ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுபவர்களை தண்டிக்க வகை செய்யும் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ் வைத்த கோரிக்கையை சட்ட அமைச்சகம் மறுத்துள்ளது.
அமெரிக்கா, ஐரோப்பா போன்ற வளர்ந்த நாடுகளில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சட்ட அங்கீகாரம் உள்ளது. அவர்கள் திருமணம் செய்து கொள்ளவும், குழந்தைகளை தத்து எடுத்து வளர்க்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால் இந்தியாவில் ஓரினச் சேர்க்கை தடை செய்யப்பட்டுள்ளது.
இயற்கைக்கு மாறாக எந்த வகையில் உறவு கொண்டாலும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன்படி அதிகபட்சம் ஆயுள்தண்டனை வழங்கலாம்.
இந்நிலையில் இந்த சட்டத்தை எதிர்த்து டெல்லியைச் சேர்ந்த 'நாஸ் அறக்கட்டளை' உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்தியாவில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அநீதி இழைக்கப்படுவதாக தனது மனுவில் கூறியிருந்தது. இதை தொடர்ந்து இந்த விவகாரத்தில் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு உயர்நீதிமன்ற உத்தரவிட்டது. செப்டம்பர் 18ம் தேதி இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை நடைபெறவுள்ளது.
இதற்கிடையில் எய்ட்ஸ் நோய் பரவுவதில் ஓரினச் சேர்க்கையாளர்கள், செக்ஸ் தொழிலாளிகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் இதில் ஓரினச் சேர்க்கையாளர்கள் தண்டனைக்கு பயந்து தங்களைப் பற்றிய உண்மையை வெளியில் சொல்ல தயங்குவதாகவும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் குற்றம் சாட்டியிருந்தது.
தண்டனை இல்லாத பட்சத்தில் ஓரினச் சேர்க்கையாளர்களை அடையாளம் கண்டு சிகிச்சை அளிப்பது சுலபம் என இந்த அமைப்பு, மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கருத்து தெரிவித்தது. இதைத் தொடர்ந்து ஓரினச் சேர்க்கையாளர்களை தண்டிக்கும் சட்டத்தை ரத்து செய்யுமாறு மத்திய சுகாதார அமைச்சர் அன்புமணி ராமதாஸ், சட்ட அமைச்கத்திடம் கோரிக்கை வைத்தார்.
இந்த கோரிக்கையை மத்திய சட்ட அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது தொடர்பாக சட்ட அமைச்சகத்துறையின் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ''ஒரினச் சேர்க்கை மட்டும் அல்லாது சிறுவர்களை பாலியல் கொடுமைக்கு உட்படுத்துபவர்களையும் இந்திய தண்டனைச் சட்டம் 377-ன் கீழ் தண்டிக்கலாம். எனவே இந்த சட்டத்தை ரத்து செய்யும் பேச்சுக்கே இடமில்லை. மத்திய அமைச்சரவையில் இந்த விவகாரம் குறித்து விவாதிக்கும் போது சட்ட அமைச்சர் பரத்வாஜ் இந்த கருத்துக்களை வலியுறுத்துவார்'' என்றார்.
- இது செய்தி
இனி என்னோட கேள்வி..? ஆதங்கம்..!
நாட்டில் ஆயிரம் சுகாதாரப் பிரச்சினைகள் இருக்கு... இங்குள்ள கொசுக்கள் இந்தியாவையே உறிஞ்சி குடிக்குது. ஒவ்வொரு அரசு மருத்துவமனைகளிலும் சுகாதார சீர்கேடும், லஞ்சம் பெருத்துப் போயுள்ள்ளன. அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறை... தனியார் மருத்துவமனைகளின் அடாவடித் தனங்கள்... என உடனடியாக சீர்திருத்தம் செய்ய வேண்டிய தேவைகள் மலை போல் இருக்க... மானங்கெட்ட, கீழ்த்தரமான உறவிற்கு அரசிடம் அனுமதி கேட்பது என்ன நியாயம்.
தமிழ்..! தமிழன் பெருமை..! என்று விட்டு ஆங்கில வழக்கத்தை இங்கும் புகுத்த முயற்சிப்பது எவ்வகையில் நியாயம் அமைச்சரே... அவன்/அவள் செய்த தப்பிற்கு அவன் அனுபவிக்கட்டும். தவறு செய்பவர்களை மன்னிக்கலாம்... மனிதாபிமான உதவிகளை செய்யலாம். தெரிந்தே தப்பு செய்பவர்களுக்கு...? இது தகாது... தகாத உறவு அமைச்சரே... நல்ல விடயங்களில் தலையிட்டு மக்களுக்கு சேவை செய்யுங்கள் அமைச்சரே...
அசிங்கத்திற்கு துணை போய்... உங்களை அசிங்கப் படுத்திக் கொள்ள வேண்டாம்...
26 comments:
இந்தச் செய்தி
நம்பத் தகுந்ததா என்று
ஐயம் எழுகிறது.
உணமையாக இருக்குமானால்
தமிழ்ப்பண்பாடு குறித்தெல்லாம்
பெரிதும் பேசிக்கொண்டிருக்கும்
இவரகளின் போலித்தனம்
அருவருக்கத் தக்கதாகும்.
சரியான கேள்விகள்.
என் சின்ன புத்திக்கு அறிந்தவரை இதைப்பற்றி நான் யூகிக்கிறது என்னவென்றால், அன்புமணியின் இந்த முயற்சிக்குப் பின்னால் ஏதாவது அயல் நாடுகளின் தலையீடு இருக்குமோ எனகிற சந்தேகத்தை கிளப்புகிறது. அமெரிக்கா, ஐரோப்பா போன்ற நாடுகளின் தொழிலதிபர்களின் அல்லது உலக சுகாதார அமைப்புகளின் உதவிகள் தேவையின் பேரில் அவர்களது அன்புத் தொல்லைகளின் வேண்டுதலுக்கு இணங்க இப்படி அசைந்துள்ளாரா எனவும் சந்தேகப்பட இடமளிக்கிறது.
ஓரினச் சேர்க்கை குறித்து உணர்ச்சி வசப்படாமல் விவாதிக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம்.
இந்திய சட்டத்தின் மூலமான இங்கிலாந்தில் இந்த சட்டம் நீக்கப்பட்டுளளது.
உங்கள் சிந்தனைக்காக...
http://www.makkal-sattam.org/2008/08/blog-post.html
//மானங்கெட்ட, கீழ்த்தரமான உறவிற்கு//
இதற்கு என்ன வரைமுறை? யார் வகுத்தது?
அன்பு தோழர்களுக்கு.. தங்கள் வருகைக்கும், அதனால் விளந்த உங்கள் கருத்திற்கும் நன்றிகள் பல...
முதலில் சிக்கி முக்கி அவர்களுக்கு... இச்செய்தி உண்மைதான். இந்திய சட்ட அமைச்சகம் இதனை நிராகரித்துள்ளது. நாளிதழ்களில் இச்செய்தி வெளியாகியுள்ளது...
நண்பர் மாசிலா அவர்களுக்கு...
நீங்கள் சொல்வது போலும் யோசிக்கலாம்.
இக்கலாச்சார சீர்கேட்டை தடுப்பதற்கு வழி கோலாமல்... வழி ஏற்படுத்துக் கொடுக்க முனைகிறார் அன்பு மணி...
நண்பர் சுந்தரராஐன் அவர்களுக்கு...
விலங்குகளில் கூட இப்படிப்பட்ட உறவுகள் இல்லை தோழரே... ஆறறிவு படைத்த நம்மினத்தில் மட்டும்தான் இப்படி...
மக்கள் என்பதற்காக மாக்களாகி விட முடியாது... யோசித்துப் பரும் தோழரே... அந்த காலாச்சார சீரழிவிற்கு காரணம்.. சில அறிவிலிகளின் 'உணர்ச்சி' களால்தான் தோழரே...
இது எனது அழுத்தமான வாதம்... இயற்கைக்கு மீறிய
'உணர்ச்சி'யும், 'புணர்ச்சி'யும் நன்மைக்குரியதல்ல...
நண்பர் கிஷோர் அவர்களுக்கு...
வரைமுறை இல்லாததால்தான் நண்பா எயிட்ஸ் என்ற எமனிடம் சிக்கியிருக்கிறது இந்த மானிட சமுதாயம்...
ஆணுக்குப் பெண்.. பெண்ணுக்கு ஆண்.. இதுதான் இயற்கை நண்பரே...
//விலங்குகளில் கூட இப்படிப்பட்ட உறவுகள் இல்லை தோழரே//
மாறுபடுகிறேன் தோழரே
//எயிட்ஸ் என்ற எமனிடம் சிக்கியிருக்கிறது//
இது மட்டும் தான் காரணமா? உண்மையில் எப்படி ஓரினச்சேர்க்கையால் எப்படி பரவுகிறது தெரியுமா?
மேலும் எய்ட்ஸ் உருவாவதில்லை. பரவுகிறது
சாரயக்கடையை எடுக்க சொன்னால் கூட அமைச்சரவை நிராகரிக்கும். ஆகவே அதை சரி என்பதா? மன நல மருத்துவர்களின் மற்றும் மன உலவியல் நிபுணர்களின் கருத்துக்களை முதலில் அறிய வேண்டும். ஒரு சராசரி மனிதன் தன் நிலையில் இருந்து கூறும் கருத்துக்கள் சரியாக இருக்காது
தோழர் கிஷோர் அவர்களுக்கு...
எயிட்ஸ் பரவுவதற்கு இதுவும் ஒரு வழி என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்... இது கீழ்த்தரமான உறவு... அறுவறுக்கத்தக்கது...
இது தாகாத உறவு என்கிறேன்...
மனோகர் அவர்களுக்கு...
மனநல மருத்துவர் தேவையில்லை... நாமே போதும்... இயற்கைக்கு மாறானது என்பதை உணருங்கள்... உண்மை தெளியும்...
ஓரினச்சேர்க்கையை இந்தியச்சூழல் ஏற்றுக்கொள்ளவில்லைதான்...
ஆனால் அடிக்கடி நாளிதழ்களில் ஓரினச்சேர்க்கையாளர்களின் தற்கொலைச்செய்திகளும் வந்தவண்ணம் தான் உள்ளன...
உலகின் பலநாடுகள் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துள்ளன, அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?
சிட்னியில் ஒருமுறை ஓரினச்சேர்க்கையாளர்கள் திருவிழா நடந்தது, இது தெரியாமல் நானும் என்னுடைய நன்பர்களும் தண்ணி அடிக்க பாருக்கு போய்விட்டோம்...
ஆயிரக்கணக்கான நபர்கள் ஓரிடத்தில் திரண்டிருந்தார்கள், நான் கேட்டேன், இது என்ன மாநாடா, போதுக்கூட்டமா என்று...
அங்கிருந்தவர் சொன்னார், இது ஓரினச்சேர்க்கையாளர்களின் வாராந்திர கூட்டம் என்று...
ஓரினச்சேர்க்கை பிரச்சினை சற்றேறக்குறைய திருநங்கைப்பிரச்சினை போல ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் மன் உளவியல் ரீதியிலானது என்று படித்துள்ளேன்...
அதனை உணர்வுப்பூர்வமாக அனுகாமல் அறிவியல்பூர்வமாக அணுகுங்கள், அப்போது "தீயை" மிதித்துவிட்டது போல அலற மாட்டீர்கள் நன்பரே...
அன்புமணி சிறப்பாக செயல்பட்டுவருகிறார், எந்த ஒரு தனிமனிதனும் தனக்குண்டான உரிமையை அடையவேண்டும் என்று ஒரு பேட்டியில் சொன்னார், அவர் சட்ட அமைச்சகத்தை கேட்டது சரியான செயலே, கட்டுப்பெட்டித்தனங்களில் இருந்து வெளியே அவுட் ஆப் த பாக்ஸ் சிந்திக்கும் இந்த இளம் அமைச்சருக்கு நல்ல எதிர்காலம் உண்டு...!!
நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கு...
//உலகின் பலநாடுகள் ஓரினச்சேர்க்கையை அங்கீகரித்துள்ளன, அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா ?//
ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்வது நம் பண்பாடு. அது அவர்களிடத்தில் இல்லை. மேல்நாட்டு கலாச்சாரம் நமக்கு ஆகாது தோழரே...
இயற்கைக்கு மீறிய செயல்களை மனித இனம் என்று செய்ய அரம்பித்ததோ... அன்றே அழிவையும் தேடிக்கொண்டது...
மனிதர்கள்தானே என்பது விவாதமில்லை... அவன்/ள் செய்வது மனித இனத்திலும் இல்லை, விலங்கினத்திலும் இல்லை என்கிறேன்...
//ஓரினச்சேர்க்கை பிரச்சினை சற்றேறக்குறைய திருநங்கைப்பிரச்சினை போல ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் மன் உளவியல் ரீதியிலானது என்று படித்துள்ளேன்...//
உண்மைதான் தோழரே.. அந்த சிந்தனையும் மேலை நாடுகளிலிருந்துதான் இங்கும் பரவித் தொலைத்திருக்கிறது.
அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயாமல்.. அனுமதிப்பது நியாயமன்று...
இது மிகப்பெரிய கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்... இந்திய நாகரீகம் இழிந்த நாகரீகம் ஆகிவிடும்...
//விலங்கினத்திலும் இல்லை என்கிறேன்//
அறிவியல் நடப்புகளை கொஞ்சம் பார்த்துவிட்டு பின் எழுதுங்கள். உங்கள் மனதில் தோன்றுவது கருத்து, உண்மை அல்ல
//இது மிகப்பெரிய கலாச்சார சீர்கேட்டிற்கு வழிவகுக்கும்... இந்திய நாகரீகம் இழிந்த நாகரீகம் ஆகிவிடும்..//
இந்தியாவுக்கு என்று தனி நாகரிகம் எதும் இல்லை நண்பரே. பல நாகரிகங்களின் கலவை தான் இந்தியா. மேலும் மேலாடை அணியாமல் இருந்த நாகரிகம் நமது. அந்த நாகரிகம் சீரழிந்துவிட்டதா இப்பொழுது?
///ஓரினச்சேர்க்கை பிரச்சினை சற்றேறக்குறைய திருநங்கைப்பிரச்சினை போல ஹார்மோன் குறைபாடுகள் மற்றும் மன் உளவியல் ரீதியிலானது என்று படித்துள்ளேன்...//
இதனை ஏற்றுக்கொண்டதற்கு நன்றி நன்பா.
ஆனால் மன/உளவியல் மற்றும் ஹார்மோன் கோளாறான திருநங்கையை எப்படி சமூகம் ஏற்றுக்கொள்ளாமல் புறம் தள்ளி எட்டி மிதிக்கிறதோ அதே போல் ஓரினச்சேர்க்கையாளர்களையும் எய்ட்ஸ் நோயாளிகளையும் நடத்தும் நிலைதான் இந்தியாவில் உள்ளது...
இது மாறவேண்டும்...
உளவியல் பிரச்சினையை, சமூகப்பார்வையோடு நோக்குவது (இப்போது நீங்கள் பார்ப்பது போல்) அவர்களுக்கு எந்த விடிவையும் தராது.
///அதனை தடுப்பதற்கான வழிமுறைகளை ஆராயாமல்.. அனுமதிப்பது நியாயமன்று...///
உளவியல் ரீதியிலான பிரச்சினைகளை இரும்புக்கரம் கொண்டு தடுப்பது நியாயமா ? ஒரு திருநங்கையை ஆப்பரேஷன் செய்துகொள்ளக்கூடாது என்று தடுப்பது எப்படி நியாயம் அல்லவோ அதே போல் ஓரினச்சேர்க்கையாளர்களையும், எய்ட்ஸ் நோயாளிகளையும் சமூகப்பார்வை கொண்டு நோக்காமல் (இந்த உலகம் உள்ளவரை திருநங்கைகளும், ஓருபால்புணர்ச்சியாளர்களும் இருந்துகொண்டுதான் இருப்பார்கள்), அவர்கள் பிரச்சினைகளை மனவியல் ரீதியில் புரிந்துகொள்வோம்..
அவர்களுக்கு நேரடியாக உதவி செய்யாவிட்டாலும் பொதுப்புத்தியை விடுத்து அவர்களும் மனிதர்கள் என்ற ரீதியில் பார்ப்போம்...
எப்படி ஒரு லிவிங் ஸ்மைல் வித்யா வலையுலகிற்கு வந்து ஆயிரக்கணக்கானவர்களின் பார்வையினை மாற்றினார் என்று அவரது பதிவினை படித்து தெரிந்துகொள்ளுங்கள்...
கிரேக்க நாகரீகத்தில் ஆரம்பித்து பெரும் அறிவியலாளர்கள் வரை ஒருபால் புணர்ச்சியாளர்கள் உள்ளனர்..
Astaire and Rogers எடுத்த படமான The Gay Divorcee என்ற படம் பலரது பார்வையை மாற்றியது...
ஓரினச்சேர்க்கை ஒரு சமூகப்பிரச்சினையாக அறுபதுகளில் உருவாகி, அதற்கு அங்கீகாரமும் அளிக்கப்பட்டது...
விக்கிபீடியா போன்ற தளங்களில் Gay என்று தேடி பார்க்கவும்...
///மேலாடை அணியாமல் இருந்த நாகரிகம் நமது. அந்த நாகரிகம் சீரழிந்துவிட்டதா இப்பொழுது?///
இந்த பின்னூட்டத்தை ரசித்தேன், நம்ம பாட்டன் பூட்டன் காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தார்கள் என்ற விவரம் உங்களுக்கு தெரியுமா ?
நீங்கள் இந்த விடயம் குறித்து முழுமையான தெளிவு பெறவேண்டும் என்று தான் எழுதுகிறேன்..."அவனா நீ" என்று நினைத்துவிடாதீர்கள் ஹி ஹி
//நம்ம பாட்டன் பூட்டன் காலத்தில் பெண்கள் மேலாடை அணியாமல் இருந்தார்கள் என்ற விவரம் உங்களுக்கு தெரியுமா ?//
இல்லை ரவி. கேள்வி ஞானம் தான். மேலும், எல்லா இடங்களிலும் என்று சொல்ல முடியாவிட்டாலும் சில இடங்களில் கண்டிப்பாக இவ்வித உடை இருந்திருக்க வேண்டும். தகவலுக்கு மேலும் வலு சேர்க்க கோவில் சிலைகளை பார்க்கலாம்.
நாம் நினைத்துக்கொண்டிருக்கும் ராஜா உடை அன்று இருந்திருக்க வாய்ப்பு குறைவு என்பது என் எண்ணம். சிலைகள் எல்லாம் ஒரு டெம்ப்ளேட் போல் ஒரு கற்பனை உடை அலங்காரத்தை கொண்டிருந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
சரி மேலாடை இல்லாமல் என்று தானே சொன்னேன், மேலே ஒன்றும் போடாமல் என்று சொல்லவில்லையே :)))))
///சரி மேலாடை இல்லாமல் என்று தானே சொன்னேன், மேலே ஒன்றும் போடாமல் என்று சொல்லவில்லையே :)))))///
:)))
நீங்கள் சொல்லியது உண்மைதான், நான் தெரியுமா என்று கேட்டது மோகனை...
நாட்டார் இன பெண்கள் மற்றும் தலித் பெண்கள் கிறித்தவ மதத்துக்கு மாற இந்த மேலாடை பிரச்சினையே பெரிய பிரச்சினையாக இருந்தது...
திருவிதாங்கூர் சமஸ்தான அமைச்சரவை, பெண்கள் மேலாடை அணிவது தவறு என்று சட்டமே இயற்றியது கடந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில்...
பார்ப்பணர்கள் மற்றும் ஜமீந்தார்கள் எதிரில் வரும்போது தாழ்ந்த சாதியாக்கப்பட்ட சாதி பெண்கள் தங்கள் மேலாடையை நீங்கி மண்டியிடவேண்டும் என்று கூட விதி இருந்தது உண்மை...
இன்றைக்கு நூறு வருடங்களுக்கு முன் கூட ஜாக்கெட் அணிதல் வழக்கத்தில் இல்லை தெரியுமா ?
நானும் இந்த திருவிதாங்கூர் சம்பவத்தை கேள்விப்பட்டிருக்கிறேன். Hmmmmm.... இன்னும் ஆழ்ந்து படிக்கவேண்டும்
http://www.keetru.com/vizhippunarvu/mar06/kumari.php
அண்ணே தோள்சீலை போராட்டம் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள இந்த சுட்டியை பாருங்க.
நன்றி ரவி...
கிஷோர் மற்றும் செந்தழல் ரவி ஆகியோர்களுக்கு...
தங்களது பதில்களுக்கு நன்றி...
மனித நாகரீகம் என்பது, மனிதன் தோன்றியதும் உடன் பிறந்தது அல்ல... காலப்போக்கில் ஒழுங்கமைக்கப்பட்ட ஒன்று..!
அக்கலாச்சாரம் விலங்குகளிடமிருந்து மனித இனத்தை பிரித்துக் காட்டியது...
மனித இனம் உருவான விதத்தை காலம் சென்ற எழுத்தாளர் ராகுல சாங்கிருதியாளனின் 'வால்கா முதல் கங்கை வரை' என்ற புத்தகத்தை வாசித்துப் பார்த்தால் தெரியும்...
ஆரம்ப காலத்தில் மனித இனம் எப்படி உருவானது என்பதை ஆதாரத்துடன் காட்ட முயற்சித்திருக்கிறார்.
சொல்லவருவது என்னவெனில்... ஆரம்பகாலத்தில் மேலாடை இன்றி இருந்தோம் என்பது உண்மையே.. அதற்கும் ஓரினசேர்கைக்கும் என்னய்யா சம்பந்தம்...
கலாச்சாரம் என்பது ஒழுக்க வாழ்வை அடிப்படையாகக் கொண்டது.. அதை நாம் மேல்நாட்டு மோகத்தால் அழித்து வருகிறோம் என்பதே உண்மை...
முற்காலத்தில் அப்படிச் செய்தார்கள் (மேலாடை விவகாரம்) என்பதற்காக இக்காலத்தில் யாரும் அதை செய்வதில்லை.. செய்ய வைக்கப்படுவதிமில்லை...
திருநங்கைகள் என்பது இயற்கையால் செய்த குளறுபடி.. அவர்களையும் ஓரின சேர்க்கையாளர்களுடன் ஒப்பிடுவது சரியல்ல என்பது என் எண்ணம்...
தமிழ் கலாச்சாரத்திற்கும் சரி, இந்தியக்கலாச்சாரத்திற்கும் சரி இம்முறை ஒவ்வாத ஒன்று..
இதற்கு அனுமதி வழங்கி விட்டால்... நாளை நல்லதொரு இளைய சமுதாயம் இந்தியாவிற்கு கிடைக்காது..!
MOHANAN YOU ARE A NUMBER ONE FOOL IN THE WORLD. PLEASE GO AND READ THE SCIENCE ABOUT HUMAN SEXUALTY. THEN YOU DECLARE YOUR COMMENTS ABOUT HOMOSEXUALTY.
இந்த விஷயம் கொஞ்சம் அணுகுவதற்குச் சிக்கலானது. இங்கு உணர்ச்சி வசப்பட்டு பண்பாடு கலாச்சாரம் என்று பேசியிருக்கிறார்கள். அப்படிப் பேசுவதால் பயனிருப்பதாகத் தெரியவில்லை.
இங்கே நெதர்லாந்தில் அலுவலகத்திலேயே இருக்கிறார்கள். ஓரினச் சேர்க்கையாளர் ஒருவர் உடன் பணிபுரிகிறார். அவருடைய துணைவருடன் திருமண உறவில் வாழ்ந்து வருகிறார். ஒரு மகளையும் தத்தெடுத்துள்ளார். அவருடைய வாழ்க்கை முதலில் பார்க்கையில் சற்று வியப்பாக இருந்தாலும்.... அவரும் குடும்ப வாழ்க்கைதான் வாழ்கிறார் என்பது புரியவே சிலகாலம் ஆனது. உண்மையிலேயே பழகவும் மிகவும் இனியவர். கண்ணியமானவரும் கூட. ஆக வாய்ப்பு என்று கிடைக்கும் பொழுது அவர்களும் அப்படிப்பட்ட வாழ்க்கைக்குத் தயாராக இருக்கிறார்கள் என்பதுதான் நான் புரிந்து கொண்டது.
ஏன் ஒருவர் ஓரினச் சேர்க்கை செய்கிறார் என்பதற்குக் காரணம் பலயிருக்கலாம். எனக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை. மருத்துவக் காரணங்கள் கூடச் சொல்கிறார்கள்.
சமயங்களில் அருவெறுப்பு வருகையில் எனக்கு நானே சொல்லிக் கொள்வது ஒன்றுதான்..."ராகவா... நீ யார் அவர்களுக்குச் சுதந்திரம் கொடுப்பதற்கு? அந்த உரிமையை உனக்குக் கொடுத்தது யார்? அவர்கள் வாழ்க்கை...அவர்கள் விருப்பம். சுதந்திரமும் உரிமையும் கொடுக்கப்படுவதற்கல்ல. கொடுக்கப்படக் கூடியதும். அல்ல. நம்மைப் பெரிய நாட்டாமையாகக் கருதிக் கொண்டாலோ...உலகைக் காக்கும் பண்பாட்டுக் கோமானாக எண்ணிக் கொண்டாலோதான்... அடுத்தவன் இப்பிடிச் செய்ய வேண்டும்..அப்படிச் செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்போம்.
உணர வேண்டியது என்ன.... அவரவர் விருப்பப் படி வாழ அவரவர்க்கு உரிமையுண்டு. நம்மை வற்புறுத்தாத வரையில் அது நன்றே."
இதைத்தான் நாமும் புரிந்து கொள்ள வேண்டும். அதை விடுத்து... உணர்ச்சி புணர்ச்சி என்று சொல்வதெல்லாம் பண்பாட்டுக் காவல்தனம் என்னும் போலித்தனம்.
போங்கடாங்க நீங்களும் உங்க தமிழ்ச்சமுதாயமும்... ஒருத்தனுக்கு ஒருத்தின்னானுவ... இப்ப பாரு... எப்படி இருக்கானுங்கன்னு... வரலாறு நம்மை இழித்துக் கூறும் ராகவரே...
Post a Comment