Showing posts with label சென்னை புத்தகக்காட்சி 2021. Show all posts
Showing posts with label சென்னை புத்தகக்காட்சி 2021. Show all posts

Sunday, February 28, 2021

சென்னை புத்தகக்காட்சியில் பார்க்க வேண்டிய அரங்குகள் - பாகம் 2|chennai bo...



சென்னை புத்தகக்காட்சியின் முக்கியமான, வித்தியாசமான அரங்குகள் - பாகம் 2 ன் வீடியோ இது...

இந்த ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் இடம்பெற்றுள்ள வித்தியாசமான, முக்கியமான அரங்குகளை தேடித் தேடி படம்பிடித்துள்ளோம். புத்தகக்காட்சிக்கு போக விரும்புவோர் இதைப் பார்த்துவிட்டு போகும்போது உங்களுடைய நேரம் மிச்சமாகும் என்பதால்தான் இவ்வளவு முக்கியத்துவம் இதற்கு கொடுத்திருக்கிறது உங்கள் அபிமான வாலு டிவி.

இந்த வீடியோவில் குழந்தைகள், சிறார்கள் சார்ந்த புத்தக அரங்குகள், தமிழ் மொழி, வரலாறு சார்ந்த புத்தக அரங்குகள், காமிக்ஸ் புத்தக அரங்கு போன்றவை இடம்பெற்றுள்ளன.

இந்த புத்தகக்காட்சிக்கு வரமுடியாத வெளியூர், வெளி மாநில, வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு என்னென்ன வித்தியாச அரங்குகள் இடம்பெற்றிருக்கிறது என்பதை இந்த வீடியோ மூலம் தெரிந்து கொள்ள முடியும். 

இது என் பார்வைக்கு கிடைத்த சில அரங்குகள்தான். இன்னும் அறியப்படாத அட்டகாச புத்தக அரங்குகள் இருக்கலாம். அது அவரவர் பார்வையையும், தேடலையும் பொறுத்தது. அடுத்த வீடியோவில் இன்னும் வித்தியாசமான, முக்கியமான புத்தகக்காட்சியின் நிகழ்ச்சியாக தர முயற்சிக்கிறேன்.

பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைக் கமெண்ட்ஸில் பகிர்ந்து  கொள்ளுங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் எங்களின் சிரம் தாழ்ந்த நன்றிகள்

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu​

____________________________________

important book stall in chennai book fair 2021 part 2 video.  different book stalls in chennai book fair 2021, important book stalls in chennai book fair 2021,  chennai book fair 2021 have lot of  diifferent and very different stalls in this year. just look out this video... you will find out how its important for all age people

Thursday, February 25, 2021

அறிவியல் சோதனைகளை செய்து காட்டும் விக்யான் பிரசார் | சென்னை புத்தகக்காட்...



சென்னை புத்தகக் காட்சி 2021- கோலாகலமாக சென்னை ஒய் எம் சி ஏ மைதானத்தில் நேற்று (பிப்ரவரி 24, 2021) தொடங்கியது. 600-க்கும் மேற்பட்ட அரங்குகள், பாதுகாப்பு நெறிமுறைகள், பிரமாண்ட அரங்கம் என அமர்க்களப்படுத்துகிறது பபாசி நடத்தும் 44-வது சென்னை புத்தகக் கண்காட்சி.

நேற்று இரவு நானும் அகிலனும் புத்தகக் காட்சிக்கு சென்றிருந்தோம். அங்கே முதன் முதலாக கால் பதித்திருக்கும் விக்யான் பிரசார் அரங்கில் எளிய அறிவியல் சோதனைகளை செய்து காட்டினார்கள். அகிலனுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை.

சென்னை புத்தகக்காட்சியில் நீங்கள் பார்க்க வேண்டிய அரங்கில் இதுவும் ஒன்று... மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சிறுவர்கள் என அனைவரும் பார்க்க வேண்டிய அரங்கு இது...

அரவிந்த் குப்தாவின் எளிய அறிவியல் சோதனைகள் அடங்கிய புத்தகம் இங்கே ஆங்கிலத்தில் கிடைக்கிறது. அதுபோல் எண்ணற்ற அறிவியல் புத்தகங்கள் மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.

அறிவியல் மீது ஆர்வம் ஏற்பட இந்த அரங்கு காரணமாக இருக்கும்... ஸ்டால் எண் இந்த வீடியோவில் பாருங்க தெரியும்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106​...

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

Monday, February 22, 2021

புத்தகத்திற்காக ஓடிய சென்னை வாசிகள் | chennai book fair 2021 mini marath...



சென்னை புத்தகக்காட்சி 2021 நடைபெறுவதை முன்னிட்டு, 21.2.2021 அன்று விடியற்காலை 6 மணிக்கு சென்னை வாசி என்ற முழக்கத்தோடு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் மினி மாராத்தான் ஓட்டம் நடைபெற்றது.

சென்னை புத்தகக்காட்சியை நடத்துகின்ற பபாசி ஏற்பாடு செய்திருந்த இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை சென்னையின் காவல் துறை அதிகாரி ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ் கொடியசைத்து துவக்கி வைத்தார். 

ஓடுகின்ற அனைவருக்கும் டிசர்ட், தொப்பி கொடுத்திருந்தனர். 800 லிருந்து 1000 பேர் வரை இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்து கொண்டு ஓடினர்.

சென்னை வாசிகள் ‘சென்னையே வாசி’ என்ற முழக்கத்திற்காக ஓடிய ஓட்டம் இது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்துகொண்டனர். இதில் எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வாசகர்கள் என பல்வேறு தரப்பினரும் பங்கு கொண்டு ஓடி, புத்தகத்தை வாசியுங்கள் எனும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேசன் மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி அசத்தினர்.

இந்த மினிமாரத்தான் குறித்த ஒரு செய்தித்தொகுப்புதான் இந்த வீடியோ...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது சிரம் தாழ்ந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள்..!

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​ #vaalu_tv​ #chennai_book_fair_2021​ #CBF_2021​ #cbf2021​

#டெலிகிராமில்​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​

#முகநூல்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​

--------------------------------------
BAPASI arranged chennai book fair 2021 awareness mini marathan on 21.2.2021, in chennai besant nagar beach.  this mini marathon motive was 'run to read' . chennai vaasi. morethan 1000 people participate this event. Bapasi gives T shirt, cap for mini marathon runners. 

your vaalu also participate this event... watch it and comment it