சென்னை புத்தகக் காட்சி 2021- கோலாகலமாக சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 24, 2021) தொடங்கியது. 600-க்கும் மேற்பட்ட அரங்குகள், பாதுகாப்பு நெறிமுறைகள், பிரமாண்ட அரங்கம் என அமர்க்களப்படுத்துகிறது பபாசி நடத்தும் 44-வது சென்னை புத்தகக் கண்காட்சி.
நேற்று இரவு நானும் அகிலனும் புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கே முதன் முதலாக கால் பதித்திருக்கும் விக்யான் பிரசார் அரங்கில் எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்கள். அகிலனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.
சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய அரங்கில் இதுவும் ஒன்று... மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய அரங்கு இது...
அரவிந்த் குப்தாவின் எளிய அறிவியல் சோதனைகள் அடங்கிய புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அதுபோல் எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.
அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட இந்த அரங்கு காரணமாக இருக்கும்... ஸ்டால் எண் இந்த வீடியோவில் பாருங்க தெரியும்...
தொடர்ந்து இணைந்திருங்கள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #chennai_book_fair_2021 #CBF_2021 #cbf2021
#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv
#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...
#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu
No comments:
Post a Comment