Saturday, September 26, 2020

பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: டெல்லி அணியிடம் தோற்றபின்பு தோனி பேட்டி


நேற்று துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட்ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 7-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டை ஆனாலும், சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் டெல்லி கேபிட்டல்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணியிடம் வெற்றி பெற்றாலும், ராஜஸ்தான் அணியிடம் தோல்வி கண்டு, மூன்றாவது போட்டியில் கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அணி களமிறங்கியது.
டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான மகேந்திரசிங் தோனி, வழக்கம்போல பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முந்தைய போட்டியில் விளையாடிய வேகப்பந்து வீச்சாளர் லுங்கி நிகிடிக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்து வீச்சாளரான ஜோஸ் ஹேஸில்வுட்டுடன் சென்னை அணி களமிறங்கியது. டெல்லி அணி கடந்த போட்டியில் விளையாடிய மோஹித் சர்மா, ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு பதிலாக, அமித் மிஸ்ரா, ஆவேஷ் கான் ஆகிய வீர்ர்களோடு களமிறங்கியது.
டெல்லி கேபிடல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான பிரித்வி ஷா, ஷிகர் தவாண் ஆகியோர் முதல் பவர்பிளேவில் மிக நிதனமாக ஆடி விக்கெட் சரியாமல் பார்த்துக்கொண்டனர். 6 ஓவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி 36 ரன்கள் எடுத்திருந்த்து. பவர் பிளே முடிந்ததும் இருவரும் மட்டையை சுழற்ற ஆரம்பிக்க பவுண்டரிகளாகப் பறந்தது.
ஷிகர் தவாண் 27 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் உள்பட 35 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லாவின் சுழலில், எல்பிடபிள்யூ முறையில் விக்கெட்டை இழந்தார். அப்போது டெல்லி அணி 10.4 ஓவரில் 94 ரன்கள் எடுத்திருந்தது.
அடுத்து வந்த ரிஷப் பண்ட் பிரித்விக்கு தோள்கொடுக்க, அதிரடி காட்டிய பிரித்வி 35 பந்துகளில் அரை சதம் எட்டியவர், ஐபிஎல் தொடரில் தனது 5-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மேலும் அதிரடியாக விளையாடிய பிரித்வி 43 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருந்தபோது, பியூஸ் சாவ்லா வீசிய பந்தை இறங்கி அடிக்க முயன்றபோது, தோனியால் ஸ்டம்பிங் செய்யப்பட்டு வெளியேறினார். அவரது கணக்கில் 9 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸரும் அடங்கும்.
ரிஷப் பண்டுடன் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் கைகோர்க்க, அணியின் ஸ்கோர் சீராக உயரத் தொடங்கியது. ஸ்ரேயாஸ் 22 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, சாம் கர்ரண் வீசிய வேகப்பந்தில், பேட்டின் விளிம்பில் பட்டு தோனியின் அற்புதமான கேட்ச்சால் வெளியேறினார். 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 3 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்திருந்தது. ரிஷப் பண்ட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 37 ரன்களுடனும், மார்க்கய்ஸ் ஸ்டோனிஸ் 5 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷேன் வாட்ஸன், முரளி விஜய் ஆகியோர் வழக்கம்போல சொதப்பினர். முதல் விக்கெட்டாக ஷேன் வாட்ஸன் 16 பந்துகளில் 14 ரன்கள் எடுத்திருந்தபோது அக்ஸர் படேல் சுழலில் சிம்ரன் ஹெட்மயரிடம் பிடிகொடுத்து வெளியேறினார். முரளி விஜய் தன் பங்கிற்கு 15 பந்துகளில் 10 ரன்கள் எடுத்திருந்தபோது நோர்ட்ஜெ பந்துவீச்சில் காகிசே ரபடாவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.
மூன்றாவது வீரராக களமிறங்கிய பாப் டூபிளஸிஸ் ஒரு புறம் போராடினாலும் மறுபுறம் விக்கெட்டுகள் விழுந்தவண்ணம் இருந்தன. நான்காவது வீரராக தோனி களமிறங்கி இருக்க வேண்டும். அனுபவம் இல்லாத ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கினார்.
முரளி விஜய் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 6 ஓவருக்கு 34. பாப் டூபிளஸிஸும், ருதுராஜ் கெய்க்வாட்டும் டெல்லி அணியின் சுழல்வீச்சை சந்திக்க முடியாமல் தடுமாறினர்.
சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் பந்துகளை வீணடித்தது போல, ருதுராஜும் தன் பங்கிற்கு பந்துகளை வீணடித்து 10 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து, தேவையில்லாமல் ஓடி ரன் அவுட் ஆனார். அப்போது சென்னை அணி 9.1 ஓவரில் 44 ரன்கள் மட்டுமே எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது. 5-வது வீர்ராக தோனி களமிறங்குவார் என்று பார்த்தால், கேதர் ஜாதவ் அந்த இடத்தில் களமிறங்கினார்.
ஆரம்பத்தில் தடுமாறிய ஜாதவ் பிறகு கொஞ்சம் வேகம் காட்ட முயன்றார். டெல்லி அணியின் கட்டுக்கோப்பான பந்துவீச்சும், பீல்டிங்கும் சென்னை அணி வீரர்களை கட்டுப்பாட்டிலேயே வைத்திருந்தது. கேதர் ஜாதவ் 21 பந்துகளில் 26 ரன்கள் எடுத்திருந்தபோது, நோர்ட்ஜே பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். அப்போது சென்னை அணியின் எண்ணிக்கை 15.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் எடுத்து தள்ளாடிக்கொண்டிருந்தது.
26 பந்துகளில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கு இருக்கும்போது தோனி களமிறங்கினார்.
பாப் டூபிளஸிஸ் ஆரம்பத்தில் தடுமாறினாலும் போகப்போக அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். 20 ரன்கள் எடுத்திருந்தபோதும், 41 ரன்கள் எடுத்திருந்தபோதும் சிம்ரன் ஹெட்மயரின் தடுமாற்றத்தால் கேட்ச்சில் இருந்து தப்பினார். அந்த வாய்ப்பை அவரால் சரியாக பயன்படுத்திக்கொள்ள முடியவில்லை. 43 ரன்கள் எடுத்திருந்தபோது ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும்.
கேப்டன் தோனி 12 பந்துகளில் 15 ரன்கள் எடுத்து ரபடா பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான ரிஷப் பண்ட்டிடம் கேட்ச் கொடுத்தும் ஆட்டத்தின் கடைசி பந்தில் ரபடா பந்துவீச்சில் அமித் மிஸ்ராவிடம் கேட்ச்கொடுத்து 12 ரன்களோடு ரவீந்திர ஜடேஜாவும் ஆட்டமிழக்க, சென்னை அணியின் ஆட்டம் 131 ரன்களோடு முடிந்துபோனது.
44 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற டெல்லி கேபிடல்ஸ் அணி, தான் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றதால் 4 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. சென்னை அணி ஒரு வெற்றி, இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் ஐந்தாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேன் ஆப் தி மேட்ச் விருது பிரித்வி ஷாவிற்கு வழங்கப்பட்டது.
தோல்விக்குப்பிறகு பேசிய தோனி, “அணியின் பேட்டிங் மோசமாக இருக்கிறது. அதை சரி செய்தாக வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டி இருக்கிறது. சில பரிசோதனைகள் செய்து பார்த்தோம். பலன் கிடைக்கவில்லை. அடுத்த போட்டியில் அம்பதி ராயுடு விளையாடுவார். கூடுதலாக ஒரு பந்துவீச்சாளரை களமிறக்க வேண்டும்” என்றார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர் ஹைதரபாத் அணியை, அபுதாபியில் உள்ள ஷேக் சையத் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன் @ மோகனன்



கானம் பாடிய வானம்பாடியே... எஸ்.பி.பிக்காக இளையராஜா பாடிய கடைசி பாடல் | i...





பிரபல திரைஇசைப் பாடகரான எஸ்பிபியும் இளையராஜாவும் நல்ல நண்பர்கள். சிறந்த ஆளுமைகள். எஸ்பிபியின் மறைவிற்காக இசைஞானி இளையராஜா எழுதி, இசையமைத்து பாடிய கடைசி பாடல் இது...

கானம் பாடிய வானம் பாடியே... கேட்டுப் பாருங்கள்... கல் மனதையும் கரையச்செய்யும்...

இயற்கையோடு கலந்த எஸ்பிபியே... நிரந்தரமாக ஓய்வெடுங்கள்...

கண்ணீருடன்

மோ.கணேசன்

#RIP_SPBalasubramaniam #RIPSPB #RIPSPBSir

எஸ்பிபிக்காக ரஜினி, இளையராஜா உள்ளிட்ட திரை உலகப் பிரபலங்களின் இரங்கல்கள்...





இன்று மறைந்த பிரபல திரை இசைப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இளையராஜா, கவிப்பேரரசு வைரமுத்து, நடிகர் விவேக் உள்ளிட்ட திரை உலகப்பிரபலங்கள் விடுத்துள்ள இரங்கல் செய்திகளும்... எஸ்பிபியின் அரிய படங்கள் அடங்கிய தொகுப்பும்

காற்றில் கலந்த எஸ்பிபியே... காலமுள்ளவரை எங்களோடு கலந்திருப்பீர்கள்...

இயற்கையில் இளைப்பாருங்கள்...

வேதனையுடன்




மோ.கணேசன்



#RIP_SPBalasubramaniam #RIPSPB #RIPSPBSir

Friday, September 25, 2020

ராகுலின் அதிரடியால் ராயல் சேலஞ்சர்ஸை ஊதித்தள்ளிய கிங்ஸ் லெவன் பஞ்சாப்


நேற்று துபாய் இண்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 6-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்துடன் பெங்களூரு அணி களமிறங்கியது. டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக போராடி மேட்ச்சை டை செய்தாலும் சூப்பர் ஓவரில் தோல்வியைத் தழுவிய பஞ்சாப் அணி, கட்டாயம் வெற்றி வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கியது.

டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனான விராட் கோலி, பந்துவீச்சை தேர்வு செய்தார். டாஸில் தோற்ற பஞ்சாப் அணி முதலில் பேட்டிங்கைத் தொடங்கியது.

பஞ்சாப் அணியின் கேப்டனான கே.எல்.ராகுலும், அவரது பால்ய கால நண்பரும், ஓபனிங் பேட்ஸ்மேனுமான மயங்க் அகர்வாலும் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர்.

இருவரும் அணிக்கு நல்ல தொடக்கத்தைத் தநதனர். மயங்க் அகர்வால் 26 ரன்கள் எடுத்திருந்த போது, யஷ்வேந்திர சஹாலின் சுழலில் ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரன் 17 ரன்களிலும், கிளன் மேக்ஸ்வெல் 5 ரன்களிலும் ஷிவம் துபே பந்துவீச்சில் தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கே.எல்.ராகுலின் விஸ்வரூபம்

ஒரு புறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் என்ற முறையில் துவக்கத்தில் இருந்தே பொறுப்பாக ஆடத்தொடங்கிய ராகுல் 36 பந்துகளில் அரை சதத்தைத் தொட்டார். அதில் 7 பவுண்டரிகளும், ஒரு சிக்ஸரும் அடங்கும்.

 

16-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழந்து 132 ரன்களே எடுத்திருந்தது. 20 ஓவரின் முடிவில் 170 ரன்கள் எடுத்தாலே அதிகம் என்ற நிலை இருந்தது.

17-வது ஓவரை வீச டேல் ஸ்டெயினை அழைத்தார் கோலி. அந்த ஓவரின் 5-வது பந்தில் சிக்ஸரைப் பறக்க விட்ட ராகுல், அடுத்த பந்தில் விராட் கோலி இருக்கும் திசையில் தூக்கி அடித்தார். கைக்கு வந்த பந்தை தவற விட்டு அதிர்ச்சி அளித்தார் கோலி. அப்போது ராகுல் 83 ரன்கள் எடுத்திருந்தார்.

18-வது ஓவரை இளம்புயல் நவ்தீப் சைனியிடம் கோலி கொடுக்க, அந்த ஓவரின் கடைசி பந்தில் மறுபடியும் ராகுல் கோலி இருக்கும் பக்கமாக தூக்கி அடிக்க, இரண்டாவது முறையாக கேட்சை தவற விட்டார் சிறந்த பீல்டர்களில் ஒருவரும் பெங்களூரு அணியின் கேப்டனுமான விராட் கோலி. அப்போது ராகுல் 89 ரன்கள் எடுத்திருந்தார்.

கேட்ச்சை தவற விட்டதற்கான பலனை அடுத்த இரண்டு ஓவர்களில் பெங்களூரு அணி பெற்றது. 18-வது ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 157 ரன்கள் எடுத்திருந்தது.

அதன்பிறகு ராகுலின் விஸ்வரூபம் பெரிதானது என்றே சொல்ல வேண்டும். 19-வது ஓவரை டேல் ஸ்டெயின் வீச, முதல் பந்தை சிக்ஸருக்கு விரட்டிய ராகுல், அடுத்த பந்தை பவுண்டரிக்கு விரட்டி, இந்த ஐபிஎல் சீஸனில் முதல் சதத்தை பதிவு செய்தார். ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரில் ராகுலுக்கு இது இரண்டாவது சதமாகும். 2019 சீஸனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 100 ரன் எடுத்திருந்தார்.

ஸ்டெயினின் மூன்றாவது பந்தில் ரன் எடுக்காமல் விட்ட ராகுல் அடுத்த மூன்று பந்துகளில் தொடர்ச்சியாக இரண்டு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி என வாணவேடிக்கை காட்டினார்.

கடைசி ஓவரை வீசிய ஷிவம் துபே ஓவரில் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் விளாசியது பஞ்சாப் அணி. கடைசி இரண்டு ஓவர்களில் மட்டும் பஞ்சாப் அணி 49 ரன்களைக் குவித்து அசத்தியது.

20 ஓவரின் முடிவில் பஞ்சாப் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.  இதில் கே.எல்.ராகுல் ஆட்டமிழக்காமல் 69 பந்துகளில் 132 ரன்கள் குவித்தார். இதில் 14 பவுண்டரிகளும் 7 சிக்ஸர்களும் அடங்கும்.

 

120 பந்துகளில் 52 பந்துகளை சக அணியின் நான்கு வீரர்கள் எதிர்கொண்டு 63 ரன்கள் எடுத்தனர். இதில் 7 பவுண்டரிகள் மட்டுமே அடங்கும். மற்றதெல்லாம் ராகுல் எதிர்கொண்டவையே. அதில் 14 பவுண்டரிகள் 7 சிக்ஸர்கள்.

ராகுலின் சாதனைகள்

ஐபிஎல் தொடரில் இந்திய பேட்ஸ்மேன் ஒருவர் அதிக பட்ச ரன்னை எட்டியிருப்பது இதுவே முதல்முறை. ஐபிஎல் தொடரில் சச்சின் தெண்டுல்கருக்குப்பிறகு அதிவேகமாக 2000 ரன்களைத் தொட்ட இரண்டாவது வீரர் என்ற சாதனையையும் ராகுல் இந்த போட்டியில் நிகழ்த்திக்காட்டினார்.

டேல் ஸ்டெயினின் வேதனை

வேகப்பந்து வேதாளம் என செல்லமாக அழைக்கப்படும் டேல்ஸ்டெயின் இந்த போட்டியில் 4 ஓவர்களை வீசி விக்கெட் ஏதும் எடுக்காமல் 57 ரன்களை வாரி வழங்கினார். சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தர் 2 ஓவர்களை வீசி 13 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார். அவரை விராட் கோலி பயன்படுத்தி இருக்கலாம்.

பெங்களூரு அணியின் மோசமான பேட்டிங்

120 பந்துகளில் 207 ரன்கள் என்ற கடின இலக்குடன் பேட்டிங் செய்ய களமிறங்கிய பெங்களூரு அணியை பஞ்சாப் அணியின் பந்து வீச்சாளர்கள் சிதறடித்தனர்.

ஆரோன் பிஞ்ச் - 20, ஏபி டிவில்லியர்ஸ் - 28, வாஷிங்டன் சுந்தர் - 30, ஷிவம் துபே - 12 ஆகியோர் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க எண்களில் சீட்டுக்கட்டுபோல சரிந்தனர். கேப்டன் கோலி 1ரன் எடுத்து ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

ராகுல் பெங்களூரு அணிக்கு எதிராக மூன்று சுழற்பந்து வீச்சாளர்களைப் பயன்படுத்தி 7 விக்கெட்டுகளை வீழ்த்த காரணமாக இருந்தார். ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் தலா 3 விக்கெட்டுகளும், பகுதி நேர சுழற் பந்து வீச்சாளரான கிளென் மேக்ஸ்வெல் 1 விக்கெட்டினையும் தங்களது சுழலில் வீழ்த்தினர்.

 

17 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த பெங்களூரு அணி 109 ரன்கள் மட்டுமே எடுத்து, 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது.

அதிக சிக்ஸ் அடித்த வீரர், சிறந்த அதிரடி ஆட்டக்காரர், மேன் ஆப் தி மேட்ச் ஆகிய மூன்று விருதுகளையும் கே.எல்.ராகுல் பெற்றார்.

இரண்டு போட்டிகளில் விளையாடிய பஞ்சாப் ஒரு தோல்வி, ஒரு வெற்றியோடு அதிக ரன்ரேட்களுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. பெங்களூரு அணி ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இன்று நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிட்டல்ஸ் அணியை எதிர்கொள்ள இருக்கிறது.

-மோ.கணேசன்

விதவிதமாக தோசை வார்ப்பது எப்படி? | how to make variety dosa | நிலா தோசை ...





விதவிதமாக தோசை சமைக்கலாமா? வாத்து தோசை, நிலா தோசை என பல்வேறு விதமான தோசைகளை வார்க்கலாமா..?
இதுவும் என்னுடைய சேனல்தான்...
உங்களின் ஆதரவிற்கு எனது நன்றிகள்
மிக்க அன்புடன்
மோ.கணேசன் @ மோகனன்

உதடுகள் மட்டும் ஏன் வியர்ப்பது இல்லை | why the lips not sweat | அதிக விய...





உதடுகளில் மட்டும் ஏன் வியர்ப்பதில்லை? வியர்வையால் என்ன நன்மைகள்..? இந்த 4 நிமிட வீடியோ பதில் தருகிறது...
தொடரும் உங்கள் ஆதரவிற்கு எனது அன்பு கலந்த நன்றிகள்...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

Wednesday, September 23, 2020

பேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா? | how to made paper | vaalu t...





பேப்பரை எப்படி தயாரிக்கிறார்கள் தெரியுமா?
காகிதத்தை எப்படி தயாரிக்கிறார்கள் என்பதை இந்த மூன்று நிமிட வீடியோவைப் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
வீடியோ பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க... உங்க நட்பு வட்டத்துக்கும் அனுப்பி வையுங்க... கமெண்ட் பண்ணுங்க... வாலு டிவியை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
தொடர்ந்து இணைந்திருங்கள்... இது போன்ற பல்வேறு பொதுஅறிவு கேள்வி பதில்களோடு உங்களை சந்திக்க வருகிறேன்...
தொடரும் உங்களது ஆதரவுக்கு எனது நன்றி...
மிக்க அன்புடன்
மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

Monday, September 21, 2020

காற்றழுத்த மாறுபாடும் பெர்னௌலி தத்துவமும் | விளையாட்டாய் அறிவியல் | simp...





இந்த வாரம் விளையாட்டாய் அறிவியல் நிகழ்ச்சியில் காற்றழுத்த மாறுபாடு குறித்த எளிய அறிவியல் சோதனையை இந்த வீடியோவில் பார்க்கலாம். இந்த வீடியோ மூலம் பெர்னௌலி தத்துவத்தை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்...



உங்களின் ஆதரவிற்கு நன்றி



மிக்க அன்புடன்



மோ.கணேசன்,

நிறுவனர்,. நிர்வாக இயக்குநர்

வாலு டிவி



#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Sunday, September 20, 2020

வாலுவிடம் கதை கேட்கலாம் வாங்க!


