Saturday, February 27, 2010

இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது ஓரு தின கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!

தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது ஒரு தினப் போட்டியின், ஒவ்வொரு பந்து வீச்சிற்குமான (Ball by ball Tamil Commentary) தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276169/276169_Tamil_mini.html



இந்திய நேரப்படி 2.30 மணியிலிருந்து.... உங்களுக்காக...
----------------------

இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும்  ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..?

ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!

இணையதள வரலாற்றில் கிரிக்கெட்  வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.

இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.

இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com

இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது.
கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வர்ணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை, இத்தளத்தில் அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும்  படித்துக் கொள்ளலாம்.


(இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..!) 

No comments: