அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு அற்புதமான வாய்ப்பு. பாடத்தைத்தாண்டி, கலைகளிலும் மாணவர்கள் தேர்ச்சி பெற வேண்டும் என்று நினைப்பவன் நான். அதற்கேற்ற திட்டங்களை வாலு டிவியில் செயல்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தேன். அதை இப்போது பள்ளிக்கல்வித்துறையே முன்னெடுத்திருக்கிறது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் ஒவ்வொரு வாரமும் 2 பாடவேளைகள் கலை பண்பாட்டிற்காக ஒதுக்கப்பட இருக்கிறது. இந்த பாட வேளைகளில் பொம்மலாட்டம், கரகாட்டம், கிராமிய இசை, கிராமியப் பாடல்கள் உள்ளிட்ட கலைகளை அவர்களது பள்ளி அருகில் இருக்கின்ற கலைஞர்கள் மூலம் கற்றுக்கொள்ளலாம். இவர்களுக்காக வட்ட, மாவட்ட, மாநில அளவில் போட்டி நடத்தப்பட இருக்கிறது.
இந்த அறிவிப்பினை கிராமிய பாடலிசைக் கலைஞர் அனிதா குப்புசாமி பள்ளிக் கல்வித்துறைக்காக வெளியிட்டிருக்கிறார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு இது ஒரு அற்புதமான வாய்ப்பு
உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...
தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.
தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலுடிவி #vaalutv ##ArtandCultureInTNGovtSchools
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
------------------------------
important announcement for TN schools department
watch this video... put your comments... support us...
with love
vaalu
No comments:
Post a Comment