வள்ளியம்மாள் மோகன் ராஜி நினைவு அறக்கட்டளையின் ஆன்லைனில் இரண்டாவது கதை சொல்லும் நிகழ்வு இன்று மாலை 6 மணிக்கு நடைபெற இருக்கிறது...
சந்திப்பு இணையத்தில் - ஜூம் ஆப் மீட்டிங்கில் உங்களை சந்திக்க வருகிறேன்...
கதையின் தலைப்பு: மாயக்குதிரை

தேதி: 20.9.2020
நேரம் : மாலை 6 மணி

மீட்டிங் ID: 796 1996 7031
பாஸ்வேர்டு: 12345

+++++++++++++++++++

Topic: வாலுவின் கதை நேரம்

Join Zoom Meeting

Meeting ID: 796 1996 7031

Passcode: 12345 

Saturday, September 19, 2020

ஐபிஎல் பிறந்த கதை | ஐபிஎல்லின் வரலாறு | ipl history in tamil | ipl 2020 ...





ஐபிஎல் பிறந்த கதை - இந்த வீடியோவில்...

இன்று ஐபிஎல் தொடங்க இருக்கும் நேரத்தில், ஐபிஎல் பிறந்த கதையை பார்க்கலாம் வாங்க... ஐபிஎல் தொடர் உருவாக ஒரு டிவி நெட்வொர்க் முக்கிய காரணமாக இருந்தது என்றால் நம்புவீர்களா? இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அதிகாரமும் இதில் அடங்கி இருக்கு...

இந்த வீடியோவைப் பாருங்க... ஐபிஎல்லின் வரலாற்றை தெரிஞ்சிக்கோங்க...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #ஐபிஎல்_வரலாறு #ipl_history

https://youtu.be/XZCLthL4BZc

Thursday, September 17, 2020

திருமணம் குறித்து தந்தை பெரியாரின் பகுத்தறிவு உரை| periyar speech about...


பெரியாரின் பிறந்தநாளில் அவரது பகுத்தறிவு உரை கேட்க வாங்க... திருமணம் குறித்தும், அக்காலத்தில் பெண்களின் நிலை குறித்தும், உடன்கட்டை குறித்தும் பகுத்தறிவுப் பகலவனான தந்தை பெரியாரின் இந்த உரையைக் கேளுங்கள்... 1900 களில் இந்தியாவின் நிலையும், 1970-களில் இந்திய சமுதாயத்தின் நிலையையும் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் அவரது பகுத்தறிவு உரை சிந்திக்க வைக்கும். அக்கால ஆளுமைகளை பார்த்திருக்க நமக்கு வாய்ப்பில்லை. குரலையாவது கேட்போமே... இனி இதுபோன்ற மறைந்த தலைவர்களின் உரைகளை நமது வாலு டிவி ஒளிபரப்புவான்... தொடரும் உங்கள் ஆதரவிற்கு எங்களின் நன்றிகள் மிக்க அன்புடன் மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்
வாலு டிவி

#vaalu_tv #vaalutv #வாலு_டிவி #periyar_birthday_speech #தந்தை_பெரியார்_பிறந்தநாள்

Tuesday, September 15, 2020

தலைவணங்க மாட்டான் தமிழன் - பேரறிஞர் அண்ணா எழுச்சியுரை | anna speech in t...





இந்தி மொழி எங்களுக்கு வேண்டாம் - பேரறிஞர் அண்ணாவின் சிம்மக்குரலைக் கேட்க வாங்க...

இன்று பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள். இந்தி திணிப்பு குறித்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களிடம் பேரறிஞர் அண்ணாவின் எழுச்சியுரை இங்கே...

இனிவரும் காலங்களில் பல்வேறு தலைவர்களின் குரல்களை, எழுச்சி உரைகளை எடுத்துத் தர இருக்கிறோம்... தொடரும் உங்களது ஆதரவிற்கு எனது நன்றி...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #anna_birthday_speech

https://youtu.be/5CjEmh0Sq20

Monday, September 14, 2020

நெருப்பின் முக்கோணம் என்றால் என்ன? | fire's triangle | விளையாட்டாய் அறிவ...


நெருப்பு எப்படி உருவாகிறது? நெருப்பு உருவாக மூன்று முக்கிய காரணிகள் தேவை... அதைத்தான் நெருப்பின் முக்கோணம் என்கிறோம். அந்த மூன்று முக்கிய காரணிகள் என்னென்ன? இந்த வீடியோவைப் பாருங்க தெரிஞ்சிடும்...

