Showing posts with label மது ஒழிப்பு நாடகம். Show all posts
Showing posts with label மது ஒழிப்பு நாடகம். Show all posts

Thursday, April 22, 2021

குடிகார அப்பனும் அவனது மகனும் - நாடகம் | drunken father and his son - dr...



அரசுப்பள்ளி மாணவர்கள் நடித்த குடிகார அப்பனும் அவனது மகனும் என்ற நாடகத்தை வாலு டிவி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

நான்கு சுவற்றுக்குள் இருந்த அக்குழந்தைகளின் திறமையை உலகறியச் செய்வதில் வாலு டிவி உவகை கொள்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் சிரித்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

குடிகார அப்பா, அவரது மனைவி, மகன், ஆசிரியை என அனைவரும் தங்களது பாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர் என்றே நான் சொல்லுவேன்...

அனைவரின் நடிப்பும் அற்புதம். அக்குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

உங்கள் குழந்தைகள் அல்லது  மாணவர்கள் நடித்த நாடகம் இருப்பின் அதை தாராளமாக வாலு டிவிக்கு அனுப்பி வைக்கலாம். அது குறித்த தகவலை இந்த வீடியோவில் இணைத்திருக்கிறேன்...

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #மதுஒழிப்பு_நாடகம்​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

Drunken father and his son. child labour drama, govt school children play child labour drama...

if you like share your friends... 

with love

Vaalu