Tuesday, April 26, 2016

சிலம்பாட்டம் விளையாடலாமா?


தமிழர்களின் வீர விளையாட்டான சிலம்பாட்டத்தை கடந்த ஒரு மாத காலமாக கற்றுக்கொண்டு வருகிறேன். பால பாடத்தில் இருக்கும்போதே பெரிய வித்தையை மக்கள் முன் காட்டவேண்டிய கட்டாயம் நேற்றுமுன்தினம் எங்கள் குழுவுக்கு ஏற்பட்டது. தாம்பரம் சானடோரியம் அம்மன் கோவில் திருவிழாவில் நேற்று முன்தினம் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12:30 வரை திருவீதி உலா நடந்தது. அதில் எங்கள் சிலம்பாட்டக் குழுவின் விளையாட்டும் இடம்பெற்றது.

அதில் நான் ஆடிய தீப்பந்த விளையாட்டு இது... இந்த நிகழ்வு நடந்த அன்று காலைதான் முதன் முதலாக இதற்கு பயிற்சி எடுத்தேன்... அன்று இரவே இதை மக்கள் முன்பு அரங்கேற்றினேன்... எல்லாப் புகழும் எனது சிலம்பாட்ட வாத்தியாருக்கே...

4 comments:

sakthivel teacher said...

இது ஒருநாள் பயிற்சியாக இருப்பின் சிலம்பக்கலை தங்கள் இரத்தத்தில் ஊறியதாக இருக்கும்.... வாழ்த்துகள்

மோகனன் said...

மகிழ்ச்சி தோழர்...

'பரிவை' சே.குமார் said...

வாழ்த்துக்கள் நண்பா.

மோகனன் said...

மகிழ்ச்சி நண்பா...