ஜனவரி 1:
கூரை மேல் சூரிய ஓளி மூலம் மின்சார உற்பத்தி செய்யும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. 5000 கோடி ஒதுக்கீடு.
இந்தியாவில் முதன்முதலாக ஆற்றுக்கு அடியில் பாலம் கட்டும் திட்டத்தினை ஆந்திரப்பிரதேச அரசு கிருஷ்ணா நதியில் துவக்கியது.
பாகிஸ்தானிய பாடகர் அத்னான் சமிக்கு குடியுரிமை வழங்கியது இந்திய அரசு.
டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர்கள் மற்றும் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியில் ரவி அஸ்வின் முதலிடம்.
தில்லியில் வாகன மாசுக்கட்டுப்பாட்டைக் குறைக்க, வாகன கட்டுப்பாடு அமல்.
ஆந்திர பிரதேசத்தில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தாய் மற்றும் சேயை அவர்களுது வீட்டிற்கே அழைத்துச் செல்லும் இலவச வாகன வசதி திட்டம் தொடக்கம்.
இசைஞானி இளையராஜாவிற்கு, 2016-ஆம் ஆண்டுக்கான ‘நிஷாகந்தி புரஸ்காரம் விருது’ வழங்கப்படும் என்று கேரள அரசு அறிவிப்பு.
தமிழகம் முழுவதும் உள்ள இந்துக் கோயில்களில் நுழைய ஆடைக்கட்டுப்பாடு
அமலுக்கு வந்தது.
ஜனவரி 2:
கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஏபி பரதன் (அர்த்தேந்து பூஷண் பரதன்) தில்லியில் உடல்நலக்குறைவால் காலமானார்.
நாடுமுழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் ரூ.20-க்கும் குறைவான விலையில் உணவு வழங்கும் ‘ஜன் ஆஹார்’ திட்டம் தொடக்கம்.
பஞ்சாப் மாநிலம் பதான்கோட் விமான நிலையத்தில் தீவிரவாதிகள்
தாக்குதல். 4 நாட்கள் நீடித்த இந்த தாக்குதலில் 6 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
7 ராணுவ வீரர்கள் மரணம்.
ஜனவரி 3:
ஹரித்துவாரில் திருவள்ளுவர் சிலை திறக்கப்படும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் அறிவிப்பு
கர்நாடகத்தில் 4 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ஹெலிகாப்டர் தயாரிக்கும் மையத்திற்கு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
தெற்காசிய கால்பந்து போட்டியில் போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி 7-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது
ஜனவரி 4:
மணிப்பூரில் 6.8 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம். 9 பேர் பலி.
ஒருலட்சம் கோடி கிரானைட் முறைகேட்டை மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் கோரிக்கை
இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகளுக்கான புதிய தகுதி மற்றும் கட்டுப்பாடுகளை ஆர்.எம்.லோதா குழு கமிட்டி பரிந்துரை செய்தது. அத்துடன் சூதாட்டத்தை சட்டபூர்வமாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்தது.
ஜனவரி 5:
மும்பையில் பள்ளி கிரிக்கெட் போட்டி ஒன்றில் ஒரே இன்னிங்ஸில் 1009 ரன்கள் எடுத்து சாதனை படைத்தார் ஆட்டோ டிரைவரின் மகனான பிரணவ் தனவாடே.
ஜனவரி 6:
ஹைட்ரஜன் குண்டை வெடித்து சோதனை செய்த வடகொரியாவுக்கு உலக நாடுகள் கண்டனம்.
ஜனவரி 7:
காஷ்மீர் முதல்வர் முப்தி முகமது சையீது தில்லியில் மரணம்.
சர்வதேச பொருளாதார சக்தியா இந்தியா நீடிக்கும்: உலக வங்கி கணிப்பு
நிதி ஆயோக்கின் தலைமைச் செயல் அதிகாரியாக அமிதாப் காந்த் நியமனம்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு தலைமைப் பதிவாளராக சைலேஷ் நியமனம்.
வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார இலாகாவை வெளியுறவுத்துறையுடன்
இணைக்க பிரதமர் மோடி ஒப்புதல்.
ஜனவரி 8:
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடத்த மத்திய அரசு அனுமதி
நாட்டின் பொருளாதாரம் உயர வெளிநாடுகளுக்கு தனியார் விமானங்களை இயக்கலாம்: மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்
ஜனவரி 9:
காஷ்மீரில் புதிய அரசு, பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டதால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பிரிஸ்பேன் சர்வதேச டென்னிஸ் போட்டியில் சாய்னா-ஹிங்கிஸ் இணை பட்டம் வென்றது.
ஜனவரி 10:
சென்னை ஓபன் டென்னிஸ் 2016-க்கான சாம்பியன் பட்டத்தை சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்கா, மூன்றாவது முறையாக வென்று சாதனை.
அரசுத்துறைகள் தொடர்பாக, இணையதளம் மூலம் அளிக்கப்படும் புகாரில் ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்: மத்திய அரசு
ஜனவரி 11:
ஜல்லிக்கட்டு போட்டி நடத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
கர்ப்பிணிகளுக்கு ‘மகப்பேறு சஞ்சீவி’ திட்டம்: ஜெயலலிதா தொடங்கி
வைத்தார்
கேரளத்தின் முதல் திரைப்படக்கல்லூரியை துணை குடியரசுத்தலைவர்
ஹமீது அன்சாரி தொடங்கி வைத்தார்.
ஜனவரி 12:
சிஎல்எம்வி நாடுகளுடன் வர்த்தகம் பெருகும்: மத்திய அமைச்சர்
நிர்மலா சீதாராமன் (சிஎல்எம்வி நாடுகள்: கம்போடியா, லாவோஸ், மியான்மர், வியட்நாம்)
ஜனவரி 13:
பதன்கோட் விமான நிலைய தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதி மசூத் அன்சாரை பாகிஸ்தான் அரசு கைது செய்த்து.
அனைவருக்கும் முழுமையான தொடக்கக் கல்வியை அளிக்கும் முதல்
மாநிலம் கேரளம்: துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி
ஜனவரி 14:
ஆதார் அட்டை திட்டத்தால் ரூ. 6,700 கோடி இழப்பு தவிர்க்கப்பட்டுள்ளது:
உலக வங்கி பாராட்டு
இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 104 பேர் விடுதலை.
ஜனவரி 15:
இந்திய – ஜப்பான் கடலோரக் காவல் படை சென்னை அருகே கடற்பகுதியில்
கூட்டுப்பயிற்சியில் ஈடுபட்டன.
ஜனவரி 16:
‘ஸ்டார்ட் அப் இந்தியா’ எனும் புதிய திட்டத்தை நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.
கொடிய குற்றங்களில் ஈடுபடும் 16 வயது நிரம்பிய சிறுவர்களை
தண்டிக்கும் சட்டம் அமலுக்கு வந்தது.
டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய
அணி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு முதலிடம்.
ஜனவரி 17:
சி.ஏ. தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் ஜேம்ஸ் ஜான்
பிரிட்டோ தேசிய அளவில் முதலிடம்.
மாணவர்கள் விடைத்தாள் நகல் கேட்டால் ஒரு பக்கத்துக்கு 2 ரூபாய்க்கு
மேல் கேட்கக் கூடாது: மத்திய தகவல் ஆணையம்
எல்லையில் ஊடுருவலைத் தடுக்க லேசர் தொழில்நுட்ப சுவர்கள்
அமைக்க மத்திய அரசு முடிவு
ஜனவரி 18:
அதானி-ஹசீரா துறைமுகத்துக்கு ரூ.25 கோடி அபராதம்: தேசிய பசுமை
ஆணையம் உத்தரவு
ஜனவரி 19:
தமிழ்நாட்டில் 1100 என்ற இலவச அழைப்பு மையத்தை ஜெயல்லிதா
தொடங்கி வைத்தார்.
சென்னை மற்றும் தில்லியில் தேசிய முதியோர் நல மையம் அமைக்க
மத்திய அரசு ஒப்புதல்
ஜனவரி 20:
ஐ.ஆர்.என்.எ ஸ்.எஸ்-1இ
செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-31 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
பாகிஸ்தான் பல்கலைகழகத்தில் தீவிரவாத தாக்குதலில் 21 பேர்
படுகொலை
தமிழகத்தில் வாக்களர்களின் எண்ணிக்கை 5 கோடியே 79 லட்சமாக
உயர்வு
ஜனவரி 21:
மத்திய சுற்றுலாத் துறையின் வியத்தகு இந்தியா திட்டத்தின் தூதவர்களாக அமிதாப் பச்சன், பிரியங்கா சோப்ரா நியமனம்.
பிரபல நாட்டியக் கலைஞர் மிருளினி சாராபாய் ஆமதாபாத்தில் காலமானார்.
தமிழகத்தில் ஆற்றல்சார் விளையாட்டு மையம் அமைக்கப்படும்: யுஜிசி துணைத் தலைவர்
ஜனவரி 22:
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளரும்: ஐ.நா. அறிக்கை
ஜனவரி 23:
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பாக மத்திய அரசிடம் உள்ள 100 ஆவணங்களை நரேந்திர மோடி வெளியிட்டார்.
அரசுத் துறைகளுக்கு இடையே நடைபெறும் கடிதத் தொடர்புகளை இந்தியிலேயே மேற்கொள்ளவேண்டும்: மத்திய உள்துறை அமைச்சகம்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் சிவ்நாரயண் சந்தர்பால் ஓய்வு
ஜனவரி 24:
இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்க 3 நாள் பயணமாக இந்தியா
வந்தார் பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலண்டே
குஜராத்தில் டைனோசர் படிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
மலேசியாவில் நடைபெற்ற பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து சாம்பியன் பட்டம் வென்றார்.
ஜனவரி 25:
ரஜினிகாந்த், ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், திருபாய் அம்பானி, டாக்டர் சாந்தா ஆகியோருக்கு பத்மவிபூஷண் விருதுகள் அறிவிப்பு
ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக இந்தியா பிரான்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமை செய்பவர்களை கடுமையாக தண்டிக்கும் வகையிலான புதிய வன்கொடுமை தடுப்புச் சட்டம் இன்றுமுதல் அமல்
வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2015: ஐ.நா. வானிலை அமைப்பு
ஜனவரி 26:
இந்தியாவின் 67-வது குடியரசு தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஹொலாண்டே கலந்து கொண்டார். முதல் முறையாக பிரெஞ்சு ராணுவ வீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது
சூரிய ஒளி மூலம் மின்சாரத் தகடுகளை பயன்படுத்திக் கட்டப்படும் தமிழக அரசின் பசுமை வீடுகள் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
ஜனவரி 27:
ஊழல் குறைவான நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 76-வது இடம்: ஜெர்மனியின் டிரான்ஸ்பரன்ஸி இண்டர்நேஷனல் அமைப்பு தகவல்
இந்தியா அமெரிக்காவுக்கு இடையே 2004-ம் ஆண்டு போடப்பட்ட இரட்டை வரி விதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தில் திருத்தம்.
