Showing posts with label மோ.கணேசன் கட்டுரைகள். Show all posts
Showing posts with label மோ.கணேசன் கட்டுரைகள். Show all posts

Monday, November 16, 2020

வெளிவந்துவிட்டது பொம்மி தீபாவளி மலர்






குழந்தைகளுக்காக வெளிவரும் மாத இதழ்களில் ஒன்றான பொம்மி மாத இதழ் சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி மலரை வெளியிட்டிருக்கிறது...


சிறார்களுக்கான குட்டிக்குட்டிக் கதைகள், சிறார் பாடல்கள், குறுக்கெழுத்து புதிர் உள்பட பல்வேறு புதிர்கள், காமிக்ஸ் கதைகள், பொது அறிவு கட்டுரைகள் என குழந்தைகளைக் கவரும் அத்தனை அம்சங்களும் இந்த தீபாவளி மலரில் கொட்டிக்கிடக்கின்றன.
இந்த இதழில் என்னுடைய வாலுவிடம் கேளுங்கள் எனும் பொது அறிவு கேள்வி பதில் பகுதியும், குறுக்கெழுத்து புதிர், விளையாட்டு குறித்த கட்டுரைகள் என மூன்று படைப்புகள் வெளியாகி இருக்கின்றன.
அமுதசுரபிக்கு அடுத்து, எனது படைப்புகள் பொம்மியில் வெளிவந்திருக்கிறது.
மொத்தம் 162 பக்கங்கள். விளம்பரங்களே இல்லாமல் இருப்பது இதன் தனிச்சிறப்பு... ஒவ்வொரு பக்கத்திலும் சுவாரஸிய தகவல்கள் கொட்டிக் கொடுத்திருக்கிறார்கள். இதன் விலை 250 ரூபாய்.


உங்களது குழந்தைகளின் பொது அறிவுப்பசிக்கு, பொழுதுபோக்கு பசிக்கு அட்சயப்பாத்திரமாய் மலர்ந்திருக்கிறது இந்த பொம்மி தீபாவளி மலர்...
இப்புத்தகத்தை பெற விரும்புவோர்...
பொம்மி
52/13. ANR காம்ப்ளக்ஸ், தெற்கு வீதி, திருவாரூர் - 610001 என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.
அலைபேசி எண்கள் - 9750697943, 9750697940, 9443973671
விரைவில் இப்புத்தகத்தைப் பற்றிய விமர்சனம் விரிவான முறையில் வாலு டிவியில் இடம்பெறும்... இணைந்திருங்கள் உங்கள் வாலு டிவியோடு...
மிக்க அன்புடன்
உங்கள்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி