நாம் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால், இணையத்தில் (உதாரணத்திற்கு) www.moganan.org என்று முழுவதுமாக ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. இதை மாற்றி இனி அவரவர்களின் தாய்மொழியிலேயே வலைத்தளம் மட்டுமன்றி அவர்களின் வலை முகவரியையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி நமது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வலை முகவரிகள் விரைவில் கிடைக்கவிருக்கின்றன. உதாரணத்திற்கு உஉஉ.மோகனன்.தொகு என நாம் தமிழிலேயே வலை முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம். ( இங்கு www-க்கும் org -க்கும் எனக்குத் தெரிந்த உதரணத்தில் எழுதியிருக்கிறேன்... www, com. org, in, net...போன்றவற்றிற்கு தமிழாய்ந்தவர்கள் இனி சுந்தரத் தமிழில், சுதந்திரமாகப் பெயரிடுவார்கள் என நம்புவோமாக... )
இந்த அறிவிப்பை உலகளவில் இணையத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையமான ஐ.சி.ஏ.என்.என் ( ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) அறிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவிலுள்ள சியோல் நகரில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான ராடு பெகுஸ்ட்ரோம் கூறுகையில் '' இந்த முறை நம்பமுடியாததாக இருந்தாலும், உலகை இணைக்கும் இணையங்களை உலகம் முழுவதும் இணைக்கும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க, முதல் முயற்சியாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இப்படி, உலக மொழிகளில் இணைய முகவரிகளை உருவாக்கிக் கொள்ள வருகிற நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினத்தந்தி மற்றும் http://www.icann.org/
இச்செய்தியின் முழுமையான ஆங்கில மூலத்தைப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... http://www.icann.org/en/announcements/announcement-30oct09-en.htm
8 comments:
sonthama ethavthu ezhuthurathu....
எழுதுகிறேன் தோழரே... இருப்பினும் இந்த செய்தி இணையத்தில் உள்ள தமிழ் கூறும் நல்லுலகத்திற்கு தெரிய வஏண்டும் என்ற அவாவில் வெளியிட்டது..
அதுமட்டுமின்றி... நான் ஒரு இதழியலாளன் என்ற முறையில் இதை மற்றவருக்கு எடுத்துக் கூறுவது என் கடமை.. ஆகவே இப்பணி...
தங்களின் வருகைக்கும்..கருத்திற்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் பற்பல...
தகவலுக்கு மிக்க நன்றி
Thanks for your Useful informations.
அன்பு நண்பர் புதுகைத் தென்றலுக்கு...
தங்களின் வருகைக்கும்..கருத்திற்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் பற்பல...
அன்பு நண்பர் ஆர்.வி. ராஜி அவர்களுக்கு...
தங்களின் வருகைக்கும்... தங்களின் மேலான கருத்திற்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள்...
அடிக்கடி வாங்க...
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.
அன்புத் தோழர் தேவேஷ அவர்களுக்கு...
தங்களின் வருகைக்கும்..கனிவான கருத்திற்கும் எனது பணிவான நன்றிகள்...
Post a Comment