எளிய பரிசோதனை மூலம் விளையாட்டாய் கற்றுக்கொடுக்க வருகிறார் விஞ்ஞான ரதம் அறிவரசன்... அறிவியல் எல்லோருக்கும் எளிதல்ல... பலருக்கு கடினம்தான். அப்படி இருக்கும் பலருக்கும் விளையாட்டாய் அறிவியல் சொல்லிக்கொடுப்பதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்கம். சென்ற வாரம், ஸ்ட்ராவில் மிக எளிதாக பீப்பி செய்வது எப்படி? அதில் இருந்து எப்படி பீப்பி சத்தம் வருகிறது? அதன் காரணம் என்ன? என்பதை அறிவியல் பூர்வமாக விளையாட்டாய் செய்து, சொல்லிக்கொடுத்திருந்தார் அறிவரசன்...இது போல இனி வரும் வாரங்களில் புதிய புதிய நிகழ்வுகள் தொடரும். இந்த வீடியோவை லைக் பண்ணுங்க... ஷேர் பண்ணுங்க... வாலு டிவியை சப்ஸ்கிரைப் பண்ணுங்க... அடுத்த நிகழ்வில் வேறொரு அறிவியல் நிகழ்ச்சியில் உங்களை சந்திக்கிறோம்... மிக்க அன்புடன் வாலு டிவி #வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Sunday, September 13, 2020

செல்போனைக் கண்டுபிடித்தவர் யார் || செல்போன் என்று பெயர் வந்தது எப்படி | ...




செல்போனைக் கண்டுபிடித்தவர் யார்? செல்போன் என்று பெயர் வந்தது எப்படி? முதன் முதலில் செல்போன் சேவையைப் பயன்படுத்திய நாடு எது? உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை தருகிறது இந்த நான்கு நிமிட வீடியோ...
உங்களுக்கும் பலதுறைகள் சார்ந்த கேள்விகள் இருப்பின், அந்த கேள்வியை வீடியோ வடிவில் எடுத்து எங்களுக்கு அனுப்பி வைத்தால், நாங்கள் உங்களுக்கு வீடியோ வடிவில் பதில் தருகிறோம். கேள்வியை அனுப்ப வேண்டிய வாட்ஸ்அப் எண் இந்த வீடியோவின் இறுதியில் இருக்கிறது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த வீடியோ உங்களுக்கு பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, கமெண்ட் பண்ணுங்க, ஷேர் பண்ணுங்க... வாலு டிவியை இன்னும் சப்ஸ்கிரைப் பண்ணாம இருந்தா சப்ஸ்கிரைப் பண்ணுங்க...
மிக்க அன்புடன்


மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Friday, September 11, 2020

உலக எழுத்தறிவு தினம் | சர்வதேச எழுத்தறிவு தினம் | world literacy day | ...



சர்வதேச எழுத்தறிவு தினம் குறித்து 10 வயது சிறுவனின் எழுச்சி உரை இந்த வீடியோவில்...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

பால் ஏன் வெள்ளையாக இருக்கிறது? | why milk is white | பால் ஏன் பொங்குகிறத...



பால் ஏன் வெள்ளை நிறத்தில் இருக்கிறது? பால் குடித்தால் தூக்கம் வருவது ஏன்? இப்படி பல்வேறு கேள்விகள் உங்களுக்குள் இருக்கும்... சர்வதேச பால்தினம் எப்போது கொண்டாடுகிறோம்... உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் தருகிறது இந்த வீடியோ...

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Friday, September 04, 2020

ஆசிரியர் தின வாழ்த்து பாடல் | ஆசிரியர் தின பாடல் | அகரம் சொல்லித் தந்த ஆ...


ஆசிரியர் தின வாழ்த்து பாடல்

உலகெங்கும் உள்ள அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் இந்த பாடல் சமர்ப்பணம்... 

அத்தனை ஆசிரியப் பெருமக்களுக்கும் எங்களின் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்...

எழுத்தறிவித்த இறைவனை போற்றும் நாள் இது...
கல்வி பயிற்றுவித்த ஆசிரியர்களை என்றும் மறவோம் நாம்... தொழில் பயிற்றுவித்து ஆசிரியர்களையும் என்றும் மறவோம் நாம்... 

