Showing posts with label நம்பமுடியாத செய்திகள். Show all posts
Showing posts with label நம்பமுடியாத செய்திகள். Show all posts

Tuesday, November 23, 2010

17-வயது பள்ளி மாணவனை கத்தி முனையில் கற்பழித்த 10 பெண்கள் - அதிர்ச்சியூட்டும் செய்தி

பாப்புவா நியூ கினியா, நவ. 23: ஆஸ்திரேலியாவிற்கு அருகே உள்ள ஆப்பிரிக்க நாடான பாப்புவா நியூ கினியாவில் 17-வயது பள்ளி மாணவனை கத்திமுனையில் 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பாப்புவா நியூ கினியா நாட்டின் தெற்கு ஹைலட்ஸ் மாகாணத்தில் உள்ள மெண்டி முனிகு மாவட்டத்தில் இச்சம்பவம் நடைபெற்றிருக்கிறது.  இப்பகுதியில், கடந்த நவம்பர் 19, 2010 அன்று பள்ளிக்குச் சென்று கொண்டிருந்த 17 வயது சிறுவனை 10 பெண்கள் திடீரென வழிமறித்தனர். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தியை காட்டி மிரட்டினர். இதில் 4 பெண்கள் அந்த சிறுவனை கற்பழித்துள்ளனர்.

இது குறித்து மெண்டி மாவட்டத்தின் போலீஸ் அதிகாரி டெட்டி டெய் கூறுகையில்,  ‘சிறுவனிடம் பாலத்காரம் செய்த பெண்கள் (மிருகங்கள்) யார் என்பது இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகிறோம். தற்போது அந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.

அச்சிறுவன் அளித்த வாக்குமூலத்தில் தனக்கு ஏதேனும் எய்ட்ஸ், எச்.ஐ.வி. பாதிப்பு வந்துவிடும் என அஞ்சுவதாகவும், தன்னை கற்பழித்த பெண்களுக்கு ஏதேனும் எச்.ஐ.வி. உள்ளனவா என சோதனை செய்யும்படியும் கூறியுள்ளான்.

உலக சுகாதார அமைப்பான யுனிசெப் கடந்த 2008-ல் வெளியிட்ட அறிவிக்கையில் இலகிலேயே மிக அதிகளவு கற்பழிப்பு குற்றங்கள் பாப்புவா நியூ கினியா நாட்டில்தான் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளது. இதே அமைப்பு சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், உலகின் அதிகம் எய்ட்ஸ் நோயாளிகள் உள்ள நாடும் இந்த நாடுதான் என அறிவித்திருக்கிறதாம்.

அதனாலேயே அந்த சிறுவன் தனக்கு எய்ட்ஸ் பாதிப்பு வந்துவிடுமோ என பீதியில் உள்ளதாக போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் ‘இரவு நேரங்களில் பெண்கள் பாதுகாப்பு செல்ல வேண்டும் என இதுநாள் வரை அறிவுரை கூறி வந்தேன்... இனி ஆண்களுக்கும் இதே அறிவுரையை கூறவேண்டிய நிலை வந்து விட்டது.

இங்கு பதிவு செய்யப்படும் கற்பழிப்பு குற்றங்களில் பாதிக்கப் படுவோர்களில் பாதி சதவீதத்தினர் 15 வயதுக்கும் குறைவானவர்கள். இதில் 13 சதவீதம் பேர் 7 வயதிற்கும் குறைவானவர்கள்’ என்றார் டெட்டி.


(இதனுடைய ஆங்கில மூலச் செய்திக்கு: http://www.news.com.au/world/boy-gang-raped-by-four-women-at-knifepoint-in-papua-new-guinea/story-e6frfkyi-1225958505014)

Tuesday, August 12, 2008

காலில் விழுந்த எம்.ஜி.ஆர்..!

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் காலில் நிறைய பேர் விழுந்து வாழ்த்து பெற்றதை நாடறியும். ஆனால் எம்.ஜி.ஆர், இரண்டு பேரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றது உங்களுக்குத் தெரியுமா..?

தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் சரி, அரசியல் வரலாற்றிலும் சரி... தான் உயிருடன் உள்ளவரை மன்னாதி மன்னனாக இருந்தவர் 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர். (என்றழைக்கப்படுகின்ற மருதூர் கோபாலன் ராமச்சந்திர மேனன். இவர் போன்ற பிரபலங்களின் முழுப்பெயர்களை அறிய இங்கே சொடுக்கவும்).

தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் (முக்கிய இடங்களுக்கும் சரி, முக்கியமான பணிகளுக்கும் சரி) செல்வார்.

1977-ல் தமிழ அரசின் ஆட்சிக் கட்டிலைப் பிடித்த எம்.ஜி.,அவர் இறந்த ஆண்டான 1987 வரை மன்னாதி மன்னனாக விளங்கினார். அப்போது அவர் காலில் விழாதவர்களே யாரும் இல்லை. (அதன் நீட்சிதான் இன்று ஜெயலலிதா அம்மையாரின் கால்களில் இன்றைய ரத்தத்தின் ரத்தங்கள் விழுவது என்பது வேறு விடயம்...) அதற்கு அவரது வயதும் ஒரு காரணம் என்றாலும், விசுவாசம் என்பது அதிகம் பொருத்தமாக இருக்கும்.

அச்சிறப்பு வாய்ந்த எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா...


நம்புங்கள்... வரலாறு காட்டும் உண்மை இது.



எம்.கே.ராதா காலில் விழுந்து வணங்கும் எம்.ஜி.ஆர்


1936 ல் சதிலீலாவதி என்ற படத்தில் எம்.ஜி.ஆர் முதன் முதலாக அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு சிறுவேடம்தான் என்றாலும், தமிழ் சினிமா என்ற மிகப்பெரிய ஊடகத்திற்கு எம்.ஜி.ஆர் வைத்த முதல் அடி இதுவாகும். இதனை எல்லீஸ் டங்கன் இயக்கினார். இப்படத்தில் நடித்த எம்.கே.ராதா என்பவர்தான், எம்.ஜி.ஆருக்கு நடிக்கும் வாய்ப்பை பெற்றுத் தந்தார்.


1971-ல் வெளி வந்த 'ரிக்ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில் எம்.ஜி.ஆரை திரையுலகிற்கு அறிமுகப் படுத்திய எம்.கே.ராதா வந்து வாழ்த்தினார். அம்மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார். மற்றொருவார், சினிமா உலகிற்கு அடியெடுத்து வைக்க காரணமாயிருந்த இயக்குனர் சாந்தாராம் அவர்கள்.

(இப்புகைப்படத்தை எடுத்தவர் பிரபல புகைப்பட நிபுணர். 'சுபா' சுந்தரம் அவர்கள். அவர் தற்போது உயிருடன் இல்லை. அவரை நான் ஜூலை, 2003-ல் நான் பணியாற்றிய பத்திரிகைக்காக நேர்காணல் கண்டேன். அப்போது அவர் சொன்ன தகவல் இது. அவர் எனக்களித்த புகைப்படம்தான் இது.)

Saturday, July 19, 2008

இல்லை... இல்லவே இல்லை..!

ஆப்கானிஸ்தானில் ரயில்கள் இல்லை..!
ஆப்பிரிக்காவில் புலிகள் இல்லை..!
ஈக்களுக்கு பற்கள் இல்லை..!
ஈசலுக்கு வயிறு இல்லை..!
சவுதியில் நதிகள் இல்லை..!
சந்திரனில் வாயுமண்டலம் இல்லை..!
சுண்டெலிக்கு வியர்ப்பது இல்லை..!
மண்ணுளி பாம்பிற்கு கண்கள் இல்லை..!
யானையின் துதிக்கையில் எலும்புகள் இல்லை..!
மலைப்பாம்பிற்கு விஷமில்லை..!
பாம்பு, மீன் போன்றவற்றிற்கு கண்ணிமைகள் இல்லை..!
யமுனை ந்தி கடலில் கலப்பது இல்லை..!
வடதுருவத்தில் நிலப்பரப்புகள் இல்லை..!
வண்ணத்துப்பூச்சிக்கு வாயில்லை..!
முதலைக்கு நாக்கில்லை..!
பாம்பிற்கு காதில்லை..!
வௌவாலிற்கு பார்வை இல்லை..!
தவளைக்கு கழுத்து இல்லை..!
நண்டிற்கு தலை இல்லை..!
காண்டாமிருகம் தன் கொம்பினால் யாரையும் தாக்குவது இல்லை..!(கடைசியில் உள்ளது மிகவும் முக்கியமுங்கோவ்...)
அல்பேனியாவில் மதங்களே இல்லை..!

