Showing posts with label எம்ஏ தமிழ். Show all posts
Showing posts with label எம்ஏ தமிழ். Show all posts

Tuesday, December 21, 2021

இலவசமாக எம்ஏ தமிழ் படிக்க அரிய வாய்ப்பு | Dravidian university | vaalu t...



ஒரு பைசா செலவில்லாமால், எம்ஏ தமிழ் படிக்க முடியுமா என்றால் முடியும் என்கிறது ஆந்திராவில் உள்ள திராவிட பல்கலைக்கழகம்.  

இளங்கலை படித்துமுடித்துவிட்டோம். மேற்கொண்டு படிக்க ஆசை இருந்தும் வசதி இல்லையா. கவலை வேண்டாம். நேரடி முறையில்  முழுக்க முழுக்க எம்.ஏ. தமிழ் இலவசமாக படிக்கும் அரிய வாய்ப்பு தமிழக அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

தொலைநிலைக் கல்வி முறையில் நீங்கள் படித்திருந்தாலும் சரி, நேரடி முறையில் படித்திருந்தாலும் சரி, தமிழை ஒரு பாடமாக எடுத்து எந்த ஒரு பட்டப்படிப்பை படித்திருந்தாலும் சரி நீங்கள் இங்கே சேர்ந்து கொள்ளலாம்.

இங்கே கல்விக்கட்டணம், தங்கும் விடுதிக் கட்டணம், உணவுக்கட்டணம் என அனைத்தையும் மாணவர்களுக்காக தமிழக அரசே செலுத்திவிடுகிறது.

சிவாஜி திரைப்படத்தில் ரஜினி சொல்வதுபோல  நீங்க இங்க படிக்க வந்தாமட்டும் போதும். 

இங்கே படிப்பதற்கு என்னென்ன  சலுகைகள், வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை, அப்பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியரும், ஆய்வுப்பட்ட மாணவரும் நமது கேள்விகளுக்கு பதில் தருகிறார்கள்.

இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி : 28.12.2021

திராவிட பல்கலைக்கழகத்தின்  இணையதள முகவரி : http://www.dravidianuniversity.ac.in

திராவிட பல்கலைக்கழகம் இருக்குமிடம் : https://goo.gl/maps/ujdCvqnCMxJdo4rh8

மேலதிக விவரங்களுக்கு : 9486863620

உங்களது கருத்துகளை உரிமையோடு கமெண்ட்ஸில் பதிவிடுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எங்களது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலுடிவி​ #vaalutv​ #dravidianuniversity

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​