Thursday, October 29, 2009

பூரி ஜெகன் நாதர் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்த தேவதாசி முறை ஒழிந்தது

பூரி, அக். 29: ஒரிஸ்ஸாவிலுள்ள  பூரி ஜெகன் நாதர் கோவிலில் கடந்த 800 ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறை அடியோடு ஒழி்ந்தது.

தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வரை வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.

இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது ‘அதிகார வர்க்கத்தினர்’களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இம்முறைக்கு 1920 முதற்க்கொண்டு இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

ஆயினும் பூரி ஜெகன் நாதர் கோவிலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்ந 1990 களின் தொடக்கத்தில் புதிய தேவதாசிகளைக் கொண்டு வந்து இக்கோவிலில் வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் தேசிய அளவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால்,  அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு எந்த பெண்ணும் அக்கோவிலில் தேவதாசியாக இருக்க முன்வரவில்லை. ஆதலால் இந்த தேவதாசி முறை அடியோடு இங்கு ஒழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.

கோவிலில் நடனமாடுவது, கோவிலை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட 36 விதமான சேவைகளை இந்த தேவதாசிகள் அக்கோவிலில் செயவார்களாம். இம்முறை கடந்த 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் மட்டுமே இறைவனுக்கு பெண்கள் சேவை செய்வது அனுமதிக்கப்படுகிறது என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

6 comments:

Anonymous said...

அடடா! அப்புறம் எப்படி? ஜாதிக்கார பயலுவ என்னப் பண்ணுவாய்ங்க? என்னக்கொடுமை இது? தட்டிக்கேட்க யாருமில்லையா?

மோகனன் said...

அட அறிவாளிகளா... நீங்ககெல்லாம் திருந்தவே மாட்டீங்களா..?

ஆரண்ய நிவாஸ் ஆர். ராமமூர்த்தி said...

இந்த காலத்திலும் இப்படியா?

மோகனன் said...

ஆமாங்க ராமமூர்த்தி...

sangeetha said...

HOW COULD YOU GET THAT PICTURE?

DO YOU KNOW ONE THING? THAT GIRLS WERE MASTER OF ALL ARTS-- LIKE AAYAKKALAIKAL 64. THOSE DAYS THEY KNOW THE 64 ARTS AND PRACTICE THEIR EVERYDAY LIFE. THEY ARE EXCELLENT/ TALENTED. THAT TIMES, NOBODY STAND BEFORE THEIR TALENT , HMM. . .

REALLY GOD SAVE LOT OF WOMEN FROM THAT PAINFUL SITUATION. THANK GOD.

மோகனன் said...

ம்ம்ம்... புதுத்தகவல்கள்... நன்றி சங்கீதா...