விடாமல் விரட்டும் வறுமை
மனதில் படரும் வெறுமை
மற்றவர் பார்வையில் சிறுமை
மனம் கேட்கிறது பொறுமை..!
வாய்மையை கடைபிடித்தால்
வருவாய் கிடைக்காது..?
பொய்மையைப் பிடித்தால்..!- அதற்கு
வாய்த்திறமை வேண்டும்..!?
எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!
பணம் கிட்டாவிடில்
மனம் ஆகிவிடுகிறது ரணம்...
குணம் குமைந்து சாகிறது
மனம் அழுது தொலைக்கிறது..!
பணம் ஒரு வேசி
பணக்காரனிடம் மட்டும் ஒட்டும் பாசி
அவ்வேசி நம்மிடமிருந்தால்
சமூகம் நம்மை உயரத்தில் வைக்கும்
இல்லாவிடில் குப்பையில் தள்ளும்..!
(சென்னையில் வேலை தேடி.. வேலை தேடி ஓய்ந்து போனேன். காய்ந்து, தீய்ந்தும் போனேன்... அதன் விளைவாக, 17.03.2005 அன்று எழுதியது.)
6 comments:
அந்த வேசிக்காக தமிழனை அடமனாம் வைத்து விட்டான் ரஜினி .
http://thaneer-dhesam.blogspot.com/
இங்கே வைரமுத்துவின் தண்ணீர் தேசம் எழுதப் படுகிறது. படித்து சுவையுங்கள்
தங்களது மேலன கருத்திற்கு நன்றி.. இருப்பினும் மற்றவர்களுக்கும் மரியாதை வழங்குவோமே...
வறுமை மிகப்பெரிய ஆசான் !
அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம் !
====
எல்லாம் பொய்யாய்ப்போன உலகில்
பொய்மையைப் பிடியேன்... - ஆனால்
இவ்வுலகில் எல்லாம் பணம்
பணம்... பணம்... பணம்..!
====
நல்லருக்கு..
ஆமா, இப்ப வேலை கிடைச்சிருச்சா???
வேலை கிடத்து விட்டது நண்பரே... தங்கள் வருகைக்கும், தங்களது மேலான கருத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
Post a Comment