மோ.கணேசன்
எனது வலைக்குடிலுக்கு வந்த உங்களுக்கு எனது முதல் வணக்கம். இங்கே எனது படைப்புகள், சிந்தனைகள், நான் ரசித்தவைகள், எனது அனுபவங்கள், நான் சந்தித்த, சந்தித்துக் கொண்டிருக்கிற சமூக முரண்பாடுகள் அனைத்தையும் படிக்கக் கொடுத்திருக்கிறேன். வாசித்துவிட்டு உங்களது கருத்துக்களை முடிந்தால் பதிவு செய்யவும்... நன்றி...
Tuesday, September 29, 2020
201 ரன்கள் குவித்த பெங்களூரு – விரட்டிப்பிடித்த மும்பை இந்தியன்ஸ் – சூப்பர் ஓவரில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ்
நீர் தெளிப்பான் எப்படி இயங்குகிறது தெரியுமா? - விளையாட்டாய் அறிவியல் | s...
நீர் தெளிப்பானும் மையவிலக்கு விசையும்... தோட்டத்தில் நீர்தெளிப்பான் எப்படி வேலை செய்கிறது? அதன் பின்னால் இருக்கும் அறிவியல் தத்துவம் என்ன என்பதையும் இந்த வீடியோவில் விஞ்ஞான ரதம் அறிவரசன் நமக்கு விளக்குகிறார்...
தொடரும் உங்களது ஆதரவிற்கு எனது நன்றிகள்
மிக்க அன்புடன்
மோ.கணேசன்
நிறுவனர், நிர்வாக இயக்குநர்,
வாலு டிவி
#வாலு_டிவி #vaalu_tv #vaalutv
Monday, September 28, 2020
இமாலய இலக்கு நிர்ணயித்த பஞ்சாப் அணி! – விரட்டி அடித்து வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி!
மோ.கணேசன்
நேற்று, சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 9-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது.
தான் ஆடிய இரண்டு தகுதிச்சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் பஞ்சாப் அணியும், தான் விளையாடிய ஒரு தகுதிச்சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற நம்பிக்கையில் ராஜஸ்தான் அணியும் இப்போட்டியில் களமிறங்கின.
டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் எதிரணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் பஞ்சாப் அணி சார்பில் களமிறங்கவில்லை. எந்த மாற்றமும் இன்றி பஞ்சாப் அணி களமிறங்கியது. ராஜஸ்தான் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டிருந்த்து. கடந்த போட்டியில் விளையாடிய யாஷ் ஜஸ்பால், டேவிட் மில்லர் ஆகியோருக்கு பதிலாக இப்போட்டியில் அங்கித் ராஜ்புத்தும், ஜாஸ் பட்லரும் களமிறங்கினர்.
பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான கே.எல்.ராகுலும், மயங்க் அகர்வாலும் களமிறங்கினர். கே.எல். ராகுல் நிதானமாகத் தொடங்க, மறுபுறம் மயங்க் அகர்வால் சிக்ஸரும் பவுண்டரியுமாக விளாசத் தொடங்கினார். சார்ஜா மைதானம் சற்று சிறியது என்பதால் நாலாபுறமும் பந்துகள் பறந்தன.
பஞ்சாப் அணி 4.3 ஓவரிலேயே 50 ரன்களைத் தொட்டது அதிரடி காட்டிய மயங்க் அகர்வால் 26 பந்துகளில் 4 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 50 ரன்களைக் கடந்தார். கே.எல்.ராகுலும் வேகம் காட்ட, பஞ்சாப் அணி 8.4 ஓவரில் 100 ரன்களைத் தொட்டது.
35 பந்துகளில் 5 பவுண்டரிகள் ஒரு சிக்ஸருடன் அரை சதம் கடந்த கே.எல்.ராகுல் ஐபிஎல் தொடரில் தனது 17-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். இருவரும் ராஜஸ்தான் அணியினரின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடிக்க ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் வீதம் வந்துகொண்டே இருந்தது. 13.2 ஓவரில் 150 ரன்களைக் கடந்தது. 54 பந்துகளில் 69 ரன்கள் எடுத்திருந்த ராகுல், அங்கித் ராஜ்புத்தின் பந்துவீச்சில் ஸ்ரேயாஸ் கோபாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ராகுல்-அகர்வால் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 183 ரன்கள் சேர்த்தது. ஐபிஎல் தொடரில் முதல் விக்கெட்டிற்கு அதிக ரன்கள் சேர்த்த மூன்றாவது ஜோடி என்ற பெருமையையும் பெற்றது.
ஆரம்பத்தில் இருந்தே வாணவேடிக்கை காட்டி வந்த மயங்க் அகர்வால் 45 பந்துகளில், 9 பவுண்டரிகள், 7 சிக்ஸர்களுடன் ஐபிஎல்லில் தனது முதலாவது சதத்தைப் பதிவு செய்தார். இவர் 106 ரன்கள் எடுத்திருந்தபோது டாம் கர்ரண் பந்துவீச்சில் சஞ்சு சாம்னிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். கிளென் மேக்ஸ்வெல்லும், நிக்கோலஸ் பூரனும் தங்கள் பங்குக்கு வாணவேடிக்கை காட்ட பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் குவித்தது. நிக்கோலஸ் 8 பந்துகளை எதிர்கொண்டு 3 சிக்ஸர்கள், 1 பவுண்டரியை விளாசி 25 ரன்களுடனும், மேக்ஸ்வெல் 13 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை விரட்ட களமிறங்கியது ராஜஸ்தான் அணி. அதன் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாஸ் பட்லரும் ஸ்டீவ் ஸ்மித்தும் களமிறங்கினர். ஒரு ஓவருக்கு சராசரியாக 12 ரன்கள் அடித்து ஆடினால்தான் வெற்றி என்ற கடின இலக்கோடு களமிறங்கயதால் ஜாஸ் பட்லர் அடித்து ஆட முயற்சிக்க, 4 ரன்கள் எடுத்திருந்தபோது, ஷெல்டன் காட்ரெல் பந்துவீச்சில் சர்ப்பிராஸ் கானிடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றமளித்தார்.
அடுத்து ஸ்டீவ் ஸ்மித்துடன் சஞ்சு சாம்சன் கைகோர்த்தார். இருவரும் தொடக்கத்தில் இருந்தே அடித்து ஆடினர். ஸ்மித் ஒரு புறம் பவுண்டரிகளாக விளாச, மறுபுறம் சஞ்சு சாம்சன் சிக்ஸர்களாக விளாச ஆரம்பித்தார். 26 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் ஐபிஎல் தொடரில் தனது 10-வது அரை சதத்தை எட்டிய ஸ்டீவ் ஸ்மித், ஜிம்மி நீஷம் பந்துவீச்சில் முகம்மது ஷமியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அப்போது அணியின் எண்ணிக்கை 9 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 100 ரன்களாக இருந்தது. 11 ஓவரில் 124 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. அதாவது 66 பந்துகளில் 124 ரன்கள். கைவசம் எட்டு விக்கெட்டுகள்.
சஞ்சு சாம்சனுடன் விளையாட ராகுல் திவேட்டியா களமிறக்கப்பட்டார். ஒரு புறம் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 27 பந்துகளில் அரை சதம் கடந்து, ஐபிஎல் தொடரில் தனது 12-வது அரை சதத்தைப் பதிவு செய்தார். மறுபுறம் ஆடிய ராகுல் திவேட்டியா நிறைய பந்துகளை வீண்டித்து ஒன்று, இரண்டு ரன்களாக சேர்த்துக்கொண்டிருந்தார். இதனால் வெறுத்துப்போன சஞ்சு சாம்சன் ஒரு ரன்னிற்கெல்லாம் ஓடாமல் தவிர்த்துவிட்டு, அவரே ஸ்டிரைக்கில் இருக்குமாறு பார்த்துக்கொண்டார். 15 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 150 ரன்களைத் தொட்டது. சஞ்சு சாம்சன் 35 பந்துகளில் 64 ரன்கள் எடுத்திருக்க, திவேட்டியாவோ 21 பந்துகளில் 14 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
30 பந்துகளில் 84 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராஜஸ்தான் அணி அவ்வளவுதான் என்றே ரசிகர்கள் முடிவுகட்டினர்.
அதற்கு ஏற்ப, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளுடன் 85 ரன்கள் எடுத்திருந்தபோது முகம்மது ஷமியின் பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் ஆட்டமிழந்தபோது அணியின் எண்ணிக்கை 16.1 ஓவரில் 161 ரன்கள். 23 பந்துகளில் 63 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை. ராபின் உத்தப்பா திவேட்டியாவுடன் ஜோடி சேர்ந்தார். அவரும்
17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருந்த்து. 18 பந்துகளில் 51 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை. 18-வது ஓவரை வேகப்பந்துவீச்சாளரான ஷெல்டன் கார்ட்டெல் வீசினார். அந்த ஓவரை திவேட்டியா எதிர்கொண்டார். அப்போது அவர் 23 பந்துகளில் 17 ரன்கள் எடுத்திருந்தார். கார்ட்ரெல் வீசிய ஓவரில் திடீரென விஸ்வரூபம் எடுத்த திவேட்டியா முதல் நான்கு பந்துகளை தொடர்ச்சியாக சிக்ஸருக்குப் பறக்கவிட்டு ஆச்சர்யப்படுத்தினார். 5 பந்தில் ரன் எடுக்க முடியவில்லை என்றாலும், 6வது பந்தில் மீண்டும் ஒரு சிக்ஸரை அடித்து, தன்னை பேட்டிங் இறக்கியது சரிதான் என்று காட்டினார். அந்த ஓவரில் மட்டும் 30 ரன்கள் குவித்து அசத்தினார் டிவேட்டியா. 12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை உருவானது.
19வது ஓவரை முகம்மது ஷமி வீசினார். அவர் வீசிய இரண்டாவது பந்தில் ராபின் உத்தப்பா 9 ரன்கள் எடுத்திருந்தபோது நிக்கோலஸ் பூரனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ஜோப்ரா ஆர்ச்சர் தன் பங்கிற்கு அடுத்தடுத்து 2 சிக்ஸர்கள் விளாச, திவேட்டியா ஒரு சிக்ஸர் விளாசினார். ஷமி வீசிய கடைசி பந்தில் திவேட்டியா மயங்க் அகர்வாலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது கணக்கில் 31 பந்துகளில் 7 சிக்ஸர் உள்பட 53 ரன்கள் அடங்கும்.
கடைசி ஓவரை ஸ்ரேயாஸ் கோபால் வீசினார். 6 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், முதல் பந்து டாட், இரண்டாவது பந்தில் ரியான் பராக் தனது ஸ்டம்புகளைப் பறிகொடுக்க டென்ஷன் எகிற ஆரம்பித்தது. 4 பந்துகளில் 2 ரன்கள் என்ற நிலையில் களமிறங்கிய டாம் கர்ரண் சந்தித்த முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி, அணியை வெற்றிபெற வைத்தார். ராஜஸ்தான் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் அட்டகாசமான வெற்றியைப் பெற்றது.
ஐபிஎல் தொடரில் 215 ரன்களை சேஸ் செய்ததே மாபெரும் சாதனையாக இருந்தது. இந்த சாதனையைச் செய்ததும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிதான். ஐபிஎல் தொடரின் முதல் சீஸனி (2008)ல், கொல்கத்தா அணிக்கு எதிராக 215 ரன்களை சேஸ் செய்து அசத்தியது ராஜஸ்தான். 12 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சாதனையே மீண்டும் அதே அணி முறியடித்திருக்கிறது. மயங்க் அகர்வாலின் சதம் வீணாய்ப்போனது.
மேன் ஆப் தி மேட்ச் விருது ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டது.
தோல்விக்குப்பிறகு பேசிய கே.எல்.ராகுல், “எல்லா துறைகளிலும் சிறப்பாகவே செயல்பட்டோம். பீல்டிங்கில் ஜாஸ் பட்லர் அசத்தினார். சிக்ஸருக்கு போன பந்தை அற்புதமான பீல்டிங் திறமையால் எல்லைக்கோட்டுக்கு வெளியே பறந்து பந்தை உள்ளே தள்ளியதை பார்த்திருப்பீர்கள். பந்துவீச்சும் சிறப்பாகவே இருந்தது என்றாலும் ராஜஸ்தான் அணி மிகச்சிறப்பாக ஆடியது. இது எங்களுக்கு தோல்விதான் என்றாலும் அடுத்த போட்டியில் கம்பீரமாக மீண்டு வருவோம்” என்றார்.
ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மிம் “சஞ்சு சாம்சனின் அதிரடி அணிக்கு மிகவும் பக்கபலமாக இருந்த்து. நானும் சஞ்சுவும் இணைந்த அமைத்த அடித்தளத்தை அடுத்து வந்த வீர்ர்கள் பயன்படுத்தி வெற்றி தேடித்தந்தனர். திவேட்டியாவினை களமிறக்கியது தவறு என்று எல்லோரும் நினைத்திருப்பீர்கள். அவர் நெட் பிராக்டீஸின்போது எப்படி விளையாடினார் என்பதை கணித்துதான் அவரை களமிறக்கினோம். அதை சிக்ஸர்களாக பறக்கவிட்டு, தன்னை களமிறக்கியது சரி என்று நிரூபித்தார். சிறப்பான வெற்றி. தன்னம்பிக்கை அதிகரித்திருக்கிறது. 250 ரன்கள் அடித்தால்கூட விரட்டிப் பிடிப்போம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது” என்றார்.
இன்று நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது மும்பை இந்தியன்ஸ் அணியை, துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
#IPL2020 #RRvsKXIP #ஐபிஎல்2020
Sunday, September 27, 2020
தான் இறந்துவிடுவோம் என்று கணித்தாரா எஸ்பிபி? - தனக்கு சிலை வடிக்கச் சொன்ன எஸ்.பி.பி!
தன்னுடைய மரணத்தை முன்பே கணித்தாரா எஸ்பிபி? தன்னுடைய சிலையை ஜூன் மாதமே ஆர்டர் செய்திருக்கிறார் எஸ்பிபி
சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்தை வீழ்த்தியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!
நேற்று அபுதாபியில் உள்ள ஷேக் சையத் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்ற, 8-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது.
ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைக் கண்டிருந்த சன்ரைஸர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதிய போட்டியில் தோல்வியைத் தழுவிய கொல்கத்தா அணியும் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு களமிறங்கின.
டாஸ் வென்ற
சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு
செய்தார்.
சன்ரைஸர்ஸ்
அணியில் முந்தைய போட்டியில் விளையாடிய மிட்செல் மார்ஷ், விஜய் சங்கர், சந்தீப் சர்மா ஆகியோருக்கு பதிலாக முகமது நபி, விரித்திமன் சாஹா, கலீல் அஹமது ஆகியோர் களமிறங்கினர். கொல்கத்தா
அணி கடந்த போட்டியில் விளையாடிய நிகில் நாயக், சந்தீப் வார்ரியர் ஆகியோருக்கு பதிலாக கமலேஷ்
நாகர்கோட்டி, வருண் சக்கரவர்த்தி ஆகிய வீர்ர்களோடு
களமிறங்கியது.
சன்ரைஸர்ஸ்
அணியின் தொடக்க ஆட்டக்கார்ர்களான டேவிட் வார்னரும், ஜானி பாரிஸ்டோவும் களமிறங்கினர். பேட்
கம்மின்ஸின் அற்புதமான இன்ஸ்விங்கரில் 5 ரன்கள் எடுத்திருந்தபோது, தனது ஸ்டம்புகளைப் பறிகொடுத்தார் பாரிஸ்டோவ். அடுத்து களமிறங்கிய மணீஷ் பாண்டே
வார்னருடன் இணைந்து மெல்ல மெல்ல அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
நிதானமாக
விளையாடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் 30
பந்துகளில் 36 ரன்கள் எடுத்திருந்தபோது, வருண் சக்கரவர்த்தியின் சுழலில் அவரிடமே
எளிதாக கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து மணீஷ் பாண்டேவுடன் விரித்திமன் சாஹா
கைகோர்த்தார்.
இருவரும்
நிதானமாகவும் தேவையானபோது அடித்தும் ஆடினர். சிறப்பாக ஆடிய பாண்டே அரை சதம்
அடித்தார். 38 ரன்களில் 51
ரன்கள்
எடுத்திருந்தபோது, ஆந்த்ரே ரஸ்ஸலின் பந்துவீச்சில் அவரிடமே
கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவரது எண்ணிக்கையில் மூன்று பவுண்டரிகளும் இரண்டு
சிக்ஸர்களும் அடங்கும்.
சாஹா 31 பந்துகளில் 30 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் சன்ரைஸர்ஸ் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது. முகமது நபி ஆட்டமிழக்காமல் 11 ரன்களுடனும், அபிஷேக் சர்மா 2 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
கொல்கத்தா
அணியில் 7 வீரர்களை பந்துவீசப் பயன்படுத்திய தினேஷ்
கார்த்திக், சன்ரைஸர்ஸ் அணியின் ரன் வேகத்தை திறமையாக
கட்டுப்படுத்தினார். சிறப்பாக பந்துவீசிய பேட் கம்மின்ஸ் 4 ஓவரில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். விக்கெட்டுகளை அதிகம் வீழ்த்தவில்லை என்றாலும்
எதிரணிக்கு ரன்களை வாரி வழங்காமல், பீல்டிங்கையும் சிறப்பாகச் செய்தது கொல்கத்தா
அணி.
