வணக்கம் கன்னடத் தோழர்களே...
நலம், நலமே விழைய ஆவல்... என்றுதான் என்றுமே தமிழன் நலம் விசாரிப்பான். தம்மை நாடி வந்தோரை ஏற்றம் பெற வைப்பான். இதன் வழியாகவே ''வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்'' என்று சிறப்புப் பெயரும் எந்தன் தமிழகத்திற்கு கிடைத்தது.
ஏன்யா... உங்களுக்கு வேற வேலையே இல்லையா... எப்ப பாரு தமிழனை நோண்டறதையே ஒரு பொழப்பா வச்சிருக்கீங்க... உங்க மொழி செம்மொழியாவதை நாங்க எங்கய்யா தடுத்தோம். அது உம்ம மொழி.. உன் விருப்பம்... என்னவேணா செஞ்சிக்கோ... யாரு கேட்டா..?
மத்திய அரசுக்கு ஆதரவு கொடு... நிர்பந்தி... என்ன எழவோ செய்... எதுக்குய்யா தமிழனை இழுக்குறீங்க... ஏமாந்தவன் தமிழன்கறதாலயா..?
ஏன்யா... எதுக்கெடுத்தாலும், உங்கபகுதியில இருக்குற தமிழர்களை அடிக்கறீங்க... வாகனங்களை கொளுத்தறீங்க... ஏன் உங்க மக்களை அடிக்க வேண்டியதுதானே... நீங்க எல்லாம் ஆறறிவு படைத்த மனிதர்கள்தானே.. மாக்களில்லையே..?
வீரப்பன் விவகாரத்துல ஒண்ணு சேருவீங்க.. தண்ணின்னு வந்துட்டா வெட்டு குத்துங்கிறீங்க... அந்த எழவையும்தான் எங்க மானமிகு..? அரசியல்வாதிகள் கிடப்பில போட்டுட்டாங்க... அப்புறம் என்னதான்யா உங்களுக்கு வேணும்.
சென்னைங்கிறது, இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் ஒன்று. உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்.. அது அவரது விருப்பம்... இந்தியாவில் உள்ள எந்த நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்க தம் அனைவருக்கும் உரிமை இருக்கிறது... அப்படி, இங்குள்ள உச்சநீதி மன்றத்தில் உங்கள் மொழிக்கெதிராக ஒருவர் வழக்கு தொடர்கிறாரென்றால்... சட்டப்படி அதை சந்திக்க திரணியற்ற, முதுகெலும்பில்லாத பிரணிகளாகவா ஆகி விட்டீர்கள்..? ஏன் இந்த பயம்..! அப்ப 'செம்மொழி... செம்மொழி'ன்னு சொல்றது மக்களுக்கு வித்தை காட்டவா..?
ஏன்யா... வாங்கு வங்கியையும், மக்களையையும் குறி வைத்து நீங்கள் பண்ணும் அலம்பல்களுக்கு... தமிழன்தான் பலிகிடாவா...
எதுவாக இருந்தாலும் சட்டப்படி சந்தியுங்கள்.. உங்கள் சார்பில் சரியான ஆதாரங்களைக் காட்டினால் நீதிமன்றம் சரியான நீதி வழங்கப்போகிறது... அதைவிடுத்து தமிழனை தாக்குவது, தமிழர்களின் வாகனங்களை உடைப்பது என்று வன்முறையில் இறங்காதீர்கள்...
அப்படிச் செய்தால் தீவிரவாதிகளுக்கும், கொடூரவாதிகளுக்கும் உங்களுக்கும் ஒரு வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்... நீங்கள் செய்யும் அதே அயோக்கிய தனத்தை தமிழகத்திலுள்ள கன்னடர்களிடம் காட்டுவதற்கு கண நேரம் ஆகாது... ஆனால் நாங்கள் கண்ணியவாதிகள்... காத்துத்தான் பழக்கமே தவிர... அழித்தல்ல...
இனியேனும் உங்களது பேடித்தனமான வீரத்தை அங்குள்ள தமிழர்களிடம் காட்டாதீர்கள்... சாது மிரண்டால் காடு கொள்ளாது...
இப்படிக்கு
உங்களிடம் நட்பை எதிர்பார்க்கும் ஒரு தமிழன்.
(செம்மொழி... செம்மொழி என்று கூவுகிறார்களே..? அதன் வரையறை, வரைமுறை என்னென்று தெரியுமா..? இதனை அறிய இதன் கீழ் உள்ள கட்டுரையை .. . அல்லது செம்மொழி மீது சொடுக்குங்கள்..!)
4 comments:
:(
ஓஹோ!
சவுக்கடி!!!
தங்கள் வருகைக்கும், கருத்திற்கும் எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்...
என் மனதில் பட்ட வலி..இங்கே கடிதமாகியது...
நன்றி... மீண்டும் வருக... மேலான கருத்துக்களை தருக...
Post a Comment