இன்று மதியம் எனது அலுவலகத்திறகு வருவதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினேன். பேருந்துச் சீட்டு வாங்கினேன்... அச்சீட்டில் எப்போதும் போல் இல்லமால் இன்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவே, உற்றுப் பார்க்கவே, அய்யன் திருவள்ளுவர் உருவம் காணப்பட்டது.
அட என ஆச்சர்யப்பட்டு உற்றுப் பார்த்தேன்... கோவையில், வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விளம்பரம் என கண்டு கொண்டேன்...
மிகவும் அகமகிழ்ந்து போனேன்... இது ஒரு நல்ல யுக்தி. செம்மொழித் தமிழ் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இது உதவும், ரயில் பயணச்சீட்டில் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு, வருவாய் ஈட்டுவதைப் போல்... பிற்காலத்தில் பேருந்துச் சீட்டுகளிலும் கொண்டு வர இது அடித்தளமாகவும் உதவும்...
அது மட்டுமின்றி, போலியோ தினம், விழிப்புணர்வு தினம் போன்றவற்றை பேருந்துச் சீட்டில் வெளியிடலாம்... பேருந்துச் சீட்டில் அய்யன் வள்ளுவனைக் காணும் அழகே அழகு...
3 comments:
இவங்கதான் தமிழை காப்பாத்த போறவங்க... Commedy பண்ணாதிங்க Boss...
அன்பு நண்பரே...
இவங்க தமிழை காப்பத்தப் போறாங்கன்னு நான் சொல்லல...
செம்மொழித் தமிழ் மாநாடு குறித்த விழிப்புணர்வு வரும் என்றும், இது போன்று மக்களுக்கு பயனுள்ள விளம்பரங்களை வெளியிடலாம் என்றும்தான் தெரிவித்துள்ளேன்...
தமிழை யாரும் காப்பத்த வேண்டாம்... அதன் பெயரைச் சொல்லி தங்களை காப்பாற்றிக் கொள்ளும் நபர்களே இங்கு அதிகம்... அவர்களைப் பற்றி நான் பேசவே இல்லை... பேசவும் மாட்டேன்..!
நன்றி... அடிக்கடி வாங்க
போகி குழுமத்திற்கு எனது நன்றிகள்..!
Post a Comment