Saturday, October 09, 2021

2000 அடி உயர கொப்பு கொண்ட பெருமாள் கோவில் | koppu konda perumal koil | வ...



2000 அடி உயரத்தில் இருக்கும்
சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் புத்திர கவுண்டன் பாளையத்தில் அமைந்திருக்கிறது இந்த கொப்பு கொண்ட பெருமாள் கோவில். 2000 அடி உயரம், 1900 படிகள் செங்குத்து மலை என பிரமிக்க வைக்கிறது. புற்று வடிவில் பெருமாள் இருக்கும் இடம் இதுதான் என நினைக்கிறேன். என்னுடைய பதின் பருவத்தில் ஒருமுறை இந்த மலை ஏறி இருக்கிறேன்.

உங்களுக்காக இம்முறை நானும் என் ஆருயிர் நண்பன் நவநீத கிருஷ்ணனும் இந்த மலை ஏறி காட்டி இருக்கிறோம். அற்புதமான அனுபவம், தரமான பயிற்சி என பலவற்றைச் சொல்லாம். ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி சனிக்கிழமைகள் இக்கோவிலில் பல ஆயிரம் கணக்கில் பக்தர்கள் கூடுவார்கள். மற்ற சனிக்கிழமைகளிலும் கூட்டம் இருக்கும்.

கொப்பு கொண்ட பெருமாள் கோவில், முத்து மலை முருகன் கோவில் என புத்திரகவுண்டன் பாளையம் ஆன்மீகத் தலமாக உருவெடுத்து வருகிறது.

வாய்ப்பு கிடைக்கும்போது இங்கு வந்து செல்லுங்கள். இது முதல் பாகம் மட்டுமே. இதனுடைய அடுத்த பாகத்தில் இதன் தலவரலாறு, இக்கோயிலின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை தர இருக்கிறேன்... காத்திருங்கள்.

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #koppukondapeumal

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

this is 2000 feet koppu konda perumal koil. its located in salem district, attur taluka, puthiragoundan palayam. near by 2000 stone steps for upstairs...

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: