Showing posts with label கொரோனா விழிப்புணர்வு. Show all posts
Showing posts with label கொரோனா விழிப்புணர்வு. Show all posts

Saturday, June 12, 2021

எதுக்கு தயங்கணும்? - ஐபிஎஸ் அதிகாரியின் கொரோனா பாடல் | IPS officer's cor...



கொரோனா தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து ஐபிஎஸ் அதிகாரி ஒருவர் வித்தியாசமான முறையில், தனது பாடல்கள் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

சென்னையை அடுத்த வண்டலூர் ஊமனாஞ்சேரியில் அமைந்துள்ள தமிழ்நாடு காவலர் பயிற்சி பள்ளியில், நிர்வாக துறை டெபுடி டைரக்டராக இருக்கும் திரு. ஆர்.சிவக்குமார் ஐபிஎஸ் அவர்கள் இதுபோன்ற விழிப்புணர்வுப் பாடல்களை எழுதி வெளியிட்டு வருகிறார்.

நேற்றைய தினம் இவரது கொரோனா விழிப்புணர்வு குறித்த இரண்டாவது பாடல், தமிழ்நாடு காவலர் பயிற்சிப்பள்ளியில் உள்ள அரங்கத்தில் திரு.பாஸ்கரன் ஐபிஎஸ் அவர்கள் தலைமையில் வெளியிடப்பட்டது.

அப்பாடல் இங்கே நமது ரசிகர்களுக்காகவும்... தமிழக மக்களுக்காகவும் வெளியிடுவதில் வாலு டிவி பெருமை கொள்கிறது. இது போன்ற முன்னெடுப்புகளுக்கு வாலு டிவி என்றுமே துணை இருக்கும் என்பதை மீண்டும் ஒருமுறை இங்கே அழுத்தம் திருத்தமாக பதிவு செய்துகொள்கிறது.

சிறப்பு நன்றி: உயர்திரு. R.சிவக்குமார், ஐபிஎஸ், துணை இயக்குநர், நிர்வாகம், தமிழ்நாடு காவலர் பயிற்சிப்பள்ளி, 

திரு. சக்திநாதன், ஈரோடு

மற்றும் இந்த பாடல் உருவாக்கத்திற்கு உறுதுணையாக இருந்து, அற்புதமாக இசையமைத்த விஜய்சங்கர், அழகாகப் பாடிய திவாகர், தயாரித்து அளித்த எல்.ஆர்.ஜெகதீஷ் மற்றும்  அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் வாலு டிவியின் பாராட்டுதல்களும் உற்சாகப் பூங்கொத்துகளும்...

பலரிடமும் இப்பாடலை பகிர்ந்து கொள்ளும்படி அன்புடன் வேண்டுகிறேன்...

தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது பேரன்பு கலந்த நன்றிகள்..! தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் அபிமான வாலு டிவியோடு...

கருத்துகளை மகிழ்வுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #coronavaccineindia

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu

++++++++++++++++++++++

in this video song giving awarness about how is very important in corona vaccine for human, covid vaccine very important for human. this song penned by IPS officer R. Sivakkumar

my dear lovable fans... you are the my big supporters... 

once again thank you my dear viewers... thanks for your lovable support...

yours lovingly...

Vaalu @ Mo.Ganesan

Tuesday, May 25, 2021

ரயில்வே போலிஸின் வேற லெவல் டான்ஸ் | RPF corona awareness dance | வலி மாம...


திரைப்பட இசையமைப்பாளர் தாஜ்நூர் இசையில், கல்கோனா வார இதழின் ஆசிரியரும், மூத்த பத்திரிகையாளருமான பெ.கருணாகரனின் வரிகளில் உருவான இந்த கொரோனா விழிப்புணர்வுப் பாடலுக்கு நடனமாடி இருப்பது யார் தெரியுமா?

சென்னை பிரிவு ரயில்வே பாதுகாப்புப்படையினர். என்ன ரயில்வே போலீஸாரின் டான்ஸா என ஆச்சர்யப்படுகிறீர்களா... அட ஆமாங்க... பாட்டைப் பாருங்க... பிறருக்கும் பகிருங்க...

விழிப்புணர்வு வீடியோவை பகிராமல் விட்டுவிடுவீர்களா என்ன?

