Tuesday, August 19, 2008

என்றன் தாய் - மரபுக் கவிதை முயற்சி


எனைப் படைத்த பிரம்மாக்கள்

வெண்பா

அன்பென்ற சொல்லுக் கர்த்த மும்நீயே..!
துன்பமொன் றுநேரின் துடிப்பவ ளும்நீயே..!
உன்னுடலைக் கவசமாக் கிகாத்தவ ளும்நீயே..!
பொன்னுல கிலுன்போலா ருமில்லையே..!

செய்யுள்

கருவறையில் நானுதித்த போதுகளிப் பெய்தினாய்
அரும்பொருளே உன்வயிறை எனக்ககில மாக்கினாய்
பெருவயிறை தடவிப்பார்த்து பெருமித மடைந்'தாய்'
உருக்கொடுத்த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

வெளியுலகை நான் காணபுவி வருகையில்
வளிமண்டல மதிரும்படி அலறித் துடித்'தாய்'
உளிவெட்டு 'வதை'ப்போன்ற வலியைப் பொறுத்'தாய்'
தளிரெனைகாத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பத்தியம் கடைபிடித்த பரம்பொருளேயனைக் காத்'தாய்'
நித்தமிமை சோராமல் விழித்திருந் தெனைப்பார்த்'தாய்'
கத்தியழுகை யிலுன்னுதிரத்தை எனக்கமு தாக்கினாய்
உத்தமத் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மழலையான் சிரித்த போதுநீயும் மழலையானாய்
அழகுமக னானென்று ஆனந்த மடைந்'தாய்'
குழவியான் நோயுற்றால் பதறித் துடித்'தாய்'
வாழவைத் த 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பள்ளிநான் செல்லுகையில் பரவச மடைந்'தாய்'
துள்ளிவிளை யாடுகையில் மகிழ்ச்சி யடைந்'தாய்'
கள்ளமில்லா யன்புதனை ஊட்டி மகிழ்ந்'தாய்'
வள்ளியென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

கல்லாத பரம்பரையில் கல்விபயில் கிறேனென்று
கல்லூரிக்குச் செல்லுகையில் கண்ணீர் உகுத்'தாய்'
தொல்லையின்றி படிப்பதற்கு தொண்டு புரிந்'தாய்'
அல்லிமலர்த் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

மேற்படிப்பு படிப்பதற்கு சென்னை செல்கையில்
கற்பதுன் கடமையாடா கற்றுவா யென்றாய்..!
பொற்பொருளை எனக்களித்து புறப்ப டென்றாய்..!
ஊற்றான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

காதலினால் கடிதவறு செய்தேன் - அதனால்
சேதமுற்ற வாழ்க்கைதனை சேர்த்து வைத்'தாய்'
அதன் பாதகமோயெனை பிரிந்து வாழ்கிறாய்
இதமான 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பட்டணத் திலிருந்தாலும் தாயேயுன் நினைவு
திட்டமாய் திரும்பத் திரும்ப வருகிறது
எட்டாத பொருளில்லை தாயேயிங் கெனக்கு
கிட்டாத 'தாயே'யுன்போ லாருமில்லையே..!

பொன்னான உன்சொற் பதம்வேண் டியபடி
உன்பொற் பாதம் பணிகிறே னென்'தாயே'..!
என்றுமுன் மகவாகப் பிறக்கின்ற வரம்தனை
ஈன்றயென் 'தாயே'யுன்போ லாருமில்லையே..!


{இது எனது நூறாவது பதிவு ஆகும். ஆகவே.. எனைப் பெற்ற என் தாய்க்கு இந்த மரபுக் கவிதை(யாக எழுத முயற்சித்துள்ளேன்... தமிழாய்ந்த அறிஞர்கள்.. இதில் பிழையிருப்பின், தவறுகளை சுட்டிக் காட்ட வேண்டுகிறேன்...) முயற்சி சமர்ப்பணம்.}

6 comments:

பழமைபேசி said...

அருமை! அருமை!! உங்கள் முயற்சிக்கும் தமிழுக்கும் வணக்கம்!! வாழ்த்துக்கள்!!!

Anonymous said...

நன்று நண்ப!

உங்கள் முயற்சிக்கு என் வணக்கங்கள்.தமிழே எங்கள் மூச்சு என்ற நிலை மாறி வரும் நிலையில்
உஙகளை போன்றவர்களின் இந்த ஆர்வத்தால் மட்டுமே, எம் தமிழின் சிற்ப்பு பாதுகாக்கப்படுவதாக நான் நினைக்கிறேன்.
நன்று! நன்று!
selvanntamil@yahoo.com

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

உங்கள் வலைப்பூவை வலைச்சரத்தில் அறிமுகப் படுத்தியிருக்கிறேன்
http://blogintamil.blogspot.com/2009/02/blog-post_4092.html

மோகனன் said...
This comment has been removed by the author.
மோகனன் said...
This comment has been removed by the author.
மோகனன் said...

//தாயைப் பற்றி எழுதாத கவிஞர்கள் இருக்க முடியுமா? திரு மோகனன் அவர்கள் தனது வலைக்குடிலில் மரபுக் கவிதை பற்றி தெரிந்து கொண்டு தனது தாய்க்கு முதல் பா வடித்திருக்கிறார்.

அவர் எழுதி இருக்கும் மற்ற புதுக்கவிதைகளையும் படியுங்கள். இவரைத் திரைப்படத்துக்கு பாடல் எழுத அழைத்தால் அழகாக எழுதிக் கொடுப்பார் போலும். மெட்டுக்குப் பாட்டெழுதும் வித்தையையும் கற்று வைத்திருக்கிறார்.//

திருவாளர் ஜோதிபாரதி அவர்களுக்கு...

தங்கள் மதிப்புரைக்கு மிக்க நன்றி... ஆயினும் தங்கள் புகழ்ச்சிக்கு இச்சிறுவன் ஏற்றவனல்ல... குறைகளை சுட்டுங்கள்... நிறைகளை தட்டுங்கள்...

நன்றி...