தமிழகத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவ, மாணவியருக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் படிக்கும் போதே மாதம் ரூ. 4ஆயிரம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோ-ஆப்டெக்ஸ் தனி அலுவலர் மற்றும் நிர்வாக இயக்குனர் நிர்மலா கூறியதாவது:
தமிழகம் முழுவதும் 137 கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகங்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 200 விற்பனையகங்கள் உள்ளன. புதுப்புது டிசைன்களை அறிமுகம் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் அதிகரித்து வருகின்றனர். இப்போது கோ- ஆப்டெக்ஸ் விற்பனையகங்களில் கல்லூரி மாணவர்களுக்கு ‘பகுதி நேர வேலை’ வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மாணவர்கள் படித்துக்கொண்டே பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி நல்ல அனுபவமும் பெறமுடியும்.
‘பகுதி நேர வேலை’க்கு எவ்வளவு மாணவர்கள் வேண்டுமானாலும் வரலாம். மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரை இவர்களுக்கு பணி நேரம். இதன் மூலம் மாதம் ரூ.4 ஆயிரம் வரை இவர்கள் சம்பாதிக்க முடியும். பணி செய்ய மாணவர்கள் விரும்பினால் அந்தந்த பகுதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் மேலாளரை (Manager) அணுகலாம்.
கோ-ஆப்டெக்ஸ் கண்காட்சிகள் (Exhibition), விற்கனையகத்தின் உள் அலங்காரம் (Showroom decoration), விற்கனை பிரிவு ஆகியவற்றுக்கு மாணவர்களை பயன்படுத்தி கொள்வோம்.
ஆயத்த ஆடைகள் (Ready mates) மற்றும் துணி வகைகளில் கண்கவரும் வகையில் புதிய வடிவமைப்புகளை (Disign)ன் செய்யும் மாணவர்களின் திறமைகளையும் ஊக்குவிக்கிறோம்.
மாணவ, மாணவியர் வடிவமைத்த சுடிதார் மற்றும் துணி வகைகளில் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு வடிவமைக்கிற்கு ஊக்கத்தொகையாக ரூ.600 வழங்கப்படும்.
மாணவர்கள் பணம் சம்பாதிப்பது மட்டுமன்றி தங்கள் திறமைகளையும் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என்றார் நிர்மலா.
எவ்வளவு அருமையான வாய்ப்பு... படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களே.. உங்களுக்கேற்ற வாய்ப்பு இது... பயன்படுத்திக் கொள்ளுங்கள்... இதே போல ஒவ்வொரு அரசு, அரசு சார்ந்த , தனியார் நிறுவனங்களும் மாணவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுத்தால்... நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கலாம்... திறமையானவர்களை படிக்கும் காலத்திலேயே கண்டறியலாம்... அவர்களாலும் சம்பாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கையை உருவாக்கும்... கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்திற்கும், இந்த அருமையான வாய்ப்பு பற்றி சிந்தித்து செயலாற்றிய, செயலாற்றப்ப போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்... நன்றிகள்..!
(நன்றி: தமிழ் முரசு)
4 comments:
நெசமாத்தானா? அருமை.. அருமை
இந்த திட்டத்தை கொண்டு வந்த கோ ஆப்டெக்ஸ்'க்கு வாழ்த்துக்கள்
உண்மைதான் தோழரே.. (கடலூர் மற்றும் ஆத்தூர் நகரங்களில் உள்ள)கோ-ஆப்டெக்ஸ் விற்பனையகத்தில் நேற்றே விசாரித்தோம்... தகவல் உண்மைதான் என்றும், சுற்றிக்கைக்காக காத்திருக்கிறார்கள் என்றும் தகவலறிந்தேன்...
நான் படிக்கும் போது இது போன்ற வாய்ப்பு வரவில்லையே என்று சற்று ஆதங்கப்படுகிறேன்...
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி...
உண்மைதானா? பலே பலே
//நான் படிக்கும் போது இது போன்ற வாய்ப்பு வரவில்லையே என்று சற்று ஆதங்கப்படுகிறேன்...//
நானும் நானும் :)
நல்ல விசயம்.
Post a Comment