மெல்போர்ன், அக்.7: ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்திய தொழில் அதிபர் பிரதீப் குமார் (வயது 33) கொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் அவரது உடல் புதன்கிழமை (இன்று) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதீப் குமார் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்துரா நகரத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தொழில் நிமித்தம் காரணமாக சிலரை சந்திப்பதற்காக, மில்துராவிலுள்ள நூலகத்திற்கு செல்வதாக கிளம்பியுள்ளார். அதிலிருந்துதான் அவர் காணவில்லை என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய காரை, மில்துரா நகரத்திற்கு வெளியேயுள்ள ரயில் நிலையம் அருகே நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ, கிரெடிட் கார்டுகளிலிருந்தோ எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கண்டு பிடித்துள்ளனர்
.
இந்த கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிறவெறி காரணமாக ஏற்ப்ட்ட அமளியின் காரணமாக மற்றொரு இந்தியர் கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments:
Post a Comment