எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம்.
இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Showing posts with label கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள். Show all posts
Showing posts with label கொரோனா தடுப்பூசி சந்தேகங்கள். Show all posts
கொரோனா தடுப்பூசி குறித்த அகிலனின் பயமும், வாலுவின் பதிலும் செயலுமே இந்த வீடியோ உருவாக்கத்திற்கு காரணம்.
தடுப்பூசி எப்படி உருவாக்குகிறார்கள்? தடுப்பூசி எப்படி செயல்படுகிறது, தடுப்பூசி நமது உடலில் எப்படி செயல்படுகிறது? கோவிஷீல்டு முதல் டோஸ் போட்டுக்கொண்ட பிறகு இரண்டாவது டோஸ் எப்போது போடவேண்டும், ஒரு தடுப்பூசி டோஸின் அளவு எவ்வளவு உள்ளிட்ட கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ
தொடரும் உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #CovidVaccineIndia
++++++++++++++++++
in this video vaalu giving covid vaccine details... what is the vaccine, how vaccine works in human body, vaccine dose how much quantity given to person, what are the side effects after vaccination
கொரோனா தடுப்பூசி குறித்த பல்வேறு தகவல்கள் உலா வந்து கொண்டிருக்கின்றன. அதில் எது உண்மை? எது பொய் என அறிவதே குதிரைக் கொம்பாக இருக்கிறது...
இது போன்ற சந்தேகங்களை தீர்ப்பதற்காகவே விக்யான் பிரசார் மூத்த விஞ்சானி த.வி.வெங்கடேஸ்வரனுடன் நேர்காணல் ஒன்றை நடத்தியிருக்கிறேன்.
இதற்கு முந்தைய வீடியோவில் தடுப்பூசிகள் குறித்த பல்வேறு பயனுள்ள தகவல்களைப் பகிர்ந்திருந்தார். காண விரும்புவோர்... : https://youtu.be/5KuxSVZbf6k
இந்த நிறைவுப்பகுதி வீடியோவில்...
குழந்தைகள் முதல் 18 வயது நிரம்பியவர்களுக்கு எப்போது தடுப்பூசி போடுவார்கள்?
கொரோனாவை பரப்பிய சீனா இப்போது எப்படி இருக்கிறது?
நாம் இப்போது தடுப்பூசி போடும் வேகத்தில் இருந்தால் எப்போது இந்தியா கொரொனாவிலிருந்து விடுபடும்?
கொரோனாவிலிருந்து விடுபடும் முதல் நாடு எது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இந்த வீடியோவில் பதில் தந்திருக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்...
கொரோனா தடுப்பூசி குறித்து பல்வேறு தகவல்கள் உலா வருகின்றன. இதில் எது உண்மை? எது பொய் என்று தெரியாத அளவிற்கு நம்மை குழப்பமடையச் செய்யும் செய்திகள்தான் பரவுகின்றன.
இதன் உண்மை நிலவரம் என்ன? என்னதான் பிரச்சினை மக்களுக்கு? தடுப்பூசி குறித்து பல்வேறு சந்தேகங்கள் இருக்கிறது மக்களிடம்? அதை யாரிடம் கேட்பது? யார் அந்த சந்தேகங்களை தீர்த்துவைப்பார்? என்ற மன நிலை நம்மில் பலருக்கும் இருக்கிறது...
தில்லியில் உள்ள விக்யான் பிரசார் மூத்த விஞ்ஞானியும், தமிழ் ஊடகங்களில் அறிவியல் குறித்து மிக எளிமையாக, புரியும்படி எடுத்துச்சொல்லிவரும் த.வி.வெங்கடேஸ்வரன் வாலு டிவிக்காக அளித்த பிரத்யேக பேட்டி இது...
நீங்கள் கேட்க விரும்பும் கேள்விகளை உங்கள் அபிமான வாலு அவரிடம் கேட்டிருக்கிறார்.
நன்றாகப் படித்தவர்களும் சரி, படிக்காதவர்களும் சரி, அனுபவம் நிறைந்தவர்களும் சரி, அனுபவம் இல்லாதவர்களும் சரி... எல்லோருக்கும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பல்வேறு பயம் இருக்கிறது.
கொரோனா தடுப்பூசியில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாகவும் பொதுமக்களால் நம்பப்பட்டுவருகிறது... இந்நிலையில் இதன் உண்மைதனை அறிந்துகொள்ள... நம் மக்களுக்காக... நம் ரசிகப்பெருமக்களுக்காக வாலு டிவி செய்திருக்கும் நேர்காணல் நிகழ்ச்சி இது...
ரசிகப்பெருமக்களின் ஆதரவை அன்புடன் கோருகிறேன்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர் & நிர்வாக இயக்குநர்
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #CovidVaccineIndia
++++++++++++++++++
its corona vaccine awareness discussion with vigyan prasar senior scientist join with your vaalu. this is final part video