Friday, July 11, 2008

பெண் உருவ காய்களைத் தரும் தாய்லாந்து மரம் 'நரீபோல்' (Nareepol)

பணம் என்ன மரத்திலயா காய்க்குது என்ற சொலவடை நம்மில் உண்டு. இங்கு பெண் மரத்தில் காய்க்கிறாள். நம்புங்கள். இயற்கையின் படைப்பில் இப்படியும் ஒரு விந்தை..!


எனது அலுவலக நண்பர் ஒருவர், அவருக்கு வந்த மின்னஞ்சலை எனக்கு அனுப்பினார். அதைப் பார்த்ததும் அசந்து விட்டேன். என் கண்ணை என்னாலேயே நம்பமுடியவில்லை. தாய்லாந்திலுள்ள 'நரீபோல்' (Nareepol) என்ற மரத்தின் காய்கள் அத்தனையும் பெண்களைப் போல் இருக்கின்றன. என்னால் நம்பமுடியாமலும் இருக்க முடியவில்லை.


கூகிள் தேடுபொறியில் இம்மரம் பற்றி கேட்டதில்.. 'உண்மைதான் நண்பா... நம்பு...' என்று சொல்லாத குறையாக 1000 ஆதாரங்களை நிழற்படத்துடன் என் கணினியில் துப்பியது. பார்த்தேன். அம்மரத்தில் காய்த்திருக்கும் காய்கள் அனைத்தும் அடிபிறழாமல் அப்படியே பெண்ணாக இருக்கின்றன.


தாய்லாந்து மொழியில் நரீ(Naree) என்றால் பெண் என அர்த்தமாம். போல் (Pol) என்றால் மரம் என அர்த்தமாம். பெண் வடிவ காய்கள் காய்ப்பதால் இதற்கு இப்பெயர் வந்ததாம்.

பெண் வடிவத்திலுள்ள காய்கள்... ஏதோ மாங்காய் தொங்குவது போல தொங்கிக் கொண்டிருக்கின்றன. இம்மரத்தை நேரில் பார்க்க வேண்டுமெனில் பேங்காக்கிலிருந்து 500 கி.மீட்டர் தொலைவிலுள்ள பெட்சாபூன் மாகாணத்திற்கு (Petchaboon province) செல்ல வேண்டுமாம்...

இணையத்தில் இதுகுறித்து கண்ணில் விளக்கெண்ணெய் விடாமல் தேடியதில் தாய்(லாந்து) மொழியிலுள்ள விக்கிபீடியாவில் தகவல் இருக்கிறது. இம்மொழி தெரிந்தவர்கள் இந்த இணைப்பை சொடுக்கினால் அப்பக்கத்தை பார்க்கலாம்.

கீழே உள்ள ஓவியங்கள் இரண்டும், தாய்லாந்தின் பழமையான ஓவியங்கள் என சொல்லப்படுகிறது. அதிலும் இந்த மரம் இடம்பிடித்துள்ளது...






(இயற்கையின் குறும்பா... இல்லை, செயற்கையாக யாராவது குறும்பு வேலை செய்து விட்டார்களா என்றும் தெரியவில்லை... சந்தேகம் இன்னும் அகலவில்லை... தாய்லாந்து நண்பர்கள் இருந்தால் கேட்டு சொல்லுங்கள்... இது குறித்து அதிகம் தகவல் தெரிந்தவர்கள், எனக்கு மின்னஞ்சல் செய்யவும்... தெரிந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன்..)