ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களை போல பத்து ரூபாய் நாணயங்களை தாராளமாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விட இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
பொதுவாக ரூபாய் நோட்டுகள் அச்சிட ஆகும் செலவை விட அதே மதிப்பு கொண்ட நாணயங்களை அச்சிட அதிக செலவாகும். என்றாலும், நோட்டுகளை விட நாணயங்கள் கூடுதல் காலத்துக்கு உழைக்கும் என்பதால் எல்லா நாடுகளும் நாணயங்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விட்டு வருகின்றன.
இந்தியாவில் தற்போது ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் மற்றும் 5 ரூபாய் நாணங்கள் அதிக அளவில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை ரூபாய் நாணயங்கள் என்றும் 50 காசு வரையிலான நாணயங்களை சிறிய நாணயங்கள் என்றும் வகைப்படுத்தியுள்ளனர்.
இந்திய நாணயச் சட்டம் 1906ன் படி ஆயிரம் ரூபாய் மதிப்பு வரை நாணயங்கள் வெளியிடலாம். அதன்படி, ரிசர்வ் வங்கி ஆயிரம் ரூபாய், ஐநூறு ரூபாய், நூறு ரூபாய், ஐம்பது ரூபாய், இருபது ரூபாய், பத்து ரூபாய் நாணயங்களை வெளியிட்டு வருகிறது. ஆனால் அவைகளனைத்தும் சிறப்பு நாணயங்களாக (சிறப்பு தபால் தலை போன்று) வெளியிட்டு வருகிறது. நாணய சேகரிப்பாளர்களுக்கு இது தெரிந்த விடயம்தான்.
இப்போது மக்களிடையே நாணய பநன்பாட்டை அதிகரிக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்களை அதிக அளிவில் வெளியிட இந்திய அரசு முடிவு செய்து அதன் பொருட்டு நொய்டாவில் உள்ள இந்திய அரசின் நாணயம் அச்சிடும் மையத்துக்கு கடந்த ஆண்டு ஆர்டர் கொடுக்கப்பட்டது.
கடந்த 7 மாதங்களாக சுமார் 70 லட்சம் பத்து ரூபாய் நாணயங்கள் அச்சிடப்பட்டு பயன்பாட்டிற்கு விட தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது அச்சிடப்பட்டுள்ள 10 ரூபாய் நாணயம் இரண்டு ரூபாய் நாணயத்தை விட சற்று பெரியதாக இருக்கும். இதன் எடை 8 கிராம். குறுக்களவு 28 மில்லி மீட்டர். அகமதாபாத்தில் உள்ள தேசிய வடிவமைப்பு மையம் இந்த நாணயத்தை வடிவமைத்துள்ளது. இந்நாணயங்கள் விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும்.
இந்தியாவில் மும்பை, கொல்கத்தாவில் அலிபூர், ஐதராபாத்தில் சைபாபாத் மற்றும் செர்லபள்ளி, உ.பி.யில் நொய்டா ஆகிய இடங்களில் நாணயம் அச்சிடும் இடங்கள் உள்ளன.
என்ன நாணயம் வந்தால் என்ன..ஏழைகள் வயிறு நிரம்பி விடப்போகிறதா என்ன..?!
2 comments:
செய்திக்கு நன்றி மோகனன்
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் மிக்க நன்றி கிரி அவர்களே... உங்கள் மேலான ஆதரவை மேன்மேலும் தர வேண்டுகிறேன்.. நன்றி
Post a Comment