Saturday, September 01, 2007

கோட்டுக் கிறுக்கல்கள்

தாயும் சேயும்

தாயும் அவள் சேயும்



கள்ளமில்லாத வயது



குடிநீர் கிடைத்த மகிழ்ச்சி...







சிறுமியும்
அவளது நாய்குட்டியும்


நான் ரசித்து வரைந்த ரதி...


அழகிய வாத்து



(இந்த வாத்து படத்தை உற்று நோக்கினால் ஒரு செய்தி படிக்கக் கிடைக்கும்)



தமிழ்ப் பெண்



முப்பரிமாண கோட்டுச் சித்திரம் (இந்த ஓவியத்தை உற்றுப் பார்த்தால் ஒன்பது விதமாக இந்த சிறுவர்கள் கண்ணுக்கு தெரிவார்கள்... கண்டுபிடிக்க முடிகிறதா..?)



(நான் ரசித்த ஓவியங்களை, கோடுகளால் கிறுக்க முற்பட, இறுதியில் கிடைத்தவைகள்தான் இவை...)

6 comments:

Anonymous said...

அன்புள்ள மோகனன்,

தங்கள் வலைப்பதிவிற்குத் தற்செயலாக வர நேர்ந்தது. சுவாரஸ்யமான பதிவுகள்!

தங்கள் கோட்டோவியங்களும் மிக நன்று. குறிப்பாக, நாய்க்குட்டியுடன் நிற்கும் சிறுமியின் கோட்டோவியம் என் கவனத்தைக் கவர்ந்தது.

எனது ஆங்கில வலைப்பதிவில் எழுதியிருக்கும் ஒரு கதைக்கு இந்த ஓவியம் மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், இந்த ஓவியத்தைப் பயன்படுத்திக் கொள்ளத் தங்கள் அனுமதி கோரியே இந்தப் பின்னூட்டம். பயன்படுத்திக் கொள்ளலாமா?

(குறிப்பிட்ட கதையை இங்கு காணலாம்: http://thusspakevijay.blogspot.com/)

நன்றி.
விஜய்

மோகனன் said...

அன்பான விஜய் அவர்களுக்கு...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... தாங்கள் முதலில் இட்ட பின்னூட்டத்தை கவனிக்கவேயில்லை. இன்றுதான் கண்டேன்... காணாமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...

தாங்கள் எனது வலைப்பதிவில் இருக்கும் தகவல்களும் சரி, படங்களும் சரி, கோட்டுக் கிறுக்கல்களும் சரி... எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... தடையில்லை... அதற்கு நான் எனென சொல்லப் போகிறேன்...

பயன் படுத்திக் கொள்ளுங்கள்...

மேலும் உங்களுக்கு ஏதேனும் கோட்டுக் கிறுக்கல் வேண்டுமெனில் என்னை அழையுங்கள்... சிறப்பாக வரையத் தெரியாது எனினும், என்னால் இயன்றவரை செய்து தருகிறேன்...

தங்களை இதுநாள்வரை காக்க வைத்ததற்கு எனது மனமார்ந்த மன்னிப்புகள் தோழரே...

Anonymous said...

மிக்க நன்றி, மோகனன்!

பதிவில் படத்தைப் பொதித்தாயிற்று! இப்பொழுது பார்க்கவும்!

Unknown said...

இன்னும் நிறைய எதிர்பார்த்து
http://loosupaya.blogspot.com

நான் இந்த பதிப்பை என்னுடைய ப்லோக் கூட தந்து உள்ளன்
நன்றி

மோகனன் said...

அன்பு நண்பர் விஜய் அவர்களுக்கும், நண்பர் விவேக் அவர்களுக்கும் எனது நன்றிகள்... தங்களது இடுகைகளைக் கண்டேன்... மகிழ்ந்'தேன்'...

விஜய் அவர்களுக்கு.. ஆங்கில வாசம் என் (மூக்கில்) மூளையில் ஏறவில்லை என்பதால் கதையை வாசிக்க இயலவில்லை. இருப்பினும் அதைப் படித்து இன்புற்ற ஒருவரின் கருத்தினைப் படித்'தேன்'.

அப்போதே நினைத்'தேன்'. உமது கதை ஒரு படி'தேன்'. தமிழில் தர முயற்சிக்கவும்...

நண்பர் விவேக்கிற்கு...

'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவச் செய்தல் வேண்டும்' பாரதியின் விலைமதிப்பற்ற வரிகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் உங்களது பணிக்கு வாழ்த்துக்கள்...

இந்த அடியவனின் வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு நன்றிகள் பல...

மோகனன் said...

நன்றி