சிங்கப்பூருக்கு வருவோரின் விரல் ரேகைகளை பதிவு செய்ய அந்நாட்டு அரசு முடிவு
கடலில் மிதக்கும் அணுமின்நிலையம் அமைக்க சீனா திட்டம்
ஜனவரி 28:
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்படி முதல் கட்டமாக சென்னை, கோவை உள்ளிட்ட 20 நகரங்களின் பட்டியல் வெளியீடு. இவற்றுக்காக அடுத்த 5 ஆண்டுகெளில் 50,802 கோடி செலவிடப்படும்.
2015- ஆம் ஆண்டு இந்தியா அரிசி ஏற்றுமதியில் உலக அளவில் முதலிடம் வகித்துள்ளது
உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் பில்கேட்ஸ், 27ஆவது இடத்தில் முகேஷ் அம்பானி, அஸிம் பிரேம்ஜி 47-வது இடத்திலும் உள்ளனர்.
இணையம் வழியாக ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல். அதன்படி ஒருவர் ஒரு மாதத்தில் அதிகபட்சமாக 6 முறை மட்டுமே டிக்கெட்டை பதிவு செய்ய முடியும்.
ஜனவரி 29:
அனைத்து உயர்கல்வி நிறுவனங்களிலும் சம வாய்ப்பு மையம் அமைக்க யுஜிசி வலியுறுத்தல்
பள்ளிகளின் பாடத் திட்டத்தில் தொழிற்பயிற்சிகள் சேர்ப்பது குறித்து மத்திய அரசு பரிசீலனை
ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டியின் மகளிர் இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா –மார்டினா ஹிங்கிஸ் இணை சாம்பியன் பட்டம் வென்றது
ஜனவரி 30
சட்ட விரோதமாகப் பணத்தை பரிமாற்றம் செய்ததாக இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபட்சேவின் மகன் யோஷித ராஜபட்ச கைது
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பர் சாம்பியன் பட்டம் வென்றார்.
174 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்த சென்னை மாநகராட்சி, 426 சதுர கிலோமீட்டருக்கு விரிவாக்கம். பெருநகர மாநாகராட்சி ஆனது.
இலங்கை மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணையில் சர்வதேச பங்களிப்பு கட்டாயம் இருக்க வேண்டும்: ஐ.நா. பொதுச் செயலர் பான் கீ மூன்.
ஜனவரி 31:
நாடு முழுவதும் கீழ் நீதிமன்றங்களில் 2.64 கோடி வழக்குகள்
தேக்கம்: மத்திய சட்டத்துறை அமைச்சகம் அறிவிப்பு
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்று இருபது ஓவர் போட்டிகள் தொடரை
3-0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று சாதனை. இதனையடுத்து டி 20 தரவரிசைப் பட்டியலில்
முதலிடம் பிடித்தது இந்திய அணி.
பிப்ரவரி 1
மியான்மரில் ஆங் சான் சூகி கூட்டணி பதவி ஏற்றது
20 ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் பேட்ஸ்மேன்கள் தர
வரிசையில் விராட் கோலி முதலிடம்
இந்திய நேபாள எல்லையை பாதுகாக்கும் துணை ராணுவப்படை தலைவராக
அர்ச்சனா ராமசுந்தரம் நியமனம்.
பிப்ரவரி 2
கோவை, சிங்கா நல்லூரில், பிரதமர் நரேந்திர மோடி இ.எஸ்.ஐ.
மருத்துவக் கல்லூரியை தொடக்கி வைத்தார்.
உலகளாவிய ஜிகா வைரஸ் நெருக்கடி நிலை: உலக சுகாதார நிறுவனம்
அறிவிப்பு
தமிழ்நாட்டில் கெயில் திட்டத்தை செயல்படுத்த அனுமதி வழங்கியது
உச்சநீதிமன்றம்.
பிப்ரவரி 3:
ஜிகா வைரஸ் பாதித்த நாடுகளுக்கு கர்ப்பிணி பெண்கள் செல்ல
வேண்டாம் - மத்திய சுகாதார துறை அமைச்சகம்
ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ககன்தீப்சிங்பேடி ,அமுதா, கஜலட்சுமி,
நடிகர் சித்தார்த்க்கு சென்னையில் மழை வெள்ளத்தின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிறப்பாக
செயல்பட்டதற்காக ‘இந்தியன் ஆஃப்தி இயர் 2015 விருது.
நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் பல்ராம் ஜாக்கர் மரணம்
பிப்ரவரி 4
ஊராட்சிகளில் மகளிருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு: மத்திய அரசு
முடிவு
25 ஆண்டுகளுக்குப் பிறகு இலங்கையின் சுதந்திர தின விழாவின்போது, தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது.
இந்தியாவில் புற்றுநோய்க்கு ஆண்டுதோறும் 3.5 லட்சம் பேர்
பலி: ஆய்வில் தகவல்
பிப்ரவரி 5:
எட்டு நாடுகள் பங்கேற்கும் 12-வது தெற்காசிய விளையாட்டுப்
போட்டி ஷில்லாங் மற்றும் மேகாலயாவில் தொடங்கியது.
100 நாள் வேலைதிட்டத்தில் சிறந்த செய்பாட்டுக்கான தேசிய விருது
தமிழகத்திற்கு கிடைத்தது.
பிப்ரவரி 6:
ஐபிஎல் டி20 வீரர்கள் ஏலம்: ஆஸி. வீரர் ஷேன் வாட்சன் ரூ.9.5
கோடிக்கு வாங்கியது பெங்களூர். இந்திய வீரர்கள் பவன் நேகி ரூ.8.5 கோடி, யுவராஜ் சிங்
ரூ.8 கோடிக்கு ஏலம்.
பிப்ரவரி 7:
பனிச்சரிவில் சிக்கி 10 ராணுவ வீரர்கள் மரணமடைந்த விவகாரம்
- சியாச்சின் பகுதியில் இருந்து படைகளை வாபஸ்
பெற முடியாது: ராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர்
பிப்ரவரி 8:
இந்தியாவிலேயே முதன்முறையாக பெண்களுக்காக, 31 மோட்டார் சைக்கிள் ஆம்புலன்ஸ் மற்றும் 10 ஸ்கூட்டர் ஆம்புலன்ஸ்களை தொடக்கி வைத்தர் ஜெயலலிதா.
இணையதளசேவைக்கு மாறுபட்ட கட்டணங்களை வசூலிக்கக்கூடாது: டிராய்
பாகிஸ்தான் உளவுத்துறை ஒப்புதலுடன் மும்பை தாக்குதல் நடத்தப்பட்டது:
டேவிட் ஹெட்லி வாக்கு மூலம்
ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தராக தங்கசாமி நியமனம்
நேபாள முன்னாள் பிரதமர் சுஷீல் கொய்ராலா காலமானார்.
நியூசிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கல்லம் சர்வதேச ஒருநாள்
கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு
பிப்ரவரி 9:
உயர் கல்வி தொடர்பான விவரங்கள் 100 மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்:
ஸ்மிருதி இரானி
பிப்ரவரி 11
ரூ.2 லட்சத்திற்கும் மேல் நகை வாங்குவோர் பான் கார்டு கட்டாயம்:
இதை எதிர்த்து தமிழகம் முழுவதும் நகை கடைகள் அடைப்பு.
உலக அளவில் முதலீடு செய்ய சிறந்த நாடுகள் வரிசையில் இந்தியாவுக்கு
முதலிடம், சிங்கப்பூர், வியட்நாம், இந்தோனேசியா,
சிங்கப்பூர் ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
தமிழகத்தில் புதிதாக 7 ஐடிஐ நிலையங்களை முதல்வர் ஜெயலலிதா
தொடக்கி வைத்தார்.
இலவச இணையச் செயலி சேவையை இந்தியாவில் ரத்து செய்தது பேஸ்புக்
பயங்கரவாதிகளுக்கு பயிற்சி அளிப்பது ஐஎஸ்ஐதான்: பாகிஸ்தான்
முன்னாள் அதிபர் முஷாரப்
பூஞ்சைகள் குறித்த பிரபல ஆராய்ச்சியாளர் சி.வி.சுப்ரமணியன்
காலமானார்
பிப்ரவரி 12
இந்தியாவிலேயே முதல்முறையாக முற்றிலும் சூரியசக்தி மின்சாரத்தில்
இயங்கும் விசாகப்பட்டினம் துறைமுகம்
பிப்ரவரி 13
சென்னையில் வசிக்கும் ஏழை குடும்பங்களுக்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட
குடிநீர் வழங்கும் திட்டத்தை ஜெயலலிதா அறிவிப்பு
இந்தியாவில் ஆண்டுதோறும் 40 ஆயிரம் குழந்தைகள் புற்றுநோயால்
பாதிக்கப்படுகின்றனர்
சென்னை தொலைக்காட்சி முன்னாள் இயக்குநர் ஏ.நடராஜன் காலமானார்.
பிப்ரவரி 14
சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி வந்தபோதிலும் இந்திய
பொருளாதாரம் பாதிப்படையவில்லை: நரேந்திர மோடி
இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரை
2-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றது.
பிப்ரவரி 15
தமிழ் வெள்ள நிவாரணத்துக்கு 1,774 கோடி ரூபாயினை மத்திய அரசு
ஒதுக்கியது
இந்தியாவின் சுத்தமான நகரங்களில் முதலிடத்தைப் பிடித்தது
மைசூரு, அசுத்தமான நகராக வாரணாசி இடம்பிடித்துள்ளது.
பிப்ரவரி 16
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது: ரூ
60,610 கோடி ஒதுக்கீடு
பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
12-வது தெற்காசிய விளையாட்டுப்போட்டி நிறைவு: 308 பதக்கங்களுடன்
இந்தியா முதலிடம்
பிப்ரவரி 17
ரிங்கிங் பெல்ஸ் எனும் இந்திய நிறுவனம் உலகிலேயே மிகக்குறைந்த
விலையில் (ரூ.251) ஸ்மார்ட் போனை அறிமுகப்படுத்தியது
ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்:
பாகிஸ்தானிடம் பிரிட்டன் எம்.பி. ராபர்ட் ஜான் பிளாக்மேன் வலியுறுத்தல்
செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்கு இஸ்ரோவின் பங்களிப்பு தேவை:
நாசா அழைப்பு
பிப்ரவரி 18
மத்திய பல்கலைக்கழகங்களில் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும்:
மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம்
சென்னை மாநகரா பேருந்துகளில் மூத்த குடிமக்களுக்கு பிப்ரவரி
24 முதல் கட்டணமில்லா பயணம்: முதல்வர் ஜெயலலிதா
பிப்ரவரி 19
அத்திக்கடவு – அவிநாசி திட்டத்துக்கு தமிழக அரசு ஒப்புதல்
2035-ல் செவ்வாய்க்கு மனிதனை அனுப்ப நாசா அமைப்பு திட்டம்
பிப்ரவரி 20
உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 50 சதவீதம்
ஆக உயர்வு: தமிழக சட்டசபையில் மசோதா நிறைவேற்றம்
டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில், 54 பந்துகளில் சதம் அடித்து,
உலக சாதனை படைத்தார் நியூசிலாந்து வீரர் பிரெண்டென் மெக்கல்லம். இதுதான் இவரது கடைசி
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டி.
பிப்ரவரி 21
வரும் 2022-க்குள் 5 கோடி வீடுகள் ஏழைகளுக்காக கட்டித்தரப்படும்:
நரேந்திர மோடி
தேமுதிக எம்எல்ஏக்கள் 8 பேர் உள்பட 10 எம்எல்ஏக்கள் ராஜினாமா
சட்டப்பேரவையில் போதிய பெரும்பான்மை இல்லாததால் எதிர்க்கட்சித்
தலைவர் பதவியை இழந்தார் விஜயகாந்த்
பிப்ரவரி 22
பருவநிலை மாற்றம், எரிசக்தி பிரச்னைக்கு மாணவர்கள் தீர்வு
கண்டு பிடிக்க வேண்டும்: நரேந்திர மோடி
சாப்ட்வேர் நிறுவனமான டிசிஎஸ், ‘சூப்பர் பிராண்ட்’ ஆக பிரிட்டனில்
தேர்வு
பிப்ரவரி 23
ஆற்றுக்கால் பகவதி கோவிலில் 40 லட்சம் பெண்கள் பொங்கல் வைத்து
கின்னஸ் சாதனை
பிப்ரவரி 24
கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு பணபரிவர்த்தனையில் சேவைக்கட்டணம்
ரத்து: மத்திய மந்திரிசபை ஒப்புதல்
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0
என்ற கணக்கில் இழந்தது. இந்த போட்டியோடு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து
ஓய்வு பெற்றார் நியூசிலாந்து அணி வீரர் பிரென்டன் மெக்கல்லம்.
ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முதலிடம் பிடித்தது ஆஸ்திரேலியா.
இரண்டாம் இடமிடத்தில் இந்தியா.
பிப்ரவரி 25
நாடாளுமன்றத்தில் மத்திய ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்தார்
ரயில்வே துறை அமைச்சர் ரமேஷ் பிரபு
ரயில்வே பட்ஜெட்: தமிழ்நாட்டிற்கு என்று ரூ.2064 கோடி ஒதுக்கீடு
புதுக்கோட்டை அருக்கே நரிமேடு பகுதியில் 2000 ஆண்டுகளுக்கு
முற்பட்ட கல்மரம் கண்டுபிடிப்பு
தொழில் செய்வதற்கு பணம் கேட்பதை வரதட்சணையாகக் கருத முடியாது: உயர் நீதிமன்றம்
பிப்ரவரி 26
கட்டாய வாக்களிப்பு சட்டம் சாத்தியம் இல்லை: மத்திய சட்ட
அமைச்சர் சதானந்த கவுடா
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தலைவராக இன்பான்டினோ
தேர்வு
பிப்ரவரி 27
சென்னை சேத்துப்பட்டு ஏரி, பசுமைப் பூங்காவினை முதல்வர் ஜெயலலிதா
திறந்து வைத்தார்
சுய உதவிக்குழு பயிற்றுநர்களுக்கு அம்மா கைபேசி திட்டத்தினை
ஜெயலலிதா தொடக்கி வைத்தார்.
கேரளம்தான் நாட்டின் முதல் டிஜிட்டல் மாநிலம்: குடியரசுத்
தலைவர் பிரணாப் முகர்ஜி
பிப்ரவரி 28
கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தினமும் தேசியக் கொடி ஏற்ற
உத்தரவு
தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இருந்து 6.46 போலி வாக்காளர்கள்
நீக்கம்: ராஜேஷ் லக்கானி
வங்கிகள் வாரியத்தின் முதல் தலைவராக வினோத் ராய் நியமனம்
ராமேஸ்வரத்தில் ‘அப்துல் கலாம் விஷன் இந்தியா பார்ட்டி’ என்ற
புதியதொரு கட்சியைத் தொடங்கினார் அப்துல் கலாமின் ஆலோசகராக இருந்த பொன்ராஜ்
பிப்ரவரி 29
மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார் மத்திய
நிதி அமைச்சர் அருண் ஜெட்லி
88-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ்
நகரில் நடைபெற்றது. சிறந்த திரைப்படம்: ஸ்பாட்
லைட்
நகைச்சுவை நடிகர் குமரிமுத்து உடல்நலக்குறைவால் காலமானார்
மார்ச் 1
பத்து கோடி ரூபாய் செலவில் ‘அம்மா முழு உடல் பரிசோதனை திட்டம்’:
ஜெயலலிதா தொடக்கி வைத்தார்
அரசு கேபிள் டிவி மூலம் வீடு தோறும் இணைய வசதி திட்டம்: ஜெயலலிதா
தொடக்க இவைத்தார்
தமிழகத்தில் பிச்சாவரம், முத்துப்பேட்டை, ராமநாதபுரம், கழுவேலி,
புலிக்காடு ஆகிய 5 இடங்களில் சதுப்புநிலக்காடுகள் உள்ளன: மத்திய அரசு
முன்பதிவு இல்லாத ரயில் டிக்கெட்டுகளில் பார்கோடிங் முறை,
புதுதில்லியில் அமல்
மார்ச் 2
தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து டி.கே.எம்.சின்னையா
நீக்கம்: கூடுதல் பொறுப்பு ப.வளர்மதியிடம் ஒப்படைப்பு
ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் 7 பேரையும் விடுவிக்க தமிழக
அரசு முடிவு
ஒராண்டு காலம் விண்வெளியில் தங்கியிருந்து ஆய்வு செய்த அமெரிக்க
விண்வெளி வீரர் ஸ்காட் கெல்லி பூமிக்கு வந்து சேர்ந்தார்.
மார்ச் 3
திருவண்ணாமலை
அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே முதல் முறையாக, திருநங்கை
ஜெயா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒரே நாளில் 6 ஏவுகணை சோதனையைச் செய்தது வடகொரியா
நியூசிலாந்து கிரிக்கெட் அணி முன்னாள் வீரர் மார்ட்டின் குரோவ்
காலமானார்
மார்ச் 4
தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டசபைத் தேர்தல் தேதி
அறிவிப்பு: மே 16-ஆம் தேதி தேர்தல், 19-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை
யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை குறிப்பிடும்
நேட்டாவிற்கு இந்த சட்டசபைத் தேர்தலில் சின்னம் அறிமுகம்
முன்னாள்
சபாநாயகரும் மேகாலயா முன்னாள் முதல்வருமான
பி.ஏ.சங்மா மாரடைப்பால்
காலமானார்.
தாதா சாகேப் பால்கே
விருது பெற ஹிந்தி நடிகர் மனோஜ்குமார் தேர்வு
மார்ச் 5
எல்லா தனியார் பள்ளிகளிலும் இறைவணக்கத்தின் போது தேசியகீதம்
பாட வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்க மத்திய
அரசு முடிவு
மார்ச் 6
சர்வதேச
மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில்
டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ
நகருக்கு விமானி உட்பட முற்றிலும்
பெண் ஊழியர்களை கொண்ட ஏர் இந்தியா
விமானம் புறப்பட்டது.
நடிகர் கலாபவன் மணி உடல்நலம் சரியில்லாததால் காலமானார்
ஆசியக்கோப்பை 20 ஓவர் போட்டி: வங்கதேசத்தை வீழ்த்தி சாம்பியன்
பட்டம் வென்றது இந்தியா
மார்ச் 7
14 ஆயிரம் கோடி மதிப்பில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு மத்திய
அரசு அனுமதி
சென்னையில் மாநகரப் பேருந்துகளுக்கு தனிப் பாதை அமைக்கத்
திட்டம்
மின்னஞ்சலின் முன்னோடி ரேமண்ட் டாம் லின்ஸன் வாஷிங்டனில்
காலமானார்.
மார்ச் 8
மகளிர் தினத்தை முன்னிட்டு சான்பிரான்சிஸ்கோவிலிருந்து பெண்களே
இயக்கிய ஏர் இந்தியா விமானம் தில்லி வந்தடைந்தது
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு வரிவிதிக்கும் முடிவு
வாபஸ்: நிதி அமைச்சர் அறிவிப்பு
மார்ச் 9
நாடுமுழுவதும் உள்ள 111 நதிகளை இணைத்து, நீர்வழிப்போக்குவரத்துக்கு
வழிவகை செய்யும் மசோதாவுக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்
வங்கதேசத்துக்கு ரூ. 13,441 கோடி கடன் வழங்குகிறது இந்தியா:
அயல்நாடு ஒன்றிற்கு இந்தியா வழங்கும் அதிகபட்ச கடன்தொகை இது
கள்ளச்சாராயம் காய்ச்சினால் தூக்கு தண்டனை விதிக்கப்படும்:
பீகார் முதல்வர் நிதீஷ் குமார்
மார்ச் 10
பிஎஸ்எல்வி சி – 32 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது
ரூ. 8000 கோடி செலவில், கிராமப்புற ஏழைப்பெண்களுக்கு இலவச
கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டத்துக்கு அமைச்சரவை ஒப்புதல்
மார்ச் 11
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் 3 மாணவிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில்
அதிமுகவினர் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து உச்சநீதிமன்றம்
உத்தரவு.
ஆதார் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
கனநீர் கசிவால் குஜராத்திலுள்ள கக்ரபார் அணு உலை மூடப்பட்டது.
மார்ச் 13
பொதுமக்களின் கேள்விகளுக்கு மத்திய, மாநில அமைச்சர்கள் பதில்
தரவேண்டும்: மத்திய தகவல் ஆணையம்
வாழ்வதற்கு ஏற்ற நாடுகளின் வரிசையில் இந்தியாவுக்கு 22-வது
இடம்: உ உலக பொருளாதார மாநாட்டில் தகவல்
மார்ச் 14
சாதிப்படுகொலைகள் தமிழகத்தில் அதிகம்: தேசிய மனித உரிமைகள்
ஆணையம்
இங்கிலாந்தில் இருந்து வழங்கப்படும் சர்வதே சுற்றுச்சூழல்
மேலாண்மை விருது பெற சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தேர்வு
நேபாளத்தில் உள்ள பொகாராவில் சார்க் அமைப்பின் கூட்டம் தொடங்கியது
மார்ச் 15
அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம்: ரோமில் செப்டம்பர் 4-ஆம்
தேதி வழங்கப்படுகிறது
விவசாய வருமானம் என்ற பெயரில் 2 ஆயிரம் லட்சம் கோடி வரி ஏய்ப்பு:
மத்திய நிதி அமைச்சர்
மியான்மர் அதிபர் தேர்தலில் ஆங் சங் சூகியின் ஆதரவாளர் யூ கதின் கியாவ் வெற்றி பெற்றார்
மார்ச் 16
மக்களவையில் ஆதார் அட்டை மசோதா, பண மசோதா வடிவத்தில் நிறைவேறியது
கொல்லப்புடி ஸ்ரீநிவாஸ் விருது பெற, லென்ஸ் பட இயக்குநர்
ஜெயபிரகாஷ் ராதா தேர்வு
பள்ளிக்கு வராமல் போகும் ஆசிரியர்களால் ஆண்டுக்கு 14 ஆயிரம்
கோடி இழப்பு: ஆய்வில் தகவல்
பிரதமர் மோடிக்கு லண்டனில் உள்ள மேடம் தூசாட்ஸ் மியூசியத்தில்
மெழுகுச் சிலை அமைக்க முடிவு
20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இரட்டைச்சதம் அடித்த
வீரர் என்ற பெருமையை மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் பெற்றார்.
மார்ச் 17
அரசு விளம்பரங்களில் முதல் அமைச்சர், ஆளுநர் படம் இடம்பெறலாம்:
உச்ச நீதிமன்றம்
ரூ.10 லட்சத்துக்கு மேல் பண பரிவர்த்தனையை கண்காணிக்க தனிக்
குழுக்கள் அமைப்பு: வருமான வரித்துறை அறிவிப்பு
2015-ஆம் ஆண்டுக்கான ஏபல் பரிசு பெற, இங்கிலாந்தைச் சேர்ந்த
கணிதப் பேராசியர் ஆண்ட்ரூ வில்ஸ் தேர்வு
மார்ச் 18
தோட்டங்களில் தேனீக்களை வளர்த்தால் 30 சதவீத கூடுதல் மகசூல்:
மதுரை வேளாண் கல்லூரி ஆய்வு
ஐஐடி ஆண்டுக் கல்விக்கட்டணம் ரூ.3 லட்சமாக உயர்வு: அடுத்த
கல்வியாண்டில் அமலுக்கு வருகிறது
குஜராத்தின் கிர் சரணாலம் போன்று இங்கிலாந்தில் சரணாலயம்:
மகாராணி எலிசபெத் திறந்து வைத்தார்
மார்ச் 19
விவசாய உற்பத்தியில் சாதனை படைத்த தமிழ்நாட்டைச் சேர்ந்த
பெண் விவசாயி பூங்கோதைக்க விருது வழங்கி, அவரிடம் ஆசி பெற்றார் நரேந்திர மோடி.
துபாய் விமானம் ரஷ்யாவில் வெடித்துச் சிதறியது: 62 பேர் மரணம்
மார்ச் 20
அணுவிபத்துகளின் போது வெளிப்படும் கதிர்வீச்சை அளவிடும்
‘டெரால்ட் நியூக்ளியர்’ கருவியை டிஆர்டிஓ விஞ்ஞானிகள் உருவாக்கினர்
ஓட்டு போட்டால் ஒரு லட்ச ரூபாய் அதிர்ஷ்ட பரிசு: கேரளத்தின்
பந்தனம் திட்டா தொகுதியில் அறிமுகம்
உலகின் சிறந்த 100 விமான நிலையங்களில் சிங்கப்பூர் விமான
நிலையம் முதலிடம்
மார்ச் 21
88 ஆண்டுகளுக்கு பிறகு கியூபாவில் அமெரிக்க அதிபர் பயணம்:
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா ரவுல் காஸ்ட்ரோவை சந்தித்தார்
யுனெஸ்கோ உயிர்க்கோள காப்பகப் பட்டியலில் இந்தியவின் அகஸ்தியர்
மலை சேர்ப்பு
பிலிம் நியூஸ் ஆனந்தன் உடல்நலக்குறைவு காரணமாக மரணம்
மார்ச் 22
மழைவருவதை தெரிவிக்கும் ஸ்மார்ட் குடை பிரான்சில் வடிவமைப்பு
மார்ச் 23
அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கிராமங்களில் 2.95 கோடி
வீடுகள்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
வங்கதேசத்துக்கு 100 மெகாவாட் மின்சாரம் வழங்கியது இந்தியா
நேட்டோ நாடுகளுக்கு இணையாக இந்தியா: அமெரிக்க காங்கிரஸில்
தீர்மானம்
மார்ச் 24
புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் ஆண்டுக்கு ஒரு லட்சம்
கோடி ரூபாய்க்கும் மேல் செலவு: உலக சுகாதார நிறுவனம்
சுத்தமான நீர் கிடைக்காத மக்கள் அதிகம் வாழும் நாடுகளில்
இந்தியா முதலிடம்: வாட்டர் எய்டு ஆய்வறிக்கை
இந்திய பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதம்: பிஎம்ஐ ஆய்வறிக்கை
மார்ச் 25
இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை: மத்திய அமைச்சர்
தருண் விஜய்
மார்ச் 26
திருப்பதியில் இனி இலவச திருமணம்: தேவஸ்தானம் அறிவிப்பு
விமான விபத்தில் இறந்தால் ஒரு கோடி ரூபாய் வரை இழப்பீடு:
குடியரசுத்தலைவர் ஒப்புதல்
5 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு இலவச எரிவாயு இணைப்பு வழங்குவதே
இலக்கு: நரேந்திர மோடி
2030-க்குள் 100 சதவீதம் மின்வாகனங்கள் இந்தியாவில் கொண்டு
வந்துவிடவேண்டும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்
மார்ச் 27
நிலத்தடி நீரைப் பாதுகாக்க நாடு முழுவதும் 5 லட்சம் பண்ணைக்
குட்டைகள் அமைப்பு
நேபாள பூகம்பத்தால் எவரெஸ்ட் சிகரத்துக்கு பாதிப்பு: ஆய்வில்
தகவல்
சர்வதேச 20 ஓவர் போட்டியிலிருந்து ஆஸ்திரேலிய கிரிக்கெட்
வீரர் ஷேன் வாட்சன் ஓய்வு
மார்ச் 28
63-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு:
சிறந்த படம்: பாகுபலி, சிறந்த நடிகர்: அமிதாப் பச்சன், சிறந்த
நடிகை: கங்கணா ரணாவத், சிறந்த தமிழ்ப்படம்: விசாரணை, சிறந்த துணை நடிகர்: சமுத்திரக்கனி,
சிறந்த படத்தொகுப்பு: கிஷோர்
நீர், நிலம் இரண்டையும் காப்பாற்றினால்தான் தேசம் வளர்ச்சி
அடையும்: அன்னா ஹசாரே
மார்ச் 29:
நேதாஜி தொடர்பான மேலும் 50 ரகசிய ஆவணங்களை மத்திய அரசு வெளியிட்டது
இணையவழி வர்த்தகத்தில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு: மத்திய
அரசு அனுமதி
17,695 பாடல்கள் தனியாகப் பாடிய, பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா
கின்னஸில் இடம்பிடித்தார்
பிஇ கலந்தாய்வுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பம்:
அண்ணா பல்கலை
மார்ச் 30:
மியான்மரில் 56 ஆண்டுகால ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்தது:
யூ கதின் கியாவ் மியான்மர் அதிபராக பதவி ஏற்பு
மார்ச் 31:
கொல்கத்தாவில் மேம்பாலம் இடிந்து விபத்து: 64 பேர் மரணம்
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘ஹென்றி லாங்லாயிஸ் விருது’
நடிகர் கமலஹாசனுக்கு வழங்கப்பட்டது
ஏப்ரல் 1
முறைகேடு வழக்கில் கிரானைட் அதிபருக்கு சாதகமாக தீர்ப்பு
வழங்கியதாக மேலூர் மாஜிஸ்திரேட்டை இடைநீக்கம் செய்தது சென்னை உயர்நீதிமன்றம்
கோவிலுக்குள் பெண்கள் நுழைந்து தரிசனம் செய்வது பெண்களின்
அடிப்படை உரிமை: மும்பை உயர்நீதிமன்றம்
மூத்த குடிமக்களுக்கு உதவ நலநிதியம்: மத்திய அரசு நடவடிக்கை
இலங்கைக்கு 150 படகுகளை இந்தியா வழங்குகிறது
ஏப்ரல் 2
சென்னை கோட்டையில் சுரங்கப்பாதை கண்டுபிடிப்பு.
சீனாவின் முட்டுக்கட்டையால் தீவிரவாதி மசூத் அசார் மீது தடைவிதிக்கும்
முடிவை நிறுத்தியது ஐ.நா.
