அதனால் தமிழர்கள் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும் பேருந்துகளில் முன்னர் அச்சடிக்கப்பட்ட பேருந்து சீட்டு தூய தமிழில் வழங்கப்பட்டது.
அண்மையில் பேருந்து சீட்டை வழங்குவதற்கு கையடக்க இயந்திரங்களில் பேருந்து சீட்டு அச்சடித்து வழங்கும் முறை நடைமுறைப் படுத்தப்பட்டது. ''தமிழ்... செந்தமிழ்... செம்மொழித் தமிழ்...'' என்று கூவிய தமிழக அரசு, நவீன பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...
இக்குறை தமிழக அரசின் போக்குவரத்து கழகத்தால் நடத்தப்பட்டுவரும் அனைத்து பேருந்துகளிலும், அவர்கள் வழங்குகின்ற பேருந்து சீட்டுகளில் அப்பட்டமாகத் தெரிகிறது.
சேலம் - சென்னை மார்க்கம் வழியாக செல்லும் அரசு விரைவுப் பேருந்தில், ஆங்கிலத்தில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு
காரணம் கேட்டல்..?, பெங்களூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டு வாங்கப்பட்டது... (எவ்வளவு பணம் சுருட்டப்பட்டதோ..?) அதனால்தான் ஆங்கிலத்தில் உள்ளது என பதில் வருகிறது.
இதே பெங்களூர் இருக்கும் கர்நாடகாவில் ஓடும் பேருந்துகளில் வழங்கப்படும் கையடக்க இயந்திரத்தால் வழங்கப்படும் பயணச்சீட்டில் அவர்களது தாய்மொழியான கன்னடம் இருக்கிறது...
இதைப்பார்க்கும்போது யாருக்கு இருக்கிறது மொழிப்பற்று... தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் முதற்கொண்டு, தமிழகம் முழுதும் பயணிக்கும் அதிவிரைவு பேருந்துகள் வரை ஆங்கிலத்தில், பேருந்து சீட்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தின் பிற நகரங்களில், தனியாரால் நடத்தப்படும் பேருந்துகளில் இதே நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் வழங்கும் பயணச்சீட்டில் தாய்த்தமிழில் அச்சிடப்பட்டு தரப்படுகிறது...
கடலூர் - பண்ருட்டி மார்க்கம் வழியாக செல்லும் தனியார் பேருந்தில் தமிழில் வழங்கப்பட்ட பேருந்துச்சீட்டு
இவர்களால் மட்டும் எப்படி சாத்தியமாகிறது என்று அவர்களடம் வினவினால்..? கோயமுத்தூரில் இதற்கான மென்பொருள் வடிவமைக்கப்பட்டது. குறைந்த செலவில் இதற்கான மென்பொருளை தமிழில் வழங்குகிறார்கள் என்றனர்.
தமிழகத்தில் பயணம் செய்தால் தமிழில் பயணச்சீட்டில்லை... தலைகுனிவு. தமிழ் பட்டும் படிக்கத் தெரிந்தவர்கள் தமிழகத்தில் 70% பேர்... ஆங்கிலம் வேண்டாமென்று சொல்லவில்லை... தமிழுக்கு மரியாதை செய்ய வேண்டாம், உரிய மதிப்பை கொடுத்தால் போதும்... அதன் கீழ் ஆங்கிலம் வரட்டும்...
நீதிமன்றத்தில் தமிழ்... மக்கள் பயணிக்கும் அரசு பேருந்துகளில் ஆங்கிலத்தில் பயணச்சீட்டு... ஆகா... தமிழக அரசின் தமிழ்ப்பற்றை நினைத்தால் குமரியில் குன்றென நிற்கும் திருவள்ளுவருக்கே தலைசுற்றும்... அட போங்கய்யா... நீங்களும் ... உங்கள் தமிழ்ப்பற்றும்..?
14 comments:
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.
ஆட்சியாளர்கள் தமிழில் பேசுவதாலோ, ஞாயிறுதோரும் அவர்களின் தொலைக்கட்சியில் கவிதை வாசிப்பதாலோ தமிழுக்கும் தமிழர்களுக்கும் ஒரு பயனும் ஏற்படப்போவது இல்லை.
ஆட்சியாளர்கள் பேச்சைக் குறைத்து ஆக்கப்பூர்வமான செயலில் இறங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைத்து நிலைகளிலும் தமிழை சரியாக பயன்படுத்த வேண்டும்.
ஊரில் நான் வாங்கிய பயணச்சீட்டில் தமிழ் இருந்ததால் பத்திரப்படுத்தி வைத்தேன் பதிவு போடலாம் என்று. எனக்கு முன்மு நீங்கள் போட்டு விட்டீர்கள் பதிவு நன்றாக இருந்தது.
சரவணகுமரன் said...