தேசத்திற்காக உழைத்த ஆசிரியர்கள் பல கோடிபேர்... அவர்களுக்காக உருவாக்கிய பாடல் இது...

பாடலைப் பாருங்கள்... உங்களுக்கு யாரெல்லாம் ஆசிரியர்களாக இருந்தார்களோ... அவர்களுக்கு இந்த பாடலை அனுப்பி வைத்து... உங்கள் ஆசிரியர் தின வாழ்த்தைச் சொல்லி மகிழுங்கள்...

இது வாலு டிவியின் பெருமைமிகு படைப்பு....

மிக்க அன்புடன்

மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

#வாலு_டிவி #vaalu_tv #vaalutv #teachersday #teachersday_song

Saturday, August 29, 2020

அகாடமி என்ற வார்த்தை எப்படி வந்தது? | academy meaning in Tamil | Ask vaa...





அகாடமி என்ற வார்த்தைக்குப் பின்னே இப்படி ஒரு வரலாறா? இந்த 3 நிமிட வீடியோவைப் பாருங்க வரலாறு தெரிஞ்சிடும்


#வாலு_டிவி #vaalu_tv #vaalutv

Friday, August 21, 2020

மகாகவி பாரதியாரின் பேரனிடமிருந்து வாலு டிவிக்கு வாழ்த்து | niranjan bha...

பாரதியாரின் பேரனிடமிருந்து வாலு டிவிக்கு கிடைத்த வாழ்த்து!

வாலு டிவி தொடங்கி நேற்றோடு ஒரு மாதம் ஆகிவிட்டது... உங்களின் பேராதரவோடு மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறான் வாலு... 

மகாகவி பாரதியாரின் பேரனிடமிருந்து வாலு டிவிக்கு வாழ்த்து கிடைத்திருக்கிறது. அது அந்த மகாகவியே எங்களை வாழ்த்தியதைப் போன்ற பெருமகிழ்ச்சி எனக்கு...

தொடரும் உங்களது ஆதரவுக்கு எங்களின் நன்றி

மிக்க அன்புடன்

மோ.கணேசன்,
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி

Monday, August 03, 2020

இன்றைய வாலுங்கதான் நாளைய விஞ்ஞானிகள் - மயில்சாமி அண்ணாதுரை| Mailsamy Ann...

உங்கள் குழந்தைக்கு இப்படி ஒரு மேடை வேண்டுமா?

wifi in Tamil | வை பை பற்றி தமிழில் | லை பை தொழில்நுட்பம் | lifi in Tami...

பாலைவனக் கப்பல் என்று ஒட்டகத்தை அழைப்பது ஏன்?

அம்மா பாடல் | புஷ்பவனம் குப்புசாமியின் பாடல் | amma song | pushpavanam k...

RBI history in Tamil | இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாறு | vaalu tv | வாலு...

மாடு அசை போடுவது ஏன் | மாடு ஏன் அசை போடுகிறது| ruminants animals cow| அச...

கைரேகையின் வரலாறு | finger Print in tamil | இரட்டையர்களின் கைரேகை எப்படி...

வாலு டிவி | Vaalu TV

ஒரே மொபைலில் இரண்டு வாட்ஸ்அப் | how to use two whatsapp in one mobile in...

தென்னை மரத்தை மின்னல் தாக்குவது ஏன் | lightning in Tamil | மின்னல் எப்பட...

பறக்கும் மீன்கள்| history of flying...

காந்திக் கணக்கு உருவான கதை | Gandhi Kanakku means | காந்திக் கணக்குன்னா ...

பிளஸ் டூ மாணவர்களுக்கு இலவச பட்டப்படிப்பு | madras university free educa...

குறிஞ்சி பூவின் கதை | Kurinji poo | குறிஞ்சி மலர் | குறிஞ்சித் தேன் | ku...

மனித உடலில் மிகச்சிறிய எலும்பு எது? | Small Bone in human body | உறுதியா...

செல்போன் டவரால இவ்ளோ ஆபத்தா? | danger of cell phone towers | வாலு டிவி ...

இப்படித்தான் கடல் உருவாச்சா! | கடல் தண்ணி ஏன் உப்பா இருக்கு? | sea water...

ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்ற கணக்கீடு எப்படி வந்தது?| how to define pe...