வணக்கம் அன்பு நெஞ்சங்களே...
பத்திரிகை உலகில் அடி எடுத்து வைத்து 15 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. சச்சின் தெண்டுல்கர் முதல் சாமன்யன் வரையிலும், திரை உலக பிரபலங்கள் முதல் திடலில் திரியும் சிறுவன் வரையிலும், அரசு அதிகாரிகள் முதல் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வரை பேட்டி எடுத்திருக்கிறேன். பலவித கட்டுரைகளை எழுதியிருக்கிறேன்.
இத்தனை ஆண்டுகால வளர்ச்சிக்குப் பிறகு... சென்ற ஆண்டின் இறுதியில் பொள்ளாச்சி மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற சிற்றிதழ் குறித்த பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக, பயிற்சியாளராக கலந்து கொண்டேன். மேடை ஏறி, நான் கற்றதை மற்றவருக்கும் கற்பிக்கும் வாய்ப்பு அது... கற்பித்து மகிழ்ந்தேன். என் கல்வியின் கற்பினைக் கண்டு மகிழ்ந்தேன்...
நாளை மறுதினம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கலை அறிவியல் கல்லூரியில் 'ஆசிரியர் வைபவம்' என்ற நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. 40 அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பலநூறு பார்வையாளர்கள் முன்பு தங்களது தனித்திறமைகளை மேடையேற்ற இருக்கிறார்கள். அத்தகைய நிகழ்வில் நானும் ஒரு கௌரவ அழைப்பாளராக கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறேன். இதற்கு முழுமுதற் காரணமாய் இருக்கும் ஆசிரியை சுமித்ரா அவர்களுக்கு எனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிக் கொள்கிறேன். எனை இந்த அளவிற்கு வளர்த்து விட்ட எமது ஆசிரியப் பெருமக்கள், எனது பெற்றோர், எனது குடும்பத்தினர், எனது நண்பர்களாகிய நீங்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கிருக்கிறது.
திருப்பத்தூருக்கு உங்களனைவரையும் என் சார்பில் அழைக்கிறேன்..!

4 comments:
மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்கள் !
வாழ்த்துகளுக்கு நன்றி யூர்கன்...
வணக்கம்
உங்கள் வலைப்பூ பக்கத்தை வாசித்தேன்.மிகவும் அருமையாக இருக்கிறது.
நான் சுவிஸில் தமிழாசிரியராக கடமை ஆற்றுகிறேன்.எனக்கு நளவெண்பா பாடலையும் வில்லுப்பாட்டையும் எடுத்து தரமுடியுமா?pls. நன்றி
நன்றி சுஹான்...
தங்களின் தகவலை தாமதமாகப் பார்க்க நேர்ந்தது... பொருத்தருள்க...
தாங்கள் தேடிய பாடல்கள் தங்களுக்கு கிடைத்ததா... எடுத்துத் தரட்டுமா... உங்கள் மின்னஞ்சல் முகவரி தரவும்...
Post a Comment