மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?
தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).
தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.
1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.
அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...
நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.
எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்
1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.
(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)

1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.
(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)
10 comments:
அன்புள்ள மோகனன்,
தங்களின் கோட்டோவியம் ஒன்றை எனது வலைப்பதிவில் பயன்படுத்த எண்ணி, சொல்லப்பட்ட அக்கோட்டோவியப் பதிவிற்கான பின்னூட்டம் வாயிலாக அனுமதி கோரியிருந்தேன். பார்க்க!
தாங்கள் ஒருவேளை அதனை இன்னும் கவனிக்கவில்லையோ என்ற ஐயத்தினால் இங்கு மறுபின்னூட்டம் இடுகிறேன். ஓவியத்தைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி தருவீர்களென்றால், எனது பதிவில், ஓவியத்துடன் தங்கள் பதிவிற்கான சுட்டியும் இட்டு மகிழ்வேன்.
(ஒருவேளை, தங்கள் ஓவியம் மற்றவர் பதிவில் பயன்படுத்தப்படுவது தங்களுக்கு ஏனோ உவப்பில்லை என்றாலும், அதையும் தயங்காது கூறவும். தவறாக நினைக்க மாட்டேன்!) :)
நன்றி.
விஜய்
அன்பான விஜய் அவர்களுக்கு...
தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... தாங்கள் முதலில் இட்ட பின்னூட்டத்தை கவனிக்கவேயில்லை. இன்றுதான் கண்டேன்... காணாமல் விட்டதற்கு வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன்...
தாங்கள் எனது வலைப்பதிவில் இருக்கும் தகவல்களும் சரி, படங்களும் சரி, கோட்டுக் கிறுக்கல்களும் சரி... எது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள்... தடையில்லை... அதற்கு நான் எனென சொல்லப் போகிறேன்...
பயன் படுத்திக் கொள்ளுங்கள்...
மேலும் உங்களுக்கு ஏதேனும் கோட்டுக் கிறுக்கல் வேண்டுமெனில் என்னை அழையுங்கள்... சிறப்பாக வரையத் தெரியாது எனினும், என்னால் இயன்றவரை செய்து தருகிறேன்...
தங்களை இதுநாள்வரை காக்க வைத்ததற்கு எனது மனமார்ந்த மன்னிப்புகள் தோழரே...
நல்ல தகவல், பராட்டுகள்
http://aammaappa.blogspot.com/2008/08/blog-post_05.html
இந்தப் படம் திரு.எம்ஜிஆர் முதல்வராக இருந்த போது திரு.எம்.கே.ராதா அவர்களின் கால்களில்,எம்ஜீஆர்,எதோ ஒருவிழாவில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய போது எடுத்த படமாக இருக்கும்.எனென்றால் என்னுடைய சிறு வயதில் இதை எதோ ஒரு நாளிதழில் படித்ததாக ஞாபகம் 80களில் இந்த சம்பவம் நடந்து இருக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறேன்.70 வது களில் அல்ல.யாராவது விபரம் இன்னும் நன்கு தெரிந்தவர்களை விசாரித்துக் கூறவும்.
நன்றி!
அன்பான முகம் தெரியா நண்பருக்கு...
தாங்கள் சொன்ன கருத்திற்கு நன்றி... இதுகுறித்து இத்தகவலை நான் வலைப்பதிவில் இடும் முன்னரே நிறய ஆய்வு செய்துதான் இத்தகவலை வெளியிட்டேன். ரிக்ஷாக்காரன் படம் வெளிவந்தது 1971.
விருது வழங்கியது 1872-ல்... இதனிடையே இப்படத்தின் வெற்றிவிழா நடைபெற்றிருக்கிறது.. அங்குதான் இப்படத்தை தான் எடுத்ததாக மறைந்த பிரபல புகைப்பட நிபுணர் 'சுபா சுந்தரம்' என்னிடம் கூறினார்.
இருப்பினும் தங்கள் கருத்தையும் நான் செவி சாய்க்கிறேன். ஆதாரத்துடன் நிரூபித்தால் அதை திருத்திக் கொள்கிறேன்...
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி...
(உங்கள் பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம்...)
என்னுடைய இசை குரு திரு. ராதா விஜயன் (எம்.கே.ராதா அவர்களின் கடைசி புதல்வர், சிங்கப்பூரில் இசைப்பள்ளி நடத்தி வருகிறார்) இசைப்பள்ளியில், வீட்டில் இந்த படத்தை நான் பார்த்து இருக்கிறேன்.. கேட்டும் இருக்கிறேன்..அவரிடம்.. மோகனன் கூறிய தகவல் சரியே...
வெங்கி
வெங்கி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி...
நான் ஒரு பதிவை இடுகிறேன் என்றால், என்னால் முடிந்த அளவு ஆய்வு செய்த பிறகே வெளியிடுகிறேன்...
எழுத்துப் பிழை அதிகம் வருகிறது... படிப்பவர்கள் மன்னித்தருள வேண்டுகிறேன்... திருத்தம்: 1972-ல் ரிக்ஷாக்காரன் படத்திற்கு இந்திய அளவிலான தேசிய விருது கிடைத்தது.
வெங்கியின் வருகைக்கும், கருத்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...
பெயர் சொல்லாம்ல போன நண்பருக்கு நன்றிகள்...
மிக அருமையான தகவல்கள் . வேறு சில வலைபூக்களில் உங்கள் பதிவுகளை உபயோகபடுத்தி கொள்ளலாமா நண்பர் மோகனன் அவர்களே உங்கள் அனுமதி கோரும்
தாராளமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள் தோழரே...
Post a Comment