143 ரன்கள்
எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி. அதன் தொடக்க
ஆட்டக்காரர்களாக சுனில் நரைன், சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர்.
ரன் ஏதும்
எடுக்காமல் சுனில் நரைன் நரைன் கலீல் அஹமது பந்துவீச்சில், வார்னரிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். சுப்மன் கில்லுடன் நிதீஷ் ராணா ஜோடி
சேர்ந்தார். ஒருபுறம் சுப்மன் கில் நிதானமாக ஆட, நிதீஷ் ராணா 12
பந்துகளில் 6 பவுண்டரிகளை விளாசி எதிரணியை திணறடித்தார். ஆனால் அடுத்த பந்திலேயே நடராஜன்
பந்துவீச்சில் விக்கெட் கீப்பரான சாஹாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து வந்த
கேப்டன் தினேஷ் கார்த்திக், ரன் ஏதும் எடுக்காத நிலையில் ரஷீத் கானின்
சுழலில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். கில்லுடன் இயான் மோர்கன் கை
கோர்த்தார். இருவரும் வாண வேடிக்கை காட்ட ஆரம்பித்தனர்.
18வது ஓவரின்
முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் தனது முதல்
வெற்றியை ருசித்த்து.
கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுப்மன் கில்,
62 பந்துகளில் 2 சிக்ஸர்கள். 5 பவுண்டரிகள் உள்பட 70 ரன்கள் குவித்தும், 29 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் உள்பட 42 ரன்கள் குவித்த இயான் மோர்கனும் அணியின்
வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.
சிறப்பாக ஆடி வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, தனது முதல் வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகள் பெற்று தரவரிசைப் பட்டியலில் ஐந்தாமிடம் பிடித்துள்ளது. சன்ரைஸர்ஸ் ஹைதரபாத் அணி இரண்டு தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
மேன் ஆப் தி மேட்ச் விருது கொல்கத்தா அணியின் சுப்மன் கில்லிற்கு வழங்கப்பட்டது.
தோல்விக்குப்பிறகு பேசிய டேவிட் வார்னர், “டாஸ் வென்றதும் பேட்டிங்கைத் தேர்வு செய்தது சரியான முடிவுதான். ஆனாலும் கொல்கத்தா அணியினர் பந்துவீச்சில் எங்களை கட்டுப்படுத்திவிட்டனர். பேட்டிங்கில் கூடுதல் கவனம் வேண்டும். பந்துவீச்சிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். கூடுதலாக 30 முதல் 40 ரன்கள் எடுத்திருந்தால் ஆட்டம் எங்கள் பக்கம் திரும்பி இருக்கும்” என்றார்.
முதல் வெற்றிபெற்ற மகிழ்ச்சியில் கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் “அனைத்து துறைகளிலும் கடினமாக உழைத்த்தற்கு பலன் கிடைத்திருக்கிறது. அணியில் ஆல்ரவுண்டர்கள் இருப்பது கூடுதல் பலம். இளம் வீரர்கள் அதிக உத்வேகத்துடன் பங்களித்திருக்கிறார்கள். கமலேஷ் நார்கோட்டி போன்ற இளம் வீர்ர்கள் அணிக்கு பலம். சுப்மன் கில் பேட்டிங்கின்போது எந்த வித அழுத்தமும் இன்றி சிறப்பாக ஆடி வெற்றியைத் தேடித் தந்தார். கேப்டனாக இருப்பதில் பெருமைப்பட்டாலும், எனது பேட்டிங்கில் நான் கவனம் செலுத்தவேண்டும். சிறப்பான வெற்றி” என்றார்.
இன்று
நடைபெறும் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியானது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை, சார்ஜாவில் உள்ள சார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் எதிர்கொள்ள இருக்கிறது.
-மோ.கணேசன் @ மோகனன்
#IPL2020 #KKRvsSRH
வாலுவிடம் ஆன்லைனில் நேரடியாக கதை கேட்கலாம் வாங்க!
அனைவருக்கும் வணக்கம்...
Saturday, September 26, 2020
பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும்: டெல்லி அணியிடம் தோற்றபின்பு தோனி பேட்டி
நேற்று துபாய் இண்டர்நேஷனல் கிரிக்கெட்ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின், 7-வது தகுதிச் சுற்றுப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் டெல்லி கேபிட்டல்ஸ் அணியும் மோதின.





