பாப்புவா நியூ கினியா நாட்டின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தில் உள்ள மெண்டி முனிகு மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது. இப்பகுதியில், கடந்த நவம்பர் 19, 2010 அன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் 4 பெண்கள் அந்த சிறுவனை கற்பழித்துள்ளனர்.
இது குறித்து மெண்டி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரி டெட்டி டெய் கூறுகையில், ‘சிறுவனிடம் பாலத்காரம் செய்த பெண்கள் (மிருகங்கள்) யார் என்பது இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அச்சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும், தன்னை கற்பழித்த பெண்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி. உள்ளனவா என சோதனை செய்யும்படியும் கூறியுள்ளான்.
உலக சுகாதார அமைப்பான யுனிசெப் கடந்த 2008-ல் வெளியிட்ட அறிவிக்கையில் இலகிலேயே மிக அதிகளவு கற்பழிப்பு குற்றங்கள் பாப்புவா நியூ கினியா நாட்டில்தான் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. இதே அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் அதிகம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடும் இந்த நாடுதான் என அறிவித்திருக்கிறதாம்.
அதனாலேயே அந்த சிறுவன் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என பீதியில் உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ‘இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு செல்ல வேண்டும் என இதுநாள் வரை அறிவுரை கூறி வந்தேன்... இனி ஆண்களுக்கும் இதே அறிவுரையை கூறவேண்டிய நிலை வந்து விட்டது.
இங்கு பதிவு செய்யப்படும் கற்பழிப்பு குற்றங்களில் பாதிக்கப் படுவோர்களில் பாதி சதவீதத்தினர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் 13 சதவீதம் பேர் 7 வயதிற்கும் குறைவானவர்கள்’ என்றார் டெட்டி.
(இதனுடைய ஆங்கில மூலச் செய்திக்கு: http://www.news.com.au/world/boy-gang-raped-by-four-women-at-knifepoint-in-papua-new-guinea/story-e6frfkyi-1225958505014)
4 comments:
என்ன கொடும சரவணா இது
காலம் கலி காலம் ஆகிப் போச்சுடா சரவணா...
அடிக்கடி படிக்க வாங்க தோழா...
marai usa kaalatin kolam
தங்களின் வருகைக்கு நன்றி தோழரே...
Post a Comment