இந்நிலையில் சென்ற ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதிக அளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என பலராலும் எதிர்பார்ரக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'(Avatar) படத்தை பின்னுக்குத் தள்ளியது 'ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) திரைப்படம்.
இத்திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது ஒரு பெண் ஆவார். அவரது பெயர் கேத்தரின் பிக்லோவ் (Kathryn Bigelow). இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி ஆவார். இத்திரைப்படம் மிகக் (அவதாரை விட) குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படமாகும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சந்திக்கும் நிகழ்வுகளை மையாமகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.
ஹர்ட் லாக்கர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒலித் தொகுப்பு (Best Film, Best Director, Best Original Screenplay, Editing, Sound Mixing and Sound Editing) என ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் கேத்தரின் பிக்லோவ்
(அவதார் படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன: சிறந்த காட்சிப் படிம உருவாக்கம் (Visual Effects), கலை (Art Direction), ஒளிப்பதிவு(Cinematography) ஆகிய துறைகளில் விருது வென்றது இத்திரைப்படம்.)
2 comments:
சுருக்கமாகவும் தெளிவாகவும் தொகுத்திருக்கிறீர்கள்.
காத்தரீன் பிகலோவ்வுக்கு வாழ்த்துகள்.
மகளீர் தினத்தில் சிறப்பான பெருமை.
தங்களின் பாராட்டிற்கு மிக்க நன்றி தோழரே..!
Post a Comment