Thursday, August 14, 2008

தமிழில் மின் நூல் தயாரிக்கலாம் வாருங்கள்..!

இணையத்தில் பெரும்பாலும் ஆங்கிலத்தில் தான் மின்நூல்கள் ( E -Books ) கிடைக்கின்றன. ஆனால் நமது தாய்மொழியான தமிழில் மின்நூல் என்பது கிடைப்பதற்கு அரிதாகவே இருக்கிறது.

காரணம்: மின் நூல் எவ்வாறு உருவாக்குவது என்பது நிறைய பேருக்கு தெரியாது. பலருக்கு தமிழில் மின்நூல் சாத்தியமே இல்லை என்ற எண்ணம்.பெரும்பாலோனோர் அதைப் பற்றிச் சிந்திப்பதே கிடையாது. பலர் தமிழில் எழுத முன்வருவதில்லை.

தமிழில் மின்நூல் தயாரிப்பது எப்படி?

சாதாரண ( MS Word ) கோப்பை மின்நூலாக மாற்றுவதற்கான பி.டி.எப் உருவாக்கி ( PDF Creator ). இதற்கு பிரிமோ பிடிஎஃப் என்ற செயலி உதவுகிறது.

வழிமுறைகள்:

1) முதலில் MS Word ல் தட்டச்சு செய்யவேண்டியதை செய்து விடுங்கள்.

2) பிறகு MS Word-ன் File Menu சென்று Print என்பதைச் சொடுக்கவும்.

3) இப்போது ஒரு குறுந்திரை உருவாகியிருக்கும். அதில் Name என்பதில் Primo PDF என்பதைத் தேர்ந்தெடுத்து OK கொடுக்க வேண்டும். அதில் எத்தனை நகல் வேண்டும் என்பதையும் கொடுக்கலாம். (இவ்வாறு தயாரிக்கப்படும் மின்நூல் எங்கு சென்று சேமிக்கப் பட வேண்டும் என்பதனை தனியாக பிரிமோ பிடிஎஃப் செயலியை திறந்து மாற்றிக் கொள்ளலாம்.)

பொதுவாக மின்நூல் என்பது தானியங்கி கோப்பாக (PDF: Portable Document Format ) மாற்றப் பட்டு பயன்படுத்த்ப் படுகிறது. இவ்வாறு மாற்றப் பட்ட மின்நூலைப் படிக்க பயனர்களின் கணிணியில் (PDF Reader ) கண்டிப்பாக இருக்க வேண்டும். இதற்கு அடோப் மின்னூல் ( Adobe Reader) படிப்பான் உதவுகிறது.

பதிவிறக்கங்கள்:

பிரிமோ பிடிஎஃப் ( மின்நூல் உருவாக்கி) அடோப் ரீடர் ( மின்நூல் படிப்பான்)மேலும் இது தவிர அடோப் நிறுவனமே தனியாக அக்ரோபாட் என்ற செயலியை மின்நூல் தயாரிக்க வெளியிடுகிறது. ஆனால் இதை பணம் கொடுத்து வாங்க வேண்டும்.
(நன்றி: http://tamileditor.org/blog/)

2 comments:

MyFriend said...

PDF Creator யூஸ் பண்ணி பாருங்க. Primo PDF-ஐ விட இது பெட்டர். Freeware. :-)

மோகனன் said...

அன்பு நண்பருக்கு...

தங்கள் கருத்திற்கு மிக்க நன்றி... நீங்கள் கூறியதை ஏற்றுக் கொண்டேன். அதன்படி பதிவினையும் மாற்றி தந்துவிட்டேன்...

தங்கள் கருத்திற்கும், வருகைக்கும் எனது நன்றிகள்...