராயனூரில் இலங்கை அகதி முகாமில் வசித்து வந்த பத்மாவதி (வயது 28) என்பவர், கடந்த மார்ச் மாதம் தனக்குத் தானே மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செந்து கொள்ள முயன்றார். பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார், மூன்று வார போரட்டத்திற்குப் பிறகு மருத்துவமனையிலேயே கடந்த 28.03.10 அன்று உயிரிழந்துள்ளார்.
இந்த பத்மாவதியின் கணவரான குமார் என்பவரை, கரூர் காவல்துறையினர் ஒரு கொலை சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர் இந்த நிலையில் குமார் உங்களை பார்க்க விரும்பியதாக பத்மாவதியிடம் கூறி, அவரையும் அவரது தாயையும் காவல் துறையின் வாகனத்திலேயே அழைத்துச் சென்றுள்ளனர்.
முகாமிற்குப் பொறுப்பாக இருந்த அதிகாரியும் காவல்துறையினருடன் காவல் நிலையத்திற்குச் செல்ல அனுமதித்த நிலையில் அவரை அழைத்துச் சென்ற காவல்துறையினர், அவ்விருவரையும் காவல் நிலையத்திற்குச் செல்லாது தனியார் வீடொன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளன்ர், பத்மாவதியின் தாயாரை வெளியே இருக்க வைத்து விட்டு, பத்மாவதியை மட்டும் உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர்.
மூன்று மணி நேரத்திற்குப் பிறகு பத்மாவதியின் தாயார் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். பத்மாவதியை அவர் பார்த்த போது அலங்கோலமான நிலையில், உடல் நடுங்கியபடி, கசங்கிய காகிதம் போல் கிடந்திருக்கிறார். அவர் தன்னை மூன்று காவலர்கள் கற்பழித்து விட்டதாக தாயாரிடம் கதறியபடி கூறியிருக்கிறார். அழுது கொண்டிருந்த இருவரேயும் அதட்டி, இதுதொடர்பான தகவல்களை வெளியிட்டால் பத்மாவதியின் கணவரைச் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டி இருக்கின்றனர். பின்பு இருவரையும் அதே வாகனத்தில் ஏற்றி முகாமிற்கே திரும்ப கொண்டு வந்து விட்டு விட்டனர்.
இந்த நிலையில் வீடு திரும்பிய பத்மாவதி அவமானம் தாங்காமல் தனக்குத் தானே எண்ணை ஊற்றி தீமூட்டிக் கொண்டுள்ளார். பின்னர் பலத்த தீக்காயங்களுடன் கரூர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பத்மாவதி, மூன்று வாரங்களுக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்தார்.
உயிரிழப்பதற்குச் சற்று முன் மனித உரிமைவாதியும்,பெண்ணிலைவாதியுமான ஒருவரிடம் தனது மரண வாக்குமூலத்தை வழங்கியுள்ளார். அதை அவர் தனது வீடியோ மொபைலில் பதிவு செய்திருக்கிறார்.
அந்த வாக்கு மூலத்தில் முக்கிய விஷயங்கள் உள்ளடங்கி இருப்பதாக தெரிவித்துள்ள அந்த பெண்ணிலைவாதி அதன் சிறு பகுதியை வெளியிட்டுள்ளார். அதில் தனது கணவரை காட்டுவதாகக் கூறி தன்னையும் தனது தாயாரையும் காவல்துறையினர் அழைத்துச் சென்றதாகவும் எனினும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லாமல் தனியான கம்பவுண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு தன்னை காவலர்கள் கற்பழித்தார்கள் என்றும், கடைசி வரை தனது கணவரைக் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தபோது ‘இந்தப் பெண் வயிற்றுவலிகாரணமாகவே தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக’ தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக அவர் இறந்த அன்றே அவசர அவசரமாக பத்மாவதியின் சடலத்தை காவல் துறையினர் தகனம் செய்துள்ளனர். இதற்காக FIR எனப்படும் முதல் தகவல் அறிக்கையும், வழக்கும் பதிவு செய்யப்பட வில்லை. கற்பழிப்பு செய்தோர் கைது செய்யப்படவுமில்லை.
இது குறித்து இந்தியாவின் மனித உரிமைகள் அமைப்புக்கள் மற்றும் பெண்ணுரிமை அமைப்புக்கள் கடுமையான விமர்சனங்களை அப்போதே வெளியிட்டனர். ஆனால் பலனில்லை... பிளாஷ் பேக் முடிந்தது.
இனி விஷயத்திற்கு வருவோம்... இந்த விவகாரம் தற்போது உயர் நீதிமன்ற தலையீட்டால் மீண்டும் விஸ்வரூபமெடுத்திருக்கிறது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
இனியேனும் காமவெறி பிடித்த அந்த காவலர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்படுவார்களா..? ஒரு சிறுமியை கற்பழித்தவனை என்கவுண்டர் செய்த காவல் துறையினர், இந்த கறுப்பு ஆடுகளை இனங்கண்டு என்கவுண்டர் செய்யுமா..? தமிழக முதல்வரின் பொறுப்பில் இருக்கும் இந்த துறையில் இனியேனும் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமலிருக்குமா...
வீடிழந்து, நாடிழந்து நம்மையே சரணம் என்று நாடி வந்த நம் உடன் பிறவா தமிழனத்தாரை, தரங்கெட்ட நாய்கள் சூறையாடுவது தகுமோ... அந்த கேடுகெட்ட மூன்று நாய்களும் செய்த இந்த இழி செயல், அவர்கள் அவர்களது தாயை, தங்கையை, அக்காவையே இப்படி அழித்தற்குச் சமமாகும்...
நெஞ்சு பொறுக்கவில்லை தோழர்களே... இந்த நாய்களை இனியேனும் நம்மண்ணில் விட்டு வைத்தால் தமிழனம் தலை நிமிராது... நிமிரவே நிமிராது...
வாழ்க தமிழக காவல் துறை... வளர்க தமிழ் சமுதாயம்... அடபோங்கடாங்க... நீங்களும் உங்க சமுதாயமும்...!
(இதன் ஆங்கில மூலச் செந்திக்கு: http://timesofindia.indiatimes.com/city/chennai/HC-moved-for-probe-into-womans-rape/articleshow/6978470.cms)