உங்களுக்கே தெரியாமல் உங்கள் பெயரில் பல்வேறு சிம் கார்டுகள் இருந்தால், அதை கண்டுபிடித்து
அழிக்கும் எளிய வழி இதோ!
சிம்கார்டு என்பது மொபல் போனிற்கு மிகவும் அவசியம். எந்த ஒரு சிம் கார்டை வாங்க வேண்டுமென்றாலும் ஆதார் அட்டை நகலை கொடுக்க வேண்டும்.
அந்த ஆதார் நகலை வைத்து பல சிம்கார்டுகளை வாங்க முடியும். சில தனியார் ஏஜென்ஸிகள் நமக்கு தெரியாமல் இந்த திருட்டு வேலைகளை செய்துவிடுகின்றன. இத்தகைய சிம்கார்டுகள் தவறான வழிகளில் பயன்படுத்தப்படவோ, தீவிரவாத செயல்களுக்கோகூட பயன்படுத்தப்படும் அபாயம் இருக்கிறது.
நம் ஆதார் எண்ணை வைத்து எத்தனை சிம் கார்டுகள் வாங்கப்பட்டு, பயன்பாட்டில் இருக்கின்றன என்பதை நம்மால் அறிந்துகொள்ள முடியாத நிலை இருந்தது. தற்போது அந்தக் குறையினை மத்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் போக்கியிருக்கிறது.
இதற்கென தனியே ஒரு இணையதளத்தை திறந்திருக்கிறது. அந்த இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் இருக்கின்றன என்பதை கண்டுபிடிக்கலாம். நீங்கள் வாங்காத சிம்கார்டாக இருந்தால் அதனை நீங்களே முடக்கிவிடலாம். அதற்கான வழிமுறைகளைத்தான் இந்த வீடியோ உங்களுக்கு எளிய முறையில் விளக்குகிறது...
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #fakesimcards
++++++++++++++++++
how i find my sim cards with the help of aadhar number. how many sim cards in my name, aadhar sim card link,
with love
Vaalu @ Mo.Ganesan
No comments:
Post a Comment