Monday, August 11, 2008

அன்று அயோத்தி... இன்று அமர்நாத்...

அன்று...
அண்ணன் தம்பிகளாய்
வாழ்ந்த நம்மை
அந்நியர்களாக்கியது
அந்த அயோத்தி....
ஐயோ... தீ..!

இன்றோ...
அமர்நாத்..
அங்கு அமருவதற்கு கூட
அடுத்தவனிடம்
அனுமதி கோரும்
அவல நிலை..!

உயிரற்ற பொருள்களுக்காக
விலை மதிப்பற்ற பல
மனித உயிர்கள்
இனியும் பலியாக வேண்டுமா..?

மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல..!

மதங்களை மறந்து
மனிதங்களை வளர்த்துப்பார்..!
அப்பொழுது புரியும்
மனிதத்தின் மகத்துவம்..!

அமைதிப் பூங்காவாய்
இருந்த நம் தேசத்தை
அய்யோத்தியின் பெயரால்
அமர்நாத்தின் பெயரால்
மதநெருப்பைக் கொண்டு
மீண்டும் ஐயோ... 'தீ'... யாக்கிவிடாதே..!

6 comments:

Anonymous said...

ஐயோ... தீ..!

சிகப்பு வண்ணத்தில்... எப்படிங்க இப்படியெல்லாம் தோனுது... கலக்கிட்டேங்க

Naina said...

அருமையான கவிதை,
// மதி கெட்ட மனிதா...
மதங்கள் உங்களை
நெறிமுறைப்படுத்தவே..!
பலரின் குரல்வளைகளை
நெறிப்பதற்காக அல்ல//

மதவெறியர்களுக்கு சிந்தனை என்பதே இல்லாத போது இக்கவிதை வரிகள் அவர்களை பண்படுத்துமா? என்பது ஐயமே ஆனாலும் பொது மக்களை சிந்திக்க வைக்கும் சிறப்பான கவிதை.

வாழ்த்துக்கள்

சகோதரன் நெய்னா முஹம்மது

VIKNESHWARAN ADAKKALAM said...

சிறப்பாக இருக்கிறது..

மோகனன் said...

தங்களின் வருகைக்கும், கருத்திற்கும், வாழ்த்திற்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்...

மனிதத்தில் உள்ளது மதம். அதாவது மனிதம் என்ற சொல்லில் னி(நீ) மறைந்து விட்டால் அங்கு தூக்கும் மதவெறி...

என் மனதில் பட்டவலி... மதத்தையே வெறுக்கம்படி செய்து விட்டது... மனிதர்களை விட இவை பெரிதல்ல...

நன்றி... மீண்டு ம் வருக...கருத்துக்களை தருக...

Anonymous said...

First started with Muslim....Continued with Hindu.....

So you cannot diffeniate the issue here ......

With headlines you scold anyone.....Like Kushboo told all girls in Tamilnadu are prostitute....

You guys first think think think before start writing anything otherwise you looks like FOOL for anyone

மோகனன் said...

பெயரைச் சொல்லாத நண்பரே...

தாங்கள் கூற்று ஏற்புடையதல்ல...