வியட்நாம் அதிபராக டிரான் டை குவாங் தேர்வு
ஏப்ரல் 3
இருபது ஓவர் உலகக்கோப்பை போட்டி கோப்பையை மேற்கிந்தியத்தீவுகள்
அணி வென்றது
இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை போட்டியிலும் மேற்கிந்தியத்தீவுகள்
மகளிர் அணி கோப்பையை வென்றது
ஏப்ரல் 4
காஷ்மீர் மாநில முதல் பெண் முதல்வராக மெகபூபா முப்தி பதவியேற்றார்
போலி என்கவுன்ட்டரில் 10 சுட்டுக் கொன்ற விவகாரம்: 47 போலீசாருக்கு ஆயுள்
தண்டனை
பனாமா பேப்பர்ஸ் லீக்: பல்வேறு நாட்டின் 140 அரசியல் தலைவர்கள்
பனாமா நாட்டில் பணம் சொத்து பதுக்கல்
வாடகை தாய்களுக்கும் 6 மாத பிரசவ விடுமுறை: மத்திய அரசு ஊழியர்களுக்கு
புதிய சட்டம்
ஸ்மார்ட்போன்களில் இலவச டெலிவிஷன் சேவை: தூர்தர்ஷன்
தேசிய அளவில் தலைசிறந்த
10 கல்வி நிறுவனங்களில் சென்னை ஐஐடி முதலிடம்
ஏப்ரல் 5
தொழில் முனைவோரை உருவாக்கும் ‘ஸ்டாண்ட் அப் இந்தியா’ திட்டத்தை
தொடக்கி வைத்தார் மோடி
நாட்டின் முதல் அதிவேக ரயில் ‘கதிமான் எக்ஸ்பிரஸ்’: மத்திய
அமைச்சர் சுரேஷ் பிரபு தொடக்கி வைத்தார் (தில்லி – ஆக்ரா)
பீகாரில் பூரண மதுவிலக்கு அமல்: நிதிஷ் குமார்
ஏப்ரல் 6
இலங்கை சிறையிலிருந்த 99 தமிழக மீனவர்கள் விடுதலை
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: 3 பேருக்கு ஆயுள் சிறை
இந்திய மாணவர்களுக்கு கருத்து சுதந்திரம் அதிகம்: ரிசர்வ்
வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன்
8 கோடி ஏழைக்குடும்பங்களுக்கு விரைவில் இலவச மருத்துவக் காப்பீடு:
மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
மீண்டும் பூமிக்கு திரும்பக்கூடிய விண்கலத்தை சீனா அனுப்பியது
ஏப்ரல் 7
மகாராஷ்டிராவில் வறட்சிப் பகுதிகளுக்கு ரயில் மூலம் தண்ணீர்
வழங்க ஏற்பாடு
வாட்ஸ் அப்பின் புதிய தொழில் நுட்பம் குற்றங்களுக்கு ஊக்கமளிக்கக்
கூடாது: அமெரிக்கா
ஏப்ரல் 8
தேர்தல் தொடர்பான புகார்களை ஐபோனில் தெரிவிக்கும் வசதி நாட்டிலேயே
முதல் முறையாக தமிழகத்தில் அறிமுகம்
சீட்டு நிதிமோசடிகள் நிகழாமல் தடுக்கவே ஜன்தன் திட்டம்: பிரதமர்
மோடி
ஏப்ரல் 9
பாகிஸ்தானைக் காட்டிலும் இந்தியாவுடனான உறவு முக்கியத்துவம்
வாய்ந்தது: அமெரிக்கா
அன்னை தெரசாவுக்கு பிரிட்டனின் உயரிய விருதான ‘ஃபவுண்டர்ஸ்
அவர்ட்ஸ்’ அறிவிப்பு
ஏப்ரல் 10
கேரளம் புட்டிங்கால் கோயில் திருவிழாவில் பட்டாசு வெடிவிபத்து:
110 பேர் மரணம்
ஜிப்மர் ஆராய்ச்சிகளுக்கு மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ்
காப்புரிமை
பிரிட்டன் இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியினர்
ஒரு வார பயணமாக இந்தியா வந்தனர்
ஏப்ரல் 11
எல்லையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பாதுகாப்பு:
மத்திய அரசு திட்டம்
அகில இந்திய மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு நடத்த இருந்த தடையை
ரத்து செய்தது உச்சநீதிமன்றம்
லிபியா விவகாரத்தில் தோல்வியடைந்தேன்: அமெரிக்க அதிபர் ஒபாமா
ஏப்ரல் 12
கும்பகோணம் பள்ளி தீவிபத்து: தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க
தனிநபர் ஆணையம் அறிக்கை
ராணுவத் தொழில் நுட்பத்தில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்:
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்
ஹரியாணா மாநிலத்தின் இரண்டாம் தலைநகரான குர்கான், குரு கிராமம்
என பெயர் மாற்றம்
ஏப்ரல் 13
கௌரவ கொலைகளை ஒழிக்க, காவல்துறையில் சிறப்புப் பிரிவு ஒன்றை
3 மாதத்திற்குள் அமைக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்
டிரான், சனாஃபிர் ஆகிய இரு தீவுகளை சவுதி அரேபியாவிடம் ஒப்படைக்கிறது
எகிப்து
ஏப்ரல் 14
இணையவழி வேளாண் சந்தையை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
உலக சுகாதார நிறுவன அறிக்கையின்படி ஜூன் 15-க்குள் மதுவின்
தீமை குறித்து ஆராய குழு: தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை
ஏப்ரல் 15
வரி ஏய்ப்பு தடுப்பு நடவடிக்கையில் ஒத்துழைப்பு தர இந்தியா
– அமெரிக்கா ஒப்புதல்
நேபாள நாட்டின் முதல் பெண் தலைமை நீதிபதியாக சுசீலா கார்க்கி
நியமனம்
ஏப்ரல் 17
தரமில்லாமல் போடப்படும் சாலைகளால் ஆண்டுக்கு 5 ஆயிரம் கி.மீ.
நீள சாலைகள் சேதம்
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி, 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து
இலங்கை வீரர் ரங்கனா ஹெராத் ஓய்வு
ஈக்வாடர் நாட்டில் கடும் நிலநடுக்கம்: 233 பேர் மரணம்
ஏப்ரல் 18
கோஹினூர் வைரத்தை இங்கிலாந்து திருடிச் செல்லவில்லை, அதை
இந்தியா திரும்ப கேட்காது: மத்திய அரசு
ஏப்ரல் 19
21-ஆம் நூற்றாண்டை இந்தியா ஆளும்: பிரதமர் மோடி
புதிய பி.எப். திட்டத்தினை வாபஸ் பெற்றது மத்திய அரசு
மக்களை ஏமாற்றும் வகையில் அமையும் விளம்பரங்களில் நடிக்கும்
பிரபலங்களுக்கு அபராதம் விதிக்க நுகர்வோர் துறை அமைச்சகம் முடிவு
பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் உள்ள கோஹினூர் வைரம் சுமுகமான
முறையில் மீட்டெடுக்க நடவடிக்கை: மத்திய அரசு
2016-ஆம் ஆண்டுக்கான, உலகின் சிறந்த விளையாட்டு வீரர் நோவக்
ஜோகோவிச், விளையாட்டு வீராங்கனையாக செரீனா வில்லியம்ஸ் தேர்வு
ஏப்ரல் 20
குடியரசுத் தலைவரின் முடிவும் மறு ஆய்வுக்கு உட்பட்டதே: உத்தரகண்ட்
உயர் நீதிமன்றம்
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி உயர்வு:
தமிழக அரசு உத்தரவு
இந்தியாவில் மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டும்: ஆந்திர முதல்வர்
சந்திரபாபு நாயுடு
ஏப்ரல் 21
தேர்தல் பணியில் அரசு ஊழியர்-ஆசிரியர்கள் கட்டாயம் ஈடுபடவேண்டும்:
தேர்தல் ஆணையம்
அரசு அதிகாரிகள் சீர்திருத்தங்கள் மூலம் மாற்றங்களை ஏற்படுத்த
வேண்டும்: நரேந்திர மோடி
பெங்களூரில் திருக்குறள் மன்ற தமிழ் நூலகம் சூறையாடப்பட்டது
31-வது ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் ஜோதி ஒலிம்பியாவில்
ஏற்றப்பட்டது.
ஏப்ரல் 22
வாக்குப்பதிவு தினமான மே 16 அன்று பொது விடுமுறை: தமிழக அரசு
ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் இணைந்திருக்க வேண்டும்: ஒபாமா
வலியுறுத்தல்
ஏப்ரல் 23
பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் இந்தியா உள்ளிட்ட
175 நாடுகள் கையெழுத்திட்டன
ஏப்ரல் 24
விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம்
ரத்து செய்தது
ஏப்ரல் 25
சீனாவில் இருந்து பால், செல்லிடப்பேசிகள் இறக்குமதி செய்ய
மத்திய அரசு தடை
ஐஐடியில் சம்ஸ்கிருத மொழிப்பாடம்: மக்களவையில் மத்திய அரசு
தகவல்
ஏப்ரல் 26
வரும் கல்வியாண்டு முதல் பள்ளிகளில் திருக்குறள் பாடத்திட்டம்:
உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்திய-ஆப்ரிக்க நட்புறவுக் குழுத்தலைவராக மாநிலங்களவை உறுப்பினர்
தருண் விஜய் தேர்வு
கிரிக்கெட்டில் மூன்றாவது நடுவர் மூலம் ஆட்டமிழந்த முதல்
வீரர் நான்தான்: சச்சின் தெண்டுல்கர்
ஏப்ரல் 27
இந்தியாவின் பிரத்யேக வழிகாட்டி செயற்கைக்கோளான ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.
1ஜி வெற்றிகரமாக பிஎஸ்எல்வி சி 33 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது
அந்நிய நேரடி முதலீடு 37% அதிகரிப்பு: மத்திய அரசு தகவல்
தாவரங்களுக்கும் நினைவாற்றல் உண்டு: இந்திய விஞ்ஞானி சோகினி
சக்ரவர்த்தி கண்டுபிடிப்பு
பஞ்சாப் எல்லையில் லேசர் சுவர் செயல்பாட்டுக்கு வந்தது
மின்சாரத்தட்டுப்பாடு காரணமாக வெனிசூலாவில் வாரம் 5 நாள்
அலுவலகங்களுக்கு கட்டாய விடுமுறை
ஏப்ரல் 28
நடப்பாண்டிலேயே மருத்துவ பொதுநுழைவுத் தேர்வு: மே 1, ஜூலை
24 ஆகிய தேதிகளில் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
பப்புவா நியூ கினியா நாட்டுக்கு இந்தியா 660 கோடி கடனுதவி
நாடுமுழுவதும் 2012 முதல் 2014 வரை 1.30 லட்சம் சிறுவர்கள்
குற்ற வழக்குகளில் கைது: மத்திய அரசு தகவல்
ஏப்ரல் 29
தொழிலாளர் வைப்பு நிதி வட்டி 8.7 சதவீதத்திலிருந்து 8.8 சதவீதமாக
உயர்வு
ரயில் பயணச்சீட்டை ரத்து செய்ய 139-க்கு டயல் செய்யலாம்:
ரயில்வே அமைச்சகம்
ஆதர்ஷ் குடியிருப்பை இடிக்க மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
பனாமா லீக்ஸில் இடம்பெற்ற அனைத்து இந்தியர்களுக்கும் வரிமானவரித்துறை
நோட்டீஸ்
இந்தியா- பப்புவா நியூகினியா இடையே விவசாய ஆராய்ச்சி, சுகாதாரத்
துறைகளில் ஒப்பந்தம்
ஏப்ரல் 30
இந்தியாவில்தயாரிப்போம் திட்டத்தில் முதலீடு செய்ய வாருங்கள்:
நியூஸிலாந்து தொழிலதிபர்களுக்கு பிரணாப் அழைப்பு
மே 1
5 கோடி குடும்பங்களுக்கு ரூ,.8 ஆயிரம் கோடி செலவில் ‘இலவச
கேஸ் வழங்கும் திட்டத்தை உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடக்கி வைத்தார்.
ரியல் எஸ்டேட் சட்ட திருத்த
மசோதா 2016 – இன்று முதல் அமல்
மே 2
இந்தியா நியூசிலாந்து இடையே விமான சேவைகளில் புதிய ஒப்பந்தம்
கையெழுத்து
மே 4
உலகின் மிகச்சிறிய என்ஜினை வடிவமைத்து இங்கிலாந்து பல்கலைக்கழக
விஞ்ஞானிகள் சாதனை
மே 9
மருத்துவப்படிப்புக்கு மாணவர்களைச் சேர்க்க மாநில அரசுகள்
தனியாக நுழைவுத் தேர்வு நடத்தமுடியாது: உச்சநீதிமன்றம் உத்தரவு
மே 10
இந்தியாவில் உள்ள அலகாபாத், ஜெய்ப்பூர் உள்ளிட்ட 5 ரெயில்
நிலையங்களில் இலவச வை-பை இணைய இணைப்பு சேவையை கூகுள் நிறுவனம் வழங்கியது
பிலிப்பைன்ஸ் அதிபராக ரோட்ரிகோ வெற்றி
மே 12
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக ஷசாங் மனோகர் ஒருமனதாகத்
தேர்வு செய்யப்பட்டார்
மே 14
பண விநியோகம் தொடர்பாக அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதி தேர்தல்
ஒத்திவைப்பு
மே 15
பண விநியோகம் தொடர்பாக தஞ்சாவூர் சட்டசபைத் தொகுதி தேர்தல்
ஒத்திவைப்பு
மே 16
தமிழ்நாட்டில் அமைதியாக சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது.
74 சதவீதம் வாக்குப்பதிவு ஆனது.
மே 19
தமிழ்நாட்டில் 134 தொகுதிகளைக் கைப்பற்றி அதிமுக மீண்டும்
ஆட்சியைப் பிடித்தது. ஜெயலலிதா தொடர்ந்து 2-வது முறையாக முதல்வரானார். திமுக 98 இடங்களைக்
கைப்பற்றியது
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சியைப் பிடித்தது
கேரளத்தில் இடதுசாரி கூட்டணி ஆட்சியைப் பிடித்தது
அசாமில் பாஜக ஆட்சியைப் பிடித்தது
மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி ஆட்சியைப் பிடித்தார்.
மே 21
புதுச்சேரி துணை ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டார்.
மே 22
இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு
செய்யப்பட்டார்.
மே 23
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார். 100 யூனிட் இலவச
மின்சாரம், ஏழைப் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், விவசாயிகளின் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி
உள்ளிட்ட திட்டங்களில் கையெழுத்திட்டார்.
மீண்டும் பயன்படுத்தும் வகையிலான விண்ணுக்குச் சென்றுவிட்டு
பத்திரமாக பூமிக்குத் திரும்பும் ராக்கெட் இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது.
மே 24
மருத்துவ நுழைவுத்தேர்வை ஓராண்டுக்கு நிறுத்தி வைக்கும் அவசரச்
சட்டத்திற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்தார்.
மே 28
இந்திய தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக தஞ்சாவூர், அரவக்குறிச்சி
சட்டசபைத் தேர்தல் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
மே 30
சென்னை தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் இருந்து வெளிநாடுகளுக்கு
கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.50 கோடி மதிப்பிலான சிலைகளை போலீசார் பறிமுதல்
செய்தனர்.
ஸ்பெயினில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரெயிலான டால்கோ ரெயில்,
உத்தரப்பிரதேசத்தில் பரெய்லி – மொராதாபாத் இடையே சோதனை முறையில் இயக்கப்பட்டது.
ஜூன் 1
சென்னை வண்ணாரப்பேட்டையில் இருந்து விம்கோ நகர் வரை மெட்ரோ
ரெயில் விரிவாக்கத்திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜூன் 3
தமிழக சட்டசபை சபாநாயகராக பி.தனபால், துணை சபாநாயகராக பொள்ளாச்சி
ஜெயராமன் தேர்வு செய்யப்பட்டனர்
ஜூன் 4
தமிழக சட்டசபையில் மு.க.ஸ்டாலின் எதிர்கட்சி தலைவராக தேர்வு
செய்யப்பட்டார்.
பிரபல குத்துச்சண்டை வீரரான முகமது அலி மரணம்
ஜூன் 5
நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி.க்களின் எண்ணிக்கை 50-ஆக
உயர்ந்ததால், 3-வது பெரிய கட்சி என்ற அந்தஸ்தைப் பெற்றது.
ஜூன் 6
புதுச்சேரி முதலவராக நாராயணசாமி பதவி ஏற்றார்.
ஜூன் 7
அமெரிக்காவிற்கு சென்ற பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஒபாமாவை
சந்தித்தார்.
ஜூன் 10
இந்திய கப்பற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் விக்ரமாதித்யா கப்பலில்
விஷவாயு கசிவு ஏற்பட்டது. இரண்டு பேர் மரணம்
ஜூன் 11
விஜய் மல்லையாவின் ரூ.1,411 கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கப்பிரிவு
முடக்கியது
நடிகர் கலாபவன் மணி மரணத்தில் சந்தேகம் இருப்பதால், சிபிஐ
விசாரணை நடத்த கேரள அரசு முடிவு
ஜூன் 14
தில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசினார்
முதல்வர் ஜெயலலிதா
ஜூன் 15
பழம்பெரும் இயக்குநர் ஏ.சி.திரிலோகசந்தர் மரணம்
ஜூன் 16
அமெரிக்க அதிபர் ஒபாமாவை அவரது வெள்ளை மாளிகையில் சந்தித்துப்
பேசினார் தலாய்லாமா.
ஜூன் 19
முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவுப்படி தமிழ்நாடு முழுக்க
500 மதுக்கடைகள் மூடப்பட்டன
ஜூன் 22
20 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி34 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
மாநகராட்சி மேயரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கும் வகையில்
சட்டத்திருத்த மசோதா, சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
ஜூன் 23
தாஷ்கண்ட் மாநாட்டின் இடையே சீன அதிபரை சந்தித்து, அணு சக்தி
விநியோக நாடுகள் குழுவில் இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு ஆதரவு தருமாறு நரேந்திர
மோடி கேட்டுக்கொண்டார்.
மேயர் தேர்தல் சட்டத்திருத்த மசோதா சட்டசபையில் நிறைவேறியது.
ஜூன் 24
அணு சக்தி விநியோக நாடுகள் குழுவில் இந்தியா இணைவதற்கு சீனா
முட்டுக்கட்டை போட்டதால், அந்த வாய்ப்பு கைநழுவிப்போனது
ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறலாமா என்ற
கருத்துக்கணிப்பில், வெளியேறலாம் என இங்கிலாந்து மக்களின் பொதுவாக்கெடுப்பின் மூலம்
தெரிவித்தனர். ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து விலகக்கூடாது என்று பிரச்சாரம்
செய்த, அந்நாட்டின் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலக முடிவு.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக அனில் கும்ப்ளே
நியமிக்கப்பட்டார்.
ஜூன் 25
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி புனேவில்
தொடக்கிவைத்தார்
சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸின் தோல்விக்கு பொறுப்பேற்று,
காங்கிரஸ் தலைவர் பதவியை ஈவிகேஎஸ் இளங்கோவன் பதவி விலகினார்
ஜூன் 29
ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைக்கு மத்திய அரசு ஒப்புதல்
வாட்ஸ்அப் செயலிக்கு தடை விதிக்கக் கோரும் மனுவை உச்சநீதிமன்றம்
தள்ளுபடி செய்தது
ஜூன் 30
இந்தியாவில் சூரிய மின்சக்தி விரிவாக்கத் திட்டங்களுக்கு
உலக வங்கி ரூ 6700 கோடி நிதி உதவி, உலக வங்கி தர இருப்பதாக பிரதமர் மோடி அறிவிப்பு
ஜூலை 1
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் இலகுரக போர் விமானங்கள்
இந்திய விமானப்படையில் சேர்ப்பு
மருத்துவ உயர்படிப்புகளில் தமிழகத்தில் பின்பற்றப்பட்டுவந்த
மாநில இட ஒதுக்கீட்டு முறைக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
ஜூலை 5
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை மாற்றி
அமைக்கப்பட்டது. புதிதாக 19 அமைச்சர்கள் பதவி ஏற்றதால் அமைச்சர்களின் எண்ணிக்கை
78-ஆக உயர்ந்த்து.
மெட்ராஸ், பாம்பே ஹைகோர்ட்டுகள் சென்னை, மும்பை ஹைகோர்ட்டுகள்
என பெயர் மாற்றம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்
ஜூலை 10
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 2-வது அணு உலையில் மின் உற்பத்தி
தொடங்கியது
ஜூலை 12
தென் சீனக்கடல் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக சர்வதேச தீர்ப்பாயம்
தீர்ப்பு வழங்கியது.
ஜூலை 16
துருக்கி நாட்டில் மக்கள் துணையுடன் ராணுவப்புரட்சி முறியடிப்பு.
ஜூலை 18
பாலாறு தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்க ஆந்திர அரசை அனுமதிக்கக்க
கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு மனு தாக்கல்
ஜூலை 20
தேசத்துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ்
முஷாரப்பின் சொத்துக்களை பறிமுதல் செய்யவும் வங்கிக்கணக்குகளை முடக்கவும் பாகிஸ்தான்
நீதிமன்றம் உத்தரவு.
ஜூலை 22
சென்னையில் இருந்து 29 பேருடன் அந்தமானுக்குச் சென்ற ராணுவ
விமானம் மாயமானது
ஜூலை 27
ராமேஸ்வரம், பேய்க்கரும்பு என்ற இடத்தில் முன்னாள் குடியரசுத்
தலைவர் அப்துல் கலாமின் சிலை திறந்து வைக்கப்பட்டது
ஜூலை 30
இங்கிலாந்தில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பதற்கு உரிய நடவடிக்கையை
இந்திய அரசு எடுக்கும் என்று மத்திய அரசு அறிவிப்பு
ஆகஸ்டு 1
குஜராத் முதல்வராக இருந்த ஆனந்தி பென் படேல் தனது பதவியை
ராஜிநாமா செய்தார்
தில்லி மேல்சபையில் மருத்துவ நுழைவுத்தேர்வு மசோதா நிறைவேறியது
ஆகஸ்டு 3
சரக்கு மற்றும் சேவை வரி மசோதா காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்
ஆதரவுடன் தில்லி மேல்சபையில் நிறைவேறியது.
ஆகஸ்டு 4
தில்லி மாநில அரசில் கவர்னருக்கே முழு அதிகாரம் உண்டு. அவரது
ஒப்புதல் இன்றி கேஜ்ரிவால் பிறப்பித்த உத்தரவு செல்லாது: தில்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு
ஆகஸ்டு 5
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் ஒலிம்பிக் போட்டி தொடங்கப்பட்டது.
ஆகஸ்டு 6
வியட்நாம் வீடு பட இயக்குநரும் நடிகருமான சுந்தரம், தயாரிப்பாளர்,
பாடலாசிரியருமான பஞ்சு அருணாச்சலம் ஆகியோர் மரணமடைந்தனர்.
ஆகஸ்டு 7
குஜராத் முதல்வராக விஜய் ரூபானிக் பதவியேற்றார்
ஆகஸ்டு 9
சேலத்தில் இருந்து சென்னைக்கு ரயிலில் கொண்டுவரப்பட்ட ரிசர்வ்
வங்கி பணம் ரூ.5.78 கோடி கொள்ளையடிக்கப்பட்டது.
மணிப்பூரில் 16 ஆண்டுகாலமாக உண்ணாவிரதம் இருந்த இரோம் சர்மிளா
உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.
அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் கலிகோபுல் தற்கொலை
செய்து கொண்டனர்
பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி மரணம்
ஆகஸ்டு 10
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 1-ஆவது அலகை தமிழக முதல்வர்
ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகிய மூவரும் தொடங்கி
வைத்தனர்.
ஆகஸ்டு 14
திரைப்பட பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மரணமடைந்தார்
ஆகஸ்டு 18
ஒலிம்பிக்கில் நடைபெற்ற மல்யுத்தப் போட்டியில் சாக்ஷி மாலிக்
வெண்கலப்பதக்கம் வென்றார்.
ஆகஸ்டு 19
ஒலிம்பிக்கில் நடைபெற்ற பேட்மின்டன் போட்டியில் பி.வி.சிந்து
வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆகஸ்டு 20
பிரதமர் மோடி அணிந்த கோட் சூட், ரூ.4.31 கோடிக்கு ஏலம் போனதால்,
கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக உர்ஜித் படேல் நியமனம்
ஆகஸ்டு 24
தமிழ்நாட்டில் உள்ள கிரிக்கெட் வீரர்களின் திறமையை வெளிக்கொணர
டிஎன்பில் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது.
இத்தாலியில் கடும் நிலநடுக்கம். 250 பேர் பலியாகினர்
ஆகஸ்டு 30
காவிரியில் தண்ணீர் திறந்துவிடக்கோரி தமிழகம் முழுவதும் விவசாயிகள்
போராட்டம்
பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து
அணி 444 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தது.
ஆகஸ்டு 31.
தமிழக கவர்னராக மராட்டிய மாநில கவர்னர் வித்யாசாகர் ராவ்
கூடுதலாக பொறுப்பு வகிப்பார் என குடியரசுத்தலைவர் அறிவிப்பு
செப்டம்பர் 1
சிறுவாணி ஆற்றின் குறுக்கே அணை கட்ட கேரளாவை அனுமதிக்கக்கூடாது
என்று சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்.
செப்டம்பர் 2
தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக வித்யாசாகர் ராவ் பொறுப்பேற்றுக்
கொண்டார்
செப்டம்பர் 3
பிரபல தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் ரூ.6,630 கோடி மதிப்புள்ள
சொத்துகள் முடக்கம் செய்தது அமலாக்கப் பிரிவு.
செப்டம்பர் 4
அன்னை தெரசாவிற்கு வாடிகன் நகரில் போப் ஆண்டவர் பிரான்சிஸ்
புனிதர் பட்டத்தை வழங்கினார்
செப்டம்பர் 4
தமிழக அரசின் இடைக்கால மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் வினாடிக்கு
15 ஆயிரம் கன அடி வீதம், 10 நாட்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு
கர்நாடகத்துக்கு உத்தரவிட்டது
செப்டம்பர் 7
உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து, கர்நாடக அணைகளில் இருந்து
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
செப்டம்பர் 8
இன்சாட் 3டி ஆர் வானிலை செயற்கைக்கோளை சுமந்தபடி ஜிஎஸ்எல்வி
எப் 5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது
சரக்கு மற்றும் சேவை வரிக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி
ஒப்புதல் அளித்தார்
செப்டம்பர் 10
பிரேசிலின்
ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற
பாரா ஒலிம்பிக்கில்
தமிழகத்தைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேல்
உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்றார்.
செப்டம்பர் 12
தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் இருந்து 12 ஆயிரம் கன அடி தண்ணீர்
திறந்துவிடவேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டதை எதிர்த்து கர்நாடகாவில்
தமிழகத்தைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பஸ்கள், 50-க்கும் மேற்பட்ட லாரிகள் தீ வைத்துக்
கொளுத்தப்பட்டன
செப்டம்பர் 14
தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவராக திருநாவுக்கரசர் நியமனம்
செப்டம்பர் 16
காவிரி நீர் பிரச்சனையில் கர்நாடாகத்தைக் கண்டித்து தமிழ்நாட்டில்
பந்த் நடத்தப்பட்டது
செப்டம்பர் 18
காஷ்மீர் மாநிலம் உரி ராணுவமுகாமில் தீவிரவாதிகளின் தாக்குதலில்
19 ராணுவ வீரர்கள் பலியாயினர். 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
செப்டம்பர் 20
தமிழகத்திற்கு செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி
வரை காவிரி ஆற்றில் இருந்து விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், கர்நாடகம் திறந்துவிடவேண்டும்
என்று உச்சநீதிமன்றம் உத்தரவு. காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க
வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது
செப்டம்பர் 21
சென்னை விமான நிலையம் – சின்னமலை இடையே மெட்ரோ ரயில் சேவையை
முதல் அமைச்சர் ஜெயலலிதா தொடக்கிவைத்தார்
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு தலைவராக எம்.எஸ்.கே
பிரசாத் தேர்வு செய்யப்பட்டார்
செப்டம்பர் 22
உடல்நலக்குறைவு காரணமா அப்போலோ மருத்துவமனையில் முதல்வர்
ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்
செப்டம்பர் 25
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும்
19 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவிப்பு
செப்டம்பர் 26
ஐந்து வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் உள்பட எட்டு செயற்கைக்கோள்களுடன்
பிஎஸ்எல்வி விசி ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
செப்டம்பர் 28
பாகிஸ்தானில் நடைபெற இருந்த சார்க் மாநாடு, இந்தியா, பூடான்,
ஆப்கானிஸ்தான், வங்கதேசம் போன்ற நாடுகளின் புறக்கணிப்பால் ஒத்திவைக்கப்பட்டது
செப்டம்பர் 29
இந்திய ராணுவம் பாகிஸ்தான் எல்லைக்குள் அதிரடியாக நுழைந்து
7 தீவிரவாத முகாம்களை அழித்தனர். இந்த தாக்குதலில் 38 தீவிரவாதிகளும் 2 பாகிஸ்தான்
வீரர்களும் கொல்லப்பட்டனர்
செப்டம்பர் 30
தமிழகத்திற்கு விநாடிக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீர், கர்நாடகம்
திறந்துவிடவேண்டும் என்றும் காவிரி மேலாண்மை வாரியத்தை 4 நாட்களுக்குள் மத்திய அரசு
அமைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது
மத்திய அரசின் ஆதார் அட்டை வழங்கும் திட்டம் தமிழக அரசிடம்
ஒப்படைப்பு. இ-சேவை மையங்களில் ஆதார் அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.
உள்ளாட்சி தேர்தல் நடத்தை உச்சநீதிமன்றம் தடை விதித்தது.
அக்டோபர் 3
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்குமாறு உச்சநீதிமன்றம் பிறப்பித்த
உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பாக உத்தரவிடும் அதிகாரம்.
அக்டோபர் 4
தமிழகத்தில் நடைபெற இருந்த உள்ளாட்சி தேர்தலை சென்னை உயர்நீதி
மன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது
டேவிட் டவ்லஸ், டங்கன்
ஹால்டன் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற தேர்வு
அக்டோபர் 5
நாட்டின் முதலாவது மருத்துவப்பூங்காவை செங்கல்பட்டில் அமைக்க
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது
அக்டோபர் 6
பிரெஞ்ச் கயானாவில் இருந்து இஸ்ரோ வடிவமைத்த ஜிசாட் – 18
செயற்கைக்கோள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
அக்டோபர் 7
கொலம்பிய அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோசுக்கு அமைதிக்கான
நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது
மூன்றாவது உலகக்கோப்பை கபடிப்போட்டி அகமதாபாத்தில் துவங்கியது
அக்டோபர் 11
முதல்வர் ஜெயலலிதா கவனித்து வந்த துறைகள், அமைச்சர் ஓ.பன்னீர்
செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது
அக்டோபர் 13
அமெரிக்க பாப் இசைக் கலைஞர் பாப் திலானுக்கு இலக்கியத்திற்கான
நோபல் பரிசு அறிவிப்பு
ஐ.நா.சபை பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் ஓய்வு பெற்றார். போர்ச்சுகல்
நாட்டின் முன்னாள் பிரதமர் ஆஸ்டோனியா குட்டரஸ் ஐ.நாவின் புதிய பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அக்டோபர் 14
பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையம் திறந்து வைக்கப்பட்டது.
அக்டோபர் 15
கோவாவில் பிரிக்ஸ் மாநாடு தொடங்கியது.
கூடங்குளத்தில் 3,4-வது அணு உலை கட்டுமான பணிகளை பிரதமர்
மோடியும், ரஷ்ய அதிபர் புதினும் தொடக்கிவைத்தனர். 16 ஒப்பந்தங்கள் இரு நாடுகளுக்கிடையே
கையெழுத்தானது.
அக்டோபர் 17
அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டசபை
தொகுதிகளுக்கு தேர்தல் நவம்பர் 19-இல் நடைபெறும் என அறிவிப்பு
அக்டோபர் 18
காவிரியில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட
வேண்டும் என்று மீண்டும் உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு உத்தரவிட்டது.
அக்டோபர் 22
3-வது உலகக்கோப்பை கபடிப்போட்டியில் இந்திய அணி அபார வெற்றி
அக்டோபர் 19
சவுதி அரேபியாவில் கொலை வழக்கில் சிக்கிய இளவரசர் துர்க்கி
பின் சவுத் அல்கபீரூக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
அக்டோபர் 24
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளின் 5 ஆண்டு பதவி காலம்
முடிவுக்கு வந்தது. அவற்றுக்கு தனி அதிகாரிகள் நியமித்து, அரசாணை வெளியிடப்பட்டது.
அக்டோபர் 26
தனியார் சட்டக்கல்லூரி தொடங்க தமிழக அரசு கொண்டுவந்த தடை
சட்டத்தை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டது.
அக்டோபர் 30
பாகிஸ்தானின் 4 ராணுவ முகாம்களை இந்திய ராணுவம் அழித்தது
நவம்பர் 1
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்கள் குறித்த உலகவங்கி வெளியிட்ட
தரவரிசைப்பட்டியலில் ஆந்திராவும் தெலங்கானாவும் முதலிடம். தமிழ்நாட்டிற்கு 18-ஆம் இடம்.
நவம்பர் 2
சிறுவாணி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவதற்கு
மத்திய அரசு தடை விதத்தது
நவம்பர் 4
தில்லியில் காற்றுமாசு அதிகரிப்பால் 17 ஆண்டுகளுக்குப்பிறகு
மோசமான பனிமூட்டம் ஏற்பட்டது.
நவம்பர் 5
கடலில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களை
தாக்க மாட்டோம் என்று இலங்கை அமைச்சர்கள் அறிவிப்பு
நவம்பர் 7
சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிப்போம்
என்று கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தது.
நவம்பர் 8
500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய
அரசு அறிவிப்பு. 2000 ரூபாய் புதிய நோட்டுகள் புழக்கத்திற்கு விடப்படுவதாகவும் டிசம்பர்
30-க்குள் பழைய நோட்டுகளை வங்கியில் கொடுத்து மாற்றிக்கொள்ளவும் அவகாசம் வழங்கப்பட்டது
நவம்பர் 9
ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணைகள்
செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி
நவம்பர் 10
விவசாயிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்தில் மீத்தேன்
எடுக்கும் திட்டம் கைவிடப்படுவதாக மத்திய அரசு அறிவிப்பு
நவம்பர் 11
ஜப்பானுக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமருடன்
அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டார்.
நவம்பர் 12
சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவராக இந்தியாவின் நரீந்தர் பாத்ரா
தேர்வு செய்யப்பட்டார்.
நவம்பர் 13
மக்களின் வேண்டுதல்களாலும் பிரார்த்தனைகளாலும் தான் மறுபிறவி
எடுத்துள்ளதாக, ஜெயலலிதாவின் கையெழுத்திட்ட கடிதம் வெளியானது
உலகப் புகழ்பெற்ற ஆசிய நடிகர் ஜாக்கிசானுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான
ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது.
நவம்பர் 15
வங்கிகளில் பணம் மாற்ற வருபவர்களுக்கு விரலில் மை வைக்கப்படும்
என்று மத்திய அரசு அறிவிப்பு
நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்களில் புதிய 2000 ரூபாய் நோட்டுகள்
விநியோகிக்கப்பட்டன.
நவம்பர் 16
பெங்களூருவில் ரூ.650 கோடி செலவில் சுரங்கத் தொழில் அதிபர்
ஜனார்த்தன ரெட்டி மகளின் திருமணம் நடைபெற்றது
நவம்பர் 19
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு சட்டசபைத்
தேர்தல் நடைபெற்றது.
அப்போலோவில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து சாதாரண தனி
அறைக்கு மாற்றப்பட்டதாக அறிவிப்பு
நவம்பர் 22
திருப்பரங்குன்றம், தஞ்சாவூர், அரவக்குறிச்சி சட்டசபைத் தொகுதிகளில்
நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி
கர்நாடக இசைமேதை பால முரளி கிருஷ்ணா மரணம்.
நவம்பர் 26
கியூபாவின் விடுதலைக்கு பாடுபட்டவரும், முன்னாள் அதிபருமான
பிதெல் காஸ்திரோ மரணம்
நவம்பர் 28
சேலம் இரும்பாலைகளின் பங்குகளை விற்பனை செய்ய மத்தியஅரசு
ஒப்புதல்
நவம்பர் 29
விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியாக இருந்தவரும்,
இலங்கையின் முன்னாள் அமைச்சருமான கருணா, பணமோசடி தொடர்பாக கைது செய்யப்பட்டார்
நவம்பர் 30
திரையரங்குகளில் சினிமா படங்களைத் திரையிடும் முன்பு தேசியகீதம்
இசைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு
டிசம்பர் 1
கவிஞர் இன்குலாப் உடல்நலக்குறைவால் மரணம்
டிசம்பர் 4
பெண்கள் ஆசியக்கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானை வீழ்த்தி
இந்தியா தொடர்ந்து 6-ஆவது முறையாக சாம்பியன்.
டிசம்பர் 5
தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி மரணமடைந்ததாக
அப்போலோ மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவிப்பு
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார்
டிசம்பர் 6
தமிழக முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு
எம்.ஜி.ஆர் சமாதியின் பின்புறம் ஜெயலலிதாவின் உடல் புதைக்கப்பட்டது
டிசம்பர் 7
நடிகரும், எழுத்தாளரும், பத்திரிகை ஆசிரியருமான சோ.ராமசாமி
மரணமடைந்தார்
டிசம்பர் 8
முத்தலாக் முறை அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றும் முஸ்லிம்
பெண்களின் உரிமைகளை பறிக்கிறது என்றும் அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவு
தொழில் அதிபர்களான சீனிவாச ரெட்டி, சேகர் ரெட்டி வீடுகளில்
வருமானவரித்துறை அதிரடி ரெய்டு. ரூ.131 கோடி பணம், 171 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது
டிசம்பர் 9
காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்களை
விசாரிக்க உச்சநீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்தது
ஹெலிகாப்டர் வாங்குவதில் ஊழல் செய்ததாக விமானப்படை முன்னாள்
தளபதி எஸ்.பி.தியாகி கைது
டிசம்பர் 10
முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி மரணம்.
அமெரிக்க குடியரசுத்தலைவர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற,
ரஷியா உதவியது என்று அமெரிக்காவின் உளவுத்துறை அறிவித்தது.
டிசம்பர் 12
சென்னையை வார்தா புயல் தாக்கியது. சென்னையில் பல்லாயிரக்கணக்கான
மரங்கள், மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
டிசம்பர் 15
நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள மதுபானக்கடைகளை
மூட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
டிசம்பர் 17
சட்டவிரோதமாக பணத்தை மாற்ற உதவி செய்ததாக பெங்களூருவில் ரிசர்வ்
வங்கி அதிகாரிகள் கைது
டிசம்பர் 18
நதிநீர் பங்கீடு பிரச்சினையை தீர்க்க புதிய தீர்ப்பாயம் அமைப்பதற்கு
மத்தியஅரசு முடிவு
ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கிப்போட்டியில் இந்திய அணி சாம்பியன்
பட்டம் வென்றது.
டிசம்பர் 19
இங்கிலாந்துக்கு எதிராக சேப்பாக்கத்தில் நடைபெற்ற கடைசி டெஸ்ட்
போட்டியில் இந்திய வீரர் கருண் நாயர் முச்சதம் அடித்து சாதனை படைத்தார்
டிசம்பர் 21
இங்கிலாந்து எதிரான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 4-0 என்ற
கணக்கில் இந்தியா வென்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 759 ரன்கள்
குவித்தது. டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் இந்திய அணியின் அதிகபட்ச ரன் இதுவே.
தமிழகத்தின் தலைமைச் செயலாளரான ராம மோகனராவ் வீடுகளில் வருமான
வரித்துறையினர் அதிரடி சோதனை.
எழுத்தாளர் வண்ணதாசனுக்கு தமிழ் மொழிக்கான சாகித்ய அகாதெமி
விருது அறிவிப்பு
டிசம்பர் 22
தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் நீக்கப்பட்டார்.
தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டார்.
2016-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த டெஸ்ட்
கிரிக்கெட் வீரராக ரவி அஸ்வின் தேர்வு
டிசம்பர் 23
பாரா லிம்பிக்கில் தங்கம் வென்ற மாற்றுத்திறனாளி வீரர் மாரியப்பனுக்கு
தமிழக அரசு 2 கோடி ரூபாய் பரிசாக அளித்தது.
டிசம்பர் 24
அரபிக்கடலில் வீரசிவாஜியின் சிலை அமைப்பதற்கு பிரதமர் அடிக்கல்
நாட்டினார்.
டிசம்பர் 25
ரொக்கமில்லா பணபரிமாற்றத்தை ஊக்குவிக்க 2 பரிசுத்திட்டங்கள்:
நரேந்திர மோடி அறிவிப்பு
டிசம்பர் 26
கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி -5 ஏவுகணை வெற்றிகரமாக
பரிசோதிக்கப்பட்டது.
(போட்டித்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தொகுத்துத் தந்திருக்கிறேன்.
-மோகனன்)
2 comments:
semai
useful act
மகிழ்ச்சி தோழர்…
Post a Comment