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இது உதவும் என்று எனக்கு தோன்றவில்லை. கிழித்துக் கொடுக்கப் படும் பயணச்சீட்டில் வெறும் ரூபாய் மட்டுமே இருக்கும்.
தமிழ்ல பயணசீட்டு இல்லாட்டி தமிழ் செத்து போய்டுமா ?
வாழ்க தமிழ்...
வளர்க கழகங்கள்....
//பேருந்து சீட்டுகளில் ஆங்கிலத்தை மட்டுமே அச்சில் பயன்படுத்துகிறது...//
வெட்கம்.. வெட்கம்..
//
சரவணகுமரன் said...
வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம்.//
வெளி மாநிலத்தவர் மட்டும் ஏறும் பேரூந்துகளில் இருந்தால் அவர்களுக்கு நல்லது. தமிழர் பயணம் செய்தால்?? இன்னும் எத்தனை மாநிலங்களில் தமிழ் நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்காக தமிழில் பயணச் சீட்டு தருகிறார்கள் என்று கூற முடியுமா?
வேதனை.. வேதனை..
//மணிகண்டன் said...
தமிழ்ல பயணசீட்டு இல்லாட்டி தமிழ் செத்து போய்டுமா ?//
தமிழை பிற மொழியில் பயணச் சீட்டு கொடுத்து கொல்ல முடியாது. ஆனால் தமிழ் நாட்டை விட்டு துரத்திவிட முடியும்.
துயரம்... துயரம்...
தமிழர் ஒன்று பட்டு வெட்கப் படுவோம். வேதனை தீர்ப்போம். துயர் துடைப்போம்
கிளம்பிற்றுக் காண தமிழ் சிங்கக் கூட்டம், கிழித்தெறிய தேடுது காண் பகைக் கூட்டத்தை; வளம் பெரிய தமிழ்நாட்டில் தமிழரல்லார் வால் நீட்டினால், இனி உதை தான் கிடைத்திடும் காண்
- பாரதிதாசன்
பெங்களூர் நகரில் பேருந்தில் பயணம் செய்ய நான் பட்ட கஷ்டம் எனக்குதான் தெரியும். இந்த பேருந்து அங்கு செல்லுமா என்று விசாரிக்கும் அவல நிலை ஏனென்றால் அங்கு பேருந்து செல்லுமிடம் அனைத்தும் கன்னடத்தில் ...
கொடுமைங்க..... வாய் கிழியப் பேசுவாங்க..... செயல்ல ஒன்னும் இருக்காது! வேலியே பயிரை மேயுற காலமிது!
http://maniyinpakkam.blogspot.com/2008/09/blog-post_6036.html
தங்கள் வருகைக்கும், கருத்துக்களிற்கும் மிக்க நன்றி...
ஆங்கிலத்தில் தருவது வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... என்பது ஒத்துக் கொள்கிறேன்... அங்கு தமிழை முதலில் கொடுத்து, அடுத்து ஆங்கிலத்தில் தந்திருக்கவேண்டும் என்பதே என்னுடைய வாதம், கேள்வி..?
A private Company can decide to implement This system today, get the software tommorrow and start giving tickets day after tomorrow
Government on the other hand, has to follow a detailed procedure.
You have to submit the Technical specifications, get approved, get detailed estimates, sent for budget allocation, wait for budget (1 full year), then wait for GO, call for tender, wait for tender period, then buy.
--
So the technology used today in government buses is the one that was existing in 2006
--
At that time, because of the Unicode / TUNE Controversy (if you are not aware of this, ask any knowledgable persons), all works in Tamil were put on hold.
So they decided to go for English.
Only at the beginning of 2008, they have decided not to wait further and get things in Unicode and change to TUNE later if needed
So you will see the tickets in Tamil in 2010
---
//வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு உதவியாக இருக்கும். பரவாயில்லை... //
This is not the reason
--
I hope all those who want to scratch your itch against government are able to understand the reality now
If you can see, Unicode sites were developed only in 2008
The new websites of http://www.tnrd.gov.in
http://eservices.tn.gov.in have Unicode interface.
அரசு அலுவலருக்கு நன்றிகள்...
தங்கள் வாதம் சரியெனத் தோன்றவில்லை... காரணங்கள் சரியானாலும்... வலுவானதாக இல்லை...
முத்தமிழறிஞர்... தமிழ்க்குடி தாங்கி என்பவருக்கு இது சாதரணமான விடயம்தான்... அரசு பேருந்து சீட்டில் தமிழ் வரவைக்க ஏன் முடியாது...
யாரோ மஞ்சள் குளிக்க...தமிழன் ஏமாறுகிறான்.. அவ்வளவே...
என்னாங்க மணிகண்டன்...
இப்படி கேக்கறீங்க.... கட்டுரையை முழுசா மறுபடியும் படிங்க...
Post a Comment