Monday, November 16, 2020

கிரைம் கதை மாமன்னர் ராஜேஷ் குமாருடன் ஒரு நேர்காணல்

எனது மேல்நிலைப் பள்ளி வயதுகளில் ராஜேஷ் குமார் கதைகளென்றால் அவ்வளவு உயிர். எனக்கு பல்வேறுவிதமான அறிவியல் விஷயங்களை, மாடர்ன் சமூகங்களை எழுத்தின் வழியே அறிமுகப்படுத்தியவர் ராஜேஷ் குமார்.

2016-ல் அவரது அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அவர் எழுத்தாளர் - நான் பத்திரிகையாளர் என்ற அறிமுகம். இன்றும் அந்த அறிமுகம் குரு-சிஷ்யன் உறவாக மாறி இருக்கிறது. என் மேல் அன்புகொண்டவர்.
அவரை பேட்டி கண்டு கட்டுரையாக எழுதும் வாய்ப்பு அண்மையில் கிடைத்தது. அந்த வாய்ப்பை எனக்கு தந்தவர் புதிய தலைமுறை, புதிய தலைமுறை கல்வி இதழ்களில் ஆசிரியராக இருந்தவரும், கல்கோனா எனும் மின்னிதழின் ஆசிரியராக இருக்கும் பெ. கருணாகரன் அவர்கள்.
இன்று வெளியாகி இருக்கும் கல்கோனா அட்டைப்படக் கட்டுரையாக ராஜேஷ் குமார் சாரின் பேட்டியை வெளியிட்டு, அதில் எனக்கு ஒரு இடத்தையும் கொடுத்து அழகு பார்த்திருக்கிறார் கருணாகரன் சார். அவருக்கு எனது நன்றிகள். இந்த பேட்டியில் எனது பங்கு மிகக்குறைவே... அனைத்தும் ஆசிரியர் கருணாகரன் சாருக்கே...
ராஜேஷ்குமார், கருணாகரன் போன்ற ஜாம்பவான்களுடன் இருப்பது மிகப்பெரிய பலமே... இப்பதிவில் அப்பேட்டியை இணைத்திருக்கிறேன்... விருப்பமுடையோர் படித்து இன்புறுக...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
வாலு டிவி,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்.










No comments: