Saturday, July 19, 2008

மோகனனின் கலாட்டா

(மோகனன் அவனது நண்பரை வழியில் சந்திக்கிறான்… அப்போது நண்பர் மோகனனைப் பார்த்து …)

"வாடா… எப்ப வந்த"
"நான் வந்து 28 வருடமாச்சு…"
"நான் அதை கேக்கலடா"
"அப்ப வந்தவனை ஊரிலிருந்து எப்ப வந்தன்னு கேக்கமாட்ட..?"
"வந்தவுடனே ஆரம்பிச்சிட்டியா...?"
"போகும்போது ஆரம்பிக்க முடியாதே…"
"சரி அத விடுடா…"
"நான் எதையும் பிடிச்சிகிட்டு இருக்கலையே… நீ எதை விடச் சொல்ற…"
"டே அப்பா… உங்கிட்ட…"
"நான் எப்படா உனக்கு அப்பாவானேன்…"
"உன்னைச் சொல்லலடா…"
"என்னைச் சொல்லன்னா…....... டேய்… ஆனாலும் உனக்கு தைரியம் அதிகம்டா… உன் அப்பாவை ‘டே’ அப்பாங்கற…"
"ஐயோ………?"
"ஏண்டா எங்கயாவது அடி பட்டுடிச்சா…"
"(கோபமாக…) இ... இல்லடா…"
"அப்ப எதுக்குடா ‘ஐயோ’ன்ன..?"
"உங்கிட்ட பேசறதுக்கு பதிலா… சுவர்கிட்ட பேசலாம்டா…"
"சுவர்கிட்ட பைத்தியம்தாண்டா பேசும்…"
"ஆமா நான் பைத்தியம்… ஆமா நான் பைத்தியம்…" (என்று அலறியபடியே என் நண்பன் தலைதெறிக்க ஓடியதைப் பார்க்க உங்களுக்கு கொடுத்து வைக்கவில்லை…" )

(மோகனன் கலாட்டா தொடரும்)

4 comments:

வெண்பூ said...

செம நக்கல்தான்... எங்க இருக்காரு அந்த நண்பர் இப்ப? கீழ்பாக்கத்துலயா?

மோகனன் said...

தங்கள் கருத்திற்கு நன்றி... மேலும் தங்களது கருத்துக்களை வரவேற்கிறேன்.. இந்த அடியவனின் குடிலுக்கு வருகை தந்த உமக்கு எமது நன்றிகள் பலப்பல...

Anonymous said...

Sir

Mohan's kalata is very good. May be u and ur friend in Kilpakam.

Am i correct.

மோகனன் said...

நன்றி தோழரே..!