Thursday, April 22, 2021

ஊக்கமது கைவிடேல் - அரசுப்பள்ளி மாணவர்களின் நாடகம் | ookamathu kaividel -...



ஆத்திசூடியினை அடிப்படையாக வைத்து, நான் எழுதிய நாடக நூல் அறம் செய்ய விரும்புவோம். இந்த நூலில் ‘ஊக்கமது கைவிடேல்’ தலைப்பில் எழுதிய நாடகத்தை, விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம், மணல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பரிமளா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் சிரித்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

தாத்தாவாக வரும் பி.பிரசாத்தின் நடிப்பை பாருங்கள். ரசித்து சிரிப்பீர்கள். பாட்டியாக வரும் தேன்மொழி, அப்பாவாக வரும் பிரவீன், அம்மாவக வரும் கீர்த்திகா, பெரிய மகனாக வரும் பூபதி ராஜ், இளைய மகனாக வரும் பிரதாப்... அனைவரின் நடிப்பும் அற்புதம்.

ஒரு நாடகத்திற்கு பலம் சேர்ப்பவை... அரங்கப் பொருட்கள் என்பதை விட... காட்சிக்கு ஏற்ற பொருட்கள். இருப்பதைக் கொண்டு அசத்தி இருப்பார்கள். ஒப்பனை எனப்படும் மேக்கப்பும் அசத்தல்...

பரிமளா அவர்களின் துல்லியமான ஒளிப்பதிவு படத்திற்கு பலம். படத்தொகுப்பு மிகப்பெரிய பலம். மகிழ்கிறேன்...

இதைத்தான் நான் என் நூலின் மூலமாக குழந்தைகளிடம் சொல்ல நினைத்த கருத்து... அது சரியான முறையில் சென்றிருப்பது கண்டு உள்ளம் மகிழ்கிறேன்...
பாராட்டுகள் குழந்தைகளே..! 

இதை 4 ஆண்டுகளுக்குப் பிறகு வாலு டிவி நேயர்களாகிய உங்கள் முன் படைப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்!

சிறப்பு நன்றி

மு.பரிமளா, 
தலைமை ஆசிரியர்,
ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி
மணல்மேல்குடி, 
திருவெண்ணைய் நல்லூர் ஒன்றியம்
விழுப்புரம் மாவட்டம்

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #ookamathu_kaividel​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

ookkamathu kaivdel a government school children play this dram. written by your vaalu @ mo.ganesan. Aram seyya virumbuvom drama book scene taken be this drama sequence...

if you like share your friends... 

with love

Vaalu

No comments: