இன்னும் இரு தினங்களில் பொதுமக்களின் பார்வைக்கு ஜெயலலிதாவின் நினைவிடம் திறக்கப்பட இருக்கிறது. பீனிக்ஸ் பறவை வடிவில் அமைக்கப்பட்டுள்ள நினைவிடத்தையும், ஜெ. சமாதியையும் எக்ஸ்க்ளூசிவாக காட்சிப்படுத்தியிருக்கிறது உங்களின் வாலு டிவி.
மக்கள் திலகம் எம்ஜிஆர் எனும் மாபெரும் சரித்திரத்திரம் அமைதியாக உறங்கிக்கொண்டிருக்கிறது. அவரது நினைவிடத்திற்கு பின் பகுதியில் ஜெயலலிதாவும் உறங்கிக்கொண்டிருக்கிறார்.
பீனிக்ஸ் பறவை வடிவமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த நினைவிடத்தை சென்னை ஐஐடியின் ஸ்ட்ரக்ச்சுரல் என்ஜினீயரிங் துறை வடிவமைக்க, தமிழக அரசின் பொதுப்பணித்துறை கட்டி முடித்திருக்கிறது.
58 கோடி ரூபாய் செலவில் நினைவிடமும், ஜெயலலிதா நினைவு அருங்காட்சியகம், அறிவுசார் பூங்கா, எம்ஜிஆர் நினைவிடம் போன்றவை 7.8 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
அணையா விளக்கு, ஆளுயர ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை, மெழுகுச் சிலை உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இங்கே இடம்பெற இருக்கின்றன.
இந்த வீடியோவை பார்க்கும் போது, ஜெயலலிதாவின் நினைவிடத்தை, ஜெயலலிதாவின் சமாதியை நேரில் பார்த்த அனுபவம் உங்களுக்கு ஏற்படும் என்று நம்புகிறோம்.
அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #Jayalaitha_memorial_exclusive_video