Showing posts with label ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பு. Show all posts
Showing posts with label ஒருங்கிணைந்த எம்ஏ படிப்பு. Show all posts

Monday, June 28, 2021

பிளஸ் டூ முடித்தவர்கள் நேரடியாக எம்.ஏ. படிக்கலாம் | 1 லட்ச ரூபாய் உதவித்...



ஒரு லட்ச ரூபாய் உதவித்தொகையுடன் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு நேரடி எம்.ஏ. படிப்பு கற்றுத்தரப்படுகிறது. உணவுக்கட்டணம் இலவசம், தங்கும் விடுதி வசதி இலவசம். சிவாஜி திரைப்பட பாணியில் சொல்வதெனில், பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இங்கே படிக்க வந்தா மட்டும் போதும்.

சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த எம்ஏ தமிழ் முதுகலை பட்டப்படிப்பில் பிளஸ் 2 முடித்த மாணவர்கள் சேரலாம். 

விண்ணப்பம் எங்கே கிடைக்கும்? எப்படி விண்ணப்பத்தைப் பெறுவது? எப்படி பூர்த்தி செய்வது? என்னென்ன தகவல்களை இணைக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இந்த வீடியோவில் ஸ்டெப் பை ஸ்டெப்பாக கொடுத்திருக்கிறேன்.

பிளஸ் டூ முடித்த ஏழை மாணவர்களுக்கு இது அரிய வாய்ப்பு. உங்கள் அருகில் பிளஸ் டூ முடித்த மாணவர்கள் இருக்கிறார்களா அவர்களுக்கு இந்த தகவலை நீங்கள் பகிர்ந்து உதவலாம்.