Thursday, November 05, 2009

17,000 ரன்களைக் கடந்தார் சச்சின் தெண்டுல்கர்...



ஹைதராபாத், நவ. 5: உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. சச்சின் தெண்டுல்கர்...

ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் இவர் பலவிதமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அச்சாதனைகளில் இன்று இன்னுமொரு மணிமகுடம் இது என்றே சொல்லாலாம்.

ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில், ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு தினப் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 7 ரன்களைக் கடந்த போது, 17,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சாதனையை அவர் 435 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார். இதுவரை இவர் 91 அரை சதங்களும், 45 சதங்களும் குவித்துள்ளார்.

ஒருதினப்போட்டிகளில், இவர்தான் முதன்முறையாக 12000 ரன்கள், 13000 ரன்கள், 14000 ரன்கள், 15000 ரன்கள், 16000 ரன்கள், 17000 ரன்கள் என வரிசையாக குவித்து சாதனை படைத்தவர் ஆவர்.. அதில் முதன் முறையாக இச்சாதனைகளைப் படைத்ததும், அதை மீண்டும் மீண்டும் முறியடித்ததும் இவரேதான்...

4 comments:

Unknown said...

உண்மையான சாதனை நாயகன்...

என் நடை பாதையில்(ராம்) said...

44 illa 45 satham

மோகனன் said...

நண்பர் கனககோபியின்

வருகைக்கும், கருத்துரைக்கும் நன்றிகள் பற்பல...

மோகனன் said...

நண்பர் ராம் அவர்களுக்கு...

தங்களின் பின்னூட்டத்திற்கும்..சுட்டிக் காட்டலுக்கும் மிக்க நன்றி...

சச்சின் தெண்டுல்கர் இச்சாதனை படைத்த போட்டியில் 7 ரன்னைக் கடந்த அடுத்த நிமிடமே இட்ட பதிவு இது... ஆதலால் அவரது சதக்கணக்கை (அவர் 7 ரன்கள் எடுத்திருந்தபோது என்ன கணக்கில் இருந்ததோ, அதை)அப்போது கொடுத்தேன்...

தற்போது அதை சரி செய்து விட்டேன்...

வருகைக்கும், தகவலுக்கும் பேரன்பான நன்றிகள்...