Sunday, October 03, 2021

நோ டைம் டு டை - சினிமா விமர்சனம் | James Bond's no time do die - movie r...


டேனியல் கிரெய்க்கின் கடைசி ஜேம்ஸ் பாண்ட் படமாக இன்று திரைக்கு வந்திருக்கும் ‘நோ டைம் டூ டை’ படத்தின் திரை விமர்சனம் இது.

நானோ பார்ட்டிகிள்ஸ் மூலம், ஒருவரின் டிஎன்ஏ வை டார்கெட் செய்து அவர்களை அழிக்கும் தொழில்நுட்பத்தை ரஷ்ய விஞ்ஞானி கண்டுபிடிக்கிறார். அதை வில்லன் குரூப் வழக்கம்போல கையகப்படுத்த, அதை தடுத்து உலகைக் காப்பாற்றும் முயற்சியில் இறங்குகிறார் ஜேம்ஸ் பாண்ட்.

இதில் காதல், குடும்பம், சென்டிமெண்ட், ஆக்ஷன் என கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள். இதன் முடிவு இதுவரை வந்த ஜேம்ஸ் பாண்ட் படங்களிலேயே வராத கிளைமாக்ஸ் ஆகும்.

ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களில் எப்போதும் ஓபனிங் சீன் பிரமாண்டமாக இருக்கும். இதில் முற்றிலும் மாறுபட்ட வகையில் அமைத்திருக்கிறார்கள். குடும்ப சென்டிமெண்ட், காதல் என பாண்ட் இப்படத்தில் கசிந்து உருகியிருக்கிறார்.

இப்படத்தில் ஜேம்ஸ் பாண்டிற்கு போட்டியாக 007 ஆக கறுப்பின பெண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு சீனில் மட்டும் வந்து கலக்கிச்செல்லும் அழகிய நாயகியும் இருக்கிறார்.

நிறைய ஆக்ஷன் காட்சிகள் இல்லை என்றாலும், கோலிவுட் லெவலில் அதிகபட்ச கமர்ஷியல் படம்போல எடுத்திருக்கிறார்கள் இந்த நோ டைம் டூ டை திரைப்படத்தை...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #Notometodie_review

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

------------------------------

James Bond movie no time to die movie review

watch this video... put your comments... support us...

with love

vaalu

No comments: