Wednesday, October 21, 2020

டும் டும் டும் தண்டோரா புத்தகத்துக்கு கிடைத்த விமர்சனம் - தமிழ் இந்து நாளிதழ்



கடந்த ஜனவரி 2020-ல் குறுக்கெழுத்து அறுபது, டும் டும் டும் தண்டோரா, வாலுவிடம் கேளுங்கள் ஆகிய மூன்று புத்தகங்களை எழுதி வெளியிட்டேன்...

அதில் டும் டும் டும் தண்டோரா புத்தகம் சிறுவர்களுக்கான பாடல்களாகும். 60 சிறார் பாடல்கள். 40 நறுங்குறள்கள் எழுதியிருந்தேன்.
கொரோனா ஊரடங்கால் புத்தகங்கள் வாசகர்களின் கைகளுக்கு சென்றடையாமல் இருந்தது. தற்போது இந்நிலை மெல்ல மெல்ல மாறி வருகிறது என நம்புகிறேன்.
இன்றைய தமிழ் இந்து நாளிதழின் மாயாபஜார் பகுதியை எதேச்சையாக புரட்டியபோது, நானெழுதிய டும் டும் டும் தண்டோரா புத்தகம் குறித்து, நாலடியார் போல நாலைந்தே வரிகளில் நறுக் விமர்சனம் தந்திருந்தார் ஆதி வள்ளியப்பன். நன்றி சார்...
அவர் தந்த விமர்சனம் அப்படியே எடுத்துத் தந்திருக்கிறேன்...
*//‘ஒரெழுத்து ஒரு மொழி’ பாடலில் தமிழின் ஒவ்வோர் எழுத்துக்கும் உள்ள அர்த்தத்தை விளக்கியுள்ளார். ‘ஒரு சொல்லில் இரு பொருள்கள்’ பாடலும் சுவாரசியம். பாடுவதற்குத் தோதான பாடல்கள் இந்தத் தொகுப்பில் உள்ளன. தாய், தந்தை, ஆசிரியர், நட்பு, சுற்றுச்சூழல், வேளாண்மை உள்ளிட்ட அம்சங்கள் சார்ந்து தலா 4 நறுங்குறள்களையும் ஆசிரியர் எழுதியுள்ளார்.
புக்ஸ் ஃபார் சில்ரன், தொடர்புக்கு: 044-24332924//*
டும் டும் டும் தண்டோரா புத்தகத்திற்கு கிடைத்த முதல் (நாளிதழ்) விமர்சனம் இது...
இந்த விமர்சனப் பகுதியில் அழ.வள்ளியப்பா, தோழர் ஆயிஷா நடராஜனின் படைப்புகளும் இடம்பெற்றிருக்கிறது. ஜாம்பவான்களுடன் நமது படைப்பும் இடம்பெற்றிருப்பது... சிறு மகிழ்ச்சியைத் தருகிறது... அந்த மகிழ்ச்சியின் பகிர்வே இது...
டும் டும் டும் தண்டோரா புத்தகத்தின் விலை 110 ரூபாய். தற்போது தள்ளுபடி விலையில் 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. ஆன்லைனில் வாங்க விரும்பினால்...
உங்கள் அனைவரின் ஆதரவிற்கும் எனது நன்றிகள்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன், எழுத்தாளர், பத்திரிகையாளர்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
இந்த விமர்சனத்தை ஆன்லைனில் படிக்க விரும்புவோர்...

No comments: