Tuesday, June 22, 2021

நீட் தேர்வு ஏன் வேண்டாம் - வாலுவின் அதிர்ச்சி தரும் புள்ளிவிவரங்கள் | TN...



நீட் தேர்வுக்கு எதிராக நீங்களும் குரல் கொடுக்கலாம்! மருத்துவப் படிப்பில் தமிழக மாணவர்களுக்கு எதிராக நடைபெறும் அநீதி குறித்து, நீட் தேர்வுக்கு நீங்களும் குரல் கொடுக்கலாம். உங்கள் எதிர்ப்பும் அரசு தரப்பில் பதிவு செய்யப்படும்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்தக் குழுவில் ஏ.கே. ராஜன் தலைமையில் மருத்துவத்துறைச் செயலாளர், பள்ளிக் கல்வித்துறைச் செயலாளர் உள்ளிட்ட 8 உறுப்பினர்கள் கடந்த 10 ஆம் தேதி நியமனம் செய்யப்பட்டனர்.

இக்குழு, நீட் தேர்வில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஒரு மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்பதால் மக்களின் கருத்தையும் இக்குழு கேட்க இருக்கிறது. 

தமிழக மக்கள் நீட் தேர்வு பாதிப்புகள் குறித்து neetimpact2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம். உங்களது கருத்துக்கள் 5 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
இக்கருத்துகள் நாளை இரவுக்குள், அதாவது ஜூன் 23-ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை அனுப்பி வைக்கவேண்டும்.

நீங்கள் அனைவரும் இந்த மின்னஞ்சல் முகவரிக்கு உங்களது கருத்துக்களை தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பி வைக்க வேண்டுகிறேன். இது நம் எதிர்கால சந்ததிகளின் மருத்து நலன் சார்ந்த பிரச்சினை என்பதை மறந்துவிடக்கூடாது.

No comments: