(இக்கட்டுரை கண்டீப்பாக வயது(க்கு) வந்தவர்களுக்கு மட்டும்..) அன்பின் வெளிப்பாடு முத்தம். அதிகபட்ச ரசனை தேவைப்படும் ரொம்பவே அழகான விஷயம்! காதலர்களின் ஆன்மா உதடுகளில் சந்திக்கும் வைபவம் முத்தம். சீனப் பழமொழி ஒன்று... முத்தம் என்பது உப்புத் தண்ணீர் போல... குடிக்க குடிக்க தாகம் அதிகமாகும்! (அதிலும், பார்ட்னர் அம்சமாக அமைந்து விட்டால், அச்ச்ச்றா...) ஆனால், முத்தம் கொடுக்கத் தெரியுமா உங்களுக்கு...? டென்ஷனாக வேண்டாம். கேள்விக்குக் காரணம் உண்டு! ஏதோ வம்படிக்கு இழுத்துப் பிடித்து பச்சக் என்று கொடுப்பது... கசா முசா என்று அவசரமாக திணித்துத் தொலைவது... எசகு பிசகாக குதறி வைப்பது... (லேடீஸ் அன்ட் ஜென்டில்மென், இதெல்லாம் முத்தமில்லீங்கோ...! கமல்ஹாசனோ, இம்ரன் ஹஸ்மியோ கதாநாயகிக்கு சட்டென்று இச்சொன்று தருவார்களே... அது போல் செய்வது பெரிய கம்ப (காம) சூத்திரெமல்லாம் இல்லீங்க... ரொம்ப சிம்பிள். இதற்கு கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள், பத்து (நாங்க கண்டுபிடிச்சவரைக்கும்...)இந்த பத்து கட்டளைகளை பின்பற்றி முத்தமிட்டுப் பாருங்கள். அப்புறம், உங்கள் காதல் அல்லது கல்யாண வாழ்க்கையில் எல்லா நாளும் பவுர்ணமி தான்! முதல் கட்டளை: சத்தான முத்தத்துக்கு முதல் எதிரி... வேற என்னங்க... "தாத் கி பத்பூ" என்று தூர்தர்ஷன் காலத்தில் இருந்து சொல்வார்களே, அந்த வாய் துர்நாற்றம் தான். பேசினால் பூ வாசம் புறப்பட வேண்டாம். குறைந்த பட்சம் குமட்டிக் கொண்டு வரக் கூடாது. ஓவராக 'தம்'மடித்தல், புகையிலைப் பொருட்கள், உடல் நலக் கோளாறு, கண்டதைத் திண்பது என்று ஏகப்பட்ட காரணங்களால் வாய் நாற்றம் ஏற்படுகிறது. காதலியோ, காதலனோ, மனைவியோ இது பற்றி பளீரென்று வெளியில் சொல்லாமல் வேண்டுமானால் இருக்கலாம். ஆனால், துர்நாற்றத்துடன் தரப்படும் முத்தத்தில் அத்தனை சுவாரஸ்யமோ, காதலோ இருக்காது டியர்... அதோடு, அடுத்த முறை முத்தம் தர முற்பட்டால் பார்ட்னர் அதிர்ச்சி அடையக் கூடாது தானே...? எனவே, முத்தம் கொடுக்க மூஞ்சியை நீட்டும் முன் கொஞ்சம் வாய் கொப்பளித்துக் கொள்ளுங்கள். பிரஷ் போட்டு பல் துலக்கி விட்டுப் போனால் இன்னும் நலம். (நெருங்கி வருவாய்... நெருங்கி வருவாய்... என்ற க்ளோசப் டூத் பேஸ்ட் விளம்பரத்தை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்) கட்டளை இரண்டு: முத்தம் கொடுக்கும் போது இதழ்களை குவிப்பது மட்டுமல்ல... வாயை திறப்பதிலும் ஒரு நுட்பம் இருக்கிறது. உணர்வு பூர்வமாக முத்தம் கொடுக்க வழியே இல்லாமல் வாயை மூடிக்கொள்ளக் கூடாது. அதேசமயம், எதிரே இருப்பவரை விழுங்கிவிடும் அளவுக்கு அகககககலமாகவும் வாயை திறக்கக் கூடாது. உதடுகளை மென்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் லிப்-டு-லிப் ஆரம்பித்து, பின்னர் அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்ல வேண்டும். அப்போது தான் சுவை கூடும். மூன்றாம் கட்டளை: நானும் கொடுக்கிறேன் பேர்வழி என்று கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை கடைபிடித்து, ரப்-அன்ட்-டப்பாக இருந்தால், வெறும் சத்தம் தான் வரும். முத்தமாக இருக்காது! உங்கள் பார்ட்னர் எப்படி கொடுத்தால் ரசிக்கிறார், எந்த மூவ்மென்டை ருசிக்கிறார், என்ன செய்தால் பிடிக்கிறது என்பதை உணர்ந்து கொடுக்க வேண்டும். அவர்களை திருப்திப்படுத்தும் போது தான், நீங்கள் இன்னும் அதிகமாக மகிழ்ச்சி அடைய முடியும். எனவே, முத்தத்தில் ஒருவித தாளகதி வேண்டும். இருவரும் ரசிக்கும் வகையில் இருக்க வேண்டும். கட்டளை நான்கு: சொல்லித் தருவதில்லை மன்மதக் கலை என்பதெல்லாம் உண்மை தான். அதற்காக, முத்தம் கொடுப்பதெல்லாம் கூடவே பிறந்த கலையாகி விடுமா என்ன? கற்றுக்கொள்ளுங்கள். யாருக்கும் எடுத்த உடனேயே உணர்வுபூர்வமாக முத்தம் கொடுக்க வந்துவிடாது. அதற்கும் ஒரு சின்ன டிப்ஸ் உண்டு. கொஞ்சம் நேரம் செலவிடுங்கள்... காப்பி அடியுங்கள்... உங்களவர் என்ன செய்கிறார் என்பதை கவனியுங்கள். அதையே நீங்களும் செய்தால் போதும். கொஞ்ச நாளிலேயே கிஸ் அடிப்பதில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம். ஐந்தாம் கட்டளை: முத்தம் கொடுக்கையில், கைகள் என்ன செய்கின்றன என்பது முக்கியமாக அம்சம். ஏதோ முத்தம் கொடுத்துக் கொண்டு இருக்கும் போதே தப்பி ஓடிவிடப் போகிறார் என்பதைப் போல தலை முடியையோ, இடுப்பையோ அழுந்தப் பிடித்துக் கொள்ளக்கூடாது. முத்தம் என்பது அன்பைத் தரும் களம். வலி ஏற்படக்கூடாது. கைகளை கண்ட இடத்தில் வைக்கவும் கூடாது. அதிலும் ஒரு அழகுணர்ச்சி தேவை. உங்கள் பார்ட்னரின் கைகள், முதுகு, பின்புறம், கழுத்து, இடுப்பு போன்றவற்றின் மீது மெல்ல ஊர்ந்து செல்லலாம். கவனம்... உணர்ச்சி வசப்பட்டு காயம் ஏற்படும் அளவுக்கு கிள்ளி வைத்தால் அவ்வளவு தான். காரியம் கெட்டு விடும்..! கட்டளை ஆறு: முத்தத்தில் நாக்கின் பங்கு ரொம்ப முக்கியமானது. மெல்ல ஊடுருவி, உணர்வுகளை தட்டி எழுப்ப வேண்டும். ஒரு ஓவியனின் தூரிகை போல நளினமாக நடமாட வேண்டும். ஆனால், அதற்கும் அளவு உண்டு. உள் நாக்கை கவ்விப் பிடிப்பது போலவோ, பல்துலக்கும் போது வாயின் நாலாபுறத்திலும் சுழன்றடிப்பது போலவோ செய்யக்கூடாது. நாக்கின் நுனி மட்டுமே மாய வித்தைகளை செய்ய வேண்டும். நினைவில் கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம், எவ்வளவு பொறுமையாக, மென்மையாக நடந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாகும் உற்சாகம். ஏழாம் கட்டளை: முத்தங்கள் சிந்தும் போது எச்சில் அமிர்தமாகும் தான். அதற்காக, நாய் குட்டி போல் முகமெல்லாம் சளக்... சளக் என்று எச்சிலாக்கி வைக்கக்கூடாது. அது எரிச்சல் ஏற்படுத்தும். கட்டளை எட்டு: முத்தம் மட்டுமே இரண்டு தனி நபர்களை உடல் ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் இணைக்கிறது. இந்த இணைப்பு தான், ஆழமான, திருப்திகரமான உறவுக்கு வழிகோலுகிறது. எனவே, ஒவ்வொரு முறை முத்தமிடும் போதும் படுக்கையை மட்டுமே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடாது. அழகுணர்ச்சி வெளிப்பட வேண்டும். அன்பு மழை பொழிய வேண்டும். இது கொஞ்சம் சிரமம் தான். ஆனால், அதற்கும் தற்காப்பு வழி உண்டு.(இதுக்கெல்லாமா? என்று கேட்கக்கூடாது.) முத்தத்துக்கு வாய் நீளம் தான் முக்கியம். கை நீளத்தை கட்டுப்படுத்தி வையுங்கள். எக்குத் தப்பான இடத்தில் சேட்டை செய்வதை (அட்லீஸ்ட் நாகரீகம் கருதியாவது) தவிர்க்கலாம். அதேசமயம், நீங்கள் இரண்டு பேருமே அடுத்த கட்டத்துக்கு தயாராக இருக்கும் பட்சத்தில், நோ லிமிட்ஸ்... ஒன்பதாம் கட்டளை: முத்தமிடும் போது, கண்களை பப்பரப்பே என்று திறந்து வைத்துக் கொண்டு திரு திருவென விழித்தபடி பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. ரோட்டில் செல்லும் போது தான் கண்களை அகல திறந்து வைத்திருக்க வேண்டும். மகிழ்ச்சியின் பாதையில் கண்கள் மூடியிருந்தால் தான் வழி எளிதாகத் தெரியும். அதற்காக, என்ன நடந்தாலும் கண்களை திறக்க மாட்டேன் பேர்வழி என்று இறுக்கி மூடிக்கொண்டு இருந்தாலும் கண்றாவியாக இருக்கும். அவ்வப்போது கண் மலர்ந்து, உங்கள் பார்ட்னரின் மலர் முகத்தை பார்த்தால் மனது மலரும். (எப்ப்ப்பூடி...?) கட்டளை பத்து: கான்பிடன்ஸ் கண்ணா... கான்பிடன்ஸ்.... அது ரொம்ப முக்கியம். முத்தத்தை யார் தொடங்குகிறார்கள் என்பது முக்கியமல்ல. தருபவர், பெறுபவர் இருவருமே முழு மனதோடு, உறுதியோடு, நம்பிக்கையோடு முத்தமிட வேண்டும். இது எதற்கென்றால், பத்து அல்ல பத்தாயிரம் டிப்ஸ் கொடுத்தால் கூட, முத்தத்தின் உச்சத்தில் எதுவுமே நினைவில் இருக்காது. எனவே, முத்தமிடும் போது தன்னம்பிக்கையுடன் அணுகவும். ஆக... இந்த பத்து கட்டளைகளை பின்பற்றினால், இந்த நாள் மாத்திரமல்ல... வாழ்க்கையின் எந்த நாளிலும் முத்தம் சத்தாக இருக்கும். மகிழ்ச்சியின் வித்தாக இருக்கும். ஒரு விஷயத்தை சொன்னால் மறந்து விடக்கூடும். காட்டினால் ஓரளவு நினைவில் இருக்கும். ஆனால், செய்து பார்த்தால் மனதில் எப்போதும் பளிச்சென்று தங்கி விடும். இதன் மூலமாக நான் சொல்ல வருவது என்னவென்றால்... "போதும்... போதும்... எந்த ஆணியும் புடுங்கத் தேவையில்லை. நாங்களே..." என்று நீங்கள் கிளம்புவதற்கு முன் ஒன்றை இறுதியாக சொல்லி நிறைவு செய்கிறேன்..! வேற என்னங்க... ஹேப்பி கிஸ்ஸஸ்! -------------------------- (இப்படி ஒரு சமூக முக்கியத்துவம் வாய்ந்த (?) விடயத்தை எனக்கு பெங்களூரிலிருந்து மின்னஞ்சலில் அனுப்பிய சுவாமி குமரானந்தாவிற்கு எனது நன்றிகள்..!) |
எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Wednesday, August 11, 2010
முத்தம் தர முத்தான பத்து யோசனைகள்..! - கண்டீப்பாக வயது வந்தவர்களுக்கு மட்டும்
Friday, June 25, 2010
இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு...
ஆளும் காங்கிரஸ் அரசின் தற்போதைய மகத்தான சாதனை மீண்டும் ஒரு முறை பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு..! இதனால் இந்தியாவில் வாழும் 97 சதவீத மக்களுக்கு வச்சாச்சு ஆப்பு..!
பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து மத்திய அமைச்ரவை கூட்டம், இன்று தில்லியில் கூடி விவாதித்தது. விலை உயர்வுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அடுத்து சமையல் கேஸ் விலை சிலிண்டருக்கு ரூ. 35 அதிகரிக்கப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ. 3 அதிகரிக்கப்பட்டுள்ளது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாயும் , பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3. 73 அதிகரிக்கிறது. இத்தகவலை பெட்ரோலிய துறை செயலர் சுந்தரேசன் தெரிவித்தார். அது மட்டுமின்றி இனி பெட்ரோலியப் பொருற்களின் நிறுவனங்களே அதன் ஏற்ற இறக்கங்களுக்கு ஏற்ப விலையினை நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும், அதில் மத்திய அரசு தலையிடாது என்றும் முடிவு செய்துள்ளது.
இந்த விலை உயர்வால் சாமன்ய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என தெரிவித்தார். மண்ணெண்ணெய்க்கான மானியம் தொடரும் என்றார். இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறதாம்.
இந்தியாவில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 3% பேர் மட்டுமே பணக்காரர்கள் ஆவர்.. மீதமுள்ள 97 சதவீத மக்களனைவரும் நடுத்தர, மற்றும் ஏழை வர்க்கத்தினரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்பவரே ஆவர்.
பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வால், விலைவாசி விண்ணை உடைத்துக் கொண்டு செல்லப் போகிறது. ஏற்கனவே தற்போது விலைவாசி விண்ணைத் தொட்டுக்கொண்டிருக்கிறது என்பது மறுக்கவியலா உண்மையாகும்.
ஒரு கிலோ அரிசியில் விலை 30 ரூபாய்... சர்க்கரை விலை 40 ரூபாய்... இப்படி அத்தியாவசிய பொருட்களின் விலை இப்போதே உச்சத்தில் இருக்க, இந்த விலையேற்றம் மேலும் அதனை உச்சாணிக்குத்தான் கொண்டு செல்லும்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வை காரணம் காட்டி அரிசி, பருப்பு, சர்க்கரை, சமையல் எண்ணை உட்பட அனைத்தும் இன்று நள்ளிரவு முதல் ஏறத்தான் போகின்றன. இதனை சாக்காக வைத்துக் கொண்டு பதுக்கல்காரர்களும் தங்கள் கைவரிசையைக் காட்டத்தான் போகின்றனர்.
இவ்விலை உயர்வால் அம்பானியோ, அமிதாப்போ, சோனியாவோ, மத்திய அமைச்சர்களோ, அரசிழல்வாதிகளோ பாதிக்கப் படப்போவதில்லை. கோடி வீட்டு குப்பனும், குடிசை வீட்டு சுப்பனும்.. நம்மைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினரும்தான்.
இனி உணவகங்கள், விடுதிகள் எவற்றிலும் சென்று நிம்மதியாய் சாப்பிடக் கூட முடியாது... நம் தேசம் முன்னேறுகிறதோ இல்லையோ... விலைவாசியில் ஏறுகிறதய்யா..?
நம் மக்கள் என்று விழிக்கிறார்களோ... அன்றுதான் அவர்களுக்கு விடிவுகாலமே..! வாழ்க சனநாயகம்...!
Tuesday, June 15, 2010
ஆபாச தளங்களை உங்களுடைய பாலோவர்ஸ் பகுதியிலிருந்து நீக்க வேண்டுமா?
தமிழ்க் கூறும் நல்லுலகில் நமது கருத்துக்களை சொல்வதற்கு ஒரு அமுதசுரபியாக இருப்பது இணையதள வலைப்பூக்கள் ஆகும். அதில் அவரவர் கருத்துக்களை சுதந்திரமாக எழுதி தங்களின் அவாவினை சாந்தப்படுத்திக் கொள்கின்றனர்.
அந்த எழுத்துக்கள் யாரைக் கவருகிறதோ..அவர்கள் அதற்கு வாசகர்களாகி விடுகின்றனர். அதனை ஒன்றிணைக்கும் பணியை கூகிள் பிளாக்கர், "Followers' பகுதியில் செய்ய வைக்கிறது.
தேன்கூட்டில் தேனை சேகரிப்பது போல வலைக்குடிலில் வாசகர்களை சேர்ப்பது அவ்வளவு எளிதான காரியமும் அல்ல..! அதிலும் சில அயோக்கியர்களால் ஆபாச வலைத்தளங்கள் புகுத்தப்படுகின்றன.
அதனை எப்படி தடுப்பது என புரியாமல் விழித்தவர்களில் நானும் ஒருவன். கண்டேன் சீதையை... அதை எப்படித் தடுப்பது என கண்டுகொண்டேன்... அதை உங்களிடமும் பகிர்ந்து கொள்கிறேன்..!
முதலில் உங்களது டாஷ்போர்டுக்கு செல்லுங்கள். அதில் நீங்கள் பல வலைக்குடில்கள் வைத்திருக்கலாம். ஓன்றே ஒன்று கூட வைத்திருக்கலாம். அந்த வலைக்குடிலுக்கு இணையாக வலது புறத்தில் (கீழே உள்ள படத்தைப் பார்க்க) பாலோவர்ஸ் எத்தனை பேர் என்பதை குறிப்பிட்டபடி இருக்கும். அது ஒரு இணைப்புதான் அதனை கிளிக் செய்யவும்...
அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவர் யார்..? அவரை சேர்க்கவா..? தடுக்கவா என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block this user) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)
அப்படிச் செய்ததும்.. அந்த பாலோவரை நிச்சயமாக தடுக்கவா? என குறிப்பிட்டிருக்கும். அதில் தடுத்து விடு (Block) என்பதை கிளிக் செய்யவும்... (கீழே உள்ள படத்தைப் பார்க்க)
அவ்வளவுதான்..இனி அந்த தளங்கள் உங்களது பாலோவர்ஸ் பகுதியில தெரியாது.

Thursday, April 15, 2010
என்னவளுக்காக நான் வரைந்த கணேச ஓவியம்..!
எனக்கு கடவுள் நம்பிக்கை அற்றுப் போய் பத்து வருடங்களாகி விட்டது... ஆனால் என்னவளுக்கு என் பேருடைய கடவுளென்பதால் கணேசனை மிகவும் பிடிக்கும் என்பாள்...
அவளுக்காக நான் வரைந்த ஓவியம் இது... இது போன்ற ஓவியங்களை வரைவதை விட்டு விட்டு, கிட்டத்தட்ட 11 வருடங்களாகி விட்டது..!
நமக்கு இந்த வண்ணமெல்லாம் கொடுக்கத் தெரியாது.. எதோ எனக்குத் தெரிந்தவரை கொடுத்திருக்கிறேன்... பிடித்திருந்தால் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்..!
Wednesday, March 31, 2010
சென்னை மாநகர பேருந்துச் சீட்டில் செம்மொழித் தமிழ் மாநாடு விளம்பரம்..!
இன்று மதியம் எனது அலுவலகத்திறகு வருவதற்காக மாநகரப் பேருந்தில் ஏறினேன். பேருந்துச் சீட்டு வாங்கினேன்... அச்சீட்டில் எப்போதும் போல் இல்லமால் இன்று வித்தியாசமாக இருப்பதாகத் தோன்றவே, உற்றுப் பார்க்கவே, அய்யன் திருவள்ளுவர் உருவம் காணப்பட்டது.
அட என ஆச்சர்யப்பட்டு உற்றுப் பார்த்தேன்... கோவையில், வரும் ஜூன் மாதம் நடைபெறும் உலகத்தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விளம்பரம் என கண்டு கொண்டேன்...
மிகவும் அகமகிழ்ந்து போனேன்... இது ஒரு நல்ல யுக்தி. செம்மொழித் தமிழ் மாநாடு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்க இது உதவும், ரயில் பயணச்சீட்டில் தனியார் விளம்பரங்களை வெளியிட்டு, வருவாய் ஈட்டுவதைப் போல்... பிற்காலத்தில் பேருந்துச் சீட்டுகளிலும் கொண்டு வர இது அடித்தளமாகவும் உதவும்...
அது மட்டுமின்றி, போலியோ தினம், விழிப்புணர்வு தினம் போன்றவற்றை பேருந்துச் சீட்டில் வெளியிடலாம்... பேருந்துச் சீட்டில் அய்யன் வள்ளுவனைக் காணும் அழகே அழகு...
Labels:
அனுபவம்,
உலகத் தமிழ் சொம்மொழி மாநாடு,
சமூகம்,
நாட்டு நடப்பு,
பொது
Wednesday, March 17, 2010
நர்த்தன கணேஷ்...கோட்டோவியம்..!
கடந்த 13.07.1999 அன்று, எனது பிரான்ஸ் நண்பர் சைமன் டால்மேவிற்காக நான் வரைந்து கொடுத்த படம்தான் நர்த்தன கணேஷ்... இதனுடைய உண்மையான கோட்டோவியம் பிரான்சில் இருக்கிறது..!
எனக்கு (கி.பி 2000- லிருந்து) கடவுள் நம்பிக்கை கிடையாது. ஆனால் 1999-ல் இருந்திருக்கிறது... சைமனுடன் ஒரு மாதம் பழகி இருந்தேன். ஒரு மாதம் முடிந்ததும் பிரான்ஸிற்கு செல்லப் போகிறேன் என்றான்..!
என் நினைவாக அவனுக்கு ஏதாவது ஒன்று பரிசளிக்க வேண்டும் என நினைத்தேன்... ஏழை என்பதால் பொருளில்லை... பணிமில்லை... ஆனால் என் கை எனக்கு உதவியது... காகித பென்சில் உதவியது... எனக பெயரும் உதவியது... (கணேஷ் என்பதால்...)
கணேஷையே வரைந்து கொடுத்தேன்... நன்றாயிருக்கிறது என்றபடி பெற்றுக் கொண்டான்... பரணிலிருந்து ஒரு புத்தகத்தை எடுக்கும்போது... இப்படம், பாதி செல்லரித்த நிலையில் கிடத்தது. போட்டோ ஷாப்பில் புள்ளிகளை, செல்லரிப்புகளை நீக்கி கொடுத்திருக்கிறேன்..!
பிடிச்சிருந்தா பாருங்க... இல்லன்னா விட்டுடுங்க..!
Thursday, March 11, 2010
அண்ணா உருவம் பொறித்த ஐந்து ரூபாய் சிறப்பு நாணயம்..!
பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி அவருக்கு இந்திய அரசு அண்ணா நூற்றாண்டு நாளான 15.9.2009 அன்று சென்னையில், அண்ணா உருவம் பொறித்த சிறப்பு நாணயம் (வெள்ளியில்) ஒன்றை வெளியிட்டது.
அன்று முதல் நேற்று வரை கிடைக்காமல் இருந்த அந்நாணயம், தற்போதுதான் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது.
ஐந்து ரூபாய் நாணயத்தில் பேரறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. அதன் கீழ் அவருடைய கையெழுத்து அட்சரம் பிசகாமல் தமிழிலேயே பொறிக்கப்பட்டிருப்பது சிறப்பானதாகும்.
நானறிந்த வரை இந்திய ரூபாய் நோட்டுகளில் மட்டுமே தமிழ் எழுத்துக்களை கண்டிருக்கிறேன். சுதந்திர இந்திய அரசு வெளியிட்ட நாணயங்களில் தமிழ் இடம்பெற்றதில்லை என்றே கருதுகிறேன்.
ஆனால் இலங்கை, சிங்கப்பூர் போன்ற நாடுகளின் நாணயங்களில் தமிழ் இடம்பெற்றிருப்பதைக் கண்டு ஆதங்கப்பட்ட நான், இந்திய நாணயங்களில் தமிழ் இடம்பெறவில்லையே என வருத்தப்பட்டிருக்கிறேன்.
என்னுடைய நீண்ட நாளைய வருத்தத்தை பேரறிஞர் அண்ணா அவர்கள் போக்கி விட்டார். அதுவும் நாணய வடிவில்..!
இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்திற்கு தங்கக் கலரில் முலாம் பூசப்பட்டுள்ளது. ஒரு புறம் 5 ரூபாய் என்ற எண்ணும், அதன் மேற்புறம் இந்திய அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளது.
நாணயத்தின் மறுபுறம் அறிஞர் அண்ணாவின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளது.
அவ்வுருவத்தில் அண்ணா சிரித்தபடியே வலது புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். அவரது உருவத்தின் கீழே அவரது கையெழுத்து தமிழில் அச்சிடப்பட்டுள்ளது. நாணயத்தின் விளிம்புகளில் ‘பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு’ என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. அவர் பிறந்த ஆண்டினையும், அவர் மறைந்த ஆண்டினையும் குறிப்பிடும் வகையில் 1909-1969 என பொறிக்கப்பட்டுள்ளது.
இந்த நாணயத்தில் ஒரு குறை இருப்பதாகக் கருதுகிறேன். நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும், அந்த நாணயத்தில் குறிப்பிடபட்டிருக்கும். இந்நாணயம் 2009ல் வெளியிடப்பட்டது. இந்த ஆண்டு இந்நாணயத்தில் குறிப்பிடப் படவேயில்லை.
செப்டம்பர் 15-ம் தேதி இநாநணயம் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதன் மறு நாள் எந்த ஒரு பத்திரிகையிலும் இந்நாணயம் பற்றிய செய்தியோ படங்களோ இடம்பெறவில்லை. அதைத் தேடித் தேடி ஏமாந்து போனத்தான் மிச்சம்.
சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.
சரி இந்நாணயத்தையேனும், என்னுடைய நாணய சேகரிப்பிற்காக வாங்கி வரலாம் என நினைத்தபடி, அதே மாதம் 22-ம் தேதி அன்று சென்னையிலுள்ள பாரத ரிசர்வ் வங்கியை அணுகினேன்.
அவர்கள் என்னிடம் ‘வெளியீட்டிற்காக வெள்ளியில் அச்சடிக்கப்பட்ட நாணயம் அது. சில நாணயங்கள் மட்டுமே அச்சடித்திருப்பார்கள், வெளிவர பல நாட்களாகும் என்றனர். அதற்கு இத்தனை மாதங்களாகும் என நான் எதிர்பார்க்கவில்லை.
இந்நாணயந்தை சில நாட்களுக்கு முன்பு, தாம்பரத்திலுள்ள பாரத ஸ்டேட் வங்கியில் மன்றாடிப் பெற்றேன். அங்கே இந்த நாணயம் இல்லை என்று விட்டனர். அங்கு பணியாளராக இருக்கும் அம்மையார் ஒருவர், அவருக்கு கொடுத்திருந்த இந்நாணயத்தை, (இது வெள்ளி நாணயமல்ல) எனக்கு கொடுத்தார். மிகவும் மகிழ்ந்து போனேன். பெயர் தெரியா அந்த அம்மையாருக்கு எனது நன்றிகள்.
காசாளரிடம் கேட்டதற்கு, இரண்டு நாணயங்கள், நான்கு நாணயங்கள் எல்லாம் எடுத்து பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிக் கொடுத்தால் மீதமுள்ள 496 நாணயங்களை எண்ண வேண்டுமே. ஆதலால் அப்படித் தரமாட்டோம், வேண்டுமெனில் மொத்தமாக (ரூ 5,000) வாங்கிக் கொள்ளுங்கள் என்றார். அப்படியென்றால் மட்டுமே நாணயம் கிடைக்கும் என்றார். இந்த பதிலைக் கேட்டு அதிர்ந்து போனேன்.
என் போன்ற (வசதியற்ற) நாணயச் சேகரிப்பாளர்களுக்கு வங்கிகளே இப்படிச் செய்தால், நாணயங்களை சேகரிக்க முடியுமா..? பணம் படைத்தவர்கள் மட்டும்தான் இதுபோன்ற சேகரிப்பில் ஈடுபட வேண்டுமா..? வங்கிகள் மாற வேண்டும்..? மாறுமா..?
பேரறிஞர் அண்ணாவிற்கு நாணயம் வெளியிட்டது போல், மகாகவி பாரதியாருக்கு நாணயம் வெளியிட வேண்டும் என்பதும், அதன்பிறகு முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் நாணயம் வெளியிட வேண்டும் என்பது என் ஆசை.
இதற்கெல்லாம் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.
Labels:
அரசியல்,
அறிஞர் அண்ணா,
அனுபவம்,
சமூகம்,
செய்திகள்,
நாட்டு நடப்பு
Monday, March 08, 2010
ஜேம்ஸ் கேமரூனின் மனைவி இயக்கிய 'ஹர்ட் லாக்கர்' படத்திற்கு ஆறு ஆஸ்கர் விருதுகள்..!
உலகப் புகழ் பெற்ற இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவர் இயக்கிய படங்களான டைட்டானிக், அவதார் உள்ளிட்ட படங்கள் உலக திரைப்பட ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவை..! அவரது சமீபத்திய திரைப்படமான அவதார் பலகோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்டு, சிறப்பான முறையில் திரை உலகினை வலம் வந்தது. இப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைக்கும் என எல்லோராலும் எதிர் பார்க்கப்பட்டது.
இந்நிலையில் சென்ற ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதிக அளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என பலராலும் எதிர்பார்ரக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'(Avatar) படத்தை பின்னுக்குத் தள்ளியது 'ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) திரைப்படம்.
இத்திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது ஒரு பெண் ஆவார். அவரது பெயர் கேத்தரின் பிக்லோவ் (Kathryn Bigelow). இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி ஆவார். இத்திரைப்படம் மிகக் (அவதாரை விட) குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படமாகும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சந்திக்கும் நிகழ்வுகளை மையாமகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒலித் தொகுப்பு (Best Film, Best Director, Best Original Screenplay, Editing, Sound Mixing and Sound Editing) என ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.
ஆஸ்கர் வரலாற்றில் முதன் முதலாக சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெறும் முதல் பெண்மணி கேத்தரின் பிக்லோவ் ஆவார். அதை இந்த மகளிர் தினத்தில் அவருக்கு கிடைத்திருப்பது அளவற்ற மகிழ்ச்சியை அவருக்கு மட்டுமின்றி, இத்துறையில் இருக்கும் மகளிருக்கும், இத்துறையை நேசிக்கும் மகளிருக்கும் மட்டற்ற மகிழ்ச்சியைத் தரும் என்பதில் ஐயமில்லை.
(அவதார் படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன: சிறந்த காட்சிப் படிம உருவாக்கம் (Visual Effects), கலை (Art Direction), ஒளிப்பதிவு(Cinematography) ஆகிய துறைகளில் விருது வென்றது இத்திரைப்படம்.)
இந்நிலையில் சென்ற ஆண்டிற்கான ஆஸ்கார் விருதுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று இரவு அறிவிக்கப்பட்டன. அதிக அளவில் ஆஸ்கர் விருதுகளை அள்ளிக் குவிக்கும் என பலராலும் எதிர்பார்ரக்கப்பட்ட ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்'(Avatar) படத்தை பின்னுக்குத் தள்ளியது 'ஹர்ட் லாக்கர்' (The Hurt Locker) திரைப்படம்.
இத்திரைப்படம் ஆறு ஆஸ்கர் விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இப்படத்தை இயக்கியது ஒரு பெண் ஆவார். அவரது பெயர் கேத்தரின் பிக்லோவ் (Kathryn Bigelow). இவர் ஜேம்ஸ் கேமரூனின் முன்னாள் மனைவி ஆவார். இத்திரைப்படம் மிகக் (அவதாரை விட) குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட படமாகும். ஈராக்கில் அமெரிக்கப் படைகள் சந்திக்கும் நிகழ்வுகளை மையாமகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் இது.
ஹர்ட் லாக்கர் படத்தில் இடம்பெற்ற ஒரு காட்சி
சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், உண்மைச் சம்பவத்தை அடிப்படியாகக் கொண்ட சிறந்த திரைக்கதை, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒலித் தொகுப்பு (Best Film, Best Director, Best Original Screenplay, Editing, Sound Mixing and Sound Editing) என ஆறு பிரிவுகளில் இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுகளை
தட்டிச் சென்றுள்ளது.
சிறந்த இயக்குனருக்கான ஆஸ்கர் விருதைப் பெற்ற மகிழ்ச்சியில் கேத்தரின் பிக்லோவ்
(அவதார் படத்திற்கு மூன்று ஆஸ்கர் விருதுகள் கிடைத்தன: சிறந்த காட்சிப் படிம உருவாக்கம் (Visual Effects), கலை (Art Direction), ஒளிப்பதிவு(Cinematography) ஆகிய துறைகளில் விருது வென்றது இத்திரைப்படம்.)
Tuesday, March 02, 2010
என் பதின்ம கால நினைவுகள்..!
சேலம் மாவட்டம், ஆத்தூரில் பிறந்தவன் நான். தேசிய நெடுஞ்சாலை 47 ஒட்டித்தான் எங்களது வீடு இருந்தது. சிறு வயதில் எங்களது வீட்டிற்கு அருகே அனைத்தும் கிடக்கும்..! அது சுகானுபவமான கிராமத்து வாழ்வு..!
அப்போது எனக்கு வயது ஏழு இருக்கும். என் வீட்டிற்கு முன்னே தேசிய நெடுஞ்சாலை 47 இருக்கிறது. 1987. டிசம்பர் 24 அன்று காலை. அனைத்து லாரிகளும், பேருந்துகளும் நின்று, தயங்கிச் தயங்கிச் சென்றன. எல்லா தனியார் வாகனங்களிலும் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது.
அன்று எம்.ஜி.ஆர் அவர்கள் இறந்து விட்டார், தமிழகமே திமிலோகப் பட்டுக் கொண்டிருந்தது. எங்கள் ஊரில் அவரது அபிமானிகள் எல்லாம், வாகனங்களை நிறுத்த சொல்லி சண்டை போட்டிக் கொண்டிருந்தனர். என் சட்டையில் நானும் ஒரு கறுப்பு ரிப்பன் கொடி குத்திக் கொண்டு, கையில் உருட்டுக் கட்டையோடடு…’ஏய் வண்டிய நிறுத்துங்கடா..’ என்றபடி ஒரு லாரியின் வெளிச்சம் தரும் கண்ணாடியை உடைக்கப் போனேன். கூட இருந்த பெரியவர் தடுத்து விட்டார். அது எல்லாம் தப்புப்பா..! அப்போ உர்ட்டுக் கட்டைய விட்டதுதான் இன்னிக்கு வரைக்கும் எடுக்கல.
*****
ஏரி, கிணறுகள், வயல்வெளிகள், ஆறு என நீராதாரங்கள் நிறைந்த இடம் அது. மழைக்காலம் வந்து விட்டால் போதும்… ஏரி, கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பி வழியும்..!
எங்கள் ஊரில் வஷிஷ்ட நதி ஓடுகிறது. அதை ஒட்டி எங்கள் ஊர் அமைந்ததால் அதற்கு ஆத்தூர் (ஆற்றூர் என்பது இப்படி மருவியிருக்கலாம்) என்று பெயர்.
பள்ளி செல்வதென்றால் தினமும் 2 கிலோ மீட்டர் நடந்து தான் செல்ல வேண்டும். அதுவும் அந்த ஆற்றைக் கடந்து தான் செல்ல வேண்டும். மழைக்காலமெனில் அந்த ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். அதில் இறங்கி சென்றால் ஆளையே இழுத்துச் சென்று விடும்.
அப்படி ஒரு முறை எனது (ட்ரவுசரை) கால்சட்டையை ஒரு கையால் தூக்கிப் பிடித்துக் கொண்டு, புத்தகப் பையை மறு கையால் தூக்கிக் கொண்டு ஆற்றின் நீரோட்டத்தில் இறங்கி நடந்தேன்… எப்படியாகிலும், மறுகரையைச் சேர வேண்டும், பள்ளிக்கு நேரமாயிற்று. நனையாமல் செல்ல வேண்டும், நீச்சலும் அறியாத வயது. ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலம் அது.
முக்கால் வாசி தூரம் கடந்து விட்டேன், நீரோட்டம் அதிகமாக, கால் வைத்த இடத்தில் இருந்த கல் உருண்டு விட நீரில் விழுந்தே விட்டேன்… எப்படியோ தத்துப் பித்தென்று தடுமாறி எழுவதற்குள் முழுதும் நனைந்தே போய்விட்டேன். ஆனால் என் புத்தகப் பையை மட்டும் நனைய விடவில்லை. பள்ளி சென்ற பிறகு.. ஈரத்தோடு அமர்ந்திருந்தேன்… காரணமறிந்த என் வகுப்பாசிரியை என் காதைத் திருகி திட்டினார். இனி ஆற்றுப் பக்கம் வராதே என்று..!
அன்று மதிய உணவு இடைவேளையின் போது எனது வகுப்பு நண்பர்களுடன் சேர்ந்து, அதே ஆற்றில் குதித்து, குதித்து, குளித்து மகிழ்ந்தேன், நீர் செங்கலரில் இருக்கும்..! அதற்கெல்லாம் அசர மாட்டோம்… ஆற்றில் நீர் வற்றும் வரை தினமும் குளியல்தான். இப்போது அந்த ஆற்றில் கழிவு நீர்தான் வருகிறது. ம்ஹீம்..!
*****
காலரா தடுப்பூசி, மலேரியா தடுப்பூசி என பள்ளிக் கூடத்திற்கே வந்து தடுப்பூசி போடுவார்கள். எல்லோரும் ஊசி என்றால் பயந்து ஓடுவார்கள். நானும் எனது நண்பனொருவனும் ஊசி போடுவதென்றால் முதல் ஆளாய் சென்று கம்பிரமாய் கையைக் காட்டுவோம்..! மற்றவர்கள் எல்லாரும் வாயைப் பிளந்தபடி எங்களைப் பார்ப்பார்கள்..! அவர்கள் அப்படி பார்ப்பது எங்களுக்கு பெருமையாக இருக்கும்.
ஊசியை கையில் ஏற்றியவுடன் பலமாக தேய்த்து விட வேண்டும். இல்லையெனில் ஊசி போட்ட இடத்தில் மறுநாள் இட்லி போல் வீங்கி விடும். அதற்கு நாங்கள் ஒரு ராஜ தந்திரம் செய்வோம், கையை கொண்டு போய் பலமாக சுவற்றில் பலமாய் மோதுவோம்.. (கொஞ்சம் வலிக்காமத்தான்) மருந்து கரையனும்ல..!

மறுநாள் பள்ளிக்கு வருகையில், ஊசி போட்ட மற்ற மாணவர்கள் எல்லாம் ஒரு கை வீங்கியபடி, யானை தும்பிக்கையை போல் தூக்கி வருவார்கள். நாங்களோ இயல்பாய் வருவோம். அது ஒரு தனி பெருமிதம் எனக்கு..!*****
மிகவும் ஏழ்மைக் குடும்பத்தில் பிறந்து, அதனூடே வளர்ந்தவன் நான். நான் ஆறாம் வகுப்பு (1991) படிக்கும் போது, இலவச பஸ் பாஸ் தருவதற்காக, பள்ளியில் போட்டோ கேட்டார்கள். அப்போதுதான் என் அம்மா என்னை ஒரு ஸ்டுடியோவிற்கு அழைத்துச் சென்று, அவருக்கு பிடித்தது போல் தலையை சீவி விட்டு, பவுடர் பூசி விட்டு, போட்டோ எடுக்க வைத்தார். அப்போது என் மூக்குக்கு கீழே ஒரு காயம் ஆறாமல் இருந்தது. என் சட்டை கிழிந்திருந்தது. அதை எல்லாம் மறைப்பதற்கு என் அம்மா பலமாக முயற்சித்து ஓரளவு வெற்றியும் பெற்றார்.
அந்த புகைப்படம் கருப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட படம். என் வாழ்க்கையில் முதன் முதலாக (எனக்கு விவரம் அறிந்து) எடுக்கப்பட்ட படம். அது எனக்கு மிகவும் பிடிக்கும், என்னவளுக்கும் அந்த படமென்றால் மிகவும் பிடிக்கும்.
*****
ஏழாம் வகுப்பு படிக்கும் போது எனது பள்ளிக்கு தமிழாசிரியரா திரு மணி முத்து என்பவரும், அறிவில் ஆசிரியையாக வித்யா என்பவரும், சமூகவியல் ஆசிரியையாக புனிதா என்பவரும் வந்து சேர்ந்தார்கள். அவர்கள் வந்த பிறகுநான் எனது படிப்பின் தரம் உயர்ந்தது.
மணிமுத்து அவர்கள் பாடம் எடுக்கும் விதம் அவ்வளவு அருமையாக இருக்கும். அப்படியே மனதில் பதியும். திரிகூடராசப்பக் கவிராயரின் குற்றாலக் குறவஞ்சி. புறநானூறு, பாரதியின் பாஞ்சாலி சபதம் என எதுவாகிலும் அழகு தமிழை எளிமையாக புகுத்தி விடுவார். அவரது வகுப்பில் முதல் மாணவனாக வருவதற்கு ஆசைப்பட்ட மாணவர்களில் நானும் ஒருவன். அதன்படி வந்தும் காட்டினேன். ஏன் இதை இங்கு சொல்கிறேன் என்றால், என் தமிழ்ப்பற்றுக்கு வித்திட்ட இடம் இங்குதான், இவர்தான் என்பதே..!
*****
நான் எட்டாம் வகுப்பு சென்ற போது, எங்கள் வகுப்பிற்கு புதிதாய் ஒரு மாணவி வந்து சேர்ந்தாள். ஏழைகள் படிக்கும் பள்ளியில் பணக்காரப் பெண் ஒருவள் படிக்க வந்தால் எப்படி இருக்கும். அவளோ மெட்ரிகுலேஷனில் படித்து விட்டு, இங்கு வந்திருக்கிறாள்.

ஆங்கிலம் அவளுக்கு அத்துபடி, அவளின் கையெழுத்து, மணி, மணியாய் அழகாக இருக்கும். அவளது எழுத்தின் மேல் எனக்கு தீராக் காதல் ஏற்பட்டது. அப்படியே அவளின் மேலும்.
எண்ணெய்த் தலையும், சற்று கிழிந்த உடைகளுமாய் வரும் என் வகுப்புத் தோழிகளிடையே, நவீன ஆடை, நேர்த்தியான தலை சீவல், அழகு முகம் என தேவதை போல் வருவாள். சைக்கிளில்தான் பள்ளிக்கு வருவாள், இல்லையென்றாள் அவளன்னையுடன் டிவிஎஸ் 50-யில் வருவாள். அப்போதெல்லாம் சைக்கிள் என்றாலே பெரிய விஷயம், டிவிஎஸ் 50 என்றால் கேட்கவா வேண்டும்.
அவளது நட்பு கிடைக்க அனைவரும் ஏங்க, நான் மட்டும் அவளை விட்டு ஒதுங்கியே இருந்தேன். வகுப்பில் கணிதம், ஆங்கிலத்தில் அவள் முதலிடம் எனில், தமிழ், அறிவியல், சமூக அறிவியலில் நான்தான் முதலிடத்தில் இருப்பேன்.
இப்படி படிப்பில் திறமையை வளர்த்துக் கொண்டேன். அதற்கு அவளும் ஒரு காரணம். ஆனால் அவளுடன் பேச வேண்டுமென்று மனசு துடிக்கும். ஆனால் பேச மாட்டேன். அவளே வந்து பேசட்டும் என இருந்து விடுவேன். ஆங்கிலம்தான் சுட்டுப் போட்டாலும் வரவில்லையே, கணிதப் பாடத்திலேனும் முதலில் வரவேண்டும் என்றபடி நந்தகுமார் ஆசிரியரின் வீட்டிற்கே டியூசன் சென்றேன்…
கொஞ்ச நாள் கழித்து, அவளும் அங்கு வந்து சேர்ந்து விட்டாள். ஒரு நாள் அவளே வந்து பேசினாள், ‘ஏன் என்னிடம் பேச மாட்டேன்கிற..? என்னிடம் பேச பிடிக்கலயா?’ என்றாள். ‘அப்படி எல்லாம் ஒன்றும் இல்ல’ என்று நழுவி விட்டேன். ஆனால் அவளாக வந்து பேசியது எனக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
ஒரு நாள் என் கையை வேண்டுமென்றே மிதித்து விட்டாள். வலியில் நான் ‘ஏய்… பாத்து போகமாட்டியா’ என்றேன்… ‘அட என்னடா ஆச்சு இப்ப… அப்படித்தாண்டா செய்வேன்’ என்றாள்… கையை மிதித்தது மட்டுமின்றி மரியாதை இன்றி பேசியது எனக்கு கோபத்தை வரவழைத்து விட்டது. அவளிடம் நேரே சென்று, ‘டா போட்டு பேசறியா… அப்புறம் நான் டீ போட்டு பேசவேண்டியிருக்கும் ஒழுங்கா பேசு’ என்றேன்… ‘உனக்கு அப்படி கூப்பிட தைரியம் இல்லன்னு சொல்லு…’ என்றபடியே ஓடி விட்டாள்.
‘என்ன… என்ன சொன்ன நீ.. மறுபடி சொல்லு’ என்றேன். இப்போது நிறுத்தி, நிதானமாகச் சொன்னாள் ‘உனக்கு என்னை அப்படிக் கூப்பிட தைரியம் இல்லன்னேன்..’ அதற்குள் ஆசிரியர் வந்து விட்டார். மனதிற்குள் அளவற்ற மகிழ்ச்சி…
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்… சும்மா இருக்கும் போது, வேண்டும்ன்றே கூட என்னைப் பார்த்து சத்தமில்லாமல் போடா என்பாள்… உடனே நானும் பதிலுக்கு.. போடி… என்பேன். அந்த தருணம் என் மனதில் ஆயிரம் சந்தோஷப் பூக்கள் பூக்கும். அப்படியாக என் பள்ளிக் காலம் இனிமையாக இருந்தது. 1992-93 கல்வியாண்டு என் வாழ்வில் மறக்க முடியாதது ஆகும். என் முதல் காதல் பூத்தது அங்குதான். அது அறியாத வயது என்றாலும்… அது மிக இனிமையானதாக இருந்தது. இன்று நான் சென்னையில்… அவள் எங்கேயோ..?
*****
கிணற்றில் நீச்சல் கற்றுக் கொண்டது, மரமேறி திருட்டுத்தனமாய் மாங்காய் பறித்தது, கோவில் திருவிழாவின் போது, தப்பாட்டத்திற்கு ஏற்றாற் போல் நடனமாடியது, கில்லி தாண்டில் விளையாடியது என எவ்வளவோ இருக்கு..!
*****
(என் பதின்ம கால நினைவுகளை அசை போட வைத்து, அதை எழுதுமாறும் அழைப்பு விடுத்த அன்புத் தோழி திவ்யா ஹரிக்கு என் நன்றிகள் பற்பல)
Saturday, February 27, 2010
இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது ஓரு தின கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!
தற்போது அஹமதாபாத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் மூன்றாவது ஒரு தினப் போட்டியின், ஒவ்வொரு பந்து வீச்சிற்குமான (Ball by ball Tamil Commentary) தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276169/276169_Tamil_mini.html
இந்திய நேரப்படி 2.30 மணியிலிருந்து.... உங்களுக்காக...
----------------------
இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..?
ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!
இணையதள வரலாற்றில் கிரிக்கெட் வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.
இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய விரும்பினால் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com
இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வர்ணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை, இத்தளத்தில் அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
(இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..!)

Wednesday, February 24, 2010
சச்சினின் உலக சாதனை! ஒரு தின கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச்சதம்
பிப்ரவரி, 24, குவாலியர்: இந்திய அணிக்கும், தென்னாப்பிர்க்க அணிக்கும் இடையே இன்று குவாலியரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இரண்டாவது ஒரு தின கிரிக்கெட் போட்டியில் முதல் இரட்டைச் சதமடித்த முதல் வீரர் என்ற உலக சாதனையைப் படைத்தார் சச்சின் தெண்டுல்கர்.
சச்சின் தெண்டுல்கர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். ஒரு தினப் போட்டிகளில் பல உலக சாதனைகளு தன்னகத்தே கொண்டுள்ள உலகின் முதல் வீரர் இவரே.
சர்வதேச ஒரு தின அரங்கில் அதிக பட்ச ரன்களைக் குவித்த முதல் மூன்று வீரர்கள் விவரம்
1) சச்சின் தெண்டுல்கர், 24.02.2010 அன்று குவாலியரில், தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக 147 பந்துகளில் 25 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் உள்பட 200* ரன்கள்
2) பாகிஸ்தான் வீரர். சயித் அன்வர், 21.05.1997 அன்று சென்னையில், இந்தியாவிற்கு எதிராக 146 பந்துகளில் 22 பவுண்டரிகள், 5 சிக்ஸர்கள் உள்பட 194 ரன்கள்
3) ஜிம்பாப்வே வீரர். கவென்ட்ரி, 16.08.2009 அன்று புலவாயோவில், வங்க தேசத்திற்கு எதிராக 156 பந்துகளில் 16 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள் உள்பட 194* ரன்கள்.
(* = கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை)
(* = கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை)
இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஓரு தின கிரிக்கெட் போட்டியின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!
தற்போது குவாலியரில் நடைபெற்றுக் கொண்டிருக்கும், இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது ஒரு தினப் போட்டியின், ஒவ்வொரு பந்து வீச்சிற்குமான (Ball by ball Tamil Commentary) தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276166/276168_Tamil_mini.html
இந்திய நேரப்படி 2.30 மணியிலிருந்து.... உங்களுக்காக...
----------------------
இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..!
ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!
இணையதள வரலாற்றில் கிரிக்கெட் வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.
இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமெனில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com
இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வரணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.

Tuesday, February 16, 2010
இந்திய அணி விளையாடும் கிரிக்கெட்போட்டிகளின் தமிழ் வர்ணனைகளைப் படிக்க..!
இந்திய தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் டெஸ்ட் போட்டிகள், ஒரு தினத் தொடர், அடுத்து வரும் ஐபிஎல் எனப்படுகிற இந்தியன் பிரீமியர் லீக் (IPL) உள்ளிட்ட அனைத்து கிரிக்கெட் போட்டிகளுக்குமான தமிழ் வர்ணனைகளை எழுத்து வடிவில் படிக்க ஆவலாக இருக்கிறீர்களா..!
ஒவ்வொரு பந்து வீச்சுக்கும் தமிழில் வர்ணனைகள் தந்து கொண்டிருக்கிறது கிரிக்கெட் ஆர்கைவ் எனும் இணையதளம். இனி இந்தியா, இலங்கை அணிகள் விளையாடும் அனைத்து ஆட்டங்களுக்கும் தமிழ் வர்ணனைகள் தர இருக்கிறது..!
இணையதள வரலாற்றில் கிரிக்கெட் வர்ணனையினை தமிழில் முதன்முதலாக வழங்கும் முதல் இணைய தளம் இந்த கிரிக்கெட் ஆர்க்கைவ் இணையதளம் என்பது கூடுதல் தகவல் ஆகும்.
இத்தளத்தின் தமிழ் வர்ணனை அழகு தமிழில் இருக்காது என்றாலும், எளிய தமிழில் இருகுகிறது. சில கிரிக்கெட் சொல்லாடல்களை அப்படியே (ஆங்கில) ஒலிபெயர்த்து பயன்படுத்துகிறது.
இதற்க்கான சில கருத்துப் பரிமாற்றங்களை நீங்கள் செய்ய வேண்டுமெனில் பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளுங்கள்..: moganan@gamil.com
இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..! தற்போது இந்த வர்ணனை பரிசோதனை முறையில் வந்து கொண்டிருக்கிறது. கிரிக்கெட் போட்டி நடைபெற்ம் நாளன்று, மட்டும் இந்த வர்ணனைக்ளை படிக்க முடியும். போட்டி நேரம் முடிந்து விட்டால் தமிழ் வரணனையும் முடிந்து விடும். இதே வர்ணனை அதிகார பூர்வமாக வரத் தொடங்கி விட்டால், அதனை எப்போது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம்.
இந்திய, தென்னாப்பிரிக்க அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டியின், தமிழ் வர்ணனைகளைக் காண இங்கே சொடுக்கவும்;
http://cricketarchive.com/Archive/Scorecards/276/276166/276166_Tamil_mini.html
(இத்தளத்தில் தமிழ் வர்ணனைகளை தருவது யார் தெரியுமா..? அது நான்தான்..!)
Labels:
இணையம்,
கிரிக்கெட்,
சமூகம்,
செய்திகள்,
நாட்டு நடப்பு
Friday, January 22, 2010
பிறப்பு சான்றிதழ் கேட்ட தேதியில் இறப்பு சான்றிதழ்..! - எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலத்தில் இப்படி ஒரு கூத்து..!
திருவனந்தபுரம், ஜன .22: திருவனந்தபுரம் மாநாகராட்சியில், கடந்த ஜனவரி 18-ம் தேதி, முகம்முது (13 வயது) என்ற சிறுவனுக்கு பிறப்புச் சான்றிதழ் கேட்டு அவனது தந்தையார் விண்ணப்பித்திருந்தார்.
இரு நாட்களுக்கு முன்பு, அச்சிறுவன் பிறந்த தேதியான டிசம்பர் 1, 1997 தேதியிட்டு, ஒரு சான்றிதழ் வந்தது. அதை வாங்கிப் பார்த்த, அச்சிறுவனின் தந்தை அதிர்ச்சியில் உறைந்து விட்டார். காரணம், அவன் பிறந்த அதே தேதியில் அச்சிறுவன் இறந்து போனதாகவும், அவன் பிறந்த மருத்துவமனையிலேயே அவன் இறந்து போனதாகவும் குறிப்பிட்டு சான்றிதழ் வழங்கப் பட்டிருந்தது.
பள்ளியில் சேர்ப்பதற்காக சான்றிதழ் கேட்டால், அவன் பாடையில் போய்விட்டான் என்று அரசியந்திரம் அதிகார பூர்வமாக சான்று வழங்கியிருக்கிறது..! அட என்ட கேரளமே..! உனக்கேன் இந்த கேவலமே..!
தற்போது இது குறித்து மாநாகராட்சியிடம் புகார் கூறியிருக்கிறார் அச்சிறுவனின் தந்தை. இது குறித்து மாநாகராட்சி அதிகாரிகளிடம் கேட்டதற்கு கிளர்க் பதவியுலுள்ளோர் செய்த தவறு என்றபடி நழுவி விட்டனர்.
பின்னே முன்னால் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்கே சம்மன் அனிப்பிய நாடல்லவா இது... இந்தியாவின் முதல் குடிமகனுக்கே அப்படி நடந்தபோது... கடைக்கோடி குடிமகனுக்கு நடவாமலா போய்விடும்..!
அதுவும் இந்தியாவில் எழுத்தறிவு பெற்ற முதல் மாநிலமான கேரளத்தில், அதுவும் அதன் தலைநகரத்திலே இக்கூத்து என்றால்... கிராமங்களெல்லாம் எம்மாத்திரம்..!
வாழ்க பாரதம்... வளர்க அரசு ஊழியர்கள்..! ஒழிக பாவப்பட்ட இந்திய மக்கள்..!

Thursday, January 07, 2010
எனது அன்பு நண்பன் பிரேம் சந்திரனுக்கு திருமண வாழ்த்துக் கவிதை
என அன்பில் நிறைந்த நண்பன் பிரேம் சந்திரனுக்கு இன்று (ஜனவரி 07, 2010) திருமணம்... நான் துவண்டு போயிருந்த போதெல்லாம் எனக்கு ஊக்கத்தையும், உத்வேகத்தையும் அளித்த எனது அன்பு நண்பனுக்கு இன்று திருமணம்...
அவனது மண வாழ்க்கை மிக இனிதாய் அமைய வேண்டி அவனுக்காக நான் வரைந்த வாழ்த்துக் கவி இதோ...
'உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு' - குறள்
என்ற குறளின் இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டு என் நண்பன் பிரேம் சந்திரன்...
என்னோடு சேர்ந்து நீங்களும் அவனை மனதார வாழ்த்துங்கள்..!
(இப்படத்தில் உள்ள கவிதையின் முதல் (தடித்த) எழுத்துக்களை மேலிருந்து படித்துப் பாருங்கள்..! வசந்த காலப் பறவைகளின் பெயர் கிடைக்கும்... என்ன கிடைத்ததா..?)

Thursday, December 31, 2009
இனிக்க இனிக்க இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து...
போதுமடா
நண்பா...
போதுமடா...
2009-ல் பட்டதெல்லாம்
போதுமடா..!
வேலையில்லாத் திண்டாட்டம்...
உணவு விலை ராக்கெட் ஓட்டம்...
தங்க விலை தகிடுதத்தம்...
வீணர்களின் விரச ஆட்டம்...
ஏழைகளின் போராட்டம்...
பட்டதெல்லாம்
போதுமடா..
அனைத்தும்
பட்டென்று போகுமடா...
இழி நிறைந்த துன்பங்களெல்லாம்
இன்றோடு போகுமடா...
இதுவும் கடந்து போகுமடா..!
ஆங்கிலப் புத்தாண்டு
பிறக்குதடா..!
ஆனந்தம் பொங்குதடா..!
அனைவருக்கும்
ஏற்றம் தரும் வித்தடா..! ...
வாழ்வில் பெரும் மாற்றம் தரும்
இண்டாயிரத்தி பத்தடா..!
இது இவ்வருடத்தின் சொத்தடா..!
நல்லதை நினைப்போமடா...
நல்லதை செய்குவோமடா...
நானிலத்தை காப்போமடா...
நாடு சிறக்க வாழ்வோமடா...
வருக வருக புத்தாண்டே...
வளம் பெருக வருக...
நலம் பெருக வருக...
எழிலாய் நீ வருக..!
முத்தே நீ வருக... - இரண்டாயிரத்தி
பத்தே நீ வருக.. வருக..!
எங்களின் மதிப்பிற்குரிய வாசகர்களாகிய உங்களுக்கும், உங்களின் மேல் அன்பு கொண்டுள்ள அனைவருக்கும் எங்களின் மனம் நிறைந்த...
இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் - 2010
என்றென்றும் அன்பு'டன்'
உங்கள்
மோகனன்.
Friday, November 20, 2009
சாதனைகளின் நாயகன் சச்சின் தெண்டுல்கர் 30,000 ரன்களைக் கடந்தார்..!
அஹமதாபாத்தில் இலங்கை அணியும், இந்திய அணியும் மோதிய முதல் டெஸ்ட் போட்டி, இன்று டிராவில் முடிவடைந்தது. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்களுடன் ஏமாற்றிய சச்சின், இரண்டாவது இன்னிங்சில் 100 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அணியையும் தோல்வியிலிருந்து மீட்டு டிரா செய்வதற்கு துணை புரிந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் 35 ரன்களைத் தொட்ட போது சர்வதேச அரங்கில் 30,000 ரன்களைத் தொட்ட முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார்.
மேலும் அவரைப்பற்றி…
தலைசிறந்த இந்திய கிரிக்கெட் ஆட்டக்காரரான சச்சின் ரமேஷ் தெண்டுல்கர் மும்பை மாநகரத்தைச் சேர்ந்த ஒரு நடுத்தரக் குடும்பத்தில், (24 ஏப்ரல் 1973 அன்று) நான்காவது குழந்தையாகப் பிறந்தார். பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிய சாரதாஷ்ரம் வித்யாமந்திர் பள்ளியில் படித்தவர். உயர்நிலைப் பள்ளி படிப்போடு கல்விக்கு விடை தந்துவிட்டு கிரிக்கெட் வாழ்க்கையில் நுழைந்தவர்.
பின்னர் 1988/89 இல் மும்பை சார்பாக விளையாடிய இவர் 100 ரன்கள் குவித்தார். இந்த போட்டிதான் இவர் ஆடிய மாநிலங்களுக்கிடையிலான முதல் போட்டி என்பதும், அப்போது அவருக்கு வயது 15 என்பதும் குறிப்பிடத்தக்கது.
தெண்டுல்கர் 1989ஆம் ஆண்டு தம் 16வது வயதில் முதன் முறையாக பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதன்முதலாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமானார். இத்தொடரின்போது பாகிஸ்தான் வீரர் வாக்கர் யூனிஸ் வீசிய பந்து பட்டு சச்சினின் வாயில் காயம் ஏற்பட்டது. ரத்தம் அவரது சட்டையில் வழிந்தபடி இருந்தது. ஆயினும் அவர், உடனே களத்தை விட்டு வெளியேறாமல், மன உறுதியுடன் காயத்துடனே விளையாடினார். பாகிஸ்தான் அணிக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடரில் அவர் இரண்டு அரைசதங்கள் அடித்தார்.
1990-ல் இங்கிலாந்திற்கு எதிராக தனது முதல் டெஸ்ட் சதத்தை நிறைவு செய்தார். அது முதல் இந்திய அணியில் நிலையாக தொடர்ந்து ஆடி வரும் இவர், டெஸ்ட் மற்றும் ஒருதினப் போட்டிகளில் பல்வேறு சாதனைக்ளைப் படைத்துள்ளார்…
சச்சினின் சாதனைகள்
சர்வதேச அளவில்…
கடந்த 1989-ம் வருடம் நவம்பர் 15 அன்று சர்வதேச கிரிக்கெட் அரங்கில் காலடி வைத்தவர்.. இன்று வரை விளையாடிக் கொண்டிருக்கிறார். அண்மையில்தான் கிரிக்கெட்டில் 20 ஆண்டு காலத்தை நிறைவு செய்தார்.
சர்வதேச கிரிக்கெட்டில் 30,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் வீரர் (டெஸ்ட் போட்டிகளில் 12,877 + ஒருதினப்போட்டிகளில் 17178 + 20 ஓவர் போட்டியில் 10 = 30,065 ரன்கள்). இவரை தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (24,057 ரன்கள்), வெஸ்ட் இண்டீசின் பிரையன் லாரா (22,358 ரன்கள்) உள்ளனர்.
டெஸ்ட் போட்டி சாதனைகள்
டெஸ்ட் போட்டிகளில் அதிகளவு ரன் குவித்துள்ள முதல் வீரர்: 12,877 (இன்னும் 133 ரன்கள் எடுத்தால் 18,000 ரன்கள் என்ற புதிய சாதனை படைக்க இருக்கிறார்)
டெஸ்ட் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலில் 43 சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ரிக்கி பாண்டிங் 38 சதங்களுடன் இரண்டாமிடத்தில் உள்ளார்.
ஒருதினப் போட்டி சாதனைகள்
அதிக அளவு (436) ஒருதினப் போட்டிகளில் விளையாடி வருகிறவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (17,178) ரன்களைக் குவித்தவர், ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (45) சதங்களைக் கடந்தவர். (இதில் இவர் அடித்த 32 சதங்கள் இந்திய அணியை வெற்றிக்கு கொண்டு சென்றிருக்கின்றன), ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (91) அரை சதங்களைக் கடந்தவர், 436 ஒரு தினப் போட்டிகளில் அதிக அளவு (61 முறை) ஆட்டநாயகன் விருதைப் பெற்றவர், ஒரு தினப் போட்டி தொடர்களில் அதிக அளவு தொடர்நாயகன் விருதைப் பெற்றவர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரர். இந்தியா ஆடிய இறுதி ஒரு தினப் போட்டிகளில் அதிக (6) சதம் அடித்த வீரர், இந்த ஆறு போட்டிகளிலும் இந்திய அணிக்குத்தான் வெற்றி…
ஒரு தினப் போட்டிகளில் ஒரு அணிக்கு எதிராக 3,000 ரன்களைக் குவித்த முதல் வீரர் (ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 9 சதங்கள் உள்பட 3005 ரன்கள்), மேலும் 3 அணிகளுக்கு (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை முறையே: 3005, 2749, 2389 ரன்கள்) எதிராக 2000 ரன்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையும் இவர் வசம்தான்.
1998-ன் காலண்டர் ஆண்டில் (9 சதம்) அதிக சதம் அடித்த முதல் வீரர். ஒரு காலாண்டர் ஆண்டில் (1998) அதிக அளவு ரன் குவித்த முதல் வீரர் (34 போட்டிகளில் 1894 ரன்கள், சராசரி 65.31). தொடர்ச்சியாக 7 காலாண்டர் ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 1000 ரன்களைக் கடந்த முதல் வீரர்.
1999-ல் இந்தியாவில் நடைபெற்ற ஒருதினப் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில், ராகுல் திராவிட்டுடன் (153 ரன்கள்) ஜோடி சேர்ந்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் 186 ரன்கள் குவித்தார். இப்போட்டியில் இந்திய அணி 174 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதுவே ஒருதினப் போட்டிகளில் இவரது அதிகபட்ச ரன்களாகும். இதே போட்டியில்தான் திராவிட்டும் தனது ஒருதினப் போட்டிகளில் அதிகபட்ச ரன்களை பதிவு செய்தார்.
கிரிக்கெட் உலகின் உச்ச நட்சத்திரம் சச்சின் தெண்டுல்கரின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு கிரிக்கெட் உலகின் பிதாமகன் டான்பிராட்மேன் சொன்ன வார்த்தைகள் 'நான் என்னுடைய இளம் வயதில் எப்படி துடிப்போடு கிரிக்கெட் விளையாடினேனோ.. அந்த நாட்களை என் கண் முன்னே நிறுத்துகிறார் சச்சின். அவர் ஆட்டத்தில் என்னைப் பார்க்கிறேன்' என்ற மனதாரப் பாராட்டினார். இந்த பாராட்டினை சச்சின் இன்றும் நெகிழ்ச்சியுடன் நினைவு கூறுகிறார்.
இந்திய அணிக்காக விளையாடி வருவது குறித்து, அண்மையில் பத்திரிகையாளர்களிடம் சச்சின் தெரிவித்ததாவது: ‘இந்திய அணிக்காக விளையாடுவது என்பது எனது குழந்தைப்பருவத்து கனவு. இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பெருமை. அதில் சாதித்த நான் அதிர்ஷ்டவசமாக தொடர்ந்து இன்றுவரையிலும் வாய்ப்பு பெற்று வருகிறேன். இந்த நீண்ட பயணத்தில் தேசத்துக்காக, என்னால் முயன்றவரை பங்களிப்பு செய்து வருகிறேன்.’ என்றார்.
இவருக்கு இந்திய அரசு பத்மவிபூஷன் பட்டம் வழங்கி கௌவுரவித்துள்ளது.
இப்படி... இவர் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார்… இந்திய அணிக்கு திராவிட் எப்படி அணியின் சுவர் என வர்ணிக்கப் படுகிறாரோ… அது போல் கிரிக்கெட்டின் சுவர் என சச்சினை அழைத்தால் அது மிகையில்லை.
இவர் இன்னும் பல சாதனைகள் படைப்பார், வரும் 2011-ம் ஆண்டில் உலகக் கோப்பையை இந்திய அணிக்கு பெற்றுத் தருவதை லட்சியமாகக் கொண்டுள்ளார்.
Labels:
கிரிக்கெட்,
சச்சின் தெண்டுல்கர்,
சமூகம்,
நாட்டு நடப்பு
Thursday, November 19, 2009
உலகில் லஞ்ச, ஊழல் நடைபெறும் 180 நாடுகளின் பட்டியலில் இந்தியாவிற்கு 84வது இடம்..!
இப்பட்டியல் 10 புள்ளிகள் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.அதிக லஞ்ச, ஊழல் கொண்ட நாடுகள் குறைந்த அளவு புள்ளிகளைப் பெறும். அதிக புள்ளிகளைப் பெறும் நாடுகளில் லஞ்சம் குறைவு என்றும் கணக்கிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த ஆண்டு பட்டியலில் 3.4 புள்ளிகளுடன் இந்தியா 84வது இடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு அது 85 வது இடத்தில் இருந்தது. லஞ்சத்தை ஒழிப்பதில் கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் இப்போது ஒரு இடம் முன்னேறியுள்ளது.
இந்தப் பட்டியலில் 1.1 புள்ளிகளுடன் அதிக லஞ்சம் தாண்டவமாடும் நாடாக சோமாலியா முதலிடத்தில் உள்ளது. அடுத்த 4 இடங்களை முறையே ஆப்கானிஸ்தான், மியான்மர், சூடான், ஈராக் பிடித்தன. 9.4 புள்ளிகளைப் பெற்று குறைந்த அளவு லஞ்சம் நிலவும் நாடாக நியூசிலாந்து தேர்வானது. கடந்த ஆண்டு முதலிடத்தில் இருந்த டென்மார்க்கை அது 2ம் இடத்துக்கு தள்ளியது. டென்மார்க் பெற்ற புள்ளிகள் 9.3. சிங்கப்பூர், சுவீடன் 9.2, சுவிட்சர்லாந்து 9 புள்ளிகளுடன் முறையே அடுத்த 2 இடங்களைப் பிடித்தன. தவிர, பின்லாந்து, ஹாலந்து, ஆஸ்திரேலியா, கனடா, ஐஸ்லாந்து ஆகியவை லஞ்சம் குறைவான 10 நாடுகளில் இடம்பெற்றுள்ளன. நமது அண்டை நாடுகளில் மிகச் சிறியதான பூடான், 5 புள்ளிகளுடன் 49வது இடத்தில் உள்ளது.
அங்கு இந்தியாவை விட லஞ்சம் குறைவு. 2004ம் ஆண்டு பட்டியலில் 2.8 புள்ளிகளுடன் இந்தியா 90வது இடத்தில் இருந்தது. சுமார் 5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது 0.6 புள்ளி உயர்ந்து 6 இடங்கள் முன்னேறியுள்ளது.
நன்றி: Times of India and Dinakaran
Monday, November 16, 2009
ஹேமந்த் கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் கொல்லப்படவில்லை..? இந்தியர்களால் கொல்லப்பட்டார்..?! - திடுக்கிட வைக்கும் உண்மைகள்..!
ஹேமந்த் கார்க்கரே… பெயரைப் படித்தவுடன் ஞாபகம் வருகிறதா..? இந்தியாவின் மானம் காக்க, வீர மரணம் எய்திய மாவீரர். இவர் யார் என்று இன்னும் தெரியவில்லையெனில் தெரிந்து கொள்ளுங்கள். கடந்த செப்டம்பர் மாதம், பாகிஸ்தான் தீவிரவாதிகள் மும்பையில் உள்ள தாஜ் ஹோட்டலுக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய போது, அவர்களை கொன்று குவித்து விட்டு, அங்குள்ளோரை காப்பாற்றும் போது தன் இன்னுயிரை ஈந்த மாவீரன் இந்த ஹேமந்த் கார்க்கரே. அதுமட்டுமின்றி பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவரராக இருந்து அந்த தாக்குதலை முறியடிக்க முன்னின்று நடத்திய வீரர்.
புல்லட் புரூப் எனப்படுகின்ற குண்டு துளைக்காத சட்டை அணிந்திருந்த கார்க்கரே பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இல்லை, அவர் உண்மையில் இந்தியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை தாக்குதல் சம்பவம் – சிறு பிளாஷ் பேக்
தேதி : 26 செப்டம்பர் 2008. இடம் : மும்பை, தாஜ் (ஐந்து நட்சத்திர) ஹோட்டல்
பாகிஸ்தானிலிருந்து இரவோடு இரவாக வந்த தீவிரவாதிகள் வழியெங்கும் துப்பாக்கி சூடு நடத்தியபடியே, தாஜ் ஹோட்டலுக்குள் சென்று விட்டனர். அங்குள்ளோரை பிணைக் கைதிகளாகப் பிடித்து வைத்துக் கொண்டனர். இத்தாக்குதலையடுத்து அங்கு பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான அதிரப்படை தாஜ் ஹோட்டலுக்கு விரைந்தது. அங்கு பயங்கரவாதிகள் பிடித்து வைத்திருந்த 7 அயல்நாட்டினர் உள்பட 15 பேரை மீட்க அதிரடிப்படை முற்பட்டது.
அப்போது பயங்கரவாதிகளுக்கும், அதிரடிப்படையினருக்கும் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாத தடுப்பு பிரிவு தலைவர் ஹேமந்த் கார்க்கரே சுட்டுக் கொல்லப்பட்டார். கார்க்கரே புல்லட் புரூப் சட்டை அணிந்திருந்தும், அதையும் மீறி அவரது உடல்களில் குண்டு பாய்ந்து பலியானார்.
இதே போல மெட்ரோ சினிமா தியேட்டரில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை பிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரி அசோக் காம்தே தலைமையிலான படை சென்றது. அப்போது நடந்த சண்டையில் அசோக் காம்தே சுட்டுக் கொல்லப்பட்டார்.
மும்பை என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட விஜய் சலாஸ்கார் என்ற காவல்துறை அதிகாரியும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் பலியானார்.
இதேபோல பல்வேறு இடங்களிலும் பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் 2 அதிகாரிகள் உள்பட 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதிரடிப்படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அஜ்மல் கசாப் எனும் தீவிரவாதி உயிரோடு பிடிக்கப்பட்டான்.
இதுதான் அன்று நடைபெற்ற சம்பவங்கள்…
தற்போது விடயத்திற்கு வருகிறேன்...
மாவீரன் ஹேமந்த் கார்க்கரே பயன்படுத்திய புல்லட் ப்ரூப் ஜாக்கெட் பயன்படுத்தத் தகுதியற்றது என்று தற்போது தெரிய வந்திருக்கிறது. அதன் தரம் பற்றி தெரிந்திருந்தும்… அது பயன் படுத்தத் தகுதியற்றது எனத் தெரிந்திருந்தும் நமது ஈனமிகு அதிகாரிகள் அதை அரசின் செலவில் விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கிறார்கள். அதில் ஊழல் செய்ததின் விளைவு… பல மாவீரர்களின் உயிர்களை அது குடித்து விட்டது.
இது குறித்து, பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ள சமூக ஆர்வலர் சந்தோஷ் டாண்ட்கர் (Santhosh Dountkar) மேற்சொன்ன திடுக்கிடும் தகவலகளை வெளியிட்டுள்ளார்.
இவரும், இவரது வழக்கறிஞரும், முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ஒய்.பி.சிங் ஆகிய மூவரும் சேர்ந்து, தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மேற்குறிப்பிட்ட உண்மைத் தகவல்களை வெளிக் கொணர்ந்துள்ளனர்.
புல்லட் ப்ரூப் ஜாக்கெட் என்பது குண்டு, கத்தி போன்ற கொடூர ஆயுதங்களால் தாக்கினாலும், அது நம் உடலைத் தாக்காது. அந்த ஆடை உலோக இழைகளைக் கொண்டும், பைபர் இழைகக் கொண்டும் தயாரிக்கப்படுவது ஆகும். (படம் பார்க்க)
இதை அணிந்து கொண்டால் குண்டு நம் உடலைத் தாக்காதாவறு தற்காத்துக் கொள்ளலாம். வெடிகுண்டு நிபுணர்களும் இதைப் பயன்படுத்துவர். இது கழுத்திலிருந்து அடி வயிறுவரை பாதுகாக்கும் கவசம் போன்று இருக்கும். (இதிகாசத்தில் வரும் கர்ணனின் கவச குண்டலம் போன்று…)
அப்படிப்பட்ட கவசத்தை அணிந்திருந்தும், குண்டு துளைத்து கார்க்கரே இறந்தது ஏன்?. இதுபற்றி அறிந்து கொள்ள, தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி மும்பை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ‘தாக்குதலின் போது அணியப்பட்ட புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் எங்கு வாங்கப்பட்டவை, யாரிடம், எப்போது, எவ்வளவு கொடுத்து வாங்கப்பட்டது, என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்பட்டது என்று நம்மவர்கள், நியாயமான கேள்விகள் கேட்டு அனுப்பி உள்ளனர்.
இது, கடந்த 2008 டிசம்பர் மாதத்தில் தகவலறியும் உரிமைச் சட்த்தின் கீழ் கேட்கப்பட்டது. இதற்க்கான பதில் இந்த வருடம் ஏப்ரல் மாதம்தான் கிடைத்தது. அதுவும் எப்படி..? ‘அதற்க்கான கோப்புகள் காணவில்லை என்பதால்… நீங்கள் கேட்ட தகவல்களை எங்களால் தர இயலவில்லை’ என்று..!?
அதாவது காவல் துறையின் தலைமைப் பொறுப்பு வகிக்கும் அலுவலகத்திலேயே கோப்புகளைக் காணோமாம்… (நாம் ஏதேனும் காணவில்லை எனில் காவல் துறையை நாடுவோம்... அங்கேயே கோப்புகளைக் காணோமாம்... அடங்கப்பா... தலை சுத்துடாங்கப்பா...) இருந்தாலும் விடாது போராடிய நம்மவர்கள்.. பரவாயில்ல.. இருக்கும் வரையிலான தகவல்களைக் கொடுங்கள் என மீண்டும் முறையிட.. ‘ அதன் பிறகு, அவர்கள் பட்டும் படாத தகவல்களைக் கொண்ட கோப்புகளை அளித்தனர்.
அதனை ஆய்வு செய்த போதே…இதில் பலவிதமான ஊழல்கள் நிறைந்துள்ளன என்பதை நம்மவர்கள் கண்டு பிடித்து விட்டனர்.
அவர்கள் அளித்த விவரத்தின்படி நம்மவர்கள் கண்டுபிடித்த அதிர்ச்சியூட்டும் தகவல்கள்: (இத்தகவல்களை எல்லாம் நம்மவர்கள் தொடுத்துள்ள பொது நல வழக்கில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளவை ஆகும்)
1) ஐம்பத்தி ஐந்து புல்லட் ப்ரூப் ஜாக்கெட் வேண்டுமென்று மும்பை காவல் துறை ஆணையர் அலுவலகம், 2001 டிசம்பர் 6 அன்று டெண்டர் கோருகிறது.
2) பூனேவிலிருக்கும் என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் என்ற நிறுவனம், இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டை தயாரிப்பதில் எந்த ஒரு அனுபவமே இல்லாத நிறுவனமாக இருந்தும், தனது விலை விவர விண்ணப்பத்தை (கொட்டேஷனை) 2002, ஜனவரி 3-ம் தேதி சமர்ப்பிக்கிறது.
3) 2002, மார்ச் 30-ம் தேதி இந்த விலை விவர விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்வதாக மும்பை காவல்துறை ஆணையரக அலுவகம் கடிதம் வாயிலாக தெரிவிக்கிறது.
4) இதே தேதியில், என்.டி.பி. ஹைடெக் செராமிக்ஸ் நிறுவனம் இந்த புல்லட் ப்ரூப் ஆடைகளை, காவல் துறை ஆணையரக அலுவலகத்திற்கு அனுப்பி வைத்து விட்டதாக கடிதம் அனுப்பி இருக்கிறது.
5) ஆனால், தணிக்கைத் துறையினரிடமிருந்து பெறப்பட்ட தகவல்கள் மூலம் ஜூன் 4, 2002 அன்றுதான் இந்த டெண்டர் ஒப்புக் கொள்ளப் பட்டிருக்கிறது. இதையடுத்த ஒரு மாதத்திலேயே 55 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளுக்குப் பதிலாக 110 புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வாங்குவதற்கு ஆர்டர் கொடுக்கப்பட்டிருக்கிறது.
6) இதனுடைய மொத்த கொள்முதல் விலை ரூபாய் 24.71 லட்சம் ஆகும். ஆனால் 2004-ல்தான் இந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் வந்து சேர்ந்துள்ளன. இதன் பிறகே காசோலை மூலம் அந்த நிறுவனத்திற்கு பணம் வழங்கப்பட்டிருக்கிறது.
7) வந்து சேர்ந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை சோதனையிட்டதில், அவைகள் தரமற்றவை என்றும், அவைகளைப் பயன்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகும் என்றும் தெரிய வந்தது. ஆதலால் அந்த புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளனைத்தும் அதே நிறுவனத்திடம் திருப்பி அனுப்பப்பட்டன. பணமும் திரும்பப் பெறப்பட்டது. இது நடந்தது 2004. செப்டம்பர் 2.
8) தரமற்ற பொருட்களை கொடுத்தற்காகவும், காலம் தாழ்த்தி கொடுத்ததற்காகவும் அந்த நிறுவனத்தின் மேல் அபாராதம் விதித்தல் போன்ற நடவடிக்கையை அந்த காவல் துறை ஆணையரக அலுவலகம் எடுத்திருக்க வேண்டும்.. ஆனால் ஏனோ அது எடுக்கப்படவில்லை.
9) 2004, டிசம்பரில் அதே நிறிவனம் புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளில் இருந்த குறைகளை சரிசெய்து விட்டதாகக் கூறி, அதே தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை ஒப்படைத்துள்ளது.
10) அது முறையாக சரிசெய்யப்பட்டிருக்கிறதா..? பயன்படுத்த முடியுமா..? தரமானதாக இருக்கிறதா..? என்று யாரும் அதை சோதனை செய்யவில்லை. (சோதனை செய்ததற்க்கான ஆதாரம் ஏதும் இல்லை…) அப்படியே வாங்கி வைத்துக் கொண்டனர். அந்நிறுவனமோ கொடுத்த பணத்தை 2005, ஜூலை 14 அன்று வாங்கிக் கொண்டது.
இந்த தரமற்ற புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளைத்தான் அன்று பல உயிர்களைக் காப்பற்றுவதற்க்காக ஹேமந்த் கார்க்ரே உள்ளிட்ட பல மாவீரர்கள் அணிந்து கொண்டு போரிட்டனர். அந்த வீரப்போராட்டத்தில் தீவிரவாதிகளின் குண்டுகளுக்கு இரையாகி அவர்கள் வீரமரணம் எய்தினர்.
(தாக்குதலுக்கு முன்பாக கார்க்கரே புல்லட் ப்ரூப் உடையை அணிந்து கொண்டிந்த காட்சி...)
இந்திய ராணுவத்திற்கான தளவாடப் பொருட்களை தயாரிக்கும் அமைப்பான டி.ஆர்.டி.ஓ ( Defence Research & Development Organisation: DRDO)) வின் தர அளவீட்டின்படி, புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகள் என்பது கழுத்திலிருந்து, அடிவயிறு வரை கவசமாக இருக்கும். ஆனால் இவர்கள் வாங்கிய புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளோ பனியன் போன்ற அமைப்பில் இருந்தது.. (பார்க்க படம்…)
இந்த ஜாக்கெட்டுகள் தரமானவைகளாக இருந்திருந்தால்... அன்று அத்துனை மாவீரர்களின் உயிர்களும் பறிபோயிருக்குமா..? அவர்களுடைய திறமைகள் மண்ணோடு மண்ணாகியிருக்குமா..?
இப்போது சொல்லுங்கள்..? ஹேமந்த் கார்க்கரே போன்ற மாவீரர்களை தீவிரவாதிகள் கொன்றார்களா..? ஊழலின் ஊற்றுக் கண்ணாக இருந்த இந்தியர்கள் கொன்றார்களா..? வீரபாண்டிய கட்டபொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பனுக்கும்.. இந்த ஈனப்பிறவிகளுக்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும்…
இந்த வழக்கின் மூலம் நம்மவர்கள் … இது குறித்து தனியாக விசாரணைக் கமிஷன் அமைத்து… உண்மையைக் கண்டறிந்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என மனு செய்திருக்கிறார்கள்.
ஏனோ… தானோ என்று கிடைத்த கோப்பிலேயே இவ்வளவு தகவல்கள் என்றால், சரியான கோப்புகள் கிடைத்தால்..? இந்த நாய்களின்.. இல்லை… இல்லை… நாய்கள் நன்றி உள்ளவை… இந்த ஈனப் பன்றிகளின் ஈனச்செயல்கள் வெளிக்கொண்டு வந்துவிடமுடியாதா என்ன..?
இது தேசத்துரோகத்திற்கு இணையான குற்றம்… இதற்குண்டானவர்களை கண்டு பிடித்து இதே புல்லட் ப்ரூப் ஜாக்கெட்டுகளை அணியவைத்து அவர்களை நடுரோட்டில் வைத்து சுட்டுத் தள்ள வேண்டும்…
இது போன்ற ஈனப் பன்றிகள் இருக்கும் வரை எம் தேசம் நிம்மதியாக வாழுமா..? வாழ்க எம் தேசம்..! வளர்க தேசத் துரோகிகள்..!
(இந்தச் செய்தியை எனக்குத் தெரிந்த வரையில், எந்த ஒரு தமிழ் நாளிதழ்களும் வெளியிடவில்லை என்பதை மிகுந்த வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறேன். இத்தகவலை டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் (13.11.2009) வெளியிட்டுள்ளது. இதன் முழுமையான ஆங்கில மூலத்தைப் பார்க்க கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்…)
http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOINEW&BaseHref=TOICH/2009/11/13&PageLabel=10&EntityId=Ar01001&ViewMode=HTML&GZ=T
(எனக்கு அவ்வளவாக ஆங்கிலப் புலமையில்லை, ஆன வரை முயற்சித்திருக்கிறேன்… தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டவும்…)
செய்தி மற்றும் புகைப்பட உதவி: http://timesofindia.indiatimes.com/
Labels:
அரசியல்,
சமூகம்,
தேசியம்,
நாட்டு நடப்பு,
பொது,
மும்பை தாக்குதல்
Thursday, November 05, 2009
17,000 ரன்களைக் கடந்தார் சச்சின் தெண்டுல்கர்...
ஹைதராபாத், நவ. 5: உலக கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென் தனி முத்திரை பதித்துக் கொண்டிருப்பவர், இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம்.. சச்சின் தெண்டுல்கர்...
ஒருதின கிரிக்கெட் போட்டிகளில் இவர் பலவிதமான உலக சாதனைகளைப் படைத்துள்ளார். அச்சாதனைகளில் இன்று இன்னுமொரு மணிமகுடம் இது என்றே சொல்லாலாம்.
ஒரு தின கிரிக்கெட் போட்டிகளில், ஹைதராபாத்தில் இன்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒரு தினப் போட்டியில் சச்சின் தெண்டுல்கர் 7 ரன்களைக் கடந்த போது, 17,000 ரன்களைக் கடந்த உலகின் முதல் கிரிக்கெட் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இச்சாதனையை அவர் 435 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்று சாதித்துள்ளார். இதுவரை இவர் 91 அரை சதங்களும், 45 சதங்களும் குவித்துள்ளார்.
ஒருதினப்போட்டிகளில், இவர்தான் முதன்முறையாக 12000 ரன்கள், 13000 ரன்கள், 14000 ரன்கள், 15000 ரன்கள், 16000 ரன்கள், 17000 ரன்கள் என வரிசையாக குவித்து சாதனை படைத்தவர் ஆவர்.. அதில் முதன் முறையாக இச்சாதனைகளைப் படைத்ததும், அதை மீண்டும் மீண்டும் முறியடித்ததும் இவரேதான்...
Monday, November 02, 2009
வலை முகவரிகள் அனைத்தும் இனி அவரவர் தாய்மொழியிலேயே கிடைக்கும்..!
நாம் ஏதேனும் ஒரு வலைப்பக்கத்திற்கு செல்ல வேண்டுமென்றால், இணையத்தில் (உதாரணத்திற்கு) www.moganan.org என்று முழுவதுமாக ஆங்கிலத்தில்தான் தட்டச்சு செய்ய வேண்டியிருக்கிறது. இதை மாற்றி இனி அவரவர்களின் தாய்மொழியிலேயே வலைத்தளம் மட்டுமன்றி அவர்களின் வலை முகவரியையும் உருவாக்கிக் கொள்ளலாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
அதன்படி நமது தாய்மொழியான தமிழ் மொழியிலேயே வலை முகவரிகள் விரைவில் கிடைக்கவிருக்கின்றன. உதாரணத்திற்கு உஉஉ.மோகனன்.தொகு என நாம் தமிழிலேயே வலை முகவரியைப் பெற்றுக் கொள்ளலாம். ( இங்கு www-க்கும் org -க்கும் எனக்குத் தெரிந்த உதரணத்தில் எழுதியிருக்கிறேன்... www, com. org, in, net...போன்றவற்றிற்கு தமிழாய்ந்தவர்கள் இனி சுந்தரத் தமிழில், சுதந்திரமாகப் பெயரிடுவார்கள் என நம்புவோமாக... )
இந்த அறிவிப்பை உலகளவில் இணையத்தை ஒழுங்குமுறைப்படுத்தும் ஆணையமான ஐ.சி.ஏ.என்.என் ( ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) அறிவித்துள்ளது. கடந்த வாரம் தென்கொரியாவிலுள்ள சியோல் நகரில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பின் தலைவரான ராடு பெகுஸ்ட்ரோம் கூறுகையில் '' இந்த முறை நம்பமுடியாததாக இருந்தாலும், உலகை இணைக்கும் இணையங்களை உலகம் முழுவதும் இணைக்கும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க, முதல் முயற்சியாக இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
இப்படி, உலக மொழிகளில் இணைய முகவரிகளை உருவாக்கிக் கொள்ள வருகிற நவம்பர் 14-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் இந்த முறை அமலுக்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
நன்றி: தினத்தந்தி மற்றும் http://www.icann.org/
இச்செய்தியின் முழுமையான ஆங்கில மூலத்தைப் படிக்க கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்... http://www.icann.org/en/announcements/announcement-30oct09-en.htm

தமிழ் மென்பொருள்கள்,
நாட்டு நடப்பு
Thursday, October 29, 2009
பூரி ஜெகன் நாதர் கோவிலில் 800 ஆண்டுகளாக இருந்த தேவதாசி முறை ஒழிந்தது
பூரி, அக். 29: ஒரிஸ்ஸாவிலுள்ள பூரி ஜெகன் நாதர் கோவிலில் கடந்த 800 ஆண்டுகளாக இருந்து வந்த தேவதாசி முறை அடியோடு ஒழி்ந்தது.
தேவதாசி எனபவர்கள் பெரும் கோயில்களுக்கு நடனமாடுவதற்காக சிறுவயதில் நேர்ந்து விடப்படும் பெண்களை குறிக்கும். இச்சொல் தேவன் (இறைவன்) + தாசி (அடிமை) = இறைவனின் அடிமை என்ற பொருள் படும். இவ்வழக்கம் 1930களுக்கு முன்பு வரை வழி வழியாக கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்த அமைப்பு நல்ல குறிக்கோளுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் பின்னாட்களில் இவர்கள் கோயில்களை நிர்வாகித்த மேல் வர்க்கத்தினருக்கு அல்லது ‘அதிகார வர்க்கத்தினர்’களுக்கு நடனமாடியதோடு மட்டுமல்லாமல், அவர்களுடைய பாலியல் அடிமைகளாகவும் பயன்படுத்தப்பட்டனர். இதனால், இம்முறைக்கு 1920 முதற்க்கொண்டு இந்தியாவில் பெரிய எதிர்ப்பு இருந்தது, அதன் காரணமாக 1947-ல் தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஆயினும் பூரி ஜெகன் நாதர் கோவிலில் இம்முறை கடைபிடிக்கப்பட்டு வந்தது. கடந்ந 1990 களின் தொடக்கத்தில் புதிய தேவதாசிகளைக் கொண்டு வந்து இக்கோவிலில் வைத்திருக்க முயற்சி செய்தனர். ஆனால் தேசிய அளவில் இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அம்முயற்சி தோல்வியில் முடிந்தது. அதன்பிறகு எந்த பெண்ணும் அக்கோவிலில் தேவதாசியாக இருக்க முன்வரவில்லை. ஆதலால் இந்த தேவதாசி முறை அடியோடு இங்கு ஒழிந்து விட்டதாகக் கருதப்படுகிறது.
கோவிலில் நடனமாடுவது, கோவிலை தூய்மைப் படுத்துவது உள்ளிட்ட 36 விதமான சேவைகளை இந்த தேவதாசிகள் அக்கோவிலில் செயவார்களாம். இம்முறை கடந்த 12-ஆம் நூற்றாண்டிலிருந்து இக்கோவிலில் பின்பற்றப்பட்டு வருகிறதாம். இக்கோவிலில் மட்டுமே இறைவனுக்கு பெண்கள் சேவை செய்வது அனுமதிக்கப்படுகிறது என ஒரு ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Wednesday, October 07, 2009
ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் படுகொலை: உடல் கண்டுபிடிப்பு
மெல்போர்ன், அக்.7: ஆஸ்திரேலியாவில் கடந்த 2 வாரங்களுக்கு முன் காணாமல் போன இந்திய தொழில் அதிபர் பிரதீப் குமார் (வயது 33) கொலை செய்யப்பட்டார். அந்நாட்டின் விக்டோரியா மாகாணத்தில் அவரது உடல் புதன்கிழமை (இன்று) கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரதீப் குமார் ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள மில்துரா நகரத்தில் ஓராண்டிற்கும் மேலாக வசித்து வருகிறார். அங்கு ஒப்பந்த முறையில் தொழிலாளர்களை பணிக்கமர்த்தும் நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்பு, தொழில் நிமித்தம் காரணமாக சிலரை சந்திப்பதற்காக, மில்துராவிலுள்ள நூலகத்திற்கு செல்வதாக கிளம்பியுள்ளார். அதிலிருந்துதான் அவர் காணவில்லை என விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
இரண்டு நாட்களுக்கு முன்புதான் அவருடைய காரை, மில்துரா நகரத்திற்கு வெளியேயுள்ள ரயில் நிலையம் அருகே நிற்பதைக் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் காணாமல் போனதிலிருந்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்தோ, கிரெடிட் கார்டுகளிலிருந்தோ எதுவும் பரிமாற்றம் செய்யப்படவில்லை என்றும் கண்டு பிடித்துள்ளனர்
.
இந்த கொலைக்கான காரணம் என்னவாக இருக்கும் என்று ஆஸ்திரேலிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிறவெறி காரணமாக ஏற்ப்ட்ட அமளியின் காரணமாக மற்றொரு இந்தியர் கடந்த புதன்கிழமை கத்தியால் குத்தப்பட்டார்.
ஆஸ்திரேலியாவில் இதுவரை இந்தியர்கள் தாக்கப்பட்டு வந்த நிலையில், ஒருவர் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Wednesday, September 30, 2009
நியூசிலாந்து அருகே சுனாமி தாக்குதல்... 100 பேர் பலி.... பலர் மாயம்
சமோயா தீவுக்கரையினை சிதறடித்த சுனாமி
பசுபிக் பெருங்கடலில் நியூசிலாந்துக்கு கிழக்கே இருக்கும் இந்த குட்டித் தீவின் தென் கிழக்கே 120 கி.மீ. தொலைவில் கடலுக்கடியில், இந்திய நேரப்படி நேற்று நள்ளிரவில் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டர் அளவுகோலில் 8.3 புள்ளிகள் அளவுக்குப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் மாபெரும் சுனாமி அலைகள் ஏற்பட்டன. இதில் கடலோரத்தில் உள்ள பகுதிகளில் ராட்சத அலைகள் புகுந்து வீடுகளைத் தரைமட்டமாக்கின. இதில் 100க்கும் அதிகமான மக்கள் பலியாகினர். மேலும் நூற்றுக்கணக்கானோரைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.பல உடல்கள் மண்ணுக்குள் பாதி புதைந்த நிலையில் காணப்படுகின்றன. மேலும் பல உடல்கள் புதைந்து போயிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
சமோயா தீவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள நாடாகும். அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அப்பகுதியில் சிக்கித் தவிக்கும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க அமெரிக்க விமான படைக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து சி-130 ரக விமானங்கள் நிவாரணப் பொருட்களுடன் சமாயா சென்றடைந்துள்ளன.
21-ம் நூற்றாண்டில் நடைபெற்ற இரண்டாவது சுனாமி தாக்குதல் இதுவாகும்...
நன்றி: http://www.guardian.co.uk/
Subscribe to:
Posts (Atom)