இப்பாடலை உருவாக்கிய எனது அன்பு நிறை ஆசிரியர் பெ.கருணாகரன் அவர்களுக்கும், இப்பாடலுக்கு இசையமைத்த அன்பு நண்பர் தாஜ்நூர் அவர்களுக்கும், நடனமாடி அசத்திய ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் சிறப்பு நன்றியை உரித்தாக்குகிறது உங்கள் அபிமான வாலு டிவி...

தொடரும் உங்களின் ஆதரவிற்கு எனது பேரன்பும் பெரும் ப்ரியமும்...

உங்கள் கருத்துக்களை மறக்காமல் பதிவு செய்யுங்கள்...

தொடர்ந்து இணைந்திருங்கள்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #corona_song

#டெலிகிராமில் வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv

#முகநூல் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://www.facebook.com/Vaalu-TV-106...

#ட்விட்டர் பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர: https://twitter.com/cvaalu

+++++++++++

vali mamey vali... corona awareness song... written by senior journalist, editor in kalkona weekly, P.karunakaran, music composed by Music director Tajnoor, dance performed by Railway protection force, chennai division...

if you like this video... comment it... share it...

with love

Vaalu

Friday, April 23, 2021

கொரோனா திருவிளையாடல் - நாடகம் | corona awareness drama - govt school dra...



கொரோனா விழிப்புணர்வை திருவிளையாடல் பட பாணியில் நாடகமாக நடித்துக் காட்டியிருக்கிறார்கள் இந்த அரசுப்பள்ளி மாணவர்கள்...

அரசுப்பள்ளி மாணவர்கள் நடித்த கொரோனா திருவிளையாடல் என்ற நாடகத்தை வாலு டிவி வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது.

நான்கு சுவற்றுக்குள் இருந்த அக்குழந்தைகளின் திறமையை உலகறியச் செய்வதில் வாலு டிவி உவகை கொள்கிறது.

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம், இராஜாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா அவர்கள், தனது பள்ளி மாணவர்களைக் கொண்டு, நாடகமாக நடிக்க வைத்து, வீடியோவாக எடுத்து அதை எனக்கு அனுப்பி இருந்தார்...

இந்த குழந்தைகளின் நடிப்பைப் பார்த்து... ரசித்தேன்... பல இடங்களில் சிரித்தேன்... பல இடங்களில் மகிழ்ந்தேன்... நாடக வடிவத்தை... தங்களது மொழியில் உள்வாங்கி, நடித்திருக்கும் அந்தக் குழந்தைகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். 

சிவனாக வரும் பெண்ணும், தருமியாக வரும் சிறுவனும் தங்களது பாத்திரங்களில் வெளுத்து வாங்கி இருக்கின்றனர் என்றே நான் சொல்லுவேன்...

அனைவரின் நடிப்பும் அற்புதம். அக்குழந்தைகளுக்கு எனது வாழ்த்துகளும் பாராட்டுகளும்...

உங்கள் குழந்தைகள் அல்லது  மாணவர்கள் நடித்த நாடகம் இருப்பின் அதை தாராளமாக வாலு டிவிக்கு அனுப்பி வைக்கலாம். அது குறித்த தகவலை இந்த வீடியோவில் இணைத்திருக்கிறேன்...

நாடகத்தைப் பாருங்கள். நாலு பேரிடம் பகிருங்கள்...

தொடரும் உங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும், உங்களின் தேடுதலுக்கும், கருத்துகளுக்கும் எனது நன்றிகள்.

தொடர்ந்து இணைந்திருங்கள். இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

மிக்க அன்புடன்

மோ.கணேசன், 
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி​​ #vaalu_tv​​ #கொரோனா_நாடகம்​

#டெலிகிராமில்​​ வாலு டிவியை பின்தொடர: https://t.me/vaalutv​​

#முகநூல்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:  https://www.facebook.com/Vaalu-TV-106...​

#ட்விட்டர்​​ பக்கத்தில் வாலு டிவியை பின்தொடர:   https://twitter.com/cvaalu​​

---------------------------

corona awareness drama, govt school children play corona awareness drama, sivan and tharumi drama... dharumi drama, sivaji and nagesh as sivan and tharumi scene you remember here...

thanks my dear government school kids... love u lot of your awsome acting...

if you like share your friends... 

